"நீரா ராடியாவும், மற்றவர்களும் பேசிய தொலைபேசிப் பேச்சுக்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில், புகழை சீர்குலைக்கும் வகையில் அதை வெளியிடக் கூடாது " . டேப் வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு தலையிடுவதாக உள்ளது என்று டாடா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது . நீதிமன்றம் எந்த சமூகத்தின் நலனுக்காய் உள்ளது என்பது இதில் இருந்து புலப்படும் .
டேப்பில் இருப்பது டாடாவின் குடும்ப விடயமா , இல்லை குடும்பச்சண்டையா? ஒரு நாட்டின் பிரச்சனை .ஒரு நாட்டின் அமைச்சரை ஒரு முதலாளி முடிவு செய்கிறார் என்றால் எவ்வளவு நகைப்புக்கு உரியது , எவ்வளவு கேவலாமான நிலைமையில் நாம் உள்ளோம் . ஊழல் என்னும் மைய்யப்புள்ளியே இது தான் . பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பது , எலும்பு துண்டுகளை முதலாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு இருப்பவர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் . நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையில் 1 76000 கோடி களவாடப்பட்டதே அது பிரச்சனை அல்ல , இந்த நட்டத்தை ஈடு கட்ட விலைவாசி எல்லாம் ஏறப்போக
சாமானியன் ஒரு வேலை சோற்றுக்கே திண்டாடுகிரானே அது பிரச்சனை அல்ல . ஆனால் சம்பந்தப்பட்ட முதலாளிகள் பெயர் , புகழ் கெடக்கூடாது .
அமைச்சர் யார் , ஆட்சியில் யார் என்று தீர்மானிக்கும் முதலாளிகளுக்கு அமைச்சரோ , ஆட்சியில் இருப்பவரோ விசுவாசமாய் தான் இருக்கமுடியும் .நீதித்துறை யார் சார்பாக உள்ளது , என்பதை இந்த தீர்ப்பின் சாராம்சம் விளக்கும் . இது ஜனநாயகமா ? தரகு முதலாளிகள் நாட்டை ஆளும் 'பணநாயகம்' .
3 comments:
இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இப்பொழுதெல்லாம் மக்கள் இதை கண்டுகொள்ள அளவு அல்லது இதை ஏற்றுகொள்ளுமளவு நிறுவனமாயமக்கப்பட்டுள்ளனர். நீதி துறை எப்பொழுதுமே சரியாக யாருக்காக இருக்க வேண்டுமோ அ(வா)ளுக்காகதான் இருக்கிறது..
பணம் பத்தும் செய்யும்
hi
why you pull AVAAL on this?
Neither Raja nor Sonia,nor TATA nor MK are avaals,
Avaals are no role in any of this
simply pulling them make you guys mentally sick
Post a Comment