Sunday, 12 December 2010

சச்சினும் நீர்த்துப்போன எதிர்ப்பும்

சச்சின் டெண்டுல்கர் ஒரு மது அருந்தும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருப்பது ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு ஒரு தியாக நிகழ்வாய் சித்தரிக்கப்பட்டது. இந்த விளம்பரகளில் நடிக்காமல் போனதால் அவருக்கு 20 கோடி நட்டமாம் , என்று அவர் தியாக செயலை பார்த்து ஊடகங்கள் மூக்கின் மேல் விரல் வைக்கின்றன . அவர் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் வருகிறார் அதனால் அவரை எதிர்க்கிறேன் (பொதுவுடைமை போல இருக்கும் கருத்து ) ஆனால் அவர் விளையாட்டிற்கு ரசிகன் , பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் அவர் (பொதுவுடைமை நீர்த்து போகும் இடம்) என்கிறார்கள் . அதாவது அவர் நல்லவர் தான் ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தில் நடிப்பதை மட்டும் நிறுத்திவிட்டால் ,அவர் பாரட்டுக்குறியவரே என்று எதிர்ப்பவர்கள் கூட சச்சின் ரசிகனாய் இருக்கிறார்கள் . இது ஏதோ கமல் அன்பே சிவத்தில் சொல்வதை போல , முதலாளித்துவ கோட்பாடு உள்ளவர்களை அன்பால் வெல்ல முடியும் என்ற சிந்தனை போல உள்ளது .

எதிர்ப்பை ஒரு விடயத்தில் மட்டும் காட்டிவிட்டு , மற்றபடி எல்லாம் சரி தான் என்று இவர்களை விட்டு விட முடியுமா . இவர் பெப்சி விளம்பரத்தில் நடிக்கும் சமகாலத்தில் இவர் மாநிலத்தை சேர்ந்த விதர்பா விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனரே தாஜ் ஹோடேலில் குண்டு வெடித்தபொழுது நீலி கண்ணீர் வடித்த சச்சின் , லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பொழுது , ஒரு பக்கம் மட்டையையும் இன்னொரு புறம் பெப்சியையும் தூக்கி வைத்துக்கொண்டிருந்தார் . சச்சின் என்ன அரசியல் வாதியா ? அவர் ஒரு விளையாட்டு வீரர் நல்லவர் , அவர் எல்லாவற்றிக்கும் குரல் கொடுக்க முடியாது என்று நீங்கள் சொல்வது கேட்க்கின்றது . சரி அந்த பெப்சி கோக் நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுரண்டுகிறது , கிராமங்களில் ஆலையை ஏற்ப்படுத்தி விட்டு , வேலை கொடுக்கிறோம் என்று ஏமாற்றி , நிலத்தடி நீரை சுரண்டி , விவசாயத்தையும் வாழ்வியல் ஆதாரத்தையும் கெடுக்கின்றது . அந்த பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத்தில் நடித்து மக்களை முட்டாளாக்கும் சச்சினுக்கு தேவை , போலி கண்டனம் மட்டுமா ?

ஒரு அமைச்சாராக யார் வர வேண்டும் என்று முடிவு செய்வது பன்னாட்டு முதலாளிகளும் , தரகு முதலாளிகளும் ராஜாவின் spectrum விவகாரம் சிறந்த உதாரணம் . அத்தகைய முதாலாளிகள் பக்கம் இருக்கும் சச்சினை விளையாட்டை ரசித்துவிட்டு , வெறும் விளம்பரத்தில் நடிப்பதை மட்டும் விமர்சனம் செய்யும் பக்குவம் எனக்கு இல்லை . உண்மையில் இந்த விமர்சனம் சச்சினுக்கு அல்ல , அவரை ரசிக்கும் ரசிகரின் மனநிலைக்கு .
இங்கு தேவை போலியான எதிர்ப்பு அல்ல , வெறும் போலியான எதிர்ப்பு ஒரு நீர்த்து போன மனநிலை .

4 comments:

பார்வையாளன் said...

தலைவர்களை விட்டு விட்டு, தனி நபர்களை குறை சொல்வது கம்யூனிசம் அல்ல..

அமைப்பை மாற்றினால், தனி நபர்களும் மாறுவார்கள் என்பதே பொதுவுடமை சித்தாந்தம்...

மகா said...

சச்சின் ரசிகர்களாக உள்ள இளைஞர்களை பார்தால் கோபமாக உள்ளது.என் தோழி காலெஜ் ட்ய்ம்ல சச்சினிடம் கையெழுடத்து வாங்கியது நியாபகம் வருகிறது.அவளிடம் இந்த பதிவை படிக்க சொல்ல வேண்டும்

தியாகு said...

தலைவர்களை விட்டுவிட்டல்ல

இந்த சச்சினும் ஒருவித தலைவர்தான்
போலித்தனம் , விளையாட்டை வணிகப்படுத்தி நுகரும் மாயைக்கு தலைவர் இவரை விமர்சிக்காமல் இருப்பது கம்யூனிசமல்ல

KANTHANAAR said...

அவருக்கு கோடிகள் நஷ்டம் என்பதெல்லாம் ஊடக வியாபாரிக்ள் ஊதிப் பெருக்கும் விசயம்... ஏதோ பாலைவனத்தில் நடக்கும் போது எங்கோ கிடைக்கும் சிறு பனித் துளி போன்ற விசயம்தான் இது.. அதை பெரிது படுத்தத் தேவையில்லை என்பது ஊடகங்களுக்கு சொல்வது மட்டுமல்ல உங்களளுக்கும் சேர்த்துத்தான்