ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .இந்த அறுபது வயதில் நாம் ஒரு நல்ல நடிகனை இழந்திருக்கிறோம்,ஒரு சூப்பர் ஸ்டார் கிடைத்திருக்கிறார்.ரஜினி நடித்த படங்களில் எனக்கு பிடித்தது நடித்ததில் சிறந்தது 'ஆறிலிருந்து அறுபது வரை'.ரஜினி வசூல் ராஜாவாய் இருக்கிறார் அதை போல் இப்பொழுது அவரால் நடிக்க முடியாது. இன்று அவருக்கு அகவை அறுபது. நடிகனை இழந்திருக்கிறோம் நாம்.
ரஜினி அற்புதமாய் நடித்த படங்கள் பல.அதில் 'முள்ளும் மலரும்' மிகவும் பிடித்த படம் .தனக்கும் தங்கைக்கும் இடையில் ஒரு காதலன் வருவான் ரஜினியால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அண்ணன் தங்கை உறவை நுட்பமாய் செதுக்கிய படம். என்னைப்பொருத்தவரை 'முள்ளும் மலரும்' உலக சினிமா. ரஜினி நடித்த ஒரே காதல் படம் 'புதுக்கவிதை'.பெரிய நடிகர் என்றால் நகைச்சுவை நடிப்பில் குழந்தையை போல் மாறி விடுவார்.'தில்லு முல்லு' ஒரு சிறந்த உதாரணம்.குழந்தைகளுக்கு இன்று ரஜினியை பிடிப்பதற்கு காரணம் அவர் நகைச்சுவை பிம்பமே தவிர சூப்பர் ஸ்டார் பிம்பம் இல்லை.
என்னை பொறுத்தவரை கமலை விட ரஜினி சிறந்த நடிகர். கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார். 'தளபதி' படத்தில் சின்னத்தாயவள் பாடலில் கொஞ்சமாய் வாய் திறப்பார் அது நடிப்பின் சிறந்த உதாரணம்.ரஜினி 'ஒரு கூட்டு கிளியாக' பாடலில் தம்பியாக இருப்பார்,காண்போர் அனைவரும் தன்னை தம்பியை உணர்வார்கள்.'நாம்மை போல அண்ணன் தம்பி' என்று பிரபுவை பார்த்து பாடும் போது நாம் அண்ணனாய் உணர்வோம்.ரஜினி நடிப்பு நம் கலாச்சாரத்தோடு இணைத்து இருக்கிறது.
'பாட்ஷா' இன்றும் நான் பிரமிக்கும் படம்.'நல்லவங்களா ஆண்டவன் சோதிப்பான் ...' என்று சொல்லும் போது ..அதிரும் அரங்கம்.ஆனால் இன்று அவர் உச்சத்தில் இருக்கிறார் கதாநாயகனாய் அனைத்தும் செய்துவிட்டார். ஒரு நடிகனாய்,ஒரு நடிகனாக.........ஒரு நடிகனை நாம் இழந்து சூப்பர் ஸ்டார் பெற்று இருக்கிறோம்.
சத்யராஜ் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் காவேரி பிரச்சனை என்றால், ஹொகேனகல் பிரச்சனை என்றால் ரஜினியை கேட்காதீர்கள் முதல்வரை கேளுங்கள்,ரஜினி ஒரு நடிகர் மட்டுமே,யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேளுங்கள்,வீணான மலிவான விளம்பரம் செய்ய வேண்டாம்.

ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எப்பவுமே உச்சம் தான்.நீங்கள் ஏன் அமிதாப் வழியில் 'பா' போன்ற படத்தில் மாதவன் போன்றவருக்கு மகனாய் நடிக்ககூடாது. மாதவன், மீனா குழந்தையாக.சூப்பர் ஸ்டாரை நல்ல நடிகரை பார்க்க ஆசை. மீனா அங்கிள் என்று கூப்பிட்டு,அவரே கதாநாயகியாய் நடித்து,அவருடனே பிள்ளையாய் நடித்த பெருமை வருமே. நான் இயக்குனர் ஆனால் கட்டாயம் 'பா' படம் நீங்கள் நடிக்க வேண்டும் வாழ்த்துக்கள்.உங்களை நல்ல நடிகனாய் பார்க்க வேண்டும்
24 comments:
அருமை நண்பரே... தங்கள் கருத்தோடு ஒத்துபோகிறேன்!
அருமை நண்பரே... தங்கள் கருத்தோடு ஒத்துபோகிறேன்!
இதற்குப்பின் அவ்வாறு செய்தல் அவருக்கு இன்னும் புகழ் சேர்க்கும்...
சரிதான் கார்த்திக்...
பிரபாகர்.
தலைவருக்கு வாழ்த்துக்கள்...
நண்பரே,
சூப்பர் ஸ்டாருக்கு ஒரு கடிதம்னு தலைப்புல இருக்கு.
கடிதம் எங்கே நண்பா????
நல்ல பதிவு. ரஜினி வயதான ஹீரோ கேரக்டரில் நடிக்கலாம்.
//ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எப்பவுமே உச்சம் தான்.நீங்கள் ஏன் அமிதாப் வழியில் 'பா' போன்ற படத்தில் மாதவன் போன்றவருக்கு மகனாய் நடிக்ககூடாது//
நடிக்கலாம்
//தில்லு முல்லு' ஒரு சிறந்த உதாரணம்.//
ம்ம்ம்....
//கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார்.//
இது சரியான பார்வையாக எனக்கு தெரியவில்லை. நான் எவருக்கும் ரசிகனாக இதை சொல்லவில்லை.
அருமையாக இருக்கிறது
உங்களின் பல கருத்துக்களோடு உடன்படுகிறேன்
நானும் ரஜினியின் அற்புதமான அடுத்தக் கட்டத்தை எதிர்பார்க்கும் ரசிகன்தான்
நானும் ஒரு பதிவிட்டேன் ரஜினியின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்
http://sridharshan.blogspot.com/2009/12/10.html
I like Baasha, annamalai type masala movie.
Pl.dont take risk as paa...
I am not sure how would you rate kamal, mammotty and mohanlal if rajni is a good actor. Are they supreme actors?
ஹலோ பிரிஎந்து,
அமிதாப் மாதிரி நடிக்க ரஜினி எதுக்கு? உங்களுக்காக பிரிஎண்ட்ஷிப் காக நடிச்ச படம் குசேலன்.
ஈள்ளரும் சேந்து கும்மியாடிசிடீங்க. நீங்க எல்லாரும் ரசிச்சி இருந்த அவர் இன்னும் அடுத்த படம்
செய்ய யோசனை செஞ்சி இருபாங்க. முதல்ல உங்கள மாத்துங்க அவரு அவர தான் இருகாங்க
purinjikongapa
எல்லாப் படங்களிலும் நடிகர்களின் திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரம் அமைவதில்லை... அப்படிக் கிடைக்கும் வாய்ப்பை எல்லா நடிகர்களும் சரியாக பயன் படுத்துவதுமில்லை...
அந்தவகையில் ரஜினி ஒரு சில படங்களிலாவது நடித்து தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். எனினும் அவர் மசாலாப் பட நாயகன்தான் என்பது வெளிப்படை. அவரை இது மாதிரி உசுப்பேற்றி ஓவராக ரிஸ்க் எடுக்க வைக்க வேன்டாம். (அது ரசிகர்களுக்கும் ரிஸ்க் தான்!)
//கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார்.// ----->>>???
இது ரொம்ப - ரொம்ப டூ மச்!!
கமல் தொட்டத நான் தொடல... ஆனா நான் தொட்டதெல்லாம் (மசாலா படம் உட்பட) அவர் தொட்டிருக்கார்... கமல் ரூட் வேற, என் ரூட் வேற என்று ரஜினியே சொன்னது மிகவும் யதார்த்தமான கூற்று!!
நண்பர்களே நானும் அதை தான் சொல்கிறேன்.ரஜினி இன்னும் தொடவில்லை ,ஆனால் தொடக்கூடிய நடிகரே......
மோகன்லால்,மம்மூட்டி, கமல் போல சிறந்த நடிகரே....அவர் திறமை உள்ளவர் அவர் நடிக்க வேண்டும் என்பதே பதிவின்
நோக்கம்
அமிதாப் மாதிரி நடிக்க வேண்டாம் அதை போல வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தலாமே.
குசேலன் தோல்வி வாசு ஒழுங்காக எடுக்காதது........அதற்கு ரஜினி பொறுப்பு ஆக முடியாது
இது பாராட்டுப் பதிவா எதிர்மறையா என்ற அளவு இருக்கிறது சில வரிகள்
மனதுக்குப் பிடித்தவர்கள் எது செய்தாலும் சரி என்றே தோன்றும்..
ஏற்கெனவே பலப்பல அமிதாப் படங்களைத் தமிழில் செய்துள்ளவர்தான் அவர்.
முள்ளும் மலரும் மிகச் சிறந்த படங்களில் ஒன்று...
அகநாழிகை-புத்தக வெளியீடு-புகைப்படங்கள்.
http://kaveriganesh.blogspot.com/2009/12/blog-post_12.html
//ரஜினி நடித்த ஒரே காதல் படம் 'புதுக்கவிதை'//
ஜானியை விட்டு விட்டீர்கள்
//என்னை பொறுத்தவரை கமலை விட ரஜினி சிறந்த நடிகர். கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார்//
உண்மை,சரியாக சொன்னீர்கள், இந்தக்கருத்தையே இயக்குனர் மகேந்திரன் பலதடவை கூறியுள்ளார்
//சத்யராஜ் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் காவேரி பிரச்சனை என்றால், ஹொகேனகல் பிரச்சனை என்றால் ரஜினியை கேட்காதீர்கள் முதல்வரை கேளுங்கள்,ரஜினி ஒரு நடிகர் மட்டுமே,யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேளுங்கள்,வீணான மலிவான விளம்பரம் செய்ய வேண்டாம்//
திருந்தாத ஜென்மங்கள், கண்ணை மூடிக்கொண்டு பாலைக்குடிக்கும் பூனைகள்,இவர்களை கணக்கில் சேர்க்காதீர்கள்
//ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் எப்பவுமே உச்சம் தான்.நீங்கள் ஏன் அமிதாப் வழியில் 'பா' போன்ற படத்தில் மாதவன் போன்றவருக்கு மகனாய் நடிக்ககூடாது. //
நடிக்கும் வாய்ப்பு உள்ளதுபோல் தெரிகிறது,பொறுத்திருந்து பார்ப்போம்.

இவ்வளவு வயசானபிறகும் நட்சத்திரமா ஜொலிக்கும் தலைவருக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துறீங்களா? திட்றீங்களா தல?
ஹ ஹ ஹா என்னெவென்று சொல்வதம்மா..
முகவும் அருமை நண்பா எனது தலைவரை பற்றி நீங்கள் சொன்ன ஓவொன்றும் மறுக்கமுடியாத
உண்மை.
உங்களுக்கு என் அன்பு முத்தங்கள் உங்கள் அன்பு கரங்களில்.............
என்னை பொறுத்தவரை கமலை விட ரஜினி சிறந்த நடிகர். கமல் நடிக்கிறார் என்று தெரியும் ரஜினி நடிப்பது தெரியாது அந்த கதாபாத்திரமாய் வாழுவார். '
////
ஹா ஹா
நல்லா சிரிக்க வச்சீங்க
ரசினி நடிப்பில் எனக்கு பிடித்தது 'அவர்கள்" அதில் பலவிதமான குணங்களை காட்டி கலக்கியிருப்பார்
அதுக்காக கமலோடு ஓப்பிடுவது நல்ல காமெடி
துவக்கதில் இருந்தே அதுபோல நடிதிருந்தால் நல்ல நடிகராக மாரியிருக்கலாம்
அனால் அவர் பணத்திர்காக மசால படம் பக்கம் சென்றுவிட்டார்ர்
இபோதும் குசேலன் போன்ற நல்ல மளையால படங்களை தமிழில் கற்பழித்த புகழ் அவருடையது
தனக்கென ஒரு இமேஜை வத்துகொண்டு அதை மீரமுடியாத அவர் என்ன நடிகர்?????????
Post a Comment