Tuesday, 14 December 2010

நீயா நானா

இரவு ஒன்பது
விஜய்யில் "நீயா நானா"
"அந்த காலத்து காதலா , இந்த காலத்து காதலா "
தலைப்பு .
"84 விழுக்காடு மக்களின் ஒரு நாள் கூலி 20 ருபாய் "
"30 கோடி மக்கள் இரவு உணவில்லாமல் தூங்குகிறார்கள் ,அது எல்லாம் பிரச்சனை அல்ல இது தான் பிரச்சனையா என்றேன் ? "
"இந்த காதல் உன்னையும் என்னையும் போல நடுத்தரவர்க்கம்
கொள்ளும் போலி மயக்கம் , இதை எல்லாம் காதல் என்று சொல்லாதே "
"இந்த காலத்திலும் உண்மையான மனதை படிக்கும் காதல் இருக்கு" என்றான் நண்பன் .
"மனதை பார்க்கும் காதல் என்றால் , பிடித்திருக்கிறது என்பதற்காய் உன்னால் சித்தாள் வேலை செய்யும்
பெண்ணை காதலிக்க முடியுமா ?" என்று என் நண்பர் ஒருமுறை என்னிடம் கேட்டதை கேட்டேன்
"இல்லை என்றான் "
"அப்புறம் என்ன மயிறு காதல் " என்றேன்
"கல்யாணமோ காதலோ சொர்க்கத்தில் நிச்சயிக்க படவில்லை வர்கத்தில் நிச்சயிக்க படுகிறது " என்றேன் .
"நீயா நானா " கோபிநாத் பொய்யான விடயத்தை உண்மையை போல
அழகாய் பேசிக்கொண்டிருந்தார் .

3 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

காதல் என்பதே பொய்.. மாயை..

அமிர்தா said...

"கல்யாணமோ காதலோ சொர்க்கத்தில் நிச்சயிக்க படவில்லை வர்கத்தில் நிச்சயிக்க படுகிறது "

முற்றிலும் உண்மை

பாலா said...

அது ஹார்மோன் சமாச்சாரம்ங்க. சித்தாள் வேலை செய்பவர்கள் மீது கூட வரும். வீணாக இதிலும் கம்யூனிசத்தை நுழைக்காதீர்கள் நண்பா...