அதாவது நைனா உமாசங்கர் உமாசங்கர் ஒருத்தர் இருந்தாரு அவர் ஆதி திராவிடர் இல்லைன்னு ஒரு உலக உண்மைய கண்டுபிடுசுட்டாங்க பா . அந்த அதிகாரிய தண்டிக்கனும்ல , அது தான் தருமம்ல அதனால பதவி நீக்கம் செஞ்சுட்டான்கலாம் . அதுக்கு என்ன சொல்றைங்கா நா அவரு கிறுத்துவராம் அந்த சான்றிதழ் செல்லாதுன்னு சொல்ற்ரைங்க . அது அவர் இன்னா சொல்றாரு நா , எங்க அப்பா அம்மா காதல் கல்யாணம் அம்மா கிறுத்துவர் அப்பா இந்து , சட்டப்படி நான் இந்துன்னு சொல்றாரு . சொல்றது கரக்ட்டு தானே தலிவா . ஆமாம் அரசும் என்ன பண்ணும் எதாவது சொல்லி பதவி நீக்கம் செய்யணும்ல இல்லைனா பேரன் கோவிப்பானே தாத்தா என்ன பண்ணுவாரு , ஒரு தாத்த ஸ்தானத்துல இருந்து யோசிக்கனும்ல . இப்ப பேரன் மிட்டாய் கேட்டால் தாத்தா வாங்கித்தருவார்ல , பேரனுக்கு வேலைக்காரன் பிடிக்கலைனா தாத்தா அவர நீக்கனும்ல அது தானே நியாயம் , தாத்தா அத தான் செஞ்சாரு . தமிழ் மக்கள் என்பது பேரன் பேத்தி மகன் மகள் தானே . இந்த உமா சங்கர நீக்கினதுக்கு சமூக நீதி கொண்டான் என்று தாத்தாவிற்கு பேரன்கள் பாராட்டு விழா நடத்துவாங்களாம் ஆனா எந்த சேனல் போடறது பேரன்க சேனலா அல்லது பிள்ளைங்க சேனலா அப்படின்னு போட்டில விழா கொஞ்சம் தள்ளி போயிருக்காம் .
சரி மெயின் மேட்டருக்கு வருவோம் . இந்த இட ஒதுக்கீடு பத்தி ஆ வூ நு பேசறவைங்களுக்கு ஒரு கேள்வி .??? ஏன் கிறுத்துவனா இல்ல முஸ்லிமா மாறினா இட ஒதுக்கீடு இல்லையா ???? அப்ப இட ஒதுக்கீடு மெய்யாலுமே இந்துவாவே இருக்க தான் சொல்லுதா . யாரோ ஒரு முஸ்லிம் அவருக்கு இதே மாதிரி பிரச்சன வந்தப்ப
ஆதீனத்துட்ட போய் சான்றிதழ் வாங்கினாராமே????? அப்ப நித்தி இல்ல ஜெயேந்திர சாமிட்டா உமா ஷங்கர் போய் சான்றிதழ் வாங்க சொல்லிடுவோமா ??? ஏனா ஆதி திராவிடர்னாளும் இந்து ஆதி திராவிடர்லா என்ன நான் சொல்றது ???? இடஒதுக்கீடு பேர கூட இந்து மத ஒதுக்கீடுனு மாத்திடலாம்னு நினைக்கறேன் .ஒரு பிற்படுத்த பட்டவன் முன்னேற வாய்ப்பாய் இருக்கணும் அது தானே ஒதுக்கீடு , அது என்ன கிறுத்துவனா மாறிட்டாலே அவன் முன்னேறியவனா ஆகா முடியுமா நைனா ???? இத ஏன் பெரியார் பேரன்களும் உடன் பிறப்புக்களும் கேக்க மாட்டாங்கள ?????அது என்ன பா இந்துவா இருந்தா தான் இடம் விடுவீங்களா ?????
15 comments:
அரசியல் சட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தலித் சீக்கியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இட ஒதுக்கீடு உண்டு என்று சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டபோதும் கிறிஸ்தவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
உண்மை ராபின்
ஒத்து ஊதுனா போதுமா?..
"சரி மெயின் மேட்டருக்கு வருவோம் . இந்த இட ஒதுக்கீடு பத்தி ஆ வூ நு பேசறவைங்களுக்கு ஒரு கேள்வி .??? ஏன் கிறுத்துவனா இல்ல முஸ்லிமா மாறினா இட ஒதுக்கீடு இல்லையா ???? அப்ப இட ஒதுக்கீடு மெய்யாலுமே இந்துவாவே இருக்க தான் சொல்லுதா . "
சற்றே முரண்படுகிறேன்.
இப்பொழுதிருக்கும் இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையில் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம். மற்ற சமயத்தை தழுவுகிறவர்கள் பெரும்பாலும் இந்த சாதிக் கொடுமையில் இருந்து தப்பிக்க நினைத்தவர்களே ! மற்ற சமயங்களில் சாதி வைத்து ஏற்றத் தாழ்வு இல்லை. சாதியே இல்லை என்கிற போது சாதியை வைத்து இட ஒதுக்கீடு எப்படி கேட்க முடியும் ?
இது பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வு அடிப்படையில் இருக்குமானால், அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க முடியும். இப்பொழுதிருக்கும் முறையில் மாற்று சமயத்தவருக்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சாத்தியம் இல்லாத ஒன்று. ! இதனால் தான், இன்றும் பல கிறித்துவர்கள், தங்கள் சர்டிபிகேட்டில் மட்டும் இந்து என்று குறிப்பிடுகின்றனர்.
//மற்ற சமயத்தை தழுவுகிறவர்கள் பெரும்பாலும் இந்த சாதிக் கொடுமையில் இருந்து தப்பிக்க நினைத்தவர்களே !// எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்?
//சாதியே இல்லை என்கிற போது சாதியை வைத்து இட ஒதுக்கீடு எப்படி கேட்க முடியும் ?// சாதியே இல்லை என்பது தவறு. இது தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் பொய் காரணம்.
//இது பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வு அடிப்படையில் இருக்குமானால், அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க முடியும்// இது உயர் சாதியினர் இட ஒதுக்கீடு பெற செய்யும் சூழ்ச்சி.
//இப்பொழுதிருக்கும் முறையில் மாற்று சமயத்தவருக்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சாத்தியம் இல்லாத ஒன்று// சீக்கியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சாத்தியப்படும்போது கிறிஸ்தவர்களுக்கு என் சாத்தியப்படாது?
நீங்கள் சொல்வது இந்து மதம் என சொல்லப்படும் அமைப்பில், சாதி ரீதியாக ஒடுக்கப்டவ்ரகளை மேலும் புண் படுத்துவது போல் உள்ளது...
இட ஒதுக்கிடு என்பதை பற்றி புரித இல்லாமல் பதிவு இட்டு இருக்கிறீர்கள்...
இந்து மதம் என்று சொல்லி , சிலரை காலம் காலமாக அடிமையாக வைத்து இருந்தார்கள்... அவர்களை கை தூக்கி விடத்தான் இட ஒதுக்கிடு .. இப்போது கொடுக்கப்புள்ளது போத்தது என்ற நிலையில், அதையும் தட்டி பெருக்க நினைப்பது பெரியகொடுமை
மற்ற மதத்தில் சாதியே இல்லையே... பின் எதற்கு சாதி வெறியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் போட்டிக்கு வருகிறார்கள்..
இப்படி மற்ற மதத்துக்கு ஒதுக்கிடு, பொருளாதார ஒதுக்கிடு என்றெல்லாம் ஆரம்பித்தால், சமூக நீதி என்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்...
கிறிஸ்தவத்தில் சாதி இல்லையா... வெறு எங்கோ போக வேண்டாம். உமா சங்கர் கிறிஸ்தவர் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு அவரது மாவட்டமான நெல்லை டயோசிசன் பதவிகளில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூகத்தை சேர்ந்தவர்கள் பெண் கொடுப்பார்களா (அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்றெல்லாம் கடிக்க கூடாது)
//மற்ற மதத்தில் சாதியே இல்லையே// அப்படியா? புதிய தகவல்.
Robin said...
//மற்ற சமயத்தை தழுவுகிறவர்கள் பெரும்பாலும் இந்த சாதிக் கொடுமையில் இருந்து தப்பிக்க நினைத்தவர்களே !// எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள்?
வரலாறு முக்கியம் அமைச்சரே.....கொஞ்சம் புரட்டிப் பாருங்கள் : )
//சாதியே இல்லை என்கிற போது சாதியை வைத்து இட ஒதுக்கீடு எப்படி கேட்க முடியும் ?// சாதியே இல்லை என்பது தவறு. இது தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் பொய் காரணம்.
கிறித்துவத்தில் சாதிக் கொடுமை இருக்கிறது என்று சொல் கிறீர்களா ? அல்லது கிறித்துவத்திற்கு மாறியும் ஜாதியை விட்டு வெளியில் வர முடியவில்லை என்று சொல்கிறீர்களா ? மாற்று சமயத்திற்கு மாறிய பின்பும், பிரம்மண் காலில் இருந்து வந்தேன் என்ற கட்டுக் கதையை நம்புகிறீர்களா?
//இது பொருளாதாரத்தின் ஏற்றத் தாழ்வு அடிப்படையில் இருக்குமானால், அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்க முடியும்// இது உயர் சாதியினர் இட ஒதுக்கீடு பெற செய்யும் சூழ்ச்சி.
அப்போ...உயர்சாதியினர் பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளனர் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? அவங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாதா ?
//இப்பொழுதிருக்கும் முறையில் மாற்று சமயத்தவருக்கு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு சாத்தியம் இல்லாத ஒன்று// சீக்கியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் சாத்தியப்படும்போது கிறிஸ்தவர்களுக்கு என் சாத்தியப்படாது?
அந்த சமயங்களில் சாதி இருக்கிறது என்று அர்த்தம். மற்ற சமயத்தில் சாதி இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லையே !

கிறிஸ்தவர்களில் சாதி உண்டென்பது உலகறிந்த விஷயம். கபிலனுக்கு தெரியாதது ஆச்சரியம்தான். ஒரு வேளை வேறு கிரகத்தில் இருக்கிறாரோ என்னவோ.
இதுவே ஒருவர் கிறிஸ்தவத்தில் ஜாதிகள் இல்லை என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னால் உண்டு என்று சொல்ல கபிலன் உட்பட ஓராயிரம்பேர் ஓடி வருவார்கள். இட ஒதுக்கீடு என்றவுடன் கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை என்பதும் மற்ற நேரங்களில் அங்கும் ஜாதி உண்டு என்பதும் ஒரு தந்திரம்தான், வேறொன்றுமில்லை. ஜாதி உணர்வு ஏற்பட புராணக் கதைகள் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.
வர்ணாசிரமம் போன்ற டுபாக்கூர் கான்செப்டை மற்ற சமயங்கள் பின்பற்றுவதில்லை. மனு தர்மம் என்ற கற்கால சட்டத்தை மற்ற சமயங்களில், மற்ற ஊர்களில் பின்பற்றியதில்லை. ஒருதலைப்பட்சத்தோடு அமைந்த அந்த சட்டப் புத்தகத்தால், சமுதாயத்தில் அவல நிலையை சந்தித்தனர் தாழ்த்தப்பட்டவர்கள். வலுக்கட்டாயமாக தன் சாதிக்கென நிர்ணயிக்கப்பட்ட தொழிலையே செய்ய வைத்தன. பணம் புழங்கும் வேலைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன, கல்வி மறுக்கப்பட்டன. அதனால் சமுதாயத்தால் பிற்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவுக் கரம் கொடுத்து முன்னேற வைப்பதே இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கம் !
இந்த அவலங்கள் மற்ற சமயத்தவருக்கு கிடையாது ! சாதி மதம் பாரபட்சமின்றி பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கட்டுமே...! எல்லோரும் பயன்பெற்லாமே !
//இதுவே ஒருவர் கிறிஸ்தவத்தில் ஜாதிகள் இல்லை என்று வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னால் உண்டு என்று சொல்ல கபிலன் உட்பட ஓராயிரம்பேர் ஓடி வருவார்கள்.//
நீங்க எந்த சைடுல வந்து அட்டாக் பண்ணாலும் சரிங்க...இட ஒதுக்கீடு மேட்டர்ல என் வாதம் இது தான்.
"ஏனா ஆதி திராவிடர்னாளும் இந்து ஆதி திராவிடர்லா என்ன நான் சொல்றது ???? இடஒதுக்கீடு பேர கூட இந்து மத ஒதுக்கீடுனு மாத்திடலாம்னு நினைக்கறேன் ."
சப்ஜெக்டை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதி இருப்பது வருத்தமளிக்கிறது.
வெண்ணிர இரவுகள்..
இட ஒதுக்கீடு பற்றிய என்னுடைய கருத்து இட ஒதுக்கீடு என்பது சமரசம் இல்லாத சமத்துவம் என்கிற கொள்கை நோக்கிய பயணத்தின் முதல்படி. ஆனால் அதுவே கடைசித் தீர்வாகிவிட முடியாது. இலங்கையின் ‘தரப்படுத்தல்’ நல்ல உதாரணம். அங்கே பாதிக்கப்பட்டது சிறுபான்மைத் தமிழர்கள்.
சொல்வதாகக் குறை நினைக்க வேண்டாம். ஏன் வினவுக்கு ஒத்தூதி போல் அவர்கள் போடுகிற பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே உங்கள் பதிவுகள் சமீபகாலமாக வந்துகொண்டிருக்கின்றன? உங்களிடம் சொந்தமாக ஏதும் இல்லையா?
கபிலன் சொல்வது தான் சட்டப்படி உள்ள நிலை.
மதம் மாறியவர்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்றால் ஏன, எவ்வளவு, எந்த பிரிவின் கீழ் பதினைந்திலா, முப்பத்து ஏழிலா என்ற வினாக்களுக்கு விடையை சட்ட அவைகளிலும் பாராளுமன்றத்திலும் விவாதித்து சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அது வரை கிறிஸ்துவர்களாக மாறியவர்கள் இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டே ஒதுக்கீட்டின் நன்மை பெற முடியும்; பெரும் அளவுக்கு செய்து கொண்டிருக்கின்றார்கள் என சொல்லப் படுகிறது.
உமா சங்கர் அவர்கள் ஒதுக்கீடு கேட்டுப் பெற்ற காலத்தில் இந்துவாகவே இருந்தார் என்றும் அவருக்கு சட்டப் படி ஒதுக்கீடு உண்டு என்றும் தான் பதிவுகள் கூறுகின்றன.
CHRISTHU MATHATHTHIL SAERAVUM VAENDUM, ATHAE SAMAYATHTHIL INTHU MATHATHTHI ULLAPADI IDA OTHUKEEDUM VAENDUM !! NALLAA IRUKKAIYAA UNGALL NIYAAYAM!!!IDA OTHUKEEDU VAENDUM EANTRAAL PESAAMAL INTHU MATHATHILAEYAE IRUKKA VAENDIYATHUTAANAE? SAATHIYAE ILLATHA CHRISTHU, MUSLIM MATHANGKALIL SAERNTHU, IDA OTHUKKIIDU KAETTU, AVARKALAI KAEVALA PADUTHTHAATHEERKALL !!
Post a Comment