Monday, 23 August 2010

நான் மாகான் அல்ல

நான்கு ஏழை பசங்க கால்பந்து ஆக்ரோஷமா விளையாடறாங்க , ஒருவன் ஆவேசமா பீலே போல கோல் அடிக்கிறான் , அடுத்த காட்சியில் கஞ்சா அடிக்கிறாங்க அப்புறம் பீச் ஓரம் போற காதலர்கள மடக்கி பொண்ண கற்பழிக்கிறாங்க , இப்படி பண்றவங்கள தட்டி கேக்குறாரு கார்த்தி இது தான் நான் மகான் அல்ல . பார்ட்டி கலாச்சாரம் , weekend டேடிங் பப் போன்ற சமாச்சாரங்களில் ஈடுபட்டு ,பீச்சுக்கு தள்ளிட்டு வந்து உக்காந்து
தடவிக்கிட்டு இருக்குறவங்க எல்லாம் நல்லவங்க .ஆனா அந்த சேரி பசங்க கெட்டவங்க , அவங்க இந்தியால பணக்கார ,நடுத்தரவர்க்க மக்கள் விளையாடுற கிரிக்கெட் கூட விளயாடரதில்ல விளையாடறது கால் பந்து தான் . மேலும் அவங்களோட மாமன் ஆட்டோ ஓட்டும் ஒரு தொழிலாளி அவரு கொலை பண்ண ஸ்கெட்ச் போடுவாரு , கத்தி எல்லாம் வச்சுருப்பாரு . ஏழை மக்கள் மீது இயக்குனரோட வன்மமே இதுல தெரியுது . பொதுவா
காதலர்களுக்கு அவர்கள கூட்டிட்டு வர மேட்டுக்குடி பையனைவிட , அங்க இருக்கிற ஏழை உழைக்கும் மக்கள் , மீனவ நாண்பர்கள் தான் பாதுகாப்பு . அதுல ஒரு நண்பர் கொள்ளப்படறான் ,அவன் முஸ்லிமாக காட்டப்படரான் , இவங்க எல்லாம் இருக்கிற ஏரியா மேட்டுக்குடி மாம்பலம் மயிலாப்பூர் அல்ல அவங்க எல்லாம் இருக்கிற இடம் சைதாபேட்டை . அவங்க கலைக்கலூரியில் தான் படிக்கிறாங்க ஏன் நா மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க , அதனால தான் ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம் ????மேலும் பீச்ல லவ் பண்றேன்னு அசிங்கம் பண்றது யாரு . நாயகன் "இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு " சொல்றான் கை தட்டறாங்க அடித்தட்டு மக்கள் அரசியல் புரியாம ???? இது எல்லாம் பாராட்ட "நான் மாகான் அல்ல " ,அழாகான தமிழுல எழுத தெரியாத சாமனியன் .

10 comments:

Bala said...

//மேட்டுக்குடி மக்கள் எல்லாம் நல்லவங்க
பாருங்க

இது உங்கள் கற்பனை. மேட்டுக்குடி எல்லாம் நல்லவர்கள் என்று இயக்குனர் சொல்லவில்லை. கதாநாயகியின் தந்தை தன் மகளின் காதலை எதிர்க்க மறைமுகமாக கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவது போல ஒரு காட்சி இருக்கிறதே?கவனிக்கவில்லையா?

//ஒரு கால் செண்டர்ல அத்தனை காண்டம் எடுத்தாங்களாம்

இதை படத்தில் காட்டி இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள் தெரியுமா? வேலைப்பளு, முதலாளித்துவம் என்று அதிலும் குற்றம் கண்டு பிடித்திருப்பீர்கள்.

இந்த பக்கமும் நிறைய தவறுகள் உள்ளன. அந்தப்பக்கமும் தான். எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது. நீங்கள் நினைப்பதை எல்லாம் இயக்குனர் சொல்லவேண்டும் என்று எப்படி எதிர்பார்கிறீர்கள்? இந்த படத்தில் நடப்பது போல நடக்கவில்லை என்று சொல்லுங்கள். ஒத்துகொள்கிறேன்.

லவ் பண்றவங்க செய்ற அநியாயத்த பத்தி சொல்றத கேக்கணுமா? மவுனம் பேசியதே பாருங்கள்.

//இவங்கள எல்லாம் சுட்டுக்கொல்லன்னும்னு

இப்படி சொல்வது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையினால் ஏற்பட்ட ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வார்த்தை. ஒரு நடுத்தர மனிதனிடம் இருந்து இப்படிப்பட்ட்ட வார்த்தைகள்தானே வெளிவரும். அவர் ஒன்னும் உங்களைப்போல பகுத்தறிந்து செயல்படும் மனிதன்இல்லையே?

எல்லாவற்றையுமே குறை கண்டுபிடிக்கும் ஒரே நோக்கில் பார்த்தால் இப்படித்தான் எழுத தோன்றும். கொஞ்சம் நடுநிலையோடு சிந்தியுங்கள். உங்களுக்கு வினவு தளத்தில் எழுதும் திறமை முழுவதுமாக வந்துவிட்டது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

Robin said...

ஏழைகள் எல்லாரும் நல்லவர்களா?
எல்லா வர்க்கத்திலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு.

Pareethi said...

உங்களுக்கு பேராசிரியர் எஸ். ஜோதி அவர்களை தெரியும் என்று நினைகிரேன். அவரை சில மாதங்களுக்கு முன்பு நான் சந்தித்தேன். அவர் கூறிய விஷயம் ஒன்று என்னை மிகவும் பாதித்தது. "நாம் புதுமையான விஷயங்களை ஏற்க மறுக்கின்றோம்" என்பதே அவரின் கருத்து. புதுமையானவற்றை உருவாக்க எல்லை என்றாலும் தவறு எல்லை. ஆனால், நாம் புதுமையான விஷயங்களை வெறுக்கிறோம். ஏன்???

(watching cinemas in theatres Low budget படங்கள் வாழறதே என்ன மாதிரி ஆளுகலால)
இத எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு இல்ல. உங்க Interests இதுதான்னு நீங்க குடுத்து இருகிங்க.
அப்படியே கொஞ்சம் நியூஸ் பேப்பரும் படிங்க. இந்த மாதிரி விஷயங்கள் உலகில் மட்டுமல்ல இந்தியாவிலும் முக்கியமாக மெட்ராஸிலும் நடந்து கொண்டிருகின்றன.

ஒரு படத்தை நீங்கள் எப்படி பாக்குரிங்கனு எனக்கு தெரியாது. குறைகளை மட்டுமே பார்ப்பவன் ரசிகன் அல்ல. பேசாமல் ஒன்று செய்யுங்கள் நீங்கள் ஒரு படம் எடுங்கள் அதுவும் "நான் மகான் அல்ல" போல யதார்த்தமாக ஒரு படம் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அப்பொழுதுதான் தெரியும்... ஒரு படம் எடுப்பது மிகவும் கடினம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு யதார்த்தம், ஒரு கருத்து என்பது மிகவும் கடினமே.

நான் உங்களை புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களை மிகவும் ரசிப்பவன் நான். அதனால்தான் உங்களுடைய ரசிப்பு தன்மை மிகவும் குறுகிய வட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பது எனக்கு பிடிக்கவில்லை.

இப்படிக்கு உங்களின் பழைய இடுகைகள் போல மீண்டும் இடுகைகள் எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன்.

பின் குறிப்பு: இதை எழுதும் நான் மேட்டுகுடி அல்ல. பதினேழு வயதுமிக்க மாதம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் மட்டுமே குடும்ப வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன்.

Pareethi said...

உங்களுக்கு பேராசிரியர் எஸ். ஜோதி அவர்களை தெரியும் என்று நினைகிரேன். அவரை சில மாதங்களுக்கு முன்பு நான் சந்தித்தேன். அவர் கூறிய விஷயம் ஒன்று என்னை மிகவும் பாதித்தது. "நாம் புதுமையான விஷயங்களை ஏற்க மறுக்கின்றோம்" என்பதே அவரின் கருத்து. புதுமையானவற்றை உருவாக்க எல்லை என்றாலும் தவறு எல்லை. ஆனால், நாம் புதுமையான விஷயங்களை வெறுக்கிறோம். ஏன்???

(watching cinemas in theatres Low budget படங்கள் வாழறதே என்ன மாதிரி ஆளுகலால)
இத எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு இல்ல. உங்க Interests இதுதான்னு நீங்க குடுத்து இருகிங்க.
அப்படியே கொஞ்சம் நியூஸ் பேப்பரும் படிங்க. இந்த மாதிரி விஷயங்கள் உலகில் மட்டுமல்ல இந்தியாவிலும் முக்கியமாக மெட்ராஸிலும் நடந்து கொண்டிருகின்றன.

ஒரு படத்தை நீங்கள் எப்படி பாக்குரிங்கனு எனக்கு தெரியாது. குறைகளை மட்டுமே பார்ப்பவன் ரசிகன் அல்ல. பேசாமல் ஒன்று செய்யுங்கள் நீங்கள் ஒரு படம் எடுங்கள் அதுவும் "நான் மகான் அல்ல" போல யதார்த்தமாக ஒரு படம் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அப்பொழுதுதான் தெரியும்... ஒரு படம் எடுப்பது மிகவும் கடினம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு யதார்த்தம், ஒரு கருத்து என்பது மிகவும் கடினமே.

Pareethi said...

நான் உங்களை புண்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களை மிகவும் ரசிப்பவன் நான். அதனால்தான் உங்களுடைய ரசிப்பு தன்மை மிகவும் குறுகிய வட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பது எனக்கு பிடிக்கவில்லை.

இப்படிக்கு உங்களின் பழைய இடுகைகள் போல மீண்டும் இடுகைகள் எதிர்பார்க்கும் உங்கள் ரசிகன்.

பின் குறிப்பு: இதை எழுதும் நான் மேட்டுகுடி அல்ல. பதினேழு வயதுமிக்க மாதம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் மட்டுமே குடும்ப வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவன்

Anonymous said...

ஐயா கொட பிடிச்சுட்டு போற பெரியவரே..!
நைட் அடிச்ச போதை தெளியாமலே பதிவ டைப் செஞ்சுடீங்க போல...
அட்லீஸ்ட் தலைப்பயாச்சும் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதுங்க...

உங்க பதிவோட தலைப்பு "நான் மாகான் அல்ல" னு போட்டிருக்கீங்க... "நான் மகான் அல்ல" என்பதே படத்தோட பேரு.

தமிழ் இலக்கியத்தின் படி இதுகூட தவறு தான் "நான் மகான் அன்று" என்பதே சரியான வாக்கியம்...

மொதல்ல உங்கள திருத்துங்க...

அப்புறம் ஊர திருத்தலாம்...

ஏன் சொல்றேன்ன தமிழ்ல ஒரு கால் போடாட்டி அர்த்தமே மாறிடும்...
உதாரணத்துக்கு,
போனான்..
கால் இல்லாட்டி
பேனான்.. ஆகி அசிங்கமகிடும்...

உடனே, "ஆபீஸ் போற அவசரத்துல டைப் செஞ்சேன்... உங்களுக்கு விடயம் புரிந்ததல்லவா" அப்பிடீன்னு சப்ப கட்டு கட்டாதீங்க...

ஒரு வலைப்பூவில பதிவேற்றம் செய்ற உங்களுக்கே இவ்ளோ தப்பு வருதே... ஒரு படம் எடுக்குறவங்களுக்கு தப்பு வராதா?

நீங்க அடிக்குற சரக்கு சரியில்லன்னு நெனைக்கிறேன்... தப்பு உங்கமேல இல்ல சரக்கு மேலதான்... அதுக்கு காரணம் டாஸ்மாக்... அத மாத்துங்க... நல்ல தரமான சரக்கா அடிச்சுட்டு பதிவ எழுதுங்க...

- வாழ்த்துகள்...
அன்புடன்...
நண்டு... "நியூடு" நண்டு...

சரவண வடிவேல்.வே said...

குறைவாக சொன்னாலும் நிறைவாக சொன்னதுபோல் உள்ளது.

உங்கள் கருத்துகளை நான் ஏற்கிறேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

அது நக்கலுக்கு அந்த தலைப்பை வைத்தேன் , அஆமாம் என்று சொல்வோமே அதை போல நக்கல் .
இதற்க்கு விளக்கமா , சொல்லுங்க தமிழ் ஐய்யா ??? என் நக்கல் ஏழைகளை புண்படுத்துவதாக இல்லை என்று நினைக்கிறேன் .
நாம் செய்யும் தவறு அடுத்தவரை புண்படுத்தாமல் இருக்க வேண்டும் ............
நான் தமிழ் ஆசிரியன் என்று சொல்லவில்லை ..........கருத்துக்களுடன் என்ன தவறு இருக்கிறது என்பதை
சுட்டிக்காட்டுங்கள்.நான் தமிழ் புலவன் என்று சொன்னேனா???????வைரமுத்து வாலி கலைஞர் இவர்கள்
தமிழ் நன்றாய் எழுதுகிறார்கள் என்ன பலன் .........

Bala said...

நண்பரே இந்த பதிவில் நான் முன்னமிட்ட இரண்டு பின்னூட்டங்களை காணவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

Vijay said...

எல்லாவற்றையுமே குறை கண்டுபிடிக்கும் ஒரே நோக்கில் பார்த்தால் இப்படித்தான் எழுத தோன்றும். கொஞ்சம் நடுநிலையோடு சிந்தியுங்கள். உங்களுக்கு வினவு தளத்தில் எழுதும் திறமை முழுவதுமாக வந்துவிட்டது என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்