Tuesday 1 December 2009

நிலா சன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்























காடு அவன் வீடு.ஆம் இருள் ஒரு மலை ஜாதி வகுப்பை சேர்ந்தவன். பிறந்தது முதல் அவன் வானம் பார்த்ததை விட மேல் நோக்கி பார்த்தால் மரங்கள் பார்த்ததே அதிகம்.காட்டிலிருந்து ஒரு நாள் கூட அவன் மருத்துவனிடம் சென்றதில்லை.ஏதாவது அடி பட்டால் ஒரு இலையை பிடுங்குவான் சாரை பிழிவான்,வலி பறந்து ஓடும். ஜலதோஷம் பிடித்தால் தைல மரங்கள் இருக்கும் பகுதிக்கு செல்வான் இலையை முகர்ந்து பார்ப்பான் சரியாகி விடும். aids போன்ற பால் வினை நோய்க்கு கூட என்ன மருந்து என்று அவனால் சொல்ல முடியும்.அவனுக்கு தெரிந்த காட்டு சித்தருக்கு மூலிகைகளை ஆராய்ச்சி பண்ணுவதே வேலை . மரங்களுடன் பேசிக்கொண்டிருப்பார். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் அவரிடம் வருவார்கள்.

இருள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.இருளின் மனைவி நிலா,ஆம்
இருளுக்கும் நிலாவிற்கும் எத்தனை பொருத்தம்.மலை அவன் கடவுள்,அவன் அன்னை இவன் பிறக்கும் போது இவனை மலையிடம் ஒப்படைத்து விட்டு வான் நோக்கி சென்றால். அன்று முதல் மலை இவனை பார்த்துக்கொண்டிருந்தது.வயற்று வலி என்றால் ஓம இலை சாப்பிடுவான். முடி உதிர்ந்தால் கத்தாழை தலை மீது தேய்ப்பான்.மலையோடு சேர்ந்த மரமாக ஓட்டிக்கொண்டிருந்தான். மரம் ஒரே இடத்திலே நின்று கொண்டிருந்தது,இவன் நடந்து கொண்டிருந்தான் வித்யாசம் அவ்வளவே.

ஆம் வாழ்க்கை ஒரு கவிதையாய் சென்று கொண்டிருந்தது. அரசு சார்பாக சிலர் இருளை நோக்கி வந்தனர்.அரசு ஒரு சட்டம் போட்டிருக்கிறது,இலவச வீடு படிப்பு வேலை எல்லாம் தருகிறது,உங்கள் வாழ்க்கை தரம் உயரும் என்று சொன்னார்கள்.பக்கத்தில் உள்ள நகர் பகுதிக்கு போக வேண்டும் என்று சொன்னார்கள்.இவனுக்கு காட்டை விட்டு வர மனமில்லை.ஆனாலும் நிலா சொன்னாள் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று,சரி என்று தலையை ஆட்டினான் .

நகர்ப்புறம் இவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஒரே புகை,இவனுக்கு உடம்பிற்கு ஒத்து வரவில்லை.மனிதர்களின் மனதும் புகை படிந்தே இருந்தது,அது இவன் மனதிற்கு ஒத்து வர வில்லை.மரங்கள் வளர்க்காமல் வீட்டிலே காகித பூக்கள் வளர்ப்பதை பார்த்தான் இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனை சுற்றி இப்போழுது மரங்கள் இல்லை,சுற்றி கட்டிடங்கள் அதற்குள் சிறை வைத்ததை போல உணர்ந்தான்.மானிடத்தின் இயற்க்கை கற்பழிப்பை மனதால்
உணர்ந்தான்.

மனிதர்கள் காலை வேலை முடித்து விட்டு அனைவரும் சிறைச்சாலைக்கு போய் ஒளிவதாக உணர்ந்தான். ஆம் அவன் சொன்ன சிறைச்சாலை பெயர் வீடு. பக்கத்தில் கொலை நடந்தால் கூட என்ன என்று கேட்காமல் வேலைக்கு செல்லும் கனவான்கள் பார்த்து வேடிக்கயாய் இருந்தது.அரசு அவனுக்கு ஆட்டோ பயிற்சி வழங்கி இலவச ஆட்டோ கொடுத்தது. இலவச வீடு, நிலா சன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள்.நிலாவிடம் இருளுக்கு நெருக்கம் இல்லை, இப்பொழுது எல்லாம் அவனுக்கு அம்மாவசை தான்.

இப்பொழுது எல்லாம் மருத்தவரிடம் செல்கிறான்.அவனுக்கு நோய் பல அறிமுகம் ஆகின. சிக்கன் குனியா ,swine போன்ற காய்ச்சல்களை பரப்பி விட்டு கல்லா நிரப்பிக்கொண்டிருந்தது மருத்துவத்துறை.

உடம்பு சரி இல்லை என்று நிலாவிடம் மருந்து கேட்டான். நிலா சன் டிவி பார்த்துக்கொண்டே இருந்தாள் .ஆம் இவன் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது

12 comments:

பூங்குன்றன்.வே said...

இருளையும், நிலாவையும் வைத்து என்ன ஒரு விளையாட்டு! தல.சும்மா சொல்லக்கூடாது.ரொம்ப அருமை.அதிலும்,

//நிலா சன் டிவி பார்த்துக்கொண்டே இருந்தாள் .ஆம் இவன் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது//

நச் வரிகள்.

சேனல் சன்; டிவி அந்த அரசு இலவசமா?

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு

ஸ்ரீராம். said...

இருள் - நிலா நல்ல பெயர் தெரிவு...

அகல்விளக்கு said...

இது எனது தாத்தாவின் உண்மைக்கதையும் கூட. அப்போது அரசு அவரை பணிமாற்றம் செய்திருந்தது.

//உடம்பு சரி இல்லை என்று நிலாவிடம் மருந்து கேட்டான். நிலா சன் டிவி பார்த்துக்கொண்டே இருந்தாள் .ஆம் இவன் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டது //

உண்மையான வாழ்க்கைதரமா இது ???

ஊடகன் said...

இயற்கை மற்றும் செயற்கையை பற்றியான அழகான பதிவு.........

Menaga Sathia said...

நல்லா இருக்கு

vasu balaji said...

ரொம்ப நல்லா இருக்கு கார்த்திக்

தேவன் said...

/// மானிடத்தின் இயற்க்கை கற்பழிப்பை மனதால்
உணர்ந்தான் ///

ஆபாசமான வார்த்தையை சேர்த்து இருந்தாலும் அழகாய் தான் சொல்லி இருக்கிறீர்கள்.

கலகலப்ரியா said...

good..!

ஹேமா said...

வாழ்க்கைத் தரம் உயர உயர ...!

Santhini said...

Very nice concept. But sounds like a documentry.
Need more effort to make it as a touching story.
Good luck.

Karthick Chidambaram said...

நண்பரே -

உங்கள் ப்ளாக் நல்ல இருக்கு. நான் வலைப்பூ உலகிற்கு புதியவன். ஒரு தொடர் கதை என் ப்ளோகில் எழுதுகிறேன்.
உங்கள் கருத்தை படித்துவிட்டு சொல்லவும்.
என் வலைபூ முகவரி:
http://eluthuvathukarthick.wordpress.com/