Thursday, 9 December 2010

ஊழல் ராஜா மட்டுமே பொறுப்பா

"ஊழல்" எங்கு பார்த்தாலும் ஊழல் , யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் " இவன் 100 கோடி அடிக்காரனு , அவனுக்கு வோட்டு போட்டா அவன் ஆயிரம் கோடி அடிக்கிறான் " என்னும் வார்த்தையை யாரோ யாரிடமோ சொல்லிக்கொண்டிருப்பார்கள் இந்த நொடியில் . நானும் கூட பொது புத்தியில் அப்படி தான் புரிந்து கொண்டு இருந்தேன் .ஊழலுக்கு காரணம் தனிநபர் , அவர் ஊழல் செய்கிறார் என்கிற நோக்கில் என் புரிதல்
இருந்தது . உதாரணமாய் இப்பொழுது அலைகற்று ஊழலை எடுத்துக்கொள்ளுங்கள் , ஏதோ ராஜா என்ற தனிநபர் மட்டும் ஊழல் செய்ததை போல சித்திரம் பொதுபுத்தியில் உள்ளது . "தவறு நிரூபிக்கப்பட்டால் ராஜா தண்டிக்கப்படுவார் " என்று கருணாநிதி சொல்கிறார் . இயல்பாகவே இந்த ஊழலுக்கு தனிநபர் மட்டுமே காரணம் போல சித்தரிக்கிறார் , ஊடகங்களும் அதையே சித்தரிக்கின்றன . ஊழலுக்கு தனிநபர் ஒழுக்கம் மட்டுமே காரணமா ???

பண்ணா , முக்தா என்ற எண்ணெய் 2000 கோடி மதிப்புள்ள எண்ணெய் வயல்களை ரிலையன்ஸ் நிறுவனம் வெறும் 12 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது . பொதுத்துறையை தனியாரிடமும் தரகு முதலாளிகளிடமும் விற்கும் போக்கு உள்ளது . இதை போன்ற ஊழலே ராஜா விடயத்தில் நடந்து இருந்தது . முதலாளிகள் முடிவு செய்கிறார்கள் யாரை அமைச்சராய் ஆக்க வேண்டுமென்று . பொது சொத்துக்கள் தனியார் வசம் போகின்றன , வளங்கள் தனியார் வசம் போகின்றன , தண்ணீர் தனியார்மயம் ஒரு சிறந்த உதாரணம் . இந்திய நாட்டை
யார் ஆள்கிறார்கள் ??? ஒரு அமைச்சரின் தலைவிதி தரகு முதாலளியிடமும் , பன்னாட்டு முதலாளியிடமும் உள்ளது . அப்படி என்றால் இந்தியாவை ஆள்வது தரகு முதலாளிகளா ??? வேதாந்தா என்னும் நிறுவனதிற்க்காக அங்கு உள்ள பழங்குடியினர் விரட்டப்படுகிறார்கள் . இப்படி இருக்கும் சூழலில் ராஜா மட்டும் தான் காரணம் என்று சொல்வது முழுபுசநிக்காயை சோற்றில் மறைப்பது .


இது தனிமனித ஊழல் அல்ல , பன்னாட்டு முதலாளிக்கும் தரகுமுதலாளிக்கும் குடைபிடிக்கும் அரசாங்கம் என்னும்
எந்திரத்தில் இருந்து ஊழல் தொடங்குகிறது . இங்கு ராஜா அல்லாமல் யார் இருந்தாலும் இந்த ஊழல் நடந்தே தீரும் . இங்கு ராஜாவை விட கவனிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களை ஆட்டுவிக்கும் தரகுமுதலாளிகளே . வில்லை விட்டு விட்டு நாம் அம்புகளை மட்டும் உடைக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் .

இந்த வோட்டு கட்சி அரசியலும் , மறு காலனியாக்கம் இருக்கும் வரை இந்த ஊழல் இருந்து கொண்டே இருக்கும்

4 comments:

ம.தி.சுதா said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. இதை மட்டுமே சொல்ல முடிகிறது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

பார்வையாளன் said...

சரி. இதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன ?

cs said...

இன்னும் கொஞ்ச நாளில் நம் இந்தியாவையே மிகக் குறைந்த
விலைக்கு விற்று விடுவார்கள்

vignaani said...

14.12.2010
//நீதி துறை எப்பொழுதுமே சரியாக யாருக்காக இருக்க வேண்டுமோ அ(வா)ளுக்காகதான் இருக்கிறது.. //

ஐயா இதில் "அவா" எங்கிருந்து வந்தா? டாடாவா? நீரா ராடியாவா? ராஜாவா? பர்காவா? சாங்க்வியா? மாறனா? கனிமொழியா?
பேசும் விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று சம்பந்தமில்லாமல் "அவாளை" கொண்டு வரும் மன மாச்சர்யம் மாற vendum . கொள்ளை அடிப்பவன் எவனோ, அவாளோ அவர்களைத் தூக்கில் இட vendum : நம் குப்பத்து ராசாவோ அல்லது அவா அக்ராஹாரத்து அம்பியோ, நடு தெரு நாடாரோ, மசூதித் தெரு மொய்தீனோ - யாரை இருந்தால் என்ன? இந்த மன நிலை வரும் வரை - மன்னிக்கவும் - தமிழகம் உருப்படாது.