Monday 2 August 2010

அது இன்னா பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா -2

நேற்று இடஒதுக்கீடு பற்றி பதிவு போட்டு இருந்தேன் .அதில் கிறுத்துவ மதத்தில் சாதி இல்லை எப்படி ஒதுக்கீடு செய்ய முடியும் , இந்து மதத்திலே தான் சாதி உள்ளது அதனால் அவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க முடியும் என்று சிலர் விவாதம் செய்தனர் . இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் அப்பிரிவினர் எப்படி பார்க்க படுகிறார்கள் அவர்கள் அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா என்பதை வைத்தே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . இப்பொழுது ஒருவன் பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்த தலித்தாய் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம் ,மதம் மாறுகிறான் அதனால் அவன் சமூகத்தில் அந்தஸ்த்து அடைவானா ??????? என்பதற்கு இல்லை என்ற பதிலே சரியாக இருக்கும் . அப்படி மதம் மாறினால் சமூக விடுதலை அடையும் என்பது சாத்தியம் ஆனால் , இப்படி இடஒதுக்கீடு எல்லாம் தேவை இல்லை அனைவரும் மதம் மாறியே சமூக விடுதலை அடைவார்களே , ஏன் அப்படி செய்வதில்லை ஏன் என்றால் மதம் மாறினால் மட்டும் சமூக விடுதலை அடைய முடியாது என்பது அவர்களுக்கு நன்றாய் தெரியும் .

சரி கிறுத்துவர்களில் சாதி இல்லை என்கிறார்கள் . அப்படி என்றால் நாடார் கிறுத்துவர் , தேவர் கிறுத்துவர் எல்லாம் எங்கு இருந்து வந்தார்கள் .ஒரு தேவர் கிறுத்துவராய் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் , ஒரு தலித்தும் கிறுத்துவராய் இரண்டு பெரும் கிறுத்துவர் தானே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பார்களா ???? IAS கூட படித்து இருக்கட்டுமே , தலித்த் என்ற ஒற்றை காரணம் கொண்டு பெண் தர மறுப்பார்கள் , அப்பொழுது நடைமுறையில் சாதி என்பது இருக்கிறாது. அப்படி சமூக ரீதியாய் ஒடுக்கப்படும் பொழுது ஏன் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க கூடாது இது மேல்சாதியின் குரலை போல அல்லவா இருக்கிறது . நடைமுறையில் சமூக அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா இல்லையா என்பது தான் கேள்வி ??????அதை பொறுத்தே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தானே நியாயம் .

இந்து மதமே சாதி என்ற அமைப்பை கட்டிக்காக்கிறது என்பது பெரியார் அவர்கள் சொல்கிறார் , அப்படி ஒடுக்குமுறையை தாண்டி வரவேண்டும் என்று நினைப்பவர்களை இல்லை நீ இந்து மதத்தின் அடிமை என்று சொல்வது போல் உள்ளது இந்த இடஒதுக்கீடு . இது இந்து மதத்தை மறைமுகமாய் கட்டிக்காக்கிறது , இப்படி ஒரு அரசியல் சட்டம் இருக்க எப்படி பெரியார் அவர்களும் , பார்ப்பன எதிர்ப்பாளர்களும் குரல் கொடுக்காமல் இருந்தார்கள்
என்பது வருத்தமாய் தான் உள்ளது .அம்மையார் மதம் மாற்று தடை சட்டம் கொண்டு வந்தாரே அதை போல அல்லவா இருக்கிறது மதம் மாறக்கூடாது ,நீ இந்துக்களின் அடிமை அப்படி மாறினால் உன் IAS பட்டம் கூட செல்லாது என்று தலித்த்களின் மனதில் பயம் இருந்து கொண்டே இருக்கும் .IAS ஆனால் என்ன ??? அடிமை அடிமை தான் என்று சொல்வது வெட்கப்பட வேண்டிய விடயம் அல்லவா??

இந்த இடஒதுக்கீடு சாதி என்பதை ஒழிக்காமல், இந்து மதம் என்பதை கட்டிக்காக்கிறது ???? இடஒதுக்கீடு ஒரு அளவிற்குஉபயோகப்படுமே அன்றி , சமூக விடுதலைக்கு இது தீர்வு அல்ல .

14 comments:

Robin said...

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பற்றி பேசப்படுகிறது. இது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கச் செய்யப்படும் சூழ்ச்சி. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டுவந்தால் உயர்சாதியினர் என்று கூறிக் கொள்வோர் எளிதாக ஏழை என்று போலி சான்றிதழ் பெற்று இட ஒதுக்கீட்டின் பலனை பெற்றுவிடுவார்கள்.

கபிலன் said...

//சரி கிறுத்துவர்களில் மதம் இல்லை என்கிறார்கள் . அப்படி என்றால் நாடார் கிறுத்துவர் , தேவர் கிறுத்துவர் எல்லாம் எங்கு இருந்து வந்தார்கள் .//
பெரியாரின் கொள்கைகள் பலவற்றில் முரண்பட்டாலும், அவருடைய சிம்ப்ளிசிட்டி மற்றும் தைரியமான பேச்சு பிடிக்கும்.
பெரியாரும் இதைத் தான் சொன்னார். இந்த சாதிக் கொடுமைகளில் இருந்து வெளி வர வேண்டும் என்றால் இந்து சமயத்தை துறக்க வேண்டும். கிறித்துவத்தில் இணைந்தாலும் தலித் கிறித்துவன், நாடார் கிறித்துவன் என சாதி வாழும். ஆகையால் இஸ்லாத்தில் சேருங்கள் என்று சொன்னார். இது சாதி எந்தளவிற்கு நம் மனதில் வேரூன்றி இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது.

//.ஒரு தேவர் கிறுத்துவராய் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் , ஒரு தலித்தும் கிறுத்துவராய் இரண்டு பெரும் கிறுத்துவர் தானே பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பார்களா ???? IAS கூட படித்து இருக்கட்டுமே , தலித் என்ற ஒற்றை காரணம் கொண்டு பெண் தர மறுப்பார்கள் //
துட்டு தான் இப்போ எல்லாத்துக்கும் அளவு கோள்.
ஒரே சாதியைச் சேர்ந்த கட்சித் தொண்டணுக்கு கட்சித் தலைவர் பொண்ணு கொடுப்பாரா...?இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க ?
ஒரே சாதியைச் சேர்ந்த கட்டிடக் கூலி வேலை செய்பவருக்கு அம்பாணி பொண்ணு குடுப்பாரா?
ஐயா...இதே கதையில் நல்ல செல்வந்தர் என்றால் சாதி பறந்து போகும். பொருளாதார முன்னேற்றம் மட்டுமே ஒருவனின் சமூக அந்தஸ்துக்கு வழி வகுக்கும். எந்த சமயம் போனாலும் சரி ஒண்ணுமே நடக்காது.

//அப்பொழுது நடைமுறையில் சாதி என்பது இருக்கிறாது. அப்படி சமூக ரீதியாய் ஒடுக்கப்படும் பொழுது ஏன் இடஒதுக்கீடு அவர்களுக்கு வழங்க கூடாது இது மேல்சாதியின் குரலை போல அல்லவா இருக்கிறது . நடைமுறையில் சமூக அந்தஸ்த்து உயர்ந்து உள்ளதா இல்லையா என்பது தான் கேள்வி ??????அதை பொறுத்தே இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தானே நியாயம் .
//
ஆற்று வெள்ளத்தில் உயிருக்காக தத்தளித்துக் கொண்டிருப்பவனுக்கும், அதிலிருந்து வெளியில் வந்து வேடிக்கைப் பார்ப்பவனுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை எவ்விதத்தில் நியாயம் ?
//இந்து மதமே சாதி என்ற அமைப்பை கட்டிக்காக்கிறது என்பது பெரியார் அவர்கள் சொல்கிறார் //
இப்போ...அதெல்லாம் தூக்கி குப்பையில் போட்டுக் கொண்டிருக்கிறோம்...

//அம்மையார் மதம் மாற்று தடை சட்டம் கொண்டு வந்தாரே அதை போல அல்லவா இருக்கிறது மதம் மாறக்கூடாது //
அம்மையார் சொன்னது...துட்டு கொடுத்து மதம் மாற்றக் கூடாது...ஒருவனின் வறுமையை சாதகமாகப் பயன்படுத்தி மதம் மாற்றக் கூடாதுன்னு.....மனம் மாறி மதம் மாறுபவர்களை சட்டம் ஒன்றும் சொல்லவில்லை...

சாதி அடிப்படையில் அல்லாத பொதுவான இட ஒதுக்கீடு கொண்டு வந்தால் அனைவரும் பயன்பெறலாம். ஒருவருக்கு ஒரு அளவுகோல், மற்றோருவருக்கு ஒரு அளவு கோல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு உட்பட !

pichaikaaran said...

நண்பரே .. இதை எல்லாம் பெரியார் யோசிக்காமல இருந்திருப்பார்? நீங்கள் புரிதல் இல்லாமல் பேசுகிறீர்கள்..

1 மதம் மாறிய பின்னும் ஜாதிய அடையாளத்தை அங்கீகரித்தால், மற்ற மதத்தையும் இந்து மயமாக்குகிரீ ர்கள் என பொருள். .. கிறிஸ்தவ பிராமின்,. கிறிஸ்தவ பிள்ளை என்று அதையும் இந்து மதம் ஆக்கி விடாதீர்கள்..
அந்த மதத்தில் கஷ்டபர்டுபவ்ர்களுக்கு மத ரீதியான இட ஒதுக்கிட்டு வரலாம.. பிரச்சினை இல்லை... அனால் அங்கு சென்றும் ஜாதியை பிடித்து கொள்வது கிரிஸ்தவ மதத்தையே கேலி செய்வது போல் இருக்கிறது...


2 சிலத் தலையில் பிறந்தார்கள், சிலர் காலில் பிறந்தார்கள் என கூறி இந்து மதம் இழிவு செய்வதால், அந்த மதத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை தூக்கி விடுவதற்குத்தான் இட ஒதுக்கீடு.. இதற்கும் பொருளாதரத்துக்கும் சம்பந்தம் இல்லை.. அதாவது இந்து மதத்தின் அடிப்படையில்தான் சிலர் அடக்கி வைக்க்கப்பட்டு இருக்கிறார்கள்... இன்னும் நிலை ஒன்ன்றும் மேம்பட்டு விட வில்லை... அவர்களுக்கு கிடைக்கும் உரிமையை தட்டி பறிப்பது போல உங்கள் வாதம் உள்ளது..

3 மற்ற மத்த்கள் இப்படி யாரையும் இழிவு படுத்த வில்லை..அவர்கள் மத நூல் இப்படி சொல்லவும் இல்லை... அப்படியும் யாரவது சிலரை மட்டம் தட்டினால் அவர்கள் மேல் நடவடிககி எடுக்க வேண்டும்இந்து மதத்தில் இப்படி செய்பவர்கள் மேல் மத ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது..என் என்றால் மதமே அப்படித்தான் சொல்கிறது ( ஒருவர் உயர்வு , ஒருவர் தாழ்வு என்று ) அனால் மற்ற மதக்களில் இப்படி செய்பவர்கள் மேல் மத ரீதியான நடவடிககி எடுக்கலாம்.

.அதே சமயம் , அதில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு , மத அடிப்படையில் ஒதுக்கீடு தரலாம்..

ஜாதி அடிப்படையில் தருவது , சமுக நீதிக்கு விரோதமானது... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது...

pichaikaaran said...

நண்பரே.. நாளை ஒடுக்கப்பட இந்துகள் பெரிய பதவிகளுக்கு வரும்போது, உயர் சாதியினரும் அவர்களுக்கு மரியாதை கொடுத்துத்கான் ஆகவேண்டும்... எனவே காலில் இருந்து பிறந்தவன், தலையில் இருந்து பிறந்தவன் என்பதெல்லாம் காலாவதி ஆகி விடும்..
இந்து மத்தம் கட்டிக்காக்கும் சாதி ஏற்ற தாழ்வு இதன் முஉளம் ஒழியும் என்பதே பெரியார் , அம்பேத்கார் கண்ட கனவு...

இதை கேலி செய்வது போல் இருக்கிறது உங்கள் வாதம்...

சாதி என்பது இந்து மத அடையாளம் அல்ல...எல்லா இடத்திலும் இருபதுதான் என்று ஆர் எஸ் எஸ் குரலாக நீங்கள் ஒலிக்கிரீகள்..

உங்கள் நோக்கம் உயர்ந்ததுதான்.. அதை மதிக்கிறேன்..
அனால், விபரம் தெரியாமல் பேசுகிறீர்கள்...

http://rkguru.blogspot.com/ said...

நல்ல பதிவு........வாழ்த்துகள்

வெண்ணிற இரவுகள்....! said...

////மதம் மாறிய பின்னும் ஜாதிய அடையாளத்தை அங்கீகரித்தால், மற்ற மதத்தையும் இந்து மயமாக்குகிரீ ர்கள் என பொருள். .. கிறிஸ்தவ பிராமின்,. கிறிஸ்தவ பிள்ளை என்று அதையும் இந்து மதம் ஆக்கி விடாதீர்கள்..//
நான் சொல்லவில்லை பார்வையாளன் நடைமுறையில் உள்ளது . திருநெல்வேலி பக்கம் போய் பாருங்கள் . இந்த இடஒதுக்கீடே இந்து மதத்திற்கு மட்டும் உள்ளதே RSS குரல் . சரிதானே ...
யார் RSS குரல் என்று தெரிகிறதா ????

வெண்ணிற இரவுகள்....! said...

//சிலத் தலையில் பிறந்தார்கள், சிலர் காலில் பிறந்தார்கள் என கூறி இந்து மதம் இழிவு செய்வதால், அந்த மதத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை தூக்கி விடுவதற்குத்தான் இட ஒதுக்கீடு.. இதற்கும் பொருளாதரத்துக்கும் சம்பந்தம் இல்லை.. அதாவது இந்து மதத்தின் அடிப்படையில்தான் சிலர் அடக்கி வைக்க்கப்பட்டு இருக்கிறார்கள்... இன்னும் நிலை ஒன்ன்றும் மேம்பட்டு விட வில்லை... அவர்களுக்கு கிடைக்கும் உரிமையை தட்டி பறிப்பது போல உங்கள் வாதம் உள்ளது..//
அவர்களின் உரிமையை யார் தட்டி கழித்தது....சொல்லுங்கள் ...........நான் பொருளாதரத்தை பற்றி இங்கு எங்கு பேசி உள்ளேன் ....பேசாததை பேசியதை கற்பனை செய்து கொண்டு எழுதுகிறீர்கள் . மற்ற மதத்தில் மாறியவர்கள் ஜாதி பார்க்காமல் இருக்கிறார்காளா?????நீங்கள் தான் மற்ற மதத்தை மாறியவர்களுக்கு கொடுக்க கூடாது என்று கொடி பிடிக்கிறீர்கள் .
ஜாதி என்பது நடைமுறையில் கிருத்துவ மதத்தில் இந்தியாவில் இருக்கத்தான் செய்கிறது , கொஞ்சம் நடைமுறையை தெரிந்து வைத்து இருந்தால் நன்றாய் இருக்கும் , மீனவர்கள் பல பேர் கிருத்துவனாக இருப்பது எவ்வாறு , அவர்கள் வாழ்கை தரம் உயர்ந்து விட்டதா என்ன ?????RSS போல இருக்கிறதே உங்கள் குரல்

வெண்ணிற இரவுகள்....! said...

//அதே சமயம் , அதில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு , மத அடிப்படையில் ஒதுக்கீடு தரலாம்..
ஜாதி அடிப்படையில் தருவது , சமுக நீதிக்கு விரோதமானது... வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது...//
அதெப்படி , மதம் மாறியவர்கள் இங்கு எதில் வருவார்கள் , மதம் மாறினால் கூட அவன் நிலை மாறவில்லையே ???????
ஒ இந்து மதத்தில் இருப்பவர் இந்துவாக தானே இருக்க வேண்டும் அது தானே உங்கள் குரல்

வெண்ணிற இரவுகள்....! said...

இப்பொழுது ஒரு தேவர் மதம் மாறுகிறார் என்று வைத்துக்கொள்வோம் ,
அவர் அந்தஸ்த்து சமூகத்தில் உயர்ந்ததாய் தான் இருக்கும் ....ஆனால் ஒரு
தலித் கிருத்துவனாக மாறினால் அதே அந்தஸ்த்து இருக்காது .....................நீங்கள் சொல்வது போல்
இடஒதுக்கீடு வந்ததென்றால் மேல் சாதி காரனும் , கீழே இருப்பவனும் ஒரு இடஒதுகீட்டில் வருவானே பார்வையாளன் இது சரியா இது தான் சமூக நீதியா ?????

pichaikaaran said...

நண்பரே
உங்களையே அறியாமல் இந்து பாசிஸதத்துக்கு குரல் கொடுக்கிறீர்கள் .
மதம் மாறியவர்களுக்கு , அந்த மத அடிப்படையில் ஒதுக்கீடு கொடுப்பதுதான் அவர்களுக்கு தரப்படும் கௌரவம் . இந்து மதத்தின் எச்சத்தை அவர்களோடு ஒட்ட வைத்தால் , தமிழ் நாட்டில் கிறிஸ்தவ மதம் என்பது , இந்து மதத்தின் ஒரு பிரிவாகி விடும் . மற்ற மத நலிந்தவர்களை தனி பிரிவாக அங்கீகரித்து ஒதுக்கீடு தருவதுதான் நல்லது.
ஏற்கனவே இருக்கும் ஒதுக்கீட்டில் பயன்பெறுபவர்களை அனுதாபத்துடன் பாருங்கள் .

pichaikaaran said...

தலித் மதம் மாறியதுமே, பழைய இந்து மதம் கொடுத்த இழிவான அடையாளம் நீங்கட்டும் . நலிவடைந்த கிறிஸ்தவர் என பெயரிட்டு புதிய ஒதுக்கீடு நடக்கட்டும் . பழைய அடையாளத்தை ஊக்குவிக்கும் பணி நமக்கு ஏன் ? அதை மனுதர்மம் பார்த்துகொள்ளட்டும்

வெண்ணிற இரவுகள்....! said...

// தலித் மதம் மாறியதுமே, பழைய இந்து மதம் கொடுத்த இழிவான அடையாளம் நீங்கட்டும் . நலிவடைந்த கிறிஸ்தவர் என பெயரிட்டு புதிய ஒதுக்கீடு நடக்கட்டும் . பழைய அடையாளத்தை ஊக்குவிக்கும் பணி நமக்கு ஏன் ?//
ஐயா நாங்கள் ஊக்குவிக்க வில்லை ...நடைமுறையில் அப்படி தானே உள்ளது ...............!இப்பொழுது கூட நாடார் கிருத்துவர்கள் என்று தானே சொல்கிறார்கள் ...............அப்படி சொல்லி தானே பெண் எடுக்கிறார்கள் , அனைத்து மதங்களிலும் பார்பனீயம் படிந்து இருக்கிறது ,என்பதே நடைமுறை ,
நடைமுறை எப்படி உள்ளது தான் என்று பார்க்க வேண்டுமே தவிர???? நாம் நினைத்த உடன் எல்லாம் எல்லாம் நடக்காது . நான் ஊக்குவிக்க வில்லை ,சமூகம் தலித்துகளை கேவலமாய் பார்க்கிறது என்பதே நிலைமை பார்வையாளன் . அப்படி இருக்க எப்படி மதம் வைத்து இடஒதுக்கீடு கொடுக்க முடியும் சமூகத்தில் சாதியை வைத்து தானே கொடுக்க முடியும்

//என் என்றால் மதமே அப்படித்தான் சொல்கிறது ( ஒருவர் உயர்வு , ஒருவர் தாழ்வு என்று ) அனால் மற்ற மதக்களில் இப்படி செய்பவர்கள் மேல் மத ரீதியான நடவடிககி எடுக்கலாம். //
கிருத்துவ நாடார் என்று தான் பெண் எடுக்கிறார்கள் , அதற்காக அவர்களை அந்த மதம் கண்டித்ததா என்ன ........நடைமுறையில் உள்ளதை பேசுங்கள் நண்பரே

வெண்ணிற இரவுகள்....! said...

//தலித் மதம் மாறியதுமே, பழைய இந்து மதம் கொடுத்த இழிவான அடையாளம் நீங்கட்டும் . நலிவடைந்த கிறிஸ்தவர் என பெயரிட்டு புதிய ஒதுக்கீடு நடக்கட்டும் . // இதை போல நடைமுறையில் இடஒதுக்கீடு உள்ளதா என்பதே என் பதிவின் சாராம்சம் , நான் இடஒதுக்கீடை எதிர்க்கவில்லை , இந்து
ஆனால் உமாசங்கர் கிருத்துவர் என்பதற்காய் அவர் ஆதிட்ரவிடர் இல்லை என்று சொல்வது எப்படி சரி ............. அவர் தந்தைக்கு கல்வி மறுக்கப்பட்டு இருக்கலாம் பிறப்பால் அவர் பின்தங்கி தானே இருந்து இருப்பார்கள் , மதம் மாறினால் அது இல்லை என்பதா?? சொல்லுங்கள்

வால்பையன் said...

சாதியில்லாத மதத்தில் இணைந்தவர்கள் மீண்டும் சாதி சொல்லி கொள்வது எம்மாதியான செயல் என்பது தெரியவில்லை, எனகென்னவோ அவர்கள் சாதியை மறுப்பது சரியான செயலாக இருக்குமென்று தோன்றுகிறது!