Thursday, 12 August 2010

மகிழ்ச்சியின் தருணங்கள்

என் நண்பர் ஒருவர் அவர் நண்பரிடம் போபால் தீர்ப்பை பற்றி பேசி இருக்கிறார் , மேலும் உலகமயமாக்கலின் தாக்கங்களை எடுத்து சொல்லி இருக்கிறார் .அதற்க்கு இன்னொரு நண்பர் " சமூகத்துக்கு நீ என்ன பண்ண ????" என்று கேட்டு இருக்கிறார் . "உன்னால ஒன்னும் பண்ண முடியாதுள்ள , யாராலையும் ஒன்னும் பண்ண முடியாது இப்படி வெட்டித்தனமா பேசாம பொழப்ப பாரு " என்று இன்னொரு நண்பர் இவரை கடித்து இருக்கிறார் .இருவரின் பொழப்பு திரைத்துறை , பிரபல ஒளிப்பதிவாளர்களிடம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் . சரி அப்படி கடித்த நண்பர் போல தான் பொது புத்தி உள்ளது , எடுத்துவுடனே பிள்ளை பெற முடியுமா என்ன ????? அந்த உதவி ஒளிப்பதிவாளர் முதலில் தரமணி கல்லூரியில் படித்து இருக்கிறார் , பின்பு இப்பொழுது ஒரு பெரிய ஒளிப்பதிவாளரிடம் உதவி ஒளிப்பதிவாளர் , பின்பு ஒரு ஐந்து வருடம் கிடைத்து ஒரு படம் கிடைக்கும் , இப்படி படிப்படியாக தானே செய்ய முடியும் .தனக்கு என்று வரும்பொழுது அக்கறையாய் செய்யும் மக்கள் , சமூகம் என்று வரும்பொழுது ஒதுங்கிக்கொள்கின்றனர்.ஒதுங்குவதற்கு சாக்காய் நம்மால் எதுவும் பண்ண முடியாது என்ன பண்ண முடியும் என்று சொல்கின்றனர் .

ஒரு குழந்தை எழுந்து நடக்கிறது தட்டு தடுமாறி விழுகிறது மறுபடியும் எழுந்து நடக்கிறது . இப்படி தான் ஒவ்வொரு செயலிலும் இருக்க முடியும் ,முதலில் படிக்கும் பொழுது புரியாது படிக்க படிக்க மட்டுமே புரியும் . முதலில் ஒரு பெண் பார்க்க மாட்டாள் மூன்று நாட்கள் நாம் பின்தொடர்ந்தால் யாரோ ஒருவன் பார்க்கிறானே என்று திரும்பி பார்ப்பாள் . மேலும் அரை கூட விழுக வாய்ப்பு உள்ளது , அதற்காய் காதாலிக்காமல் இருப்போமா
என்ன ???? ஒரு வேலைக்கு INTERVIEW செல்கிறோம் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடுவோமா ????? ஒரு மகன் படிக்கவில்லை என்றாலும் அப்பா படிக்க வைக்கத்தான் செய்வார் . இப்படி தனித்தனியாய் நம் வாழ்க்கைக்கு போராடும் நாம் , சமூகம் என்று வரும்பொழுது "அது எல்லாம் வேலைக்கு ஆகாது வெட்டி வேல " என்று சொல்கிறோம் . மேலும் பொதுஉடைமை என்றால் "ரஷ்ய சீனா தோற்றுவிட்டதே " என்கிறோம் , ஆனால் பரிட்சையில் தோற்றுவிட்டோம் என்பதற்காய் நாம் மறுபடியும் எழுதாமல் இருக்கிறோமா என்ன ??????

சரி சமூகத்திற்கான போராட்டங்களில் இறங்க வேண்டும் என்று நினைக்கும் பலர் , அதை நடைமுறைபடுத்தும் பொழுது பாதியிலேயே வேண்டாம் இது நம்மால் முடியாது என்று விலகுகிறார்கள் . மேலும் இவரை போன்றவர்களை பார்த்தால் இது நடைமுறையில் சாத்தியம் அல்ல , என்று தனக்கு நடந்த விடயங்களை வைத்து விளக்குகிறார்கள் . இவர்களால் மட்டுமே தனக்கு நடந்ததை வைத்து சமூக சிந்தனை வேண்டாம் என்று மற்றவர்களுக்கு
விளக்க முடியும் . ஆனால் இவர்கள் குடும்பம் என்றால் , இவர்கள் வேலை என்றால் தோல்வி கண்டாலும் விடுவதில்லை . தன் தங்கையை கிண்டல் செய்யும் ஒருவனை முறைக்கும் அண்ணன் தான் , இலங்கையில் சகோதரிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பொழுதும் கூட , அதே நேரத்தில் நடந்த மட்டை பந்து விளையாட்டை அவனால் ரசிக்க முடிகிறது . தான் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் ,சமூகம் என்று வரும்பொழுது ஒன்று பேசுகிறார்கள் .

சமூக அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பாய் படிக்க வேண்டிய கட்டுரை தோழர் மருதையனின் "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமூக செயல்களால் உந்தப்பட்டாலும், நடைமுறை படுத்தமுடியாமல் இருக்கும் தவித்து போய் இதெல்லாம் சாத்தியம் அல்ல என்று மனம் வெதும்பி பாதியிலேயே திரும்பும் மக்களுக்காய் எழுதப்பட்ட கட்டுரை . ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் உற்சாகமாய் மாற்றக்கூடிய கட்டுரை என்றே சொல்வேன் . ஒரு செய்ய முடியாத செயலை செய்து அடுத்த கட்டத்திற்கு போவது , சமூக வேலைகள் செய்யும் பொழுது தன் மனதிற்குள் ஏற்ப்படும் முரண்பாடு , குடும்பத்திற்குள் ஏற்ப்படும் முரண்பாடு இதை எல்லாம் தாண்டி தன் சொல்லிற்கும் செயலிற்கும் இடைவெளி இல்லாமல் போராடும் தருணங்களே "மகிழ்ச்சியின் தருணங்கள் " என்று சொல்வார் . "போராட்டமே மகிழ்ச்சி " என்பது காதில் ஒளித்து கொண்டே இருக்கிறது .கட்டுரையை படிக்க நினைப்பவர்கள் இங்கே சொடுக்கவும் .
http://www.vinavu.com/2010/07/30/momemts-of-joy/

6 comments:

தமிழ் யாளி said...

தேர்தலின் போது நமது
ஓட்டை முறையாக
பதிவு செய்தாலே நமது
பிரச்சனைகள் பாதி தீர்ந்து விடும்.

ஓட்டுபோட்டா எல்லாம்
தீர்ந்திடுமா? ன்னு நீங்க
கேட்டா

முதல்ல 80சதம் ஓட்டுப்
போடுங்க அது எல்லா மாற்றங்களையும்
கொண்டு வரும்

ANANTH_S said...

முதலில் படிக்கும் பொழுது புரியாது படிக்க படிக்க மட்டுமே புரியும் !

This is very good karthi. Keep it up!!!

ANANTH_S said...

முதலில் படிக்கும் பொழுது புரியாது படிக்க படிக்க மட்டுமே புரியும்

weldone.

Bala said...

//பரிட்சையில் தோற்றுவிட்டோம் என்பதற்காய் நாம் மறுபடியும் எழுதாமல் இருக்கிறோமா என்ன

ஆங்கில பரிட்சையில் எத்தனை முறை தமிழில் எழுதினாலும் தோல்விதான். அது வீண் முயற்சி.

//ஒரு வேலைக்கு INTERVIEW செல்கிறோம் கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடுவோமா

மெக்கானிக்கல் படித்துவிட்டு, அக்கவுண்டன்ட் வேலைக்கு இன்டர்வியு போனால் வேலை கிடைக்குமா? அது வீண் முயற்சி


போராடாதே என்று யாரும் சொல்வதில்லை. போராடும் விதம், நோக்கம்தான் மாறவேண்டும்

வெண்ணிற இரவுகள்....! said...

போராடும் விதம் என்பதை விளக்கினால் நன்றாய் இருக்கும்

வெண்ணிற இரவுகள்....! said...

//போராடாதே என்று யாரும் சொல்வதில்லை. போராடும் விதம்// அப்படியா யாரும் சொல்லவில்லையா ?????