Wednesday, 4 August 2010

மந்திரனும் அப்பாவி ரசிகனும்


மந்திரன் ஒரு படம் வெளிவருதாம் , மலேசியலா தான் தமிழர்கள் அதிகம் இருக்காங்காலாம் அதனால்
அங்க தான் விழா எடுத்தாங்கலாம். இங்க ரசிகனுக ஒரே ஆர்ப்பாட்டமாம் , ஏன் நா தமிழ்நாட்டுல தலைவிதியே (தலைவிதி) இந்த சூப்பர் (தாத்தாவாம்) ச்டாராம் . வேற வேல வெட்டி இல்லாததாலா பாடல் வெளியீட்டு விழாவிற்கே CUT OUT எல்லாம் வச்சுருக்காங்க . இந்த தீபாவளிக்கு படம் வரலைனா துக்க தீபாவளி என்று போஸ்டர் வொட்டுவோம்னு மதுரை ரசிகர்கள் சொல்றாங்களாம் . ஏன் அப்படி சொல்றாங்கனா சும்மா இல்ல , தலைவர் நடிக்கற படத்துல லாபத்துல பங்கு கொடுக்கற மாதிரி சின்ன விஷயம் எல்லாம் பண்றதில்ல மாறா , தன் படத்திற்கு நூறு ரூபா ticketnaa 1000 ரூபாய்க்கு விக்க சொல்லி ரசிகர்கள குஷி படுத்தராராம் தலைவர் . ஆனா படத்துல லஞ்சத்த ஒழிக்கரது என்ன , கருப்பு பணம் பத்தி பேசறது என்ன ???? கௌண்டர் சொல்ற மாதரி ஒரே டகால்ட்டி தான் .மேலும் படம் வந்தா , இப்படி பணம் செலவழித்த பேரன்களின் தாத்தா வாழ்கன்னு பாராட்டுவிழா
அமெரிக்கால நடக்க போகுதாம் . ஏன் அமெரிக்கால தமில்நாடவிட மூன்று மடங்கு தமிழர்கள் இருக்காங்கனு ஆய்வு சொல்லுதாம்.படம் வெளிவரப்ப பால் , பீர் எல்லாம் நல்லா விற்பனை ஆகுமாம் ??? கடன் வாங்கி தண்ணி அடிக்கறவன் ஒரு மாற்றா கடன் வாங்கி படம் பார்ப்பானாம் , என்ன முன்னேற்றம் அன்னிக்கு தான் தண்ணி அடிக்கலையே . எப்பொழுதுமே பேரன் பேத்திகள் ஆட தாத்தா பாட்டி ரசிப்பாங்க . ஆனா மந்திரன் படம் வரப்ப தாத்தா பாட்டி ஆட பேரன் பேத்திகள் எல்லாம் கை தட்டறாங்க பிரபு சொல்ற மாதிரி என்ன கொடுமை சரவணன் .

2 comments:

kk samy said...

சன் பிச்சர்ஸ், எந்திரன் படைத்தை நேரிடையா சன் டி.வி ரிலீஸ் பன்றாங்களாம். உலக சூ....ப்பர் டார்,
படம் ரிலீஸ் அப்போ, தமிழகம் முழுவது அரசு விடுமுறை னு நம்ம தாத்தா அறிவிக்க போறார்.

அதனால எல்லோரும் சன் டி வி எந்திரன் படத்த பாத்து ஒப்பாரி வைங்க.

R.Gopi said...

ஆஹா....

வலையிலேயே நீங்க ஒருத்தர் தான் சொல்லலியேன்னு நெனச்சேன்...

இப்போ சொல்லிட்டீங்க....

இதே போல், தசாவதாரம் படத்துக்கு எந்த மொழியும் தெரியாத சாக்கி சான் கூட்டிட்டு வந்தாய்ங்களே... அப்போவும் இதே ஆதங்கத்தோட தான் பதிவு ஏதாச்சும் போட்டீகளா?? நம்மூர்ல இல்லாத ஆளுகளா, கமல்தாசன் ஏன்யா இந்தாள மெனக்கெட்டு ஹாங்காங்ல இருந்து கூட்டியாராருன்னு.... போட்டு இருக்க மாட்டீக...

ஏன்னா, கமல்தாசன பத்தி எளுதுனா, யாரும் படிக்க மாட்டாய்ங்கன்னு ஒங்களுக்கு வெவரமா தெரியும்ல...

ரசினிய நெம்ப பாசமா தாத்தான்னு எல்லாம் சொல்லி இருக்கீக...

அவர விட 4-5 வயது கம்மியான கமல்தாசனையும் இனிமே தாத்தா அப்படின்னு தான் கூப்பிடணும்...

சரியா?