முதலாளிகளின் உலகத்திலே , ஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது அதன் தொழிலாளர்கள் எப்படி பாதிக்கபடுகிறார்கள் என்பதை அற்புதமாகவும் நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் படம் சார்லி சாப்ளின் நடித்த "MODERN TIMES " . எந்திரங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறது அனைத்தையும் ஒரு தொலைகாட்சி போல ஒன்றை வைத்துக்கொண்டு தொழிற்சாலையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் முதாலாளி பார்த்துக்கொண்டிருக்கிறார் , அதன் மூலமாகவே ஒரு தொழிலாளியிடம் வேகத்தை அதிகப்படுத்த சொல்கிறார் . இக்காட்சி இப்பொழுது மென்பொருள் நிறுவனங்களில் இருக்கும் TELECONFERENCING உடன் பொருத்தி பார்க்கலாம் . சாப்ளின் ஒரு screw driver வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஸ்க்ருவை டைட் செய்யும் வேலை . வேகமாய் வர வர டைட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.கொஞ்சம் சாப்ளின் மெதுவாய் வேலை பார்த்தாலும் supervisor அவரை வேகமாய் வேலை பார் என்று திட்டிக்கொண்டே இருப்பார் . சாப்ளின் கழிவறைக்கு செல்கிறார் , அங்கு ஆற அமர உட்கார்ந்து தம் அடிக்கிறார் , அதை தொலைக்காட்சியில் இருந்து முதலாளி பார்க்கிறார் , சாப்ளினை திட்டுகிறார் , சாப்ளின் மறுபடியும் வேலை பார்க்க செல்கிறார் . இத்தகைய கழிவறை கூட முதலாளி கட்டுப்பாட்டில் இருக்கிறது , nike போன்ற நிறுவனங்களில் ஒன்றுக்கு சென்றால் கூட குழந்தைகளை திட்டுவார்கள் , அதற்க்கு கூட நேரம் ஒதுக்காமல் செல்ல வேண்டும் , அங்காடி தெரு படத்திலும் அத்தகைய காட்சி பார்த்தாய்
நியாபகம் , இப்படி முதலாளித்துவம் எப்படி இருக்கிறது , எப்படி எல்லாம் இருக்கும் என்பதை 1936 அந்த ஆண்டிலேயே சித்தரித்து விட்டார் சாப்ளின் . screw டைட் செய்து செய்து சாப்ளினுக்கு இயல்பாகவே அது ஒரு குணாதிசயம் போல மாறிவிட்டது . SCREW இல்லை என்றாலும் அதை போலவே செய்கிறார் . ஒரு பெண்மணியின் பட்டன் வைத்த ஷர்டை டைட் செய்ய பாய்கிறார் , அந்த பெண்மணி ஓடுகிறாள் . சாப்ளினுக்கு அதிக வேலை பளு அவரை ஒரு நரம்பு தளர்ச்சி உள்ளவன் போல மாற்றுகிறது . எந்திரத்தனமாய் ஒரு இயந்திரம் போல அவர் நடவடிக்கைகள் இருக்கிறது . எப்படி பணக்காரர்கள் நுகர்கிறார்கள் , எப்படி சாமனியன் கஷ்டப்படுக்கிறான் என்பதை அற்புதமாய் படம் சித்தரிக்கிறது . இப்படி படம் நெடுக அற்புதமான நகைச்சுவை , சிந்தனை , ஆழ்ந்த சோகம் என்று சாப்ளின் பின்னி எடுக்கிறார் . கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் "MODERN TIMES ".
10 comments:
superb writing.. definitely I will watch this movie and give u feed back
பார்க்க வேண்டும் நண்பா....
அருமையான படம். மேலும் மதிய உணவைக் கூட பணிநேரத்தை வீணாக்காமல் ஊட்டிவிட ஒரு கருவி கொண்டுவந்து அதில் சாப்ளினைச்சாப்பிட வைப்பார்கள்.
அருமையான நடிப்பு மற்றும் கருத்து.
மா.மணி
பகிர்வுக்கு நன்றி.
இந்தப் படத்தில் தொழிலாளி சாப்பிடச் செல்லும் போது அதிக நேரம் ஆவதாகக் கூறி, அதைக் குறைக்க உணவூட்டும் எந்திரத்தை கொண்டுவருவார்கள், அது நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது. முதலாளிகள் மனிதனையும் எந்திரதொடு ஒரு எந்திரமாக கருதுவதை செவிட்டில் அடித்துச் சொல்கிறது. சாப்ளின், வாழ்வின் பல துறைகளைப் பற்றி படமெடுத்துள்ளார், ஒவ்வொன்றிலும் அதிலுள்ள கஷ்ட நஷ்டங்களைப் பற்றி நகைச்சுவையோடு கொடுத்திருப்பார். இவரது The Dictator படம் ஹிட்லரைப் பற்றியது, அமெரிக்கா ஹிட்லரை எதிரியாகக் கருதுவதற்கு முன்னமே எடுக்கப் பட்டது. அதில் ஹிட்லரை மஹா கோமாளியாகச் சித்தரித்திருப்பார்.பார்த்து ரசிக்க வேண்டிய படம். City Lights என்ற படத்தின் கடைசி காட்சியில் நம்மையறியாமல் கண்ணில் நீர் வரும்.சாப்ளின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. மாமனிதர் அவர்.
Good..
பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்
கி போடுல மட்டுமங்க தோழர் .........
மாடர்ன் டைம்ஸ் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு நண்பா... இதுவரையில் பார்க்கவில்லை.. பார்த்துவிடுகிறேன்.
A nous la liberte (1931) என்றொரு படம் பிரன்சு மொழியில் வந்திருக்கிறது.. அதுவும் இதே போல காட்சி அமைப்புகள் கொண்ட படமே...
அதையும் பார்த்து விடுங்கள்...
http://www.imdb.com/title/tt0022599/
http://en.wikipedia.org/wiki/%C3%80_nous_la_libert%C3%A9
Post a Comment