Friday, 1 October 2010

கருப்பு கோட் எதற்கு , காவி உடை போதுமே
பாபர் மசூதி பற்றி தீர்ப்பு வந்துள்ளது பா ஜா கா மற்றும் இந்து முண்ணனியினர் மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் ,தீர்ப்பின் சாராம்சம் இந்து மதத்தினுடைய நம்பிக்கை , அதாவது ராமர் கோவில் அங்கு இருந்தது என்று ஒருநம்பிக்கையாம் அதனால் இந்துக்களுக்கும் நிலத்தை பகிர்ந்து கொடுக்கிறார்களாம் . சில கேள்விகள்

1 வெறும் நம்பிக்கை மட்டுமே ஆதாரமாய் இருக்கும் பட்சத்தில் , இப்பொழுது இருக்கும் ஒரு ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு இங்கு ஒரு கிருத்துவ சர்ச் இருந்தது என்றால் நீதிமன்றம் , கிறுத்துவர்களுக்கு நிலத்தை பாதியாய் தந்து விடுமா ??????
2 நம்பிக்கை மட்டுமே தீர்ப்பின் சார்மசமாய் இருக்கும் பட்சத்தில் , சட்ட மன்றம் இருக்கும் இடத்தில் என் மதத்தினுடைய கோவில் இருந்தது என்று அதை இடித்தால் நீதிமன்றம் , மற்றும் கரசேவகர்கள் ஒத்துக்கொள்வார்களா ?????3 மசூதியை இடித்ததற்கு வீடியோ ஆதாரம் முதல் இருக்கும் பொழுது அதை எல்லாம் ஒரு பொருட்டாய் கருதாமல் அங்கு முன்பே ராமர் கோவில் இருந்தது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ????? 4 அப்படி பார்க்கும் பொழுது ஒவொவொரு இடமுமே 10000 வருடங்களுக்கு முன்பு வேறு போல் இருக்கும் அதற்க்கு
ஏற்றார் போல் அனைத்து தீர்ப்பும் எழுதப்படுவது எவ்வளவு முட்டாள் தனம் .
5 ராமர் இருப்பது உண்மை என்றால் சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் அம்பேலா ???????
6 கோவிலை இடித்து கட்டியதால் அது மசூதியே அல்ல என்கிறார்களே , கோவிலை இடித்ததற்கு ஆதாரம் உண்டா ?????
பார்ப்பனர்கள் கடல் கடந்து போகக்கூடாது என்று வேதம் சொல்கிறது , இன்று US போன்ற வெளிநாடுகளில் இருப்பது
பார்ப்பனர்களே , அதற்காக அவர்கள் பார்ப்பனர் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா ?????
7 நான் ஒரு வீடை இடித்து விட்டு , முன்பு ஒரு காலத்தில் அது என் தாத்தாவின் வீடு அங்கே அவர் படம் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால் நீதி ஏற்றுக்கொள்ளுமா ???
8 வருணாசிரமம் தூக்கிப்பிடிப்பதை போல் உள்ளதே நீதி இதற்க்கு எதற்கு நீதி மன்றம் , கருப்பு கோட் எதற்கு , காவி உடை
போதுமே ...................................??????

http://www.youtube.com/watch?v=5AhbyGeTIbQ

இந்த சுட்டியை பார்க்கவும் இப்படி திருப்பதி கோவில் இடிக்கப்பட்டால் சும்மா இருப்பார்களா .
வலுவான ஆதாரம் தற்காலத்தில் இருக்கும் பொழுது ஏன் கற்காலத்தில் ஆதாரத்தை தேடுகிறார்கள்

10 comments:

UFO said...

தீர்ப்பு மீது மிக ஆழமான அலசல், எதிர்கால முன்னறிவிப்பு என தாமதமாக தந்தாலும் சிறப்பான இடுகையாக அளித்துள்ளீர்கள். நன்றி.

இதுதான் தீர்ப்பு... இப்படித்தான் இதை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதாவது...
இனிமேல் ஒரு இடம்/கட்டிடம் ஒருத்தருக்கு வேண்டும் என்றால், அதை "சட்டப்பூர்வாமாக அபகரிக்க" வேண்டுமானால், முதலில் ஏதாவது ஒரு பெரும்பான்மை சமய புராண கதை சொல்ல வேண்டும் 'ராமரு பீமரு' என்று.

அப்புறம் அந்த கதை சார்ந்த ஏதாவது ஒரு 'பொருளை' இரவோடு இரவாக கொண்டுபோய் 'திருட்டுத்தனமாய்' அங்கே உள்ள கட்டிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட வேண்டும்.

பிறகு அதை வன்முறை அராஜக கரசேவை செய்து இடித்துவிடவேண்டும்.

அப்புறம் தொல்லியல் துறை குழிதோண்டி ஆராய்ந்து பார்த்து 'இதற்கு முன் அந்த இடத்தில் ஏதோ கட்டிடம் இருந்தது' என்று அறிக்கை கொடுக்கும்.

நீதிபதிகள் இடித்த கதையை, இடிக்கப்பட்ட கட்டிடத்தை , வன்முறையை அதை தொடர்ந்து நடந்த கலவரத்தை எல்லாவற்றையும் விட்டு விட்டு... அந்த இடத்தை மூனாபிரிச்சு... அட போங்கப்பா... நீங்களும் உங்க அநீதியும்...

மொதல்ல அந்த அநீதிமன்றத்த இடிங்கப்பா. ஏன்னா நீதியை இடித்து தள்ளிவிட்டுத்தான் அந்த நீதி மன்றமே அங்கே கட்டப்பட்டுள்ளது.

UFO said...

இது சட்ட அடிப்படையிலான ஆதாரங்களை வைத்தோ, வாத பிரதி வாதங்களை தீர விசாரித்தோ, வரலாற்று உண்மைகள் அடிப்படையிலோ தரப்பட்ட ஒரு நீதிமன்ற தீர்ப்பு இல்லை...

மாறாக...

இது, சட்டத்துக்கும், நீதிக்கும், நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆதாரத்துக்கும் எதிராக அப்பட்டமாய் பட்டப்பகலில் பலர் பார்க்க கொஞ்சம்கூட வெட்கம் இன்றி குற்ற உணர்வின்றி நடத்தப்பட்ட காட்டுமிராண்டி கற்பழிப்பு வன்முறை போர்.

குற்றுயிரும் குலையுயிருமாய் பிறப்புறுப்பு கிழிந்துபோய் ரத்தம் ஓட நடுத்தெருவில் அம்மணமாய் செத்துக்கிடக்கின்றாள்... மூன்று கோட்செக்களால் கற்பழிக்கப்பட்டு வீசி எறியப்பட்ட நீதிதேவதை... கண்கள் மட்டும் இன்னும் அதே கட்டப்பட்டநிலையில்…

இந்த பிறேதத்துக்கு சுப்ரீம் கோர்ட்டில் எப்போது கருமாதி என்று தெரியவில்லை.

ஆயிரத்தில் ஒருவன் said...

உங்கள் பார்வையில் வேண்டுமென்றால் அப்படி இருக்கலாம்.ஆனால் அந்த சர்சைக்குரிய இடம் யாருடையது என்பதற்கு யாரும் தீர்ப்பு கூற முடியாது, ஒரு வேளை ஒரு சாரருக்கு சாதகமாக தீர்ப்பு கூறியிருந்தால் மற்றொரு சாரர் கண்டிப்பாக கலவரத்தில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம். அப்படி இல்லை என்றாலும் இந்த கீழ் தரமான அரசியல்வாதிகள் மத கலவரத்தை தூண்டிவிட்டிருப்பார்கள் இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் தீர்ப்பு வழங்கியிருப்பாதாக நான் கருதுகிறேன். இப்பிரச்சனை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீதி மன்றங்களால் தீர்க்க முடியாது. விட்டு கொடுத்து போவதில் தான் இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு ஏற்படும் என்பது தாழ்வான கருத்து.

வெண்ணிற இரவுகள்....! said...

BABAR MASOOTHI idikkappattathukku saatchi ullathe video aadharaam .... ullathe athu eppadi
en paarvai mattum aagum .....antha
aatharathai paarthu theerppu koduppeerkalaa illai karkkaalam vaithu theerppu elutha padumaa

andygarcia said...

இடம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினைக்கு வந்த தீர்ப்பு 1949 potta case, 90's உடைத்தற்கு தண்டனை தீர்ப்பு அல்ல , நான் புரிந்து கொண்ட வரை.

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்!

http://arulgreen.blogspot.com/

THIRUBUVANAM said...

இந்த தீர்ப்பு நீதி துறை காவியின் படித்துறை ஆகிவிட்டதற்கு உதாரணம்
இன்னும் எத்தனை காலம் தான் மதசார்பற்ற நாடு என்று ஏமாற்ற போகிறார்களோ?

தீர்ப்பு பலரின் பார்வையில்

www.newstbm.blogspot.com

ஆயிரத்தில் ஒருவன் said...

நண்பரே இப்பொழுது சர்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கிற்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது இது தனி வழக்கு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு வேறு, இடித்தது சரி என்று சொல்லவில்லை. இரு சாரருக்கும் பிரச்சனை இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றால் இவ்வாறு தான் வழங்க முடியும்.

ஜெகதீஸ்வரன். said...

அமைதியா இருக்கறது புடிக்கலையா,.

முஸ்லிம்களை அமைதியா அடுத்த கட்டத்துக்கு போயிட்டாங்க. நீங்க எப்ப போக போறிங்க.

வெண்ணிற இரவுகள்....! said...

இரு சாராருக்கும் பிரச்சனை இல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமா ??? சரியான
தீர்ப்பு வழங்க வேண்டுமா ????