Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

Wednesday, 11 January 2012

நண்பன் - உழைக்கும் மக்களின் பகைவன்

இன்று "நண்பன்" படம் வெளிவருகிறது.கேரளத்தில் விஜய்க்கு ரசிகர்கள், அதிகம் முல்லைப்பெரியார் பிரச்சனையால் ஐந்து மாவட்டங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொழுது கூட இந்த பிள்ளை பூச்சி வாய் தரக்கவில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்று நான் விளக்க தேவை இல்லை.கேரளத்தில் குறைந்தது நூறு திரைஅரங்கில் படம் வெளிவருகிரதாம். தனக்கு பிரச்சனை, தன் படம் ரிலீஸ் பிரச்சனை என்ற பொழுது அரசியலிலே வாய்ஸ் கொடுக்கும் நடிகர்கள், மக்களின் பணத்தில் வளர்ந்து குளிர் காயும் நடிகர்கள்,மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்றால் தெருவில் இறங்கி போராட வேண்டாம் குரல் கூட குரல் கொடுப்பதில்லை . இத்தகையவனுக்கு பால் அபிஷேகம் கட் அவுட் "என்ன கொடும சரவணன்". முன்பெல்லாம் MASS HERO படத்திற்கு முதல் நாள் செல்வதுண்டு,ரசிக மனப்பான்மையுடன் அவர்கள் அடிக்கும் விசில் சத்தம் கேட்டு பூரித்தது உண்டு,இப்பொழுது அது முட்டாள் தனம் நாம் எவ்வளவோ முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. நீங்கள் கேட்கலாம் நடிகர் , கலைஞர் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்று அதற்கு என் பதில் சமூக அக்கறை இல்லாதவன் நடிகனாக , ஏன் கலைங்கனாக இருக்கவே முடியாது? இவருக்கு போட்டி நடிகர் சமூக பிரச்சனை என்று வந்தால் "நான் நடிகன் எனக்கு அரசியல் தெரியாது " என்று ஒதுங்கிகொள்வார்.
இன்னொரு நடிகர் பனியன் ஜட்டி விளம்பரங்களுக்கு கூட வருவார்,உலக தமிழர்களின் வெற்றி என்று போஸ்டரில் கர்ஜிப்பார் , அப்படி கர்ஜித்த நேரம் அவர் படம் கேரளத்தில் ஓடிக்கொண்டிருந்தது,வாயை மூடி மௌனமே காத்தார் . கூலி விவசாயி போராடுகிறான் , கடைக்காரர்கள் ஒரு நாள் வியாபாரம் விட்டு போராடுகிறார்கள் , கோயம்பேட்டில் காய்கறி காரர்
போராடுகிறார்.ஆட்டோ ஓட்டுனர் போராடுகிறார்கள் , ஆனால் இந்த MASS HEROKKAL கோடியில் புரளும் ஹீரோக்கள் தயாரிப்பாளரின் நண்பனாய் , அவர் கேரளத்தில் எங்கு வணிகம் பாதிக்கப்படுமோ என்று ஒரு வார்த்தை கூறுவதில்லை . அதனால் இனி இவர்களை புறக்கணிக்க வேண்டும் , நான் புறக்கணிக்க போகிறேன்.

நண்பன் பற்றி படம் பார்க்காமலேயே என் ஒரு வரி விமர்சனம்
நண்பன் - பகைவன்

Thursday, 29 December 2011

பச்சை மஞ்ச வைட் தமிழன் டா

"தமிழா தமிழா நாளை நம் நாளே " ,
"தமிழ் என்றால் நானொரு தமிழன் டா "
"அழகிய தமிழ்மகன் நீ தானே "
என்னும் சொல்லும் பச்சை மஞ்ச வைட் தமிழர்கள் நிஜத்தில் அட்டை கத்தி வீரர்களாகவே இருக்கிறார்கள் .
முல்லைப்பெரியார் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள விவசாய வாழ்வாதாரமே அழிந்து கொண்டிருக்கிறது அதற்கு குரல் கொடுக்காத தலைவர்,
இப்பொழுது முற்ப்போக்கு முகமுடிக்கு சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார் .
தேனீ, மதுரை பக்கம் தலைக்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் பணம் மட்டுமே முக்கியம் எக்கேடு கேட்டால் என்ன என்று தல சிங்கபூர் சென்றுள்ளார்
புத்தாண்டு கொண்டாட.விளம்பர வியாபாரி சூர்யா, அன்னா ஹசாரே அவர்கட்கு ஆதரவு தெரிவிக்கும் சூர்யா ,"உலக தமிழர்களின் வெற்றி" என்று ஆர்பரிக்கும் சூர்யா , இதற்கு குரல் கொடுக்கவில்லை. நாளைய முதலவர் விஜய் அவர்கட்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் அவர் வாய் திறக்க மாட்டார்
கொஞ்சம் மேலோட்டமாய் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தமிழர்கள் வெளிநாட்டிலே பார்த்தால் மட்டுமே படம் ஓடும் , அதனால் அங்கே தமிழனுக்கு ஆதரவு , இங்கு கேரளாவில் படம் ஓட வேண்டும் , கேரளா ரசிகனை பகைத்து கொள்ள முடியாது அதனால் இங்கே வாய் திறக்க கூடாது.இப்படி
பிழைப்புவாதியாய் இருக்கும் நடிகர்களுக்கு CUT OUT தோரணம் , பால் அபிஷேகம் .நீங்க கேட்கலாம்
அவங்க அவங்க வேலைய பார்க்குறாங்க படத்த மட்டும் பாருங்கன்னு ?
கலைத்துறை என்பது வியாபாரம் சார்ந்ததல்ல மக்கள் சார்ந்தது,மக்களின் பிரச்னையை மைய்யபடுத்தி பேசுவதே
கலை, அவனே கலைஞன்.

Wednesday, 23 November 2011

தல அமெரிக்காவின் கை கூலியா - நண்பர் பாலவுக்கு எதிர்வினை

"கால் மார்க்ஸ், பிரட்டிக் ஏங்கல்ஸ், மாவோ, ஸ்டாலி, லெனின் என நிறைய புத்தகங்களை வாங்கிப்படித்தேன்; கம்யூனிசம் மீது மரியாதை ஏற்ப்பட்டது; பதிவுலகில் கம்யூனிச பதிவுகளை படித்தேன், குறிப்பாக 'வினவு', கம்யூனிசத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை; பாருங்கள் இங்கு கூட நமக்குள் ஒற்றுமை!!!

முன்பெல்லாம் இவர்கள் எழுதும் மலங்களை (அவர்களது பாஷைதான்) வாசிக்கும்போது ஆத்திரம் வரும், இப்பெல்லாம் சிரிப்பு வருது....."

"தலைவரே நீங்கள் சொன்னது போல, மார்க்ஸ், ஸ்டாலின் ஆகியோரது புத்தகங்கள், வாழ்க்கை வரலாறு என்னுள் கம்யூனிசத்தின் மீது ஈடுபாடு உண்டாக்கின. ஆனால் அதனை தற்காலத்தில் எப்படி வளைத்து விட்டார்கள் எனும்போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. நன்றி தலைவரே."

"கம்யூனிசம் செத்து மாமாங்கங்கள் ஆகிவிட்டன. சீனா இன்று ஏகாதிபத்தியக் கனவுகளோடு தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது. இறப்பை ஏற்க மறுத்துப் பிணத்தோடு வாழ்க்கை நடத்தும் மன்நோயாளிகளே இன்றைய தீவிர கம்யூனிஸ்டுகள். இவர்களை மதித்து இவர்களுக்கு மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் கும்பல் கூடிய விரைவில் நீர்த்துப் போகும்"


இது எல்லாம் என் நண்பர் பாலா பக்கங்கள் இணையத்தில் , சமீபத்தில் வந்த தல பற்றிய பதிவின் பின்னூட்டங்கள் .முதலில் நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் , நான் 'தலையின்' தீவிரமான ரசிகன் ஒரு காலத்தில், தலையும் எனக்கு எதிரி அல்ல நண்பர் பாலாவும் எனக்கு எதிரி அல்ல , என் பதிவுகளை பத்து பேர் மட்டும் பார்த்த காலத்தில் கூட அதில் ஒருவர் பாலாவாக இருப்பார் . தொடர்ந்து மறு மொழி எழுதுவார் . அதனால் நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பது , பாலாவை தூற்றுவதற்கு அல்ல , விமர்சனம் அவ்வளவே .

எனக்கு தலபடத்தில் உதவியாளர்களாய் வேலை செய்தவர்களை தெரியும் . தினமும் நூறு
ரூபாய் பாட்டா கூட கிடைக்காத தொழிலாளி . அனைவருக்கும் பிரியாணி போட்ட தல ,
அனைவருக்கும் வணக்கம் சொல்லும் தல , சினிமா உதவி இயக்குனர் அல்ல உதவி கேமரா
மென் என்றால் ,பாட்டா ஒழுங்காய் கிடைக்காது , அதை அவர்களுக்கு தல வாங்கிக்கொடுக்கலாமே அப்படி வாங்கிக்கொடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம் .நடிகருக்கு பதினைத்து கோடி தரும் சினிமா உலகம் , தொழிலாளியின் நூறு ரூபாய் பாட்டவில் தயாரிப்பு செலவுகளை மிச்சம் பிடிக்கும் பொழுது. இத்தனை கோடி ரூபாயில் ஒரு ஒரு லட்சம் செலவு செய்து , நாய்க்கு போடும் பிஸ்கட் போல போடுவதும் , அதை "தல போல வருமா " என்று புகழ்வதும் கண்டிப்பாய் அருவருப்பாய் தானே உள்ளது .

அந்த கட்டுரையில் நுட்பமாய் பார்த்தால் , ஒன்று புலப்படும் , தலையை விமர்சனம் செய்யவில்லை ,அதை மிகையாய் காட்டும் பதிவுலகத்தையும் , அந்த போலி மனிதாபிமானமே சிறந்தது என்று ரசிக்கும் ரசிக மனப்பான்மையே விமர்சிக்கப்பட்டது. நேற்று மாலை மலர் என்று நினைக்கிறேன் , அதில் ஒரு செய்தி 'விமான நிலையத்தில் அனைவரையும் கவர்ந்த தல '. அதாவது கணக்கெடுப்புகள் சொல்கிறது போல்
எண்பது விழுக்காடு மக்களின் தினக்கூலி இருபது ரூபாய் இருக்கும் தேசத்தில் . பட்டினப்பாக்கம் போன்ற இடங்களில் ஒருவர் மட்டுமே படுத்துறங்க முடியும் என்ற தேசத்தில் , ஒருவர் விமானத்தில் போக வசதியுடைய ஒருவர் வருசையில் நிற்கிறார் என்று பாராட்டினால் ,இயல்பாய் இருப்பவருக்கு கோபம் வரத்தான் செய்யும் . இதற்க்கு
முன்பு இப்படி தான் தல வாக்களிக்க வருசையில் நின்றார் . வருசையில் நிற்பது நல்ல விடயம் தான் , அவர் தலையாய் இருந்தால் " SO வாட்" ,அவரும் மனிதர் தானே , அதை வியந்தோதும் ரசிகன் "தலே லால லாலா " என்றும் "தல போல வருமா"
என்றும் கொக்கரிக்கும் பொழுது , அவன் ரசிக மனத்தை விமர்சிக்க வேண்டாமா , இது அஜித் பற்றி விமர்சனம் அல்ல , அந்த ரசிக மனத்தை , போலி மனிதாபிமானத்தை பற்றிய விமர்சனம் அவ்வளவே . அஜித் பற்றிய வினவு கட்டுரையை மீள் வாசிப்பு செய்யவும் .

நண்பர் எப்பூடி அவர்கள் தீவிர தல பேன் என்று நினைக்கிறேன் , அவர் முன்பு அஜித் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார் . நானும் அஜித் வெறியனாக இருந்த காலத்தில் நண்பரின் கட்டுரையை AFE (AJITH FANS இயக்கம்) யாஹூ க்ரூப்ஸ் அதில் நண்பர் அனைவருக்கும் பரிந்துரை செய்தது நானும் என் நண்பர் ஊடகனும் , ஆனால் காலப்போக்கில் நான்
அரசியல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன் . நீங்களும் எப்புடியும் மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றி வாழ்க்கை வரலாற்றை படித்ததாக சொன்னீர்கள் . மார்க்ஸ் இயல்பிலேயே அனைவரிடமும் விவாதம் செய்யக்கூடியவர் ,எங்கெல்சும் அப்படியே .அவர்கள் நடுத்தர்வர்கத்தை "குட்டி பூஸ்வா" என்கிறார்கள் . இன்று வினவு தளம் அனைவரிடமும் விவாதம் (உங்கள் மொழியில்
சண்டை ) செய்வதை போல அவர்கள் அவர்கள் காலகட்டத்தில் ,நக்கலும் நையாண்டியும் அனைவரையும் விமர்சனமும் செய்தார்கள் .இன்று வினவு தளம் ஆயிரம் பேரிடம் விவாதம் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால் . மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களுக்கு
எதிராய் இருந்த அனைத்து கருத்துக்களுடன் போரிட்டனர் .பிற்போக்கு தனங்களை கடுமையாய் விமர்சனம் செய்தனர் .பெர்க்லி பாதரியாருடன் அவர்கள் விவாதம் செய்கின்றனர் , எனக்கு தெரிந்த உதாரணம் கருத்துமுதல் வாதத்தை விட பொருள் முத வாதமே சிறந்தது என்பதை நிறுவ, கடவுள் இல்லை என்பதை நிறுவ , விஞ்ஞான கண்டுபிடிப்புகளை வைத்து , என் பொதுவுடைமை சிறந்தது என்று லெனின் ஒரு புத்தகம் எழுதுகிறார் .

MATERIALISM and EMPIRIO-கிரிட்டிசிசம்இந்த புத்தகம் அறிவியல் பூர்வமாக அனைவரிடமும் விவாதம் செய்கிறது . இது எங்கெல்ஸ் சயின்ஸ் பற்றி எழுதியதன் தொடர்ச்சி .
இவர்கள் எதற்காய் இந்த புத்தகங்களை எழுதுகிறார்கள் , அக்காலத்தில் இருக்கும் மத குருமார்கள் , மக்களை திசை திருப்ப . இவர்கள் இப்படி ஒரு புத்தகம் எழுதி , பொதுவுடமையை விஞ்ஞான பூர்வமாய் நிறுவுகிறார்கள் .

அதே மார்க்ஸ் லெனின் மாவோ எங்கெல்ஸ் , அனைவருமே அவர்கள் கால கட்டத்தில் எதிரிகளை விமர்சனம் செய்யும் பொழுது நக்கல் நையாண்டி செய்கிறார்கள் . அனைவரையும் விமர்சனம் செய்கிறார்கள் . மார்க்சின் குரு ஹெகெல் கூட இதில் இருந்து தப்பவில்லை .
விமர்சனமே செய்யாமல் எப்படி வளர முடியும் நண்பா .

அதில் நண்பர் பாலா கருத்துக்களை சொல்லலாம் ஆனால் கடுமையாக வசை பாடக்கூடாது என்கிறார். ஒரு விஜய் ரசிகன் அஜித்தை எப்படி பார்ப்பான் , டான்சே ஆடதேரியாது , குரல் நல்ல இருக்காது , நடந்துகிட்டே இருப்பான் , தொப்பை என்பது வசையா . இவ்வளவு மனிதநேயம் என்று சொல்லிக்கொள்ளும் அஜித் ஏன் சமூக பிரச்சனை என்றால் ஒதுங்குகிறார் , தன் படத்தில் வேலை பார்த்த சக ஊழியனுக்கு சம்பளம் கிடைக்க வில்லை என்றால் அந்த கர்ண பிரபு கொதித்து இருக்க வேண்டாமா ????? அப்படி ஒண்ணுக்கும் ஆகாத வாழ்கையில் ,அந்த தொழிலாளியின் சம்பளம் பற்றி கேட்காமல் , பிரியாணி போடுவதை மட்டும் பாராட்டினால் , அந்த பாராட்டையும் , அந்த ரசிப்புத்தன்மையும் மட்டுமே விமர்சிக்கிறோம் .

பொதுவுடமையை எந்த புத்தகத்திலும் கற்க முடியாது , அது களவேலை . அதுவும் நண்பர்கள் இந்த பஸ் விலை ஏறின நேரத்தில் , மாதம் ௨௦௦௦ ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் கஷ்டப்படும் நேரத்தில் ,வாழ்வுக்கே போராடும் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்காமல் இருக்கும் நேரத்தில் .நாம் 'தல' விமர்சனத்தை பார்த்து மட்டும் கோபம் அடைந்தால் நாமே நடுத்தர வர்க்கம்.முரண்பாட்டு தத்துவத்தில் தான் பொது உடமை தத்துவமே இருக்கிறது .

சுரண்டும் வர்க்கம் என்றால் ,சுரண்டப்படும் வர்க்கம் இருக்கும் . அதற்க்கு ஆதரவாய் இருக்கும் நடுத்தரவர்கத்தை வலிக்காமல் விமர்சனம் செய்ய முடியாது . நண்பா நான் எந்த கழிவிரக்க வார்த்தைகளையும் பிரயோகம் செய்யவில்லை . இது என் விமர்சனம் அவ்வளவே.
Bala pakkangal
vinavu