"ரலேகன் சித்தியில் அன்னா ஹசாரே ஒரு ஊர் நாட்டமை"
"2006 மே மாதத்தில் நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த நேரம் அதைப் பெரிதும் எதிர்த்தவர்கள் AIIMS மருத்துவ மாணவர்கள்தான். அன்னா ஹசாரே போராட்டத்திற்கு முன் அதுபோல் பெரிய மீடியா வெளிச்சத்துடன் நடந்த போராட்டம் இதுவே. இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் தலித் பழங்குடி மாணவர்கள் மீதான நெருக்கடிகள் தீவிரமடைந்தன. இந்தப் போராட்டத்தின்போது நாட்டின் மிகப் பெரும் மருத்துவக் கட்டமைப்பு முற்றிலும் முடக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் மாணவர்களின் பின்னணியில் முழு நிர்வாகமும் செயல்பட்டது. இந்தப் போராட்டத்தை மாணவர்கள் அமைப்பான youth for equalityதான் நடத்தியது. அங்கிருந்த பூங்காவில் ஷாமியானா அமைப்பது முதல் மின்சாரம், மெத்தை விரிப்புகள் என சகல ஏற்பாடுகளையும் நிர்வாகமே செய்து கொடுத்தது. இந்த youth for equality அமைப்புதான் இன்று அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் முன்னணியில் இருந்தது. இவர்கள் தலித்துகளை நடத்துவதற்கும் அன்னா ஹசாரே ரலேகான்சித்தியில் தலித்துகளை நடத்துவதற்கும் இருக்கும் ஒற்றுமை இங்கு குறிப்பிடத்தக்கது."
"ஊழலை தனியார்மயம் , உலகமயம் என்று பார்க்காமல் வெறும் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தை மட்டும் சொல்லும் அன்னா ஹசாரே" என்று பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும்
காலகட்டத்தில் அண்ணாவின்(அன்னா) தம்பி நண்பர் வட பஜ்ஜி எழுதிய பதிவு கொஞ்சம் வருத்தத்தை மட்டுமே வரவழைத்தது.
"2011 ஆம் ஆண்டு போராட்டங்களுக்கான ஆண்டு. உலக அளவில் பல அரசுகளை ஆட்டம் காணச் செய்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்தியாவும் இதற்க்கு விதி விலக்கல்ல. அவற்றுள் அன்னா ஹஸாரே நடாத்திய ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது."
நண்பரே அது முக்கியத்துவம் வாய்ந்ததே யாருக்கு முக்கியம்துவம் வாய்ந்தது? அலைகற்றை ஊழலை எடுத்துக்கொள்வோம் அதில் ஆதாயம் அடைந்தது அம்பானி டாட்டா.அன்னாவின் லோக்பால் எல்லை பிரதமர் வரை பாய்கிறதே தவிர தொழிலதிபர்கள் மீது பாய்வதில்லை. திருடியவனை விட்டுவிட்டு, திருட உதவிய காவலாளியை மட்டும் ஊழல் என்ற பெயரில் சொல்கிறார் அன்னா.அன்னாவின் நோக்கம் தான் என்ன திருடனை இலவசமாய் திருடவைப்பது மட்டுமே நண்பரே. நாட்டின் ஆள்பவரை அம்பானி டாட்டா முடிவு செய்யும் காலத்தில் ஊழலின் மையம் எங்கு உள்ளது?
இப்போராட்டத்தில் கூட்டம் கூட்டமாக பொது மக்களும், எதிர் கட்சிகளும், இளைஞர்கள் மற்றும் பொது நல விரும்பிகள் கலந்து கொண்டனர்.இவர்களுள் IT , BPO மற்றும் தனியார் கம்பெனிகளில் பணி புரியும் இளைஞர்களின் பங்கு குறுப்பிடத்தக்கது. ஈமெயில், Facebook , Twitter , Utube , SMS மற்றும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்கள் வழியாகவும் மிகப் பெரிய அளவில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை முடக்கி விட்டனர்.
ஆனால் இவர்களின் நேர்மை குறித்து எனக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்கள் வெளி வேஷம் போடும் போலிகளோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நண்பருக்கு அன்னாவிற்கு SPONSER செய்பவர்கள் யார் என்பது பற்றி பிரச்சனை அல்ல. அக்குழுவில் இருக்கும் கிரண்பேடி போன்றவர்கள்செய்யும் ஊழல்களை பற்றி கவலை இல்லை .நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு "தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி". இப்படி ஒரு தலைவனுக்கு இப்படி ஒரு தொண்டனே இருப்பான் என்பது திண்ணம்.
அன்னா ஹசறேவுக்கு நியமகிரி மலையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாய் கொடுத்தல் பிரச்சனை அல்ல ஆனால்அதை காசு வாங்கிக்கொடுத்தால் வாங்காதே என்று கம்பை நீட்டிக்கொண்டு அடிக்கவருவார். தமிழகத்தில் கூடங்குளம் அணுமின்நிலையம் ஆயிரம் பேரை கொன்றாலும் ,பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதில் தயாரிக்கப்படும் மின்சாரம் உபோயோகப்படுவது பிரச்சனை அல்ல . கொடு இலவசமாய் கொடு நாம் எல்லாம் கர்ண வம்சா வழியினர் என்று அரசாங்கத்தை மிரட்டுகிறார் . நாட்டில் கூடங்குளம் பிரச்சனை , முல்லை பெரியார் பிரச்சனை , நியமகிரி பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை எதற்கும் குரல் கொடுக்க மாட்டார் , ஆனால் ஊழல் என்ற ஒத்தை வார்த்தைக்கு மட்டும் குரல்.அதிலும் டாட்டா,அம்பானி செய்தால் ஊழல் இல்ல BUSINESS ,அவர்களிடம் காசு வாங்காமல் நாட்டை ஒப்படைக்க வேண்டும் இதுதான் அன்னா தம்பிக்கு சொல்லும் தாரக மந்திரம் பெரியார் பிறந்த பூமி டெல்லியில் கிடைத்த ஆதரவு இங்கே ரஜினி மண்டபம் கொடுத்தும் கிடைக்கவில்லை என்ற வகையில் சந்தோஷமே.
IT நண்பர்கள் டேக்ஸ் கட்டுவதில்லை என்பதில் மாற்றுகருத்து இல்லை,அதற்காக அன்னா ஹசாரே உத்தமர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது .
நண்பர் வடை பஜ்ஜியின் பதிவு
6 comments:
சகோ வெண்ணிற இரவுகள்,
நலமா? உங்கள் ஆக்கத்தின் மையக் கருத்துடன் நான் முழுதும் ஒத்துப்போகிறேன். எனது ஆக்கத்தில், அன்னா ஹஸாரே வை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ எதுவும் பேசவில்லை. அவரை ஆதரிக்கும் IT நிறுவன நண்பர்களின் உண்மை முகத்தை தோலுரிக்கவே எனது ஆக்கம். மற்றபடி அன்னா ஹஸாரே பற்றி எனக்கோர் கருத்துண்டு. காலம் அனுமதித்தால் அவர் பற்றியும் ஒரு பதிவிடுவேன். நீங்கள் கூறிய சில விடயங்களும் அதில் வரும். காபி என்று நினைத்து விட வேணாம். ஏற்கனவே என் மனதில் உள்ளவைகள் தான் அவை. உங்கள் பதிவிற்கு நன்றி. எனது தளத்தை பார்வை இட்டதற்கும் நன்றி.
உங்கள் பணி சிறக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
எல்லாத்துக்குமே அன்னாதான் குரல் கொடுக்கணுமா? ஊழல் இல்லாத அரசு அமையும் வேளையில் அதை அதை தவறாக பயன்படுத்தும் பிஸினஸ்மேன்களை தடுக்க முடியுமே? போலீசை ஒழுங்காக செயல் படுத்தினாலும், திருட்டு குறையுமே? அன்னாவுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்காதீர்கள். அன்னா செய்த ஒரே தவறு சிகப்பு சட்டை அணியாததுதான். என்ன நான் சொல்வது சரிதானே?
//IT நண்பர்கள் டேக்ஸ் கட்டுவதில்லை என்பதில் மாற்றுகருத்து இல்லை
நல்லா கட்டுறீங்க நண்பா சப்பைகட்டு. அந்த கட்டுரையில் அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. இதை எல்லாம் ஐடி துறையில் மட்டுமல்ல, இதுபோல பல்வேறு துறையில் இருக்கும் பெரும்பாலானோர் செய்வதில்லையா? கிரண்பேடி போன்றவர்கள் செய்த ஊழல் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம். நீ தப்பு செய்யாதே என்று சொன்னால், உடனே, அம்பானி திருந்தினால்தான் நான் திருந்துவேன் என்று சொன்னால் எப்படி? அன்னா நல்லவரோ, அயோக்கியரோ, குறைந்த பட்சம் ஊழல் பற்றி போராடலாம் என்ற விழிப்புணர்வாவது வருகிறதே? எல்லோரும் அன்னா பின்னால் செல்ல வேண்டியதில்லை. அவரை தலையில் வைத்து கொண்டாட வேண்டியதில்லை. ஊழல் குறித்த ஒரு போராட்டத்தை தொடங்கலாமே? இல்லை போராட்ட லைசென்ஸை ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்ட் (சாதி) குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? முந்தா நாள்தான் ஆட்டோகாரரை பற்றி எழுதுகிறேன் என்று ஐடி காரணை நாய் என்று ஒரு தோழர் சொன்னதை வழி மொழிந்தீர்கள். ஆனால் அதையே வேறொருவன் சொன்னால் வெகுண்டெழுகிறீர்களே?
//IT நண்பர்கள் டேக்ஸ் கட்டுவதில்லை என்பதில் மாற்றுகருத்து இல்லை
நல்லா கட்டுறீங்க நண்பா சப்பைகட்டு. அந்த கட்டுரையில் அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது. இதை எல்லாம் ஐடி துறையில் மட்டுமல்ல, இதுபோல பல்வேறு துறையில் இருக்கும் பெரும்பாலானோர் செய்வதில்லையா? கிரண்பேடி போன்றவர்கள் செய்த ஊழல் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம். நீ தப்பு செய்யாதே என்று சொன்னால், உடனே, அம்பானி திருந்தினால்தான் நான் திருந்துவேன் என்று சொன்னால் எப்படி? அன்னா நல்லவரோ, அயோக்கியரோ, குறைந்த பட்சம் ஊழல் பற்றி போராடலாம் என்ற விழிப்புணர்வாவது வருகிறதே? எல்லோரும் அன்னா பின்னால் செல்ல வேண்டியதில்லை. அவரை தலையில் வைத்து கொண்டாட வேண்டியதில்லை. ஊழல் குறித்த ஒரு போராட்டத்தை தொடங்கலாமே? இல்லை போராட்ட லைசென்ஸை ஒட்டுமொத்தமாக கம்யூனிஸ்ட் (சாதி) குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? முந்தா நாள்தான் ஆட்டோகாரரை பற்றி எழுதுகிறேன் என்று ஐடி காரணை நாய் என்று ஒரு தோழர் சொன்னதை வழி மொழிந்தீர்கள். ஆனால் அதையே வேறொருவன் சொன்னால் வெகுண்டெழுகிறீர்களே?
நண்பர் பாலா அவர்களே அது என்ன ஊழல் இல்லாத நிர்வாகம். இப்பொழுது மட்டும்
சட்டபூர்வமாய் ஊழல் செல்லுபடி ஆகுமா என்ன ?????? ரெண்டாவது அவர் சிகப்பு சட்டை
போட்டிருந்தாலும் வரவேற்க மாட்டேன் , வெறும் சட்டை போட்டு கொள்கையில் ஓட்டை
விடும் போலி இடதுசாரிகளை வன்மையாய் விமர்சனம் செய்வது உண்டு. கிரண்பேடி மீது
வைக்கப்பட்ட குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டது உண்மை.ரெண்டாவது அப்படி ஊழல் செய்த
பணத்தின் SPONSERIL மக்கள் போராட்டம் நடத்துகிறார் அன்னா அலைகற்று ஊழலில் முக்கிய
பங்கு வகித்தவர் அன்னா நண்பரே, ராஜா தான் வரவேண்டும் என்று முடிவு செய்தது அம்பானி
டாட்டா நிரா ராடிய .இப்படிப்பட்ட ஊழல் செய்தவர்லோடு இருப்பவர் எப்படி ஊழலை எதிர்க்க முடியும்
வருகைக்கு நன்றி சிராஜ்
Post a Comment