Friday, 25 December 2009

குளிர்பானமும் கருத்து சொல்லும் நடிகர்களும்


"எவனோ ஒருவன்" நல்ல படம் என்று சொன்னார்கள். நானும் அப்படி தான் நினைத்தேன் சமீபத்தில் தொலைக்கட்சியில் ஒரு காட்சி பார்த்தேன். ஒன்பது ருபாய் பெப்சி குளிர்சாதனத்தை இரண்டு ருபாய் கூட விற்று விட்டார் என்று மாதவன் கோபப்படுவார். அந்த காட்சி "கண்டேன் காதலை" படத்திலும் பிரதிபலித்தது.

நல்ல கருத்து சொல்கிறேன் என்று சிலர் என்னனமோ சொல்கின்றனர்.முதலில் இந்த பெப்சி மற்றும் கோகோ கோலா பூச்சி கொல்லி மருந்து. நம் உடல் மண்ணில் புதைக்கபட்டால் ஐம்பது ஆண்டு கழித்து எதுவுமே மிஞ்சாது,பல்லை தவிர.அப்படிப்பட்ட பல்லையே பதினோரு நாளில் அரித்துவிடும் விஷத்தன்மை வாய்ந்தது இந்த குளிர்சாதனங்கள்.அந்த குளிர்பானத்திற்கு கொடி பிடிக்கிறார் நாயகன்.ஏன் கொஞ்சம் சிந்தித்து
அவர்கள் எதிராக கொடி பிடித்திருக்கலாமே.
எனக்கு தெரிந்து அந்த குளிர்பானத்தின் தயாரிப்பு ஒரு ருபாய் கூட இல்லை. அந்த குளிர்பானத்தை இவர்கள் ஒன்பது ருபாய் விற்பாராம்,அதை இரண்டு ருபாய் கூட விற்பது தப்பாம்,இது முதலாளிக்கு கொடி பிடிப்பது .
மாதவன் அந்த குளிர்சாதன விளம்பரத்தில் நடிக்கிறார்,அதனால் முதலாளி விசுவாசத்தை காட்டுகிறார். இது சரி என்று பாமரனின் மனதில் விடத்தை திணிக்கிறார்.இதற்கு விஜய்,ராமராஜன்,டி ராஜேந்தர் படங்களை பார்த்து விடலாம்.

இரண்டாவது அது சுற்றுசுழலை பாதிக்கிறதே.அது அந்த நாயகனுக்கு தெரியவில்லையா????தாமிரபரணியை ஆக்ரமிக்க நினைத்தார்களே அது தெரியவில்லையா அந்த நாயகனுக்கு.ஒவ்வொரு இடத்தையும் பாலைவனம் ஆக்குகின்றரே அது தெரியவில்லையா???????மேத்தா பட்கர் உண்ணா விருந்து இருந்த போது அமீர் கான்
அவரை பார்க்க சென்றார்.பொது மக்கள் நீங்கள் முதலில் குளிர்சாதன விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துங்கள் என்று விரட்டினர்.

என் ரூம் நண்பர் தினமும் குளிர்பானம் உடன் இரவு உணவை உட்கொள்வார். இப்பொழுது அந்த பழக்கத்தை விட்டு விட்டார். ஏன் என்று கேட்டேன் "நெஞ்சு வலித்தது" விட்டு விட்டேன் என்றார்.குடிக்க வேண்டும் என்றால் பழச்சாறு குடியுங்கள் பன்னீர் சோடா குடியுங்கள்.

இம்சை அரசன் படம் தேவி திரையரங்கில் காண சென்றேன். அக்கா மாலா கப்சி நகைச்சுவையை எல்லாரும் ரசித்தனர். இடைவெளி வந்தது,அதிகமாய் விற்றது பெப்சி. இந்த குளிர்பானம் விளம்பரத்தில் நடிகர்கள்,விளையாட்டு வீரர்களும் நடிக்கிறார்கள்.நீங்கள் அரசியல் இறங்கி அரசியல் செய்ய வேண்டாம். ரசிகனை தப்பான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம்.உங்களுக்கும் அரசியல் பொறுப்பு இருக்கிறது.

8 comments:

தர்ஷன் said...

மன்னிக்கவும்
அந்த ஒரு விடயத்தை வைத்து "எவனோ ஒருவன்" தரமற்ற படம் என்று சொல்ல முடியாது. பொருளாதரா தேவைகளின் நிமித்தம் மனிதனுக்கே உரித்தான அழகுணர்ச்சியையும் மனிதாபிமானத்தையும் கொன்று விட்ட இயந்திர வாழ்வினை மேற்கொள்ளும் மனிதனின் மனப்போராட்டங்களை விவரித்த திரைப்படம். சமூகப் பிரக்ஞை உள்ள ஒவ்வொருவனதும் ஆதங்கத்தின் திரைவடிவம்.

புலவன் புலிகேசி said...

நல்ல கருத்து..

Narmada said...

எவனோ ஒருவன் நல்ல படம் இல்லை என்று சொல்லி விட முடியாது அந்த ஒரு காட்சியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு......
அதே போல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பெப்சி, கொக்க கோலா போன்ற குளிர் பானங்களுக்காக விளம்பரங்களில் நடிக்காமல் இருக்க வேண்டும்.
அவர்கள் நடித்தாலும் மக்கள் அதை முழுமையாக நம்பாமல் தங்களுக்கு நல்லதையே தேர்ந்தெடுக்க வேண்டும்...
விழிப்புணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை....

பேநா மூடி said...

நல்ல பதிவு... தொடர்ந்து எழுதவும்...

ஸ்ரீநி said...

மதுரைக்கு போன இந்த வைதேரிச்சளோட உச்சம்
மாப்பிள்ளை / மாணிக்க விநாயகர் திரை அரங்கு - அவர்களுக்கு மாப்பிளை விநாயகர் என்ற பெயரில்
சொந்தமாக ஒரு சோடா தயாரிப்பு நிறுவனம் உண்டு.

அனால் அவர்களுடைய திரியாரங்கிலேயே கப்சி அக்காமாலா தான்

மேலும் உணவுடன் இது உட்கொள்ளுவது பற்றி
கண்டிப்பா இது நல்ல பழக்கம் ஆனா "எழிதில் ஜீரணமாகும் நம்ம இந்திய உணவோடள்ள
ஜீரணமே ஆகாதா - பிச்சா, சீஸ் போன்ற உணவகை உணவு உன்கையில் இந்த அமிலங்கள் குடித்தால்
பல் போனாலும் பரவா இல்லை. உடலுக்கு ஒன்னும் ஆகாது
மறுநாள் காலேல கஷ்டப்படவேண்டி இருக்காது

க.பாலாசி said...

//அக்கா மாலா கப்சி நகைச்சுவையை எல்லாரும் ரசித்தனர். இடைவெளி வந்தது,அதிகமாய் விற்றது பெப்சி//

சரிதான். நல்ல கருத்து நண்பா..

கொஞ்ச நாளுக்கு முன்பு நடிகர் விக்ரம் இதுபோன்றதொரு குளிர்பான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். நடிகர்களுக்கும் பொருப்பிருக்கிறது என்பதை அவர்களும் உணரவேண்டும்.

நல்ல கருத்துள்ள பதிவு நண்பா...

rasa said...

ஒரு படத்தை ஒரு ஷாட்டை வைத்துக் கொண்டு விமர்சிக்க முடியுமா... அப்படி விமர்சிக்க முடியுமளவுக்கு கதையின் உயிர்நாடி அந்தக் காட்சியில் இருக்கிறதா.. அப்படி இல்லாவிட்டாலும் கூட விமர்சிக்கலாம்தான்.. ஆனால் அப்படி விமர்சிக்கும்போது மொத்த படம் பற்றி விம‌ர்சிப்பதும் எழுதுபவர்களின் கடமை அல்லவா... அதுதானே முழுமை பற்றிய புரிதலை ஒரு ரசிகனுக்கு தர முடியும்.

பெப்சி மற்றும் கோக் பற்றிய தங்களது அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த விமர்சனங்கள் சரிதான். அதன் சூழலிலியல் சார்ந்த அதாவது தண்ணீரை வீண்டிக்கும் உற்பத்திமுறை பற்றி விபரங்களை சொல்ல்லாம். அதனை விட முக்கியமானது அதன் சமூக மற்றும் அரசியல் சார்ந்த விசயங்கள்தான்.

சமூகம் என்றால் எளிமையான முறையில் புரிந்து கொள்ள•. எல்லா மக்களும் அதனை பயன்படுத்த முடியாத பொருளாதார சூழல் மற்றும் அதன் அவசியம் பற்றிய வாழ்நிலை கண்ணோட்டம், உணவுக்கு வழியில்லாத மக்கள் நிறைந்த தேசத்தில் கோக் அவசியம் எனக் கருதும் மனநிலை, உணவுக்கு வழியில்லாமல் செய்த தேசக்காரணிகளில் ஒன்று தண்ணீர் தனியார்மயம், தண்ணீரை விற்பனைக்கு கொண்டு வந்த்தில் நாம் அருந்தும் கோக் கம்பெனியின் கின்லே வாட்டர் கேனும் அடக்கம், நிலத்தடி நீரை அவர்கள் உறிஞ்ச விவசாயிகளே மழை இல்லை என்று இறைவன் மீது பாரத்தைப் போட்டு நகரத்திற்கு பிழைக்க ஓடுகிறார்கள். ஈவிரக்கமற்ற முறையில் விவசாயத்தை சீரழித்து தேசத்தின் உணவு தன்னிறைவை காவு கேட்கிறது தண்ணீர் தனியார்மயம். ராஜீவ் காந்தி சாலையில் இருமருங்கிலும் வானுயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு கேட்பாரற்ற முறையில் விவசாயிகளிடம் திருடப்பட்ட தண்ணீர் அவர்களுக்கு மறுக்கப்பட்ட விலையிலேயே முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. மும்பையின் விதர்பா பருத்தி விவசாயிகளின் தற்கொலையும், முன்னர் தஞ்சையில் விவசாயிகள் எலிக்கறி தின்ன நேர்ந்த்த‍ற்கும் ஐடி தொழிற்சாலைக்கும் சம்பந்தமில்லை என நாம் சொல்ல முடியாது.

அரசியல் என்றாலும் இதுதான். ஆனால் இப்பிரச்சினையை உலக அளவில் வைத்து பார்க்கலாம் என நினைக்கிறேன். தென்னமெரிக்காவில் பிரேசில் நாட்டில் உள்ள கொச்சபொம்மா என்ற இடத்தில் 2005 இல் தண்ணீருக்காக போராடிய மக்களை அரசின் துணையோடு கொன்று குவித்த பிரெஞ்சுக் கம்பெனிகள் மீண்டும் சென்னைக்கு வருகிறார்கள். விவாண்டி என்ற அந்த பெரிய கம்பெனி தண்ணீரை ராட்சத பிளடர்கள் மூலம் கப்பல்களில் கட்டி ஏற்றுமதி செய்யுமளவுக்கு உயர்ந்து உள்ளது. இந்தியாவில் பல ஆறுகளின் சில பல கிமீ நீளத்தை அரசு இதுபோன்ற கம்பெனிகளுக்கு விற்பனை செய்துள்ளது. இயற்கையான அந்த ஆற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீரைக் கூட நீங்கள் கோரிட முடியாது. தண்ணீரில் பிரிபெய்டு மீட்டர் பொருத்துவது தென்னாப்பிரிக்காவில் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஒரு லிட்டர் கோக் தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் வீண்டிக்கப்படும் அறிவியல் உண்மையை இதனுடன் இணைத்து ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

உணவுக்கும், தண்ணீருக்கும் கப்பல்களை எதிர்பாரத்துக் காத்துக் கிடக்கும் காலம் வெகு அண்மையில் உள்ளது. இயற்கை வளங்களை முன்னேற்றம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்ற பிறகு வேறு என்ன நடக்க முடியும். இதன் ஆரம்ப நிலைதான் பத்தாண்டுகளுக்கு முன் கையெழுத்தான காட்ஸ் ஒப்பந்தம். மக்கள் நல அரசு என்ற ஒரு வடிவத்தை இழந்து புரோக்கர் என்ற வேலையையும் அடியாள் என்றவேலையையும் உலக முதலாளிகளுக்கு செய்யும் வேலையை அரசு எடுத்து 18 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல பதிவு.