நண்பர்களே மன்னிக்கவும்,என் கருத்து சரி என்றாலுமே நான் ஜனநாயக முறையில் போராட வேண்டும்.சிலர் பின்னூட்டம் மனம் புண்படுத்தினாலும் தளரக் கூடாது. நான் நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் .பல பேரிடம் சண்டை பயங்கரமாய் போட்டுள்ளேன்,இனி சண்டை போடாமல் என் கருத்தை ஜனநாயக முறையில் வைக்க பார்பேன் .என் தம்பி ராமகிருஷ்ணன் அசத்த போவது யாரு பார்பீர்களா அதில் வருவானே மதுரை ராமகிருஷ்ணன் அவன் என் தம்பி.சித்தப்பா பையன் என்றாலும் என் வீட்டிலேயே
இருந்ததால் நாங்கள் இருவரும் சொந்த அண்ணன் தம்பி போல பழுகுவோம்.அவன் எழுதாமல் இருப்பது தவறு என்றான். என்னை மாமா என்று அழைப்பான். "நீ நல்ல படைப்பாளி ஆனால் கோழை" என்றான். "ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்றான்".
அகல் விளக்கு புலிகேசிக்கு போன் அடித்து கேட்டு விட்டார் என்று புலிகேசி சொன்னான்.ஊடகன் மிகவும் வருத்தப்பட்டான்.என் அக்கா அவருடன் சண்டை போட்டதால் எழுதவில்லை என்று நினைத்துக்கொண்டால். அண்ணன் பிரபாகர் போன் செய்து பேச வேண்டும் என்றார்.புலிகேசி மறுப்பு போடு என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.பதிவுலகத்தில் வந்து விட்டாலே ஒரு பொது சொத்து நாமாய் ஒரு முடிவு செய்ய முடியாது. பலர் பின்னூட்டத்தில் வருத்தம் தெரிவித்தனர். அது என் பக்குவமின்மையை காட்டியது, உணர்கிறேன்.
மறுபடியும் உங்களிடம் எல்லாம் சண்டை போட வந்து விட்டேன். பில்லாவில் அஜித் சொல்வதை போல 'i am back ' . நேற்று ஒன்று புரிந்தது ....குறை ஒன்றும் இல்லை கேட்டு இருந்தார் "இப்படி எழுதி எழுதி என்ன சாதித்து விட்டீர்கள்" என்று."நண்பரே இப்பொழுது தெளிவாய் சொல்கிறேன் "எழுதுவதற்கு தான் எழுத்து".....தவறு என்றால் கேட்பதே ஜனநாயகம் "right to speak ".எழுதினால் தான் தெரியும் பல பேருக்கு .......எழுதும் போது தான் எனக்கே என்னை பற்றி தெரிகிறது.
பின் குறிப்பு:
நண்பர்களே என் மாமாக்களை வேறு தப்பாய் எழுதிவிட்டேன். எந்தவித நோக்கமும் இல்லை,அவர் அவர் நிலைமையை விளக்கினார்.
நான் என் தவறை உணர்கிறேன்.என் மாமா வயதில் நான் அந்த அளவு பொறுப்பை இல்லை என்பதே உண்மை. என் immaturity கண்டு வருந்துகிறேன்.
நண்பன் ரோச்விக்கையும் மறந்து விட்டேன் மன்னித்து விடு நண்பா
9 comments:
நீ எழுது..நான் இருக்கேன் உன்னோட சண்டையிட...ஹி ஹி ஹி..இப்பவாச்சும் புரிஞ்சிதே..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுது...
நேத்தே இதை சொல்லனும்னு இருந்தேன்.
அட்வைஸ் பண்ணுறதும் கேட்குறதும் பிடிக்காது. அதான் எதுவும் சொல்லலை.
நாம சொல்லுறனால எல்லாம் ஒருத்தர் படம் பார்ப்பதையோ/ பார்க்காமல் இருப்பதையோ... நிறுத்தப் போறதில்லை.
Planet 51, Christmas Carol மாதிரிப் படங்களை வேணும்னா, நாம சொல்லுறனால மக்கள் பார்க்காம இருக்கலாம். ஏன்னா அதில் அவங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.
ஆனா..., 2012 படத்தை.. பார்க்காதீங்கன்னு சொன்னா.. போடா வெண்ணைன்னுட்டு போய்டுவாங்க.
புரிஞ்சிகிட்டீங்கன்னா.. சந்தோஷம்!!
வெல்கம் பேக்! :) :)
நண்பரே நான் பார்க்க வேண்டாம் என்று சொல்ல வில்லை ......அது தரம் இல்லை என்று தான் சொல்கிறேன்,,,,,,அது ஒரு மாய போதை ஏனோ உலகமே அழியும் போது வெகு சிலர் மட்டும் தப்பிப்பது என் மனதிற்கு பிடிக்க வில்லை .........................
நான் ஜனநாயக முறையில் சொல்ல வில்லை ஆனால் நான் sonnathu தப்பு அல்ல
vaazhthukal thirumba vanthatharku. Indru ungal pathivai ethirparthen, mikka magilchi.
நன்றி
அய்யய்யோ..., நான் சொன்ன அந்த 2012 - என்னோட பதிவில்!!
உங்களுது இல்லை!! உங்க பதிவில் நான் குறிப்பிட்டது, வேட்டைக்காரன் பதிவை.
யாரும் கேட்க்காமல் அறிவுரை அறிவுரை வழங்க கூடாது என்பது மட்டுமே நா ஒழுங்கை கடைபிடிக்கும் வாழ்க்கை முறை ஆகவே நேற்று உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று சொல்லி விட்டேன்..., நீங்கள் மறுபடுயும் எழுத வேண்டும் என்று நினைத்தேன் ...,மகிழ்ச்சி...,
வாருங்கள் தோழரே....
//புலவன் புலிகேசி said...
நீ எழுது..நான் இருக்கேன் உன்னோட சண்டையிட...ஹி ஹி ஹி..இப்பவாச்சும் புரிஞ்சிதே..வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுது...//
வழிமொழிகிறேன்.
வாடி வா... நான் அலைபேசியில் பேசனும்னு சொன்னத இங்க போடலையில. நான் இப்பவே சண்டைய ஆரம்பிக்கிறேன்.
Post a Comment