Tuesday, 30 November 2010

நந்தலாலா -ரசிகனுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம்

நந்தலாலா ஒரு மன எழுச்சியான படம் " தமிழில் முதல் திரைப்படம் " என்றெல்லாம் ஒருபக்கம் பாராட்டு மழை .
இன்னொருபுறம் படம் கிகுஜிரோ பார்த்து களவாடப்பட்டு இருக்கிறது என்ற குற்றசாட்டு . நானும் கூட குற்றம் சாட்டினேன் . கிகுஜிரோவை தழுவி எடுத்ததை தவிர மற்ற விடயங்கள் எனக்கு பிடித்து தான் இருந்தது . திரைஅரங்கில் கிகுஜிரோ பற்றி தெரியாத பாமர ரசிகன் ஒவ்வொரு காட்சியையும் ரசிதுக்கொண்டே கைதட்டுகிறான் . இதனிடையில் நேற்று மகள்நேயா என்னும் வலைப்பதிவர் தளத்தில் நந்தலாலா விமர்சனம் படித்தது நந்தலாலா படத்தை விட என்னை பெரிதும் பாதித்தது . எனக்குள் இருக்கும் ரசிகனை கூர்ந்து வாசிக்க தொடங்கினேன் .

ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரும் , ஒரு சிறுவனும் தன் தாயை தேடி செல்கிறார்கள் என்பதே கதையின் அடிநாதம் . சிறுவன் தன் அப்பா ஓடிவிட்டார் என்று நகைச்சுவையாய் சொல்கிறான் , பாஸ்கர் மணி என்ற மனநல பாதிக்கப்பட்டவன் சிரிக்கிறான் அரங்கமே கைதட்டுகிறது . ஆனால் முரணாய் பாஸ்கர் மணி சிறுவனின் அம்மாவை பார்க்கிறான் , அவள் அவள் சூழலை விளக்குகிறாள் , கன்னத்தில் அறைந்துவிட்டு செல்கிறான் , திரை அரங்கம் கைதட்டுகிறது பாஸ்கர் மணியின் வீரத்தையும் பாசத்தையும் மெச்சுகிறது . குழந்தையை தவிக்கவிடும் தந்தையானாலும் , தாயானாலும் தண்டிக்கபடவேண்டியவர்களே , ஆனால் தாயை
அடிக்கும் பாஸ்கர் மணி , தந்தையை குற்றம்சாட்டவில்லை . ஆணாதிக்க சமூகத்தில் வளர்ந்த நம் அனைவரின் மன எழுச்சிக்கு காரணம் இதுவே .

"அம்மா நல்லவ இல்ல " என்று பாஸ்கர் மணி குழந்தையிடம் சொல்கிறான் . "ஆட்டோகிராப் " ரசிதவர்களால் ஒரு பெண் இருவரை மனம்முடிப்பதை போன்ற ஒரு ஸ்டில் வந்த படத்தின் போஸ்டர் கூட ரசிக்க முடியாது . இப்படி பெண்ணிற்கே குடும்ப பொறுப்பு இருக்கிறது , ஆணிற்கு இல்லை என்று படம் சொல்கிறது . அதுவே மன எழுச்சியாக இருக்கிறது படித்த அறிவாளிகளுக்கு . சரி இந்த படம் எப்படி ஜப்பான் நாட்டு சூழலுடன் ஒத்து இருந்தது . ஜப்பானும் இந்தியா போலவே , பெண் அடிமைத்தனம் இருக்கும் நாடு . ஏன் உலக திரைப்படவிழாவில் பல விருதுகள் வாங்கியது என்று யோசிக்கும் பொழுது தமிழில் "தே மகன் " கெட்ட வார்த்தையை போல ஆங்கிலத்தில் "பாஸ்டர்ட் " என்ற வார்த்தை மிக பிரசித்தம் . ஒருவனை திட்டவேண்டும் என்றால் அவன் அம்மாவை திட்டும் பழக்கம் மட்டுமே உள்ளது . இங்கு எந்த ரசிகனிடமும் , சிறுவனிடமும் , பாஸ்கர் மணியிடனும் தந்தையை பற்றி கேள்விகளே இல்லை .

இப்படத்தை உண்மையில் ரசிக்கிறோம் என்றால் நமக்குள் ஆணாதிக்கவாதி உறங்கிக்கிடக்கிறான் . அனைவரும் படிக்கவேண்டிய பதிவு
தாய்மைச் சுமை

9 comments:

பயணமும் எண்ணங்களும் said...

குழந்தையை தவிக்கவிடும் தந்தையானாலும் , தாயானாலும் தண்டிக்கபடவேண்டியவர்களே , ஆனால் தாயை
அடிக்கும் பாஸ்கர் மணி , தந்தையை குற்றம்சாட்டவில்லை . ஆணாதிக்க சமூகத்தில் வளர்ந்த நம் அனைவரின் மன எழுச்சிக்கு காரணம் இதுவே .//


நான் எழுத நினைத்தேன் முந்திவிட்டீர்கள்....

பயணமும் எண்ணங்களும் said...

இங்கு எந்த ரசிகனிடமும் , சிறுவனிடமும் , பாஸ்கர் மணியிடனும் தந்தையை பற்றி கேள்விகளே இல்லை .

இப்படத்தை உண்மையில் ரசிக்கிறோம் என்றால் நமக்குள் ஆணாதிக்கவாதி உறங்கிக்கிடக்கிறான் . அனைவரும் படிக்கவேண்டிய பதிவு//

படம் கமர்ஷியல் வெற்றியடையணும்னா மெஜாரிட்டியாக இருக்கும் ஆணாதிக்கவாதிகளை கவரணும்...


இதே தான் மந்திர புன்னகையிலும்..

என் விமர்சனம் இங்கே..

"மந்திர புன்னகை...பெண்ணை அவமானப்படுத்தும் படம்.. "

http://punnagaithesam.blogspot.com/2010/11/blog-post_27.html

பிரியமுடன் ரமேஷ் said...

சரியாக சிந்தித்துள்ளீர்கள்.. உங்கள் வாதம் உண்மையானதே..

பார்வையாளன் said...

மாற்று பார்வை அருமை

புலவன் புலிகேசி said...

நல்ல பார்வை கார்த்தி..

கொற்றவை said...

//எனக்குள் இருக்கும் ரசிகனை கூர்ந்து வாசிக்க தொடங்கினேன்//
//
நந்தலாலா -ரசிகனுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம்//
- உங்கள் தலைப்பு மிக நன்று..ரசிப்புத்தன்மையை மறுவாசிப்பு செய்யும் உங்கள் அனுகுமுறைக்கு வாழ்த்துக்கள் - நன்றி.

பேசும் திரை said...

'மிளகு போடுற இடம் தெரியாது
ஆனால் கடுகு போடுற இடம் தெரியும்' என்ற பழமொழியையே உங்கள் பதிவு எனக்கு நினைவூட்டுகிறது...

எத்தனையோ கதாபாத்திரங்கள் இருந்தும். அவை எத்தனையோ ஆழமான சமூகப்ப பிம்பங்களை பிரதிபலித்தும். நீங்கள் அந்த கதையில் உள்ள ஒரு இரு நிகழ்வுகளை மட்டும் கருதுவது.....

உங்கள் கருதுக்களில் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை இன்னொரு கோணத்திலும் ஆராயலாம்.

'தந்தையை விட ஒரு பிள்ளைக்கு அன்னையின் விலையும் மதிப்புமே அதிகம். யார் மேல் அதிக பாசமும் ஆசையும் உள்ளதோ அவர்கள் மேல்தான் உரிமையும் கோபமும் வரும்...'

Udayakumar Sree said...

S_ _ of a B_ _ _ _! என்று கூட ஆங்கிலத்தில் ஒரு phrase உண்டு!

ராஜன் said...

உங்களை யாரு அங்கல்லாம் போவ சொன்னான்னு கேக்கலாம்னு தான் நெனச்சேன்! கமெண்டுகளைப் படிச்சேனா! அப்பறம் என்னையவே கேட்டுகிட்டேன் உன்னைய யார்றா கமெண்ட்லாம் படிக்க சொன்னான்னு! முடியல! பீட்டருகளுக்கும் நமக்கும் தான் ஆவறதில்லையே விட்டுத்தள்ளுங்க பாஸ்!