Monday 27 December 2010

தினமலர் நடு(தெருவிற்கு) நிலை

2010 டாப் டென் நிகழ்ச்சிகளை தினமலர் போட்டுள்ளது , அதில் தண்டகாரண்யா நிகழ்வும் அடக்கம் .
மக்கள் போராட்டத்தை தீவிரவாத செயல்களாகவும் , அதனால் நாடே அதிர்ச்சி அடைந்ததாகவும்
அச்செய்தி சித்தரிக்கிறது .மக்கள் போராட்டம் தினமலருக்கும் மற்ற ஊடகங்களுக்கும் தீவிரவாத செயல்களாய் தெரிகிறது . பொது புத்தியில் மக்கள் போராட்டத்தை தீவிரவாத செயல்களாய் ஆணி அடிப்பதில் அதிகார வர்க்கத்திற்கு சொம்பு தூக்குகிறது தினமலர் . அங்கு ராணுவமும் , போலிசும் செய்யும் நாசவேலைகளை தட்டிக்கேட்க துப்பு இல்லை , அங்கு வாழ்வியல் ஆதாரத்தை கெடுக்கும் வேதாந்தா நிறுவனத்தை தட்டிக்கேட்க துப்பு இல்லை , அதற்க்கு எதிராய் மக்கள் போராடினால் தீவிரவாதாமா ?

அந்த டாப் டென் செய்திகளில் அலைக்கற்று ஊழலும் அடக்கம் . ஊடகங்கள் ராஜா தான் இதை செய்தார் என்று கொக்கரிக்கின்றன ? தினமலர் போன்றவர்களுக்கு அந்த ஊழலுக்கு காரணம் டாட்டா என்பது தெரியாது . ஒரு நாட்டின் அமைச்சரை ஒரு தரகு முதலாளி முடிவு செய்கிறார் , அதை கிடப்பில் போட்டுவிட்டு , அமைச்சரை மட்டும் கட்டம் கட்டுவதில் ஊடகங்கள் கவனம் செலுத்துவது ஏன்?

இந்த இரண்டு சம்பவங்களிலும் தினமலரின் நிலைப்பாடு என்ன ? இங்கு வேதாந்தா முதாலாளி காப்பாற்றப்படவேண்டும் அதனால் மக்கள் தீவிரவாதிகள் தண்டகாரண்யாவில் . அதே போல டாட்டா காப்பாற்றப்படவேண்டும் என்பதை போலவே இவர்கள் செய்திகள் உள்ளனர் . மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு போகும் நிலை தான் இந்த தினமலரின் நடுநிலை .

No comments: