Sunday, 31 October 2010

2000 ரூபாய்க்கு வாக்கும் ,பசி போக்கும் மனிதாபிமானமும்

சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் அனைத்து கணிப்பொறியையும் தொட்டிருக்கும் . அதாவது CNN நடத்தும் இந்த வருடத்தின் கதாநாயகன் யார் என்ற வாக்கெடுப்பில் ஒரு தமிழர் இருக்கிறாராம் அவர் மதுரைக்காரராம் அவருக்கு வாக்களிக்கும்படி பல மின்னஞ்சல்கள் வந்து கொண்டு இருக்கின்றன . அப்படி என்ன தான் செய்தார் அந்த மதுரைக்காரர் என்று பார்ப்போம் . அவர் பெயர் நாராயணன் கிருஷ்ணன் , ஐந்து நட்சத்திர உணவகத்தில் குக் ஆக வேலை செய்துள்ளார் , மதுரைக்கு வந்த பொழுது ஒரு கிழவர் உணவு கிடைக்காமல் பசியில் மலத்தை உண்ணுவதை கண்டு இருக்கிறார் இவர் மனம் நெகிழ்ந்து விட்டது , அதனால் தினமும் நானூறு பேருக்கு மூன்று வேலை உணவளித்துக்கொண்டிருக்கிறார் . இதை மேலோட்டமாய் பார்க்கும் பொழுது நமக்கு அவர் கதாநாயகனாய் தெரிகிறார் , ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனிதாபிமானம் அவரை கதாநாயகனாய் ஆக்குகிறது .

சரி அவர் செய்வது சரியா ???? என்று விமர்சனம் செய்யும் பொழுது இயல்பாய் அவரை கதாநாயகனாய் ஏற்கும் நம் மனதும் சரியா என்பதும் விமர்சனத்திற்கு உரியது . ஆட்டோகிராப் படத்தில் ஒரு பாடல் வரி வரும் "தாகம் என்று சொல்கிறேன் , மரக்கன்று ஒன்று தருகிறாய் . பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மணி ஒன்று தருகிறாய் " என்ற ஒரு வரி வரும் அந்த வரி இந்த விமர்சனத்திற்கு உகந்த வரி.பிசைக்கார்களுக்கு உணவளிப்பது
என்பதை விட , ஏன் பிச்சைக்காரர்கள் உருவாகிறார்கள் என்று பார்த்து அதை களைய முற்ப்பட வேண்டும் அதுவே நிரந்தர தீர்வு . இப்படி நாம் சொல்லும் பொழுது இயல்பாய் நமக்குள் ஒரு கேள்வி வரும் ????? பசியால் ஒருவன் வாடிக்கொண்டிருக்கிறான் அப்படி இருக்கும் பொழுது அந்த தருணத்தில் பசியை போக்குவது தவறா என்ற கேள்வி வரும் . எந்த ஒரு விடயத்திற்கும் நிரந்தர தீர்வு , தர்க்காலிக தீர்வு என்று இரு தீர்வு இருக்கும் .தற்காலிக தீர்வை விட நிரந்தர தீர்வு முக்கியமானது .

தற்காலிக தீர்வு எல்லா தருணங்களிலும் நிரந்தர தீர்வை தடுக்கும் , இது அனைத்து விடயங்களுக்கும் பொருந்தும் . உதாரணமாய் தொழிலாளர்கள் தன்னை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டி போராடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் . நிறுவனத்தின் முதலாளி சம்பளத்தை ஒரு இரு நூறு ரூபாய் ஏற்றுகிறேன் போராட்டத்தை கைவிடுங்கள் என்று சொன்னால் ????? போராட்டத்தை விட்டு விட்டால் அது நாளைக்கு அவர்கள் வேலையை உலை வைத்து விடும் . எந்த ஒரு நிரந்தர தீர்வையையும் நீர்த்து போக செய்வது தர்க்காலிக தீர்வுகள் . எப்படி சில மாத்திரைகள் அப்பொழுது உள்ள தலைவலியை மட்டும் போக்கிவிட்டு , SIDE EFFECTS கொடுக்குமோ அதை போலவே தர்க்காலிக தீர்வுகள் . நாராயணன் செய்வது கூட ஒரு தர்க்காலிக தீர்வு அதற்கும் SIDE EFFECTS உண்டு .

சில பேர் இயல்பாய் சொல்வார்கள் "என்னால் முடிந்ததை செய்கிறேன் ????" சரி ஒரு பிச்சைக்காரனுக்கு நாம்
பிச்சை போடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம் , நாம் விருப்பப்பட்டால் போடுவோம் . நமக்கு சாத்தியப்பட்டால்
போடுவோம் , நம்மிடம் பத்து ரூபாய் இருந்தால் ஒரு ரூபாய் போடுவோம் . நம்மிடம் காசு இல்லை என்றால் ??????? அவனுடைய பசி நம் விருப்பத்தின் பெயராலேயே தீர்க்கப்படுகிறது . நாளைக்கே நாராயணன் விருப்பம் இல்லை என்றால் இதை செய்யவில்லை என்றால் , அந்த நானூறு பேரின் கதி .நீங்கள் அவருக்கு கட்டாயம் சோறிட வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது ????? அவர்களை மேலும் பிசைக்காரனாக்குவதே இதை போல செயல்கள் செய்யும்.

உங்கள் பகுதிக்கு சாலை ஒன்று தேவைப்படுகிறது , அதை ஒரு நபர் ஒரு வள்ளல் சொந்த செலவில் போட்டுக்கொடுக்கிறார் . அந்த தொகுதி MLA அந்த பகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம் . நாளைக்கு அந்த வள்ளல் இறந்துவிட்டாலோ , இல்லை விருப்பம் இல்லை என்றாலோ அவரை இச்செயல்களை கட்டாயம் செய்ய வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது . அந்த தொகுதி மக்களும் தனக்காய்
யாரோ ஒருவர் செய்கிறார் என்ற நம்பிக்கையில் , போராடும் குணம் இல்லாமல் நீர்த்து போய் இருப்பார்கள் அது அவர்களுக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என்பதில் ஐயம் இல்லை . சாலையே இல்லாமல் இருப்பதற்கு ஒருவன் சாலை போட்டு தருகிறானே என்று சொல்பவர்கள் மட்டுமே பசியால் வாடுபவருக்கு ஒருவன் சோறு போடுகிறானே என்று சொல்லி வாக்களிக்க சொல்கிறார்கள் .

விதர்பா விவசாயி பிச்சைக்காரர் ஆகிறார் விவசாயம் படுப்பதால் . அவருக்கு தேவை உணவளிப்பதா ??? இல்லை அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்ற ஏகாதிபத்தியத்தை விரட்ட போராட அணி திரட்டுவதா ????? அவருக்கு உணவளிப்பது என்பது உங்கள் தீர்வானால் நீங்கள் அவர் போராட்ட குணத்தை நீர்த்து போக செய்கிறீர்கள் ?????? இது ஒரு வகையில் ஏகாதிப்பதியதிற்கு துணை போவது இந்த நீர்த்து போகும் வேலையை தான் பார்த்துக்கொண்டிருக்கிறார் நாராயணன்.

கலைஞர் தொலைகாட்சி தருகிறார் வாக்கிற்கு 2000 ரூபாய் தருகிறார் , அது கூட சாமனிய மக்களுக்கு அந்த தருணத்தில் மகிழ்ச்சியே , இதனால் கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வரப்போகிறதா , இல்லை முல்லைப்பெரியார் பிரச்சனை தீரப்போகிறாதா. இல்லை பல தயாரிப்பாளர்களை ஏழைகளாக்கும் சன் குழுமத்தின் ஏகாதிப்பத்தியம் அழியப்போகிறதா ???? இப்படி 2000 ரூபாய் அப்பொழுது தருகிறார்கள் என்று நீர்த்துபோன சிந்தனை உள்ளவர்கள் மனிதாபிமான கண்ணோடு பார்த்து ,நாராயணனுக்கு வாக்களியுங்கள் என்று மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் .

ஒரு ஊடகம் ஆளும்வர்கத்தின் ஏதாவது ஒரு குரலாய் இருந்தால் மட்டுமே அது பரிசீலிக்கும் . CNN அவ்வகையில்
எடுத்து இருக்கும் நபர் ஒரு ஐரோம் ஷர்மிலாவோ , இல்லை அருந்ததி ராயோ அல்ல ஏன் என்றால் அவர்கள் பழங்குடி மக்களை பிரதிபலிக்கிறார்கள் , அவர் ஏதோ ஒரு விதத்தில் ஆளும் வர்க்கத்தை பிரதிபலித்தால் தான் அவர் முன்னிலை படுத்த படுகிறார் .நீங்கள் ஆளும் வர்கத்தின் குரலா ???

Sunday, 3 October 2010

PEEPLI LIVE ஒரு மேட்டுக்குடியின் பார்வையில் விவசாய தற்கொலைகள்

"PEEPLI LIVE " என்ற ஹிந்தி திரைப்படம் ஆஸ்கார் செல்கிறது என்று படித்தேன் . படத்தினுடைய தயாரிப்பாளர் அமீர் கான் . சமகாலத்தில் வந்த நேர்மையான அரசியல் படம் என்று விமர்சனங்கள் , மேலும் சாரு போன்ற எழுத்தாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள் .ஆனால் விவசாய தற்கொலைகள் அதிகம் ஏற்படும் விதர்பா மக்கள் அமீர் கான் கொடும்பாவியை எரித்தார்கள் . மேலும் மன்மோகன் சிங் ஒரு நாள் ஓய்வில் இப்படத்தை பார்த்தாராம் இவை எல்லாம் சேர்ந்து இப்படத்தை பார்க்க தூண்டியது .

சரி அப்படி படம் என்ன தான் சொல்கிறது , விவசாய பிரச்சனைகளை படம் பேசுகிறது .ஒரு விவசாயி தற்கொலை செய்தால்ஒரு லட்சம் தன் குடும்பத்திற்கு அரசாங்கம் கொடுக்கும் என்று நினைத்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறான், அது ஊடகங்களுக்கு தெரிந்து TV சேனல்கள் முற்றுகை செய்கின்றன , அரசியல் கட்சிகள் முற்றுகை செய்கின்றன , கடைசியில் அவன் ஊரை விட்டு ஓடும் நிலைமை , எப்படி ஊடகங்கள் அவன் மைய்ய பிரச்னையை பார்க்காமல் வெறும் பரபரப்புக்காய் அந்த செய்தியை கையாள்கிறது என்பதே படத்தின் ஒரு வரி செய்தி.

படத்தை பார்த்தவுடன் எனக்கு இது சம கால பிரச்னையை நன்று அலசிய படமாய் தோன்றவில்லை . ஊடகங்கள் நேர்மையாய் இல்லை உண்மை தான் , விதர்பா விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டே இருக்கின்ற பொழுது IPL மேட்ச் கவர் செய்தது ஊடகங்கள் . ஊடகங்கள் மக்களிடம் அரசியல் பார்வையுடன் விடயங்களை கொண்டு செல்வதில்லை உண்மைதான் . பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த பொழுது எந்திரன் படத்தை பற்றி மட்டும் அதிகாமாய் சன் தொலைகாட்சி கவலைப்பட்டு கொண்டிருந்தது . ஊடகங்களின் நேர்மை அவ்வளவே . ஆனால் விவசாயிகளின் தற்கொலைக்கு எது மூல காரணம், வெறும் ஊடகங்களா ???இல்லை அரசியல்வாதிகளா ??? இல்லை உலகமயமாக்கலா???

உலகமயமாக்கம் என்பதை தொடாமலேயே விவசாய பிரச்சனைகளை சொல்கிறது படம் . படத்தில் ஒரு அரசியல்வாதியுடன் ஒரு பேட்டி வரும் அதில் விவசாய பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்று கேட்கும் பொழுது "INDUSTRIALISATION " என்ற பதில் வரும் , இப்படி ஒன்று இரண்டு இடங்களில் வரும் வசனம் தவிர பெரிதாய் ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் விவசாயிகளின் பிரச்சனை ஊடகங்கள் அல்ல ??? உலகமயமாக்கமே ,அப்படி உலகமயமாக்கலை தொடமால் எப்படி ஒரு நேர்மையான அரசியல் படம் எடுக்க முடியும் .

பிளாச்சிமடா கேரளாவில் உள்ள கிராமம் அங்கு கோக் வந்தது , நிறைய பேருக்கு வேலை அளிக்கிறோம் என்ற பெயரில் அந்த கிராமத்தையே அளித்தது , இனிக்கும் தண்ணீர் உள்ள கிராமம் பிளாச்சிமடா , இன்று அந்த தண்ணீர் எல்லாம் விடமாய் போனது . அந்த கிராம மக்கள் விவசாயம் பாழ் அடைந்தது , இப்படி உலக கொள்ளைக்காரர்கள் கோக் பெப்சி உலகத்தின் உள்ள தண்ணீரை எல்லாம் பகல் கொள்ளை அடிக்க , விவசாயத்தை எல்லாம் பாழ் செய்ய , உலகமயமாக்கமே விவசாயிகளின் பிரதான எதிரி . sterlite ஆலை தூத்துக்குடியை பாழ் செய்தது . இப்படி எதோ ஒரு ஆலை வர அந்த விவசாயம் பாழ் ஆனது என்பதை போன்ற காட்சிகள் பெயர் அளவிற்கு கூட படத்தில் வைக்கவில்லை .

ஏதோ காசு தருவார்கள் என்பதற்காய் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பது போல சித்தரிக்க பட்ட காட்சிகள் . உண்மை அதுவா ??? வாழ வழி இல்லாமல் அல்லவா தற்கொலை செய்து கொள்கிறார்கள் ??? இப்படி தற்கொலைகளுக்கு பணம் தான் காரணம் என்பது போல் சித்தரிப்பது விவசாயிகளை புண்படுத்துவது போல் உள்ளது . மேலும் யார் தற்கொலை செய்து கொள்வது என்ற விவாதம் படத்தில் வரும் , அது நகைச்சுவை காட்சி போல சித்தரித்து விவசாய பிரச்சனைகளை கேலி பொருள் போல் ஆக்கி விட்டார் அமீர் .

சரி ஒரு பன்னாட்டு குளிர் பான பொருட்களுக்கு விளம்பரத்தில் நடிக்கும் அமீர் கான் எப்படி ஒரு நேர்மையான படத்தை தயாரித்து கொடுக்க முடியும் .சாரு போன்ற அறிவாளிகளை விட , விதர்பா மக்களுக்கே அங்கு நடக்கும் அரசியல் தெரியும். படம் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை இந்த சுட்டியில் இருந்து பாருங்கள் , PEEPLI LIVE உண்மையில் நேர்மையான படமா என்பது உங்களுக்கு புரியும் . உலகமயமாக்கம் தாக்கம் இல்லாமல் விவசாய பிரச்னையை காண்பித்ததற்கு அமீர் கான் அவர்கட்க்கு ஆஸ்கார் தரலாம்.

பின் குறிப்பு :
நாம் பெரிதும் கொண்டாடிய "3 IDIOTS " படத்தில் கூட ஒரு ஏழை குடும்பம் எப்படி சித்தரிக்கபட்டது . ஒரு மேட்டுக்குடியின் பார்வையில் ஏழை என்றால் அசுத்தமானவர்கள் என்பது போல சித்தரிக்கபட்டது, அதே போல் PEEPLI LIVE ஒரு மேட்டுக்குடியின் பார்வையில் விவசாய தற்கொலைகள் .

இந்த சுட்டியை படிக்கவும்
Vidharba farmer view on PEEPLI

Friday, 1 October 2010

கருப்பு கோட் எதற்கு , காவி உடை போதுமே
பாபர் மசூதி பற்றி தீர்ப்பு வந்துள்ளது பா ஜா கா மற்றும் இந்து முண்ணனியினர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் ,தீர்ப்பின் சாராம்சம் இந்து மதத்தினுடைய நம்பிக்கை , அதாவது ராமர் கோவில் அங்கு இருந்தது என்று ஒருநம்பிக்கையாம் அதனால் இந்துக்களுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுக்கிறார்களாம் . சில கேள்விகள்

1 வெறும் நம்பிக்கை மட்டுமே ஆதாரமாய் இருக்கும் பட்சத்தில் , இப்பொழுது இருக்கும் ஒரு ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு இங்கு ஒரு கிருத்துவ சர்ச் இருந்தது என்றால் நீதிமன்றம் , கிறுத்துவர்களுக்கு நிலத்தை பாதியாய் தந்து விடுமா ??????
2 நம்பிக்கை மட்டுமே தீர்ப்பின் சார்மசமாய் இருக்கும் பட்சத்தில் , சட்ட மன்றம் இருக்கும் இடத்தில் என் மதத்தினுடைய கோவில் இருந்தது என்று அதை இடித்தால் நீதிமன்றம் , மற்றும் கரசேவகர்கள் ஒத்துக்கொள்வார்களா ?????3 மசூதியை இடித்ததற்கு வீடியோ ஆதாரம் முதல் இருக்கும் பொழுது அதை எல்லாம் ஒரு பொருட்டாய் கருதாமல் அங்கு முன்பே ராமர் கோவில் இருந்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ????? 4 அப்படி பார்க்கும் பொழுது ஒவொவொரு இடமுமே 10000 வருடங்களுக்கு முன்பு வேறு போல் இருக்கும் அதற்க்கு
ஏற்றார் போல் அனைத்து தீர்ப்பும் எழுதப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் .
5 ராமர் இருப்பது உண்மை என்றால் சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் அம்பேலா ???????
6 கோவிலை இடித்து கட்டியதால் அது மசூதியே அல்ல என்கிறார்களே , கோவிலை இடித்ததற்கு ஆதாரம் உண்டா ?????
பார்ப்பனர்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று வேதம் சொல்கிறது , இன்று US போன்ற வெளிநாடுகளில் இருப்பது
பார்ப்பனர்களே , அதற்காக அவர்கள் பார்ப்பனர் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா ?????
7 நான் ஒரு வீடை இடித்து விட்டு , முன்பு ஒரு காலத்தில் அது என் தாத்தாவின் வீடு அங்கே அவர் படம் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால் நீதி ஏற்றுக்கொள்ளுமா ???
8 வருணாசிரமம் தூக்கிப்பிடிப்பதை போல் உள்ளதே நீதி இதற்க்கு எதற்கு நீதி மன்றம் , கருப்பு கோட் எதற்கு , காவி உடை
போதுமே ...................................??????

http://www.youtube.com/watch?v=5AhbyGeTIbQ

இந்த சுட்டியை பார்க்கவும் இப்படி திருப்பதி கோவில் இடிக்கப்பட்டால் சும்மா இருப்பார்களா .
வலுவான ஆதாரம் தற்காலத்தில் இருக்கும் பொழுது ஏன் கற்காலத்தில் ஆதாரத்தை தேடுகிறார்கள்