நேற்று ஜெயமோகன் தளத்தில் அருந்ததிராய் பற்றிய கட்டுரை படித்தேன் .அருந்ததிராய் ஆழமான படைப்புகள் தந்ததில்லை , இந்தியாவை சிதிலப்படுத்தும் சக்திகளே அருந்ததிராயை தூக்கி பிடிக்கின்றன என்று ஜெயமோகன் சொல்கிறார் . ஜெயமோகனை பொறுத்தவரை இந்தியாவை சிதிலப்படுத்தும் சக்திகள் யார் என்பதை அவர் கட்டுரை படிக்கும்பொழுது புரிந்தது . அதில் சில வரிகள்
"சென்ற பதினைந்தாண்டுகளில் அருந்ததி ராய் மேலைநாடுகளின் பல தரப்புகளால் கொண்டாடப்படுகிறார். அவருக்கு எந்த இந்திய இலக்கியமேதைக்கும் அளிக்கப்படாத அங்கீகாரங்களும் விருதுகளும் அளிக்கப்படுகின்றன. பல்கலைகளில் அவர் பேருரைகள் ஆற்றுகிறார். இந்த பரிசுகளின் பின்புலங்கள் எல்லாமே ஆச்சரியத்துக்குரியவை. உதாரணமாக 2004ல் அருந்ததி ராய்க்கு ’சிட்னி அமைதிப்பரிசு’ வழங்கப்பட்டது, அகிம்சையை பிரச்சாரம்செய்தமைக்காக! அவர் அப்போது நக்சலைட்டுகளையும் காஷ்மீர் ஆயுதப்போராட்டத்தையும் ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்தார்!"
அதாவது அவர் சிதிலப்படுத்தும் என்று சொல்லும் சக்திகள் நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீரில் போராடுபவர்கள் .
சரி நக்சலைட்டுகள் யாருக்காக போராடுகிறார்கள் யார் சார்பாகா நிற்கிறார்கள் , ஜெயமோகன் யார் சார்பாக நிற்கிறார் , அருந்ததிராய் யார் சார்பாக நிற்கிறார் என்பதை இலக்கிய ஆழம், நீளம் , அகலம் , உயரம் , தெரியாத மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும் . ஒரு ராணுவ வீரன் துப்பாக்கியை காண்பிக்கிறான் , ஒரு சிறுவன் கல்லை எடுத்து அவனிடம் காண்பிக்கிறான் , இது எதோ ஒரு படத்தில் வரும் காட்சி அல்ல , காஷ்மீரின் நிலை . அங்கே போராடுபவர்கள் தீவிரவாதிகள் அல்ல , அங்கு உள்ள சாதாரண சாமனிய மக்கள் . அப்போரட்டதிற்க்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உண்மையில் அமைதியை எதிர்ப்பார்பவர்கள் .
உலகமயமாக்கல் காலனிஆதிக்கம் இவை மக்களிடம் செலுத்தும் தாக்கம் கொடூரமானது . அமைதி வேண்டுமென்றால்
கூட போராடவேண்டிய சூழல் , அப்படி போராடும் மக்களுக்கு ஆதரிக்கிறார் அருந்ததிராய், அமைதிக்கான விருது எப்படி அவரட்கு தரலாம் என்று ஜெயமோகன் கதறுகிறார் .
"அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்"
அருந்ததிராய் அதிகாரசக்திகளின் ஐந்தாம்படை என்கிறார் ஜெயமோகன் , அவரை பொறுத்தவரை தண்டகாரண்யாவில் போராடும் மக்கள் அதிகாரவர்க்கம் காஷ்மீரில் போராடும் மக்கள் அதிகாரவர்க்கம் . அவர்களை சுரண்டும் , வாழ்வியல் ஆதாரத்தை கூர்போடும் வேதந்தா நிறுவனம் , இந்திய ராணுவம் இவர்கள்
பாவப்பட்டவர்கள் . இந்தியா ஒருமைப்பாட்டை கெடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அருந்ததி ராய் ஆதரவு அளிக்கிறாராம் . இந்திய ஒருமைப்பாடு என்பது யாதெனில் உழைக்கும் மக்களை விரட்டுவது , நாட்டை வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு விற்ப்பது , நாட்டின் சந்தை ஒரே சந்தையாக இருக்க வேண்டுமே . அதனால்
ஒருமைப்பாடான இந்தியாவை சந்தைக்காக கட்டிக்காப்பது.இந்த ஒருமைப்பாடு கெட்டுவிட்டது என்று ஜெயமோகன் சொல்கிறார்
மக்களுக்காக போராடுவதே இலக்கியப்பணி . இலக்கியம் என்று விட்டத்தை பார்த்து எதோ புரியாமல் சிலர் எழுதிக்கொண்டிருக்க , மக்களுக்கான இலக்கியம் என்பது , மக்களின் சார்பில் நின்று போராடுவது . அதிகாரவர்க்கத்தின் குரலாய் இருப்பது நீங்களா அருந்ததிராயா.
ஜெயமோகன் கட்டுரை
2 comments:
எதிரிக்கு எதிரி நண்பன் என்பது தவறான லாஜிக்,,..
அது இருக்கட்டும்.. ஏன் முன்பு போல அதிகம் எழுவதில்லை? அடிக்கடி எழுதுங்கள்
மணிரத்னத்தின் அடுத்த படத்திற்கு வசனம் எழுத செக்கை வாங்கி போட்டவர்...சினிமா கம்பெனிகளில் போட்ட பொங்கல் செறிக்க ஏதோ ஏதோ உளறித்தள்ளுகிறார்..நண்பா.. விட்டுத்தள்ளுங்கள் அந்த ஆளை...அருந்ததி ராய் களத்தில் இறங்கி போடுகிறார்.. ஜெயமோகனின் களம் எதுவென்று உங்களுக்கு நன்றாக தெரியும்... அவரது வலைத்தளத்தில் ஹிட்ஸ் குறைந்திருக்கும்.. வேறோன்றுமில்லை.. அவரது எழுத்தை சீரியஸாக எடுத்து எதுவும் எழுதி அவருக்கு வெளிச்சம் தேடித்தராதீர்கள்.
Post a Comment