Monday, 21 December 2009

இந்தியன்
வீட்டில் அவனுக்கும் அவன் அம்மாவிற்கும் சண்டை வரும்,கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போதெல்லாம்.பெயர் கார்த்திக்."கிரிக்கெட் என்று இருந்தாலே கார்த்திக் தவிர்க்க முடியாத பெயர்" என்பான்.அவன் காதலித்த பெண் தெருவில் நடந்த போது "தினேஷ் கார்த்திக்கா முரளி கார்த்திக்கா" என்று கேட்ட போது புல் அரித்தது அவனுக்கு.கூடவே தற்போது அருண் கார்த்திக் தமிழ் நாட்டில் ஆடுவது அவனுக்கு பெருமையாய் இருந்தது .

தினேஷ் கார்த்திக் ஆடும் போது அவன் ஆரம்ப கால கட்டத்தில் கார்த்திக் சுவாதி என்ற மற்றொரு வீரன் இருந்தான் அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை என்பான். அவன் பெயருக்கு ஏற்றார் போல் அவன் கல்லூரியில் ஐந்து கார்த்திக்.அனைவரும் நன்றாய் ஆடக்கூடியவர்கள் .......இவனும் கல்லூரி ஆட்டத்தில் ஹ்ரிசிகேஷ் கனிட்கர் போல ஒரு ஆல் ரௌண்டேராக அரைகுறை ஆட்டக்கரனாய் இருந்திருக்கிறான்.

பத்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரண்டு மேட்ச் மட்டுமே ஆடினான்.அவன் பந்துகள் ஆறுக்கும் நான்கிற்கும் பறக்க விட பட்டன,அவனுக்கு கல்லூரி ஆட்டங்களில் தண்ணி கொண்டு போய் கொடுப்பதும் மட்டுமே வேலையாய் இருந்தது. எப்போதாவது கல்லூரி சொஹைப் அக்தர் chrompet எக்ஸ்பிரஸ் சுவாதி பிரசாத் சில ஓவர்கள் ரெஸ்ட் எடுத்தால் அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் போலவே இறங்குவான்,பந்துகளை தடுப்பான் மறுபடியும் உள்ளே போய் அமர்வான்.

இவன் அத்தை வீட்டுக்காரர் சச்சின் சட்டை போட்டுக்கொண்டு அமர்வார்.அவருடன் தான் மேட்ச் காண்பான். இந்திய உணர்வு என்றால் கிரிக்கெட் பார்ப்பது என்று அவன் ரத்தத்தில் ஊறி கிடந்தது.

ஆம் உலக கோப்பை அட்டவணை வந்தது, பெப்சி நடத்துகிறதாம். அனைத்து இடத்திலும் பெப்சி கோகோ கோலா விளம்பரங்கள் ஒரு பக்கம் அந்த கால டோனி சச்சின். இன்னொரு பக்கம் இந்த கால சச்சின் டோனி பெப்சி விளம்பரத்திற்கு. ஏதோ இது மட்டும் தான் உணர்வு என்ற மாய பிம்பங்கள் ஊருக்குள் உலா வந்தன.இவனும் மழையில் நனைத்து கொண்டே ஒரு டிவி கடையில் வெளியில் மேட்ச் எல்லாம் பார்த்துக்கிறான்.

ஆம் அன்று உலக கோப்பை இறுதி ஆட்டம் . இந்தியா ஆஸ்திரேலியா ........சச்சின் சதம் அடிக்கவில்லை இந்தியா வெற்றி பெரும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். யுவராஜ் 50 அதனால் இந்தியா கட்டாயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை . கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை வேறு. ஜெயா டிவியில் சடகோபன் ரமேஷ் சேவாக் பூட் வொர்க் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

கடைசி ஓவர் இந்தியா அடிக்க வேண்டிய ரன்கள் 11 .யுவராஜ் சிங்க் ஆட்டம்,brett lee பந்து போடுகிறார், அனைவரயும் இடது புறம் நிறுத்தினார். ஒரு லாங் on ஒரு square leg . அனைவரையும் இடது புறம் நிற்க வைத்து. யுவராஜிற்கு காலுக்கு போட்டார் லீ. காலில் போட்டவுடன் ஆறு ஓட்டங்கள். இந்தியர்கள் உணர்விலே கை தட்டினர்.கார்த்திக்கும் குதித்தான். அடுத்த இரு பந்துகளும் நான்கு நான்கு.இந்தியா வெற்றி பெற்றது

கார்த்திக்கின் இந்தியன் என்ற உணர்வு ஜெயித்தது,உணர்வால் கத்தினான்.ஆனந்த கண்ணீர் வேறு. ஆம் பெப்சி கோகோ கோலா,மொபைல் கம்பெனிகள் கணக்கு வீண் போகவில்லை.
உலககோப்பை வெற்றி பெற்றதற்கு ஹோடேலில் விருந்து கொடுக்கப்பட்டது. இந்தியாவை செமி அல்லது இறுதி ஆட்டதிற்கு வரவைத்ததே பொருளை விற்பனை செய்வதற்கே என்று யாரோ ஒரு ICC அதிகாரி உளறிக்கொண்டிருந்தார். சச்சின் டிராவிட் விட்டா வேற யாருக்கும் கட்டாந்தரைய விட்டா ஆட தெரியாது பா .ஆனா அந்த மக்கள் தானே பாக்குறாங்க,அதனால அவங்களுக்கு ஏத்த மாதிரி தான் ஆடுகளம் தயார் செய்ய படுகிறது என்று போதையிலே புத்தன் போல பேசி கொண்டிருந்தார்.

இங்கு கார்த்திக் உணர்வு இதில் மட்டுமே உள்ளதாய் நினைத்துக்கொண்டிருந்தான் போதையிலே. அவன் நண்பன் அவனிடம் ஏதோ அரசியல் பேச வந்தான். "மொக்க போடாத அரசியல் வாதி எப்படி இருந்த என்ன" என்று சொல்லி ஏதோ மேட்ச் இருக்கிறது நான் செல்ல வேண்டும் என்று சென்று விட்டான்.

5 comments:

பிரபாகர் said...

கார்த்தி,

இரவு வேலை என்பதால் அழைக்க இயலவில்லை. கண்டிப்பாய் அழைக்கிறேன், நிறைய பேசவேண்டும். திரும்பியதில் அண்ணனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. படித்தாலும் பின்னூட்டமிடாத காரணம் உங்களின் காதில் செல்பேசியின் வழியாய்...

பிரபாகர்.

Narmada said...

good start

ஸ்ரீராம். said...

படித்தேன்...புலவன் புலிகேசி பக்கத்தில் உங்கள் புகைப் படத்தையும் பார்த்தேன்...

புலவன் புலிகேசி said...

ம் மட்டைபந்து விளையாட்டும் கிட்டத்தட்ட அரசியல் போலாகிவிட்டது...தொடருங்கள் நண்பரே

இனியாள் said...

Intha kathaiyil sila idangalil eluthu pizhai irupathai unarkiren, thirumbiyathu kuriththu magilchi.