Saturday, 19 December 2009
சே--- மனிதன் என்ற வார்த்தையின் பொருள்
நமக்குள் இந்தியன் என்ற உணர்வு இருக்கும்.உங்கள் சுதந்திர போராட்டாம் என்றால் உங்களுக்குள் உணர்வு வரும்.அப்படி என்றால் நாம் இந்தியன் மட்டுமே .தமிழுக்காக உணர்விற்காக பேசினால் நான் தமிழன் மட்டுமே. எனக்கு தெரிந்து
மனித வரலாற்றிலே மனிதன் என்ற ஒரே தகுதி இருப்பவன் என் தலைவன் 'சே குவேரா '. ஏதொ ஒரு தேசத்தில் பிறந்து ,ஊர் சுற்ற போய் உலகம் முதலாளித்துவம் புரிந்து,மக்கள் மனிதன் துன்பபடுகிறான் என்று உணர்ந்து,மனிதனுக்காக போராடிய
ஒரே தலைவன்.
சே பிறந்தது அர்ஜென்டினா,கியூபா சுதந்திரத்தில் போராடுகிறான்.கொரில்லா யுத்தம் செய்கிறான்.பிடலுக்கு நம்பிக்கையாய் இருக்கிறான்.கியூபா விடுதலை அடைகிறது,சேக்கு நிதி துறை மந்திரி இலாகா ஒதுக்கப்படுகிறது.அதை உதறி விட்டு எனக்கு பொலிவியாவில் வேலை இருக்கிறது,என்று மறுபடியும் போராட்டத்தில் இறங்கினான்,ஏதொ ஒரு பிணை கைதி போல இறந்து போனான்.சே நினைத்திருந்தால் கியூபாவில் அவரே ராஜா,ஏன் கியூபா கூட அவர் தேசமா என்ன.
எங்கு மனிதன் துன்பப்படுகிரானோ அங்கு எல்லாம் சென்றான்,ஒரு வேலை கடவுளாக இருப்பானோ????????தன் நாடு ,தன் மக்கள் என்று சொல்லாமல் மனிதனுக்கு போராடிய ஒரே தலைவன்.சே பிடிக்கப்படுகிறான்,அவனை ஒரு பாழடைந்த பள்ளியில் சிறை வைக்கிறார்கள்.ஒரு பள்ளி ஆசிரியை சாப்பாடு கொடுக்க வருகிறாள். நான் இந்த சிறையில் இருந்து மீண்டு வந்தால் இந்த பள்ளிக்கு நிதி உதவி செய்கிறேன் என்றான்.மரணம் முன்பு கூட பதட்டம் இல்லை,அன்பு மட்டுமே வழிந்தது.
ஒரு ராணுவ வீரன் சேவை கொல்ல வருகிறான்.அவனுக்கு தெரியும் சே ஒரு உலக வரலாறு,அந்த வரலாற்றை அழிக்க போகிறோம் என்று.அவனுக்கு ஒரே பதற்றம் அவன் கொல்ல போவது ஒரு கடவுளை.சே அமைதியாய் சொல்கிறார் " நீ உன் வேலையை பார்கிறாய்,இந்த இடத்தில சுடு உயிர் வேகமாய் பிரியும்" என்று சொல்கிறார்.அவர் குருதி புனிதமானது.அவர் இறந்த பின்பு இருந்த புகைப்படம் ஏசுவை போல இருந்ததாம்.அவ்வளவு அமைதி.அவர் இறந்த இடத்தில் "அவர்கள் நினைத்து போல் அல்லாமல் உயிருடன் இருக்கிறாய் சே" என்ற வாசகம் ஏந்திய பலகை இருக்கிறது. சே என்னும் பிம்பத்தை அமெரிக்க என்ன தான் அழிக்க நினைத்தாலும் முடியவில்லை.பிம்பத்தை அழிக்க முடியும்,நிதர்சனத்தை அழிக்க முடியுமா,சே பிம்பம் அல்ல சே நிதர்சனம்
பின் குறிப்பு :
சே இன்று வணிக பொருள் ஆகி விட்டது வருத்தமே.அவர் யாரென்று தெரியாமல் அவர் படம் போட்ட சட்டை போட்டுக்கொண்டு செல்கின்றனர்.வரலாறு கூட அவர்களுக்கு தெரியாது.சே வணிக பொருளோ,சினிமா நாயகனோ இல்லை
தீராத பக்கங்கள்
அண்ணன் வலை பூவை பாருங்கள் சே பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..................................
மனிதனாய் யோசிப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்ல பகிர்வு நண்பரே...
நான் ஒரு நாள் டீ கடைக்கு போனபோது
அங்கே ஒருவன் சே பனியன் போட்டு கொண்டு
இருந்தான் அப்போது அவன் நண்பன் யார் இது
என்று கேட்டதுக்கு, அவன் கூறிய பதில்
யாருக்கு தெரியும் என்றான்....
என்ன செய்வது...
சிறப்பான பதிவு சகா!
நீங்கள் கூறியது 100வீதம் உண்மை ஜெட்லி. நானும் அதிகமாக சேயின் உருவப்படம் அணிந்த பணியன்களையே அணிவது வழக்கம். என் நண்பன் ஒருவனிடம் அது யார் எனக் கேட்ட போது அதை பொப் மார்லி என்று கூறிய சம்பவம் நடந்தது. உலகின் தலைசிறந்த போராளி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களை நினைத்து நானும் வருந்தியுள்ளேன். அன்று முதல் என் நண்பர்களின் பிறந்தநாள் வைபவங்களுக்கு சேயின் புத்தகங்களை பரிசளித்து வருகின்றேன். அருமையான பதிவு சகா... தொடர்ந்து இவ்வாறான ஆக்ககங்கள் அதிகம் வெளிவரவேண்டும்.
நீங்க சொனது மிக மிக அருமையான (கவலை பாட வேண்டிய) உண்மை.
கண்டவனெல்லாம் டி -ஷர்ட் போட்டு அலையிறாங்க .
அவர் படம் போட்ட டி -ஷர்ட் போடுறதுக்கு கூட ஒரு தகுதி வேணும்.
பொறுக்கி தனம் பண்றவன் அய்யோக்கிய தனம்
பண்றவென்ல்லாம் போட்டுட்டு அலையிரனுங்க .என்ன பண்றது....
உங்கள் பதிவு மிக மிக அருமை... உங்களின் வார்த்தைகள் மிக அருமை
Post a Comment