Wednesday 23 December 2009

பிம்பங்களை மட்டுமே காதலிக்கும் காதல்






















மாலை பொழுதில்

வாசிக்கப்படாத இசைப் பின்னணியில்

மடியில் சாய்ந்தான் காதலன்....!

நேற்று சொன்ன காதல் உஷ்ணம்

சூடு குறையாமல்......!

"எவ்வளவு சம்பளம் டா உனக்கு,IT நல்லாத்தானே இருக்கு" என்றாள்...
சூடு கொஞ்சம் குறைந்தது ......!

"பார்க்க அமீர் கான் மாதரியே இருக்க" என்றாள் ....

பால் உணர்வால் ஈர்ப்பு கூட அமீருக்கு சொந்தமா நினைத்துக்கொண்டான்.....!

"நாமெல்லாம் ஒரே ஜாதி ஓடிப்போக அவசியம் இல்லை" என்றாள் ......

காதல் சூடு இல்லை......

சுட்டது....!

பிம்பங்களை மட்டுமே காதலிக்கும் காதல்.....

11 comments:

அகல்விளக்கு said...

'நச்'சென்று ஒரு கவிதை....

rajeshkannan said...

கவிதை நல்ல இருக்கு

Unknown said...

நல்ல கவிதை.., பாராட்டுக்கள்..,

புலவன் புலிகேசி said...

ம்..நல்ல கவிதை கார்த்தி..

என் நடை பாதையில்(ராம்) said...

safety
maturity
என்ற பெயரில் இவர்கள் படுத்தும் பாடு.. அப்பப்பா ...

சூப்பருங்க....

க.பாலாசி said...

கவிதையை நல்லா எழுதியிருக்கீங்க நண்பா...

கா.பழனியப்பன் said...

உண்மையை டப்புனு நாலுவரில சொல்லிட்டிங்க.

க.பாலாசி said...

அன்பின் நண்பனுக்கு எனது பக்கத்தில் ஒரு விருதொன்று இருக்கிறது. பெற்றுக்கொள்ளவும். நன்றி...

ஸ்ரீராம். said...

காரணக் காதல்கள்...

ஆமாம் ஏன் தமிழ் 10 சமர்ப்பிப்பதே இல்லையா?!

கமலேஷ் said...

இதுக்கு பேர்தான் நெத்தியடி கவிதைன்னு சொல்லுவாங்க....வாழ்த்துக்கள்..

Narmada said...

// காதல் சூடு இல்லை......

சுட்டது....!

பிம்பங்களை மட்டுமே காதலிக்கும் காதல்..... //


good