Wednesday 30 December 2009

தொலைக்காட்சிக்கு பதில் நூலகங்கள்

இந்த கட்டுரை தொடக்கத்தில் இந்த ஆண்டு முடிந்து கொண்டிருக்கிறது. என்னை பாதித்த விடயங்கள்...............














1 கலைஞர் தன் கல்லறையில் அவர் செம்மொழி வாங்கி தந்ததை பொறிக்க வேண்டும் என்கிறார். சோனியாவிற்கு நன்றி சொல்கிறார்.ஈழ வரலாற்றில் அவர்கள் கல்லறையில் இவர் பெயர் பொறிக்கப்பட்டதே...அதற்கு என்ன செய்ய போகிறார்.
















2 முல்லைபெரியாறு காவேரி பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். தண்ணீர் தனியார்மயமாகி இருக்கிறது கவலை அளிக்கிறது.விவசாயம் என்ற பாடம் அனைத்து பள்ளிகளிலும் இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்து மதுரை பக்கத்தில் ஒரு விவசாயக் கல்லூரி உள்ளது,நிறைய கல்லூரிகள் அரசு திறக்க வேண்டும். விவசாயி என்றால் கேவலம் பொறியாளன் என்றால் மிக நன்றாக உள்ளான் என்ற மனப் போக்கு மாற வேண்டும். மழை பெய்யவில்லை என்றாலும் புதிய தொழிர்நுட்பத்துடன் விவசாயம் செழிக்க அரசு துணை நிற்க வேண்டும்.
விவசாய நிலங்கள் கண்மாய்கள் வீடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன .....இப்படியே போனால் நாம் மறுபடியும் பிறர் கையேந்தும் அடிமைகள் ஆவோம்..சோற்றுக்கு பிற நாட்டு உதவி தேவை படும்..........இப்பொழுது அந்நிய தேசத்தில் வேலை பார்ப்பது கூட கூலி வேலை செய்வதை போன்றதே எச்சரிக்கை......!











3 எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல்.காதலினால் புருஷனை கொன்றாள்,மகனை கொன்றாள்.இது வெறும் பாலியல் பிரச்சனை அல்ல சமுதாய பிரச்சனை. இந்த பொருள் தேடும் உலகம் சாமான்யனை பொருள் தேடு surivival of fittest பாணியில் இருக்கிறது. இது தவறு, புருஷன் பொருள் தேட போக, மனைவி அன்பிற்கு ஏங்குகிறாள் வேறு ஒருவனிடம் கிடைக்கிறது அன்பு.........பிரிய முடியாமல் தவிக்கிறாள்..........இது சமூக பிரச்சனை. தனக்கு முக்கியமானவர்களிடம் அன்பு செலுத்துங்கள்.....கள்ளக்காதல் வெறும் உடல் தேவை மட்டும் அல்ல மனத்தேவையும் உள்ளது......!!!!!அன்பு செலுத்துங்கள் .....பொருள் மட்டும் வாழ்கை அல்ல .......
அன்பு அன்பு










4 கலைஞர் அரசு அனைவருக்கும் தொலைக்காட்சி கொடுக்கிறது.ஆம் தொலைகாட்சி மனிதனுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறது, மலிவு விலை காமம்.......மனித வக்கிர எண்ணங்களை தூண்டும் நாடகங்கள்.......
மக்கள் பிரச்சனையை திசை திருப்பும் மட்டை பந்து .........................மக்களே உஷார் இவர்கள் தொலைகாட்சி பெட்டி கொடுப்பதே மக்கள் சிந்திக்ககூடாது என்பதற்காக தான்.................அரசு தொலைக்காட்சி பெட்டிக்கு பதில் வீட்டிற்க்கு ஒரு நூலகம் அமைக்க சொல்லலாமே.......சிந்தித்தால் போதுமே எந்த பிரச்சனையும் சந்திக்கும் பலம் வருமே......கலைஞர் அவர்களே நூலகம் அமைத்து கொடுங்கள் ஒவ்வொரு வீட்டிற்க்கும்.....









5 ஏன் எழுதுகிறோம் என்ற கேள்வி என்னை உலுக்கிக்கொண்டிருக்கிறது....காரணம் இருவர் குறை ஒன்றும் இல்லை என்ற பதிவர்...மற்றும் பெயர் வெளியிட முடியாத தோழர்......சும்மா கற்பனை பண்ணி எழுதிக்கொண்டிருப்பது அற்பவாதம்,மக்களோடு மக்களாக பணியாற்றினால் தான் சிறந்த படைப்பு படைக்க முடியும்...என்று அந்த தோழர் கூறுவார்.......ஆம் அவருடன் பேசியதிலிருந்து சாரு ராமகிருஷ்ணன் போன்ற பிம்பங்கள் என் மனதில் உடைக்கப்பட்டன.......இப்பொழுதும் என்னோடு அழகான கதைகள் கவிதைகள் உள்ளது ....அவரோடு பழகிய பின் ஒவ்வொரு படைப்பிலும் மக்களுக்காக இலக்கியம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.....வெறும் அழகியல் இலக்கியம் அல்ல வாழ்வியலே இலக்கியம் என்று சொல்கிறார் நண்பர்.

சாரு ராமகிருஷ்ணன் மக்களுக்கு என்ன செய்தார்கள் .....சில பதிவர்கள் ஈழ பிரச்சனை போது ...
என்னிடம் கேட்டதை அவர்களிடம் கேட்கிறேன்......வெறும் ரஷ்ய இலக்கியம் தெரியும் பிரெஞ்சு தெரியும் என்பதிலே புண்ணியம் இல்லை.......தன் மக்களுக்காய் இலக்கியம் இருக்க வேண்டும் .....நானும் எதாவது செய்ய வேண்டும் ....? ஒன்று செய்தால் எழுதுவேன் இல்லை என்றால் எழுத மாட்டேன் ..................!


















6 . உலகெங்கும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது.......மனிதனின் கண்டுபிடிப்பு மேதாவித்தனம் அவனை அழித்துக்கொண்டிருக்கிறது....குளிர்சாதனம் என்ற கருவி கண்டுபிடித்ததால் உபயோக படுத்த மனிதன் தள்ளப் படுகிறான்....முதலில் பொருள் அப்புறம் அதை மக்களிடம் சேர்ப்பது என்ன கொடுமை???????? ஓசோன் ஓட்டை விழ இந்த கண்டுபிடிப்புகள் காரணம் என்றால் மகி ஆகாது .....???????
நம் செல் போன் பேசுவதால் சில பறவைகள் அழிந்துவிட்டதாம் ...........லிப்ஸ்டிக் போன்ற பொருட்கள் தயாரிக்க எலிகள் அழிக்கிறார்கள் .....! இது ஒரு சுழற்சி ......அனைத்து விலங்குகளும் அழிய மனிதன் அழிந்துகொண்டே இருக்கிறான் .........................! வெப்ப மயமாவதை தடுக்க மரங்கள் வைப்போம் .................மரங்கள் வைப்பது மட்டும் அன்றி ....மரங்கள் வளர பாதுகாப்பு வேண்டும் .....தினம் தண்ணி ஊற்ற வேண்டும் .....இடம் வேண்டும் .........அதற்கான சந்திப்புகள் வேண்டும் ...............எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் மரமாவது வளர்க்க வேண்டும் .........................இது நம்மால் முடிந்ததே

12 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல பதிவு நண்பா...எதிர் பார்த்த மாற்றம் உங்களிடம்.

//இப்படியே போனால் நாம் மறுபடியும் பிறர் கையேந்தும் அடிமைகள் ஆவோம்..சோற்றுக்கு பிற நாட்டு உதவி தேவை படும்..........இப்பொழுது அந்நிய தேசத்தில் வேலை பார்ப்பது கூட கூலி வேலை செய்வதை போன்றதே எச்சரிக்கை......!//

அப்பட்டமான உண்மை

க.பாலாசி said...

வீட்டிற்கு ஒரு நூலகம் கூட தேவையில்லை. வீதிக்கொரு நூலகம் அமைத்துதந்தாள் போதும் என்றே நினைக்கிறேன்.

நல்ல கருத்துள்ள பதிவு நண்பா..

//.அனைத்து விலங்குகளும் அழிய மனிதன் அழிந்துகொண்டே இருக்கிறான்//

உண்மை... மறுப்பதற்கொன்றுமில்லை.

Narmada said...

/// அரசு தொலைக்காட்சி பெட்டிக்கு பதில் வீட்டிற்க்கு ஒரு நூலகம் அமைக்க சொல்லலாமே.......சிந்தித்தால் போதுமே எந்த பிரச்சனையும் சந்திக்கும் பலம் வருமே......கலைஞர் அவர்களே நூலகம் அமைத்து கொடுங்கள் ஒவ்வொரு வீட்டிற்க்கும்..... ///

நல்ல சிந்தனை. வள்ளி படத்துல வர வசனம் ஞாபகம் வருது. " வேலை வெட்டி குடுங்கையா வேட்டி சீலை நாமளே வாங்கிக்கலாம்"

Unknown said...

//விவசாயி என்றால் கேவலம் பொறியாளன் என்றால் மிக நன்றாக உள்ளான் என்ற மனப் போக்கு மாற வேண்டும். மழை பெய்யவில்லை என்றாலும் புதிய தொழிர்நுட்பத்துடன் விவசாயம் செழிக்க அரசு துணை நிற்க வேண்டும்.//

விவசாயிகள் குட அதை கேவலமாகவே நினைக்கிறார்கள் .., என்னுடைய தந்தை இன்று வரை எங்கள் நிலங்களில் என்னை கால் வைக்க அனுமதிக்க வில்லை.., விவசாயம் என்னோடு போகட்டும் என்கிறார்...

sathishsangkavi.blogspot.com said...

//விவசாயி என்றால் கேவலம் பொறியாளன் என்றால் மிக நன்றாக உள்ளான் என்ற மனப் போக்கு மாற வேண்டும்.//

உண்மை..... விவசாயி இல்லை என்றால் நாம் சோத்துக்கு சிங்கிதான்.....

கள்ளக்காதல்..... இது அன்பு பிரச்சனை

உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.......

வீட்டிற்கு ஒரு நூலகம்..... வரவேற்கிறேன்

நல்ல பதிவு......

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.......

என் நடை பாதையில்(ராம்) said...

மிக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள்... எல்லாரும் தங்களைப் போல் சிந்தித்தால் நலம்...

rajeshkannan said...

மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்...... மிகவும் அருமையாக
உள்ளது. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்றே

Think Why Not said...

/*...அரசு தொலைக்காட்சி பெட்டிக்கு பதில் வீட்டிற்க்கு ஒரு நூலகம் அமைக்க சொல்லலாமே.......சிந்தித்தால் போதுமே எந்த பிரச்சனையும் சந்திக்கும் பலம் வருமே......கலைஞர் அவர்களே நூலகம் அமைத்து கொடுங்கள் ஒவ்வொரு வீட்டிற்க்கும்.....

...*/

சூப்பர் தல மண்டைல அடிக்கிற மாதிரி சொன்னீங்க...

இன்றைய கவிதை said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

அத்திரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய் said...

முதன் முறை வந்தேன். உமது சிந்தனைகள் ஒவ்வொன்றிலும் சிறைபட்டு கிடக்கிறேன். மிக தெளிவான சமூக பிரக்னையுள்ள கருத்துக்கள்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

அடிக்கடி வருகிறேன்

புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

தனி காட்டு ராஜா said...

உலகெங்கும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகிறது.......மனிதனின் கண்டுபிடிப்பு மேதாவித்தனம் அவனை அழித்துக்கொண்டிருக்கிறது....குளிர்சாதனம் என்ற கருவி கண்டுபிடித்ததால் உபயோக படுத்த மனிதன் தள்ளப் படுகிறான்....முதலில் பொருள் அப்புறம் அதை மக்களிடம் சேர்ப்பது என்ன கொடுமை????????

U are saying "Manithan kandupittipu".??We only invented..we only using....But u are saying "Manithan is responsiple.."...

Simple action is better than 1000 article....
If possible share what u have done for this society...we do not want any reasons..