இன்றைய தமிழகத்தின் முக்கிய செய்தி கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையோ அல்ல முல்லைப்பெரியார் பிரச்சனையோ அல்ல மாண்புமிகு அம்மா அவர்கள் மாட்டுக்கறி தின்றதே பிரதான பிரச்சனையாக நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது .சட்டென்று பார்க்கும்பொழுது இது வெறும் செய்தியாக தோன்றும் , ஆனால் குடிபழக்கம் போல,விபச்சாரம் போல மாட்டுக்கறி சாப்பிடுவது இழிவு படுத்தப்பட்டுள்ளது . ஆட்டுக்கறி ,கோழிக்கறி சாப்பிடுபவர்கள் கூட
மாட்டுக்கறியை இழிவாய் பார்க்கிறார்கள் .நக்கீரனும் பார்ப்பன ஊடகம் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை.இது ஒரு செய்தி அதற்கு ரத்தத்தின் ரத்தங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் .இந்த நக்கீரனின் பத்திரிகையை எரித்தது வெறும் பத்திரிகை எதிர்ப்பு அல்ல தலித் மக்கள் மீது காலகாலம் உள்ள எதிர்ப்பு .ஏன் பரமக்குடியில் ஆறு பேரை எரித்தபொழுது தமிழகம் தூங்கிக்கொண்டிருந்தது என்பதன் அரசியல் பத்திரிகையை எரித்த பொழுதும் ரத்தத்தின் ரத்தங்கள் உணர்ச்சி வசப்பட்டபோழுதும் புரிந்தது .
4 comments:
எப்படி நண்பா உங்களால் மட்டும் இப்படி எல்லாம் முடிகிறது? நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை நான் சரியாக புரிந்து கொண்டேனா என்று தெரியவில்லை. நக்கீரன் மீது தாக்குதல் நடத்திய அனைவருமே ஆதிக்க சாதியினர் என்பதுதான் உங்கள் கருத்து இல்லையா? இதற்கு சான்றுகள் உண்டா?
சும்மா போகிற போக்கில் கொழுத்தி போடாதீர்கள். தான் அபிமானம் வைத்திருக்கும் ஒருவரை பற்றி இழிவாக எழுதப்பட்டதை கண்டு ஆத்திரத்தில் நிகழ்த்தப்பட்டதே பத்திரிக்கை எரிப்பு மற்றும் தாக்குதல். அதற்கும் சாதி சாயம் பூசாதீர்கள். எந்த சாதி பத்திரிக்கை இப்படி எழுதி இருந்தாலும் இந்த தாக்குதல் நடந்திருக்கும்.
ரத்தத்தின் ரத்தங்கள் பார்ப்பனராகவோ, இல்லை வேறு ஏதாவது ஆதிக்க சாதியாகவோதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது உண்மையும் இல்லை. ஆகவே இப்படி எழுதி உங்கள் சாதி வெறியை தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்தாதீர்கள்.
நான் சொல்வதில் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். மாற்று கருத்துக்கள் இருந்தாலும்உங்கள் எழுத்துக்களில் நேர்மை இருக்கும். வர வர உங்கள் எழுத்துக்கள் சிலநேரம் கண்மூடித்தனமாகவும் இருக்கிறது.
//சும்மா போகிற போக்கில் கொழுத்தி போடாதீர்கள். தான் அபிமானம் வைத்திருக்கும் ஒருவரை பற்றி இழிவாக எழுதப்பட்டதை கண்டு ஆத்திரத்தில் நிகழ்த்தப்பட்டதே பத்திரிக்கை எரிப்பு மற்றும் தாக்குதல். அதற்கும் சாதி சாயம் பூசாதீர்கள். எந்த சாதி பத்திரிக்கை இப்படி எழுதி இருந்தாலும் இந்த தாக்குதல் நடந்திருக்கும். //
அது என்ன நண்பா இழிவாக எழுதப்பட்டது .அந்த இழிவாக என்று நினைப்பது தான் பிரச்சினையே . அது என்ன அவ்வளவு கேவலமானதா என்ன .மாட்டுக்கறியை தலித்துகள் தவிர யார் சாப்பிடுகிறார்கள் .
இச்சேதியை இழிவாய் எடுத்துக்கொள்ளாமல் பார்த்தால் இது வெறும் கிசுகிசு செய்தி தானே ,கிசுகிசுவாய் எடுத்துக்கொண்டு போயிருக்கலாமே . யாருக்கு இச்செய்தி இழிவானதாய் இருக்கும் நண்பா .
நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே உங்கள் குறும்பு தெரிகிறது. அதே போல சாதி உணர்வும் தெரிகிறது. தலித்துகள் தவிர வேறு யாருமே மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்று சொல்வது உங்கள் அறியாமையா இல்லை விஷமத்தனமா என்று தெரியவில்லை. எல்லா சாதியிலுமே இந்த பழக்கம் உண்டு. ஆனால் அவரவர் குடும்பத்துக்கேற்ப இது மாறும். நான் தலித் அல்ல. நானும் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன். என் வீட்டிலும் சாப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த செய்தி ஜெ மாட்டிக்கறி உண்பவர் என்ற தகவலை சொல்லும்விதத்தில் இருந்ததா? இல்லை ஜெ மற்றும் அவரது சமூக பழக்க வழக்கத்தை நக்கல் செய்யும் விதத்தில் இருந்ததா? என்று கொஞ்சம் மனசாட்சியுடன் யோசித்து பாருங்கள். உங்கள் நண்பர் ஒருவர் மாமிசம் உண்ணாதவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். பள்ளியிலோ கல்லூரியிலோ அவரை நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ மாமிசம் சாப்பிட வைத்து கலாட்டா செய்திருக்கலாம். அதன் உள்நோக்கம் என்ன? மாமிசம் சாப்பிடுவது தவறல்ல என்று புரிய வைக்கவா இல்லை அவரை பரிகாசம் செய்யவா? இதே வேலையைதானே நக்கீரன் செய்திருக்கிறது?
//மாட்டுக்கறியை தலித்துகள் தவிர யார் சாப்பிடுகிறார்கள் .//
எந்த ஒரு கறியும் சாப்பிடாத கூமுட்டைத்தான் இப்படி சொல்வான். மாட்டுக்கறி இஸ்லாமியரின் பிரதான அசைவ கறி உணவு என்பதுக்கூட தெரியாமல் வெண்ணை இரவுகள்னு பதிவுப்போட்டா ஆச்சா :-))
//ஆட்டுக்கறி ,கோழிக்கறி சாப்பிடுபவர்கள் கூட
மாட்டுக்கறியை இழிவாய் பார்க்கிறார்கள் .நக்கீரனும் பார்ப்பன ஊடகம் ஆகிவிட்டதா என்று தெரியவில்லை.//
அப்போ பார்ப்பணர்கள் எல்லாம் ஆடு, கோழி சாப்பிடுகிறார்களா? ஒரு வேளை ஜெ.ஜெ. சிக்கன் 65 சாப்பிடுகிறார் என்று நக்கீரன் போட்டிருந்தால் அது திராவிட பத்திரிக்கைனு சொல்லி இருப்பீங்களா?
இங்கே செய்தியின் தாக்கமே ஒரு பார்ப்பணர் புலால் உண்டார்னு குத்துமதிப்பாக செய்திப்போட்டது தான் என்பதைப்பார்க்க வேண்டும். மேலும் பார்ப்பணர்களின் புனித குறியீடான மாட்டிறைச்சி/பசு உணவாக்கப்ப்ட்டதாக செய்தியாக்கப்பட்டதும் காரணம்.
சிப்பாய் கலகத்துக்கு காரணமே மாட்டிறைச்சி/ பன்றி இறைச்சி கொழுப்பு சமாச்சாரம் என்பதையும் கவனீக்கவும்.
அதுக்காக இது ரொம்ப சரித்திர முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வுனு சொல்லவில்லை. ஒரு அரசியல் அநாகரிகமும் ,ஒரு பத்திரிக்கை அநாகரிகம்மும் மோதிக்கொண்டது என்ற அளவில் தான் இதனைப்பார்க்க வேண்டும்.
இதில பெரிய காமெடியாக கருதுவது உங்களைப்போன்றவர்களின் கருத்துகளை தான்:-)) அது என்ன பீப் தலித் உணவு சொல்லி திசைய திருப்புவது, அத யார் அதிகம் திண்ணுறாங்கனு கூட தெரியாம கருத்து சொல்ல வந்திரவேண்டியது :-))
கேரளாவிற்கு நிறைய அடி மாடுகள் போகுது அப்போ அங்கே எல்லாம் தலித்துகள் தானா :-))
Post a Comment