நித்தி தனது முப்பத்தி நாலாவது பிறந்தநாளை கொண்டாட திருவண்ணாமலை சென்று இருக்கிறார் . அங்கு அவருக்கு பலத்த வரவேற்ப்பு காத்துக்கிடந்தது . ‘திரும்பிப்போ திரும்பிப்போ.. நித்தியானந்தனே திரும்பிப்போ’ என்று என்று கோஷங்கள் பறந்தன . கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சரி ஆர்ப்பாட்டம் எல்லாம் இருக்கட்டும் , இந்த ஆர்ப்பாட்டங்களை ஏன் பார்ப்பன ஜெயந்திரனிடம் காட்டவில்லை ? கோவில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் தான் புகவேண்டும் என்பதை எதிர்த்து ஏன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை ? நித்தியிடம் நடத்தியதை அங்கே நடத்த முடியுமா ? காவி உடை என்றாலும் பார்ப்பனர்கள் போடும் காவி உடை வேறு அல்லவா ?
சரி பொதுபுத்தி எப்படி தான் உள்ளது நித்தி விடயத்தை கவனம் செலுத்திய ஊடகம் ஏன் ஜெயேந்திரன் விடயத்தை மறந்தது . "அகம் பிரம்மாஸ்மி " என்று அத்வைத்தம் சொல்கிறது " நானே கடவுள் " , மனதும் கடவுளும் ஒன்றே வெளியில் எதுவும் இல்லை எல்லாம் மாயை என்று அத்வைத்தம் சொல்கிறது . அதை ஏற்றுக்கொண்டு ஜெயேந்திரன் கொலை செய்யவில்லை , எல்லாமே மாயை என்பது போல் , ஊடகங்கள் மறக்கின்றனவா ? இல்லை அத்வைத்ததை ஏற்றுக்கொண்டு போராட்டக்காரர்களுக்கு ஜெயேந்திரன் செய்த கொலை மறந்துவிட்டதா ? ஆர்ப்பாட்டங்களிலும் காவிக்கறை படித்து இருக்கிறதா ?
6 comments:
நல்ல கருத்து...இவர்கள் எல்லாம் வாழ்வில் தவறே செய்யாத அரிச்சந்திரன்கள் போல அவரை எதிர்த்து உள்ளே விடாமல் செய்வது வேதனை தான்..கோவிலுக்கு வருவது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். ஏசு இது வரை பாவமே செய்யாதவர் முதலில் இவள் மீது கல்லை எறியட்டும் என்று கூறியது நினைவில் வருகிறது.
இவர்கள் எல்லாம் வாழ்வில் தவறே செய்யாத அரிச்சந்திரன்கள் போல அவரை எதிர்த்து உள்ளே விடாமல் செய்வது வேதனை தான்..கோவிலுக்கு வருவது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்
மக இக கும்பல் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
மருதய்யன் நித்தியிடம் கேட்டது கிடைத்துவிட்டதா?
நல்ல கருத்து... இது நிறைய பேருக்கு சென்றடைய வேண்டும்...
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
சமூகத்திற்கு சேர வேண்டிய பதிவு....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
Post a Comment