Saturday, 26 December 2009

விவசாயி ரத்தம் குடிக்கும் குளிர் பானம்


நம் மீது கண்ணுக்கு தெரியாத போர் தொடுக்கப்பட்டுள்ளது. எப்படி????தண்ணீர் தனியார்மயம் ஒரு விதமான போர்.
முன்பெல்லாம் தண்ணீர் காசு கொடுத்து வாங்க மாட்டோம்,இப்பொழுது சென்னை நகரில் நாம் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்குகிறோம்.நண்பர் பின்னூட்டம் போட்டது போல ஒரு லிட்டர் கோக் தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் தேவைதானா சொல்லுங்கள்??

இங்கே தஞ்சை மண்ணில்,தமிழனுக்கே சோறு போட்ட மண்ணில் விவசாயி எலிக்கறி உண்கிறான்.தண்ணீரை எல்லாம் தாரைவார்த்து விட்டால்.எங்கே விவசாயம் விவசாயி தினக்கூலி ஆவான்.அவன் பிள்ளைகளை நகரத்தில் வளர்ப்பானே தவிர விவசாயம் சொல்லித்தரமாட்டன். நாம் வரலாற்றிலே மட்டுமே விவசாய பூமியை பார்க்க முடியும்.வெறும் தகவல்தொழில்நுட்பம் மட்டும் வைத்து இந்தியா வளர்ந்த நாடு என்று எப்படி சொல்ல முடியும். உடம்பில் ஒரு பகுதி மற்றும் வளர்கிறது கோளாறே தவிர வளர்ச்சி அல்ல.


இதுவும் மறைமுக போரே.கலாச்சார ரீதியான போர்,கண்ணுக்கு தெரியாத போர். நம் உணவிற்கே ஒரு நாட்டை எதிர்பார்க்க வேண்டியது இருக்கும்.இது நம் நாடு மீண்டும் அடிமை ஆவதை உறுதி செய்கிறது.விவசாயம் மறக்க செய்து,எந்த தொழிலாய் இருந்தாலும் முதலாளி கொடுப்பதை நாம் சம்பளமாக மட்டுமே பெரும் அபாயம் இருக்கிறது.இப்பொழுதே நாம் கொத்தடிமைகள் ஆகிக்கொண்டிருக்கிறோம்.வணிக ரீதியாய் வந்து தான் ஆங்கிலேயன் நம் நாட்டை பிடித்தான் தெரியாதா தோழர்களே.

இந்த எந்த பின்புலமுமே தெரியாத நடிகர்கள் இந்த விளம்பரத்தில் நடிப்பது ஏன். அவர்கள் சம்பளம் அதில் நடிக்க ஒரு கோடி ரெண்டு கோடி.ஒரு பெரிய நடிகனை மட்டும் வைத்து விளம்பரம் செய்தால் ஒரு கோடி கொடுத்தால் தெருக்கோடி வரை செல்லலாம்.நடிகனுக்கு என்று புனித பிம்பம் உள்ளதே.
ஏன் பகுத்தறிவு என்று பேசும் சின்னக்கலைவாணர் இந்த விளம்பரங்களிலே நடிக்கிறார் . கடவுள் மறுப்பு கொள்கை மட்டும் பகுத்தறிவு ஆகாது.உங்கள் பகுத்தறிவு பல விடயங்களை பகுத்து அறிவதே. தஞ்சையில் எலிக்கறி உண்றது தெரியாதா.........இதே நிலைமை போனால் மனிதக்கறி உண்ண வேண்டியது வரும்.......!நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பெப்சி கோக் இல்லை அதை சார்ந்த மிரண்டா பாண்டா எதை குடித்தாலும் நீங்கள் விவசாயியின் இரத்தம் குடிக்கிறீர்கள் நியாபகம் இருக்கட்டும்.

9 comments:

ஹாலிவுட் பாலா said...

கடவுள் மறுப்பெல்லாம் சினிமாவில் மட்டும்தாங்க.

அவரு வீட்டையே ‘வாஸ்து’ முறையில் கட்டினாராமே? :) :)

tamiluthayam said...

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல், இம்மாதிரியான செயல் பாடுகளையும் அவர்களாக மாற்றி கொள்ளாவிட்டால் மாற்ற முடியாது. நாடு ஒரு காலத்தில் வெள்ளைகாரன் கையில், இப்போது கொ் ள்ளைக்காரன் கையில், எதிர்காலத்தில் சர்வதேச பணக்காரனின் கையில். மீண்டுமொரு சுதந்திர போருக்கு தயாராக வேண்டியது தான்

ஸ்ரீராம். said...

காசே பிரதானம் என்னும்போது பகுத்தாவது...அறிவாவது....

சிங்கக்குட்டி said...

நல்ல சிந்தனை மற்றும் அருமையான பகிர்வு.
இது போல் இன்னும் நிறைய நீங்கள் எழுத என் வாழ்த்துக்கள்.

நேரம் கிடைத்தால், இந்த பதிவை வாசித்து பாருங்கள்.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_23.html

நன்றி!.

முனைவர்.இரா.குணசீலன் said...

நீங்கள் குடிக்கும் ஒவ்வொரு பெப்சி கோக் இல்லை அதை சார்ந்த மிரண்டா பாண்டா எதை குடித்தாலும் நீங்கள் விவசாயியின் இரத்தம் குடிக்கிறீர்கள் நியாபகம் இருக்கட்டும்.//

உண்மைதான் நண்பரே..
அழகாக சிந்திக்கும் விதமாகச் சொன்னீ்ர்கள்..

தியாவின் பேனா said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

Blog for Women said...

// உடம்பில் ஒரு பகுதி மற்றும் வளர்கிறது கோளாறே தவிர வளர்ச்சி அல்ல. //

நல்ல சிந்தனை

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

அன்புடையீர்,
இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்க‌ளை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்


http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

அன்புடையீர்,
இந்திய திரு நாட்டை முன்னேற்ற வேண்டும் ,விவசாயம் செழித்தாலன்றி இது சாத்தியமில்லை , அதற்கு நதி நீர் இணைப்பே நல்ல வழி. நான் சற்று ஆழமாக சென்று மேற்சொன்ன அம்சங்க‌ளை சாத்தியமாக்க ஆப்பரேஷன் இந்தியா 2000 என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டி ஐம் டூயிங் மை பெஸ்ட். என் திட்டத்தின் சுருக்கத்தை படிக்க கீழ் காணும் லிங்கை க்ளிக் செய்யவும்


http://kavithai07.blogspot.com/2009/10/blog-post_31.html