Thursday, 13 January 2011

என்ன புத்தகம் வாங்கலாம்

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குமுதம் ,விகடன் படிப்பதில் இருந்து தொடங்கியது. குமதம் விகடனில் கூட
சினிமா சம்பந்தமான செய்திகளே என்னை ஈர்த்தது . எதற்கு படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கக்கூடிய மனநிலை இல்லாமல் இருந்தேன் . பின்பு சிலகாலம் ராஜேஷ்குமார் நாவல்கள் ஈர்த்தது , தமிழ் சினிமாவை போல ஜனரஞ்சகமான ரசனை கொண்ட வாசிப்பு என்று சொல்லலாம் . இலக்கியம் பற்றி பெரிதாய் தெரியாத காலகட்டம் . அப்புறம் வாரமலர் வகையரா கவிதைகள் எழுத படித்தபொழுது என்னை ஈர்த்தது தபு சங்கர் , புத்தகக்கண்காட்சிக்கு போனால் தபுசங்கர் புத்தகங்கள் வாங்காமல் வருவதில்லை . இலக்கியத்துக்கு உண்டான பரிச்சயம் ராம க்ரிஷ்ணணனை வாசித்ததில் இருந்து வந்தது , முதன்முதலாய் படித்த புத்தகம் "துணை எழுத்து " பின்பு "கதா விலாசம் " "விழித்து இருப்பவனின் இரவு " "தேசம்திரி " "உறுபசி " என்று அனைத்து புத்தகங்களையும் வாங்கினேன் . ராம கிருஷ்ணனின் எழுத்தகளில் நடுத்தரவர்க்கத்தை தூண்டக்கூடிய குற்றுணர்ச்சி , சுயபச்சாதாபம் , சமூகத்தில் பங்குகொள்ளாமல் சாட்சியாய் வேடிக்கை பார்த்து (நடுத்தரவர்கத்தின் இயல்பு ) பதிவு செய்வது , தனிமனித துன்பம் , புலம்பல் , விரகத்தி , பழைய வாழ்க்கைக்கு உண்டான ஏக்கம் போன்ற குணாம்சங்கள் இயல்பாய் என்னை ஈர்த்தது . நானும் நடுத்தரவர்கத்தை சேர்ந்தவன் என்பதாலோ அந்த எழுத்து என்னை கட்டிப்போடுவதாய் இருந்தது . ராம கிருஷ்ணனுடன் ஒருநாளாவது பேசவேண்டும் என்றெல்லாம் நினைத்தது உண்டு .

பின்பு இணையத்தில் சாருவின் எழுத்தை படித்த பொழுது , புரட்சிகரமானதாய் இருக்கிறதே என்று நினைத்ததுண்டு.பின்பு சுஜாதா படித்து இளமை துடிப்போடு இருக்கிறதே என்று வியந்தது உண்டு. இப்பொழுது யோசிக்கையில் நான் நடுத்தரவர்க்க விழுமியங்களுடன் இருப்பது தான் இவர்களை ரசிக்க காரணமோ என்று சொல்லத்தோன்றுகிறது . ஒரு வகையில் இணையம் எனக்கு புரட்சிகரமான எழுத்துக்களை அறிமுகம் செய்தது .
சினிமாவை இப்படி கூட விமர்சிக்க முடியுமா என்று என்னை புருவத்தை உயர்த்த வைத்த புத்தகம்
"சினிமா திரை விலகும் பொழுது " .ஏதோ ஒரு புது உலகத்தில் குதித்தை போல மகிழ்ச்சி . இலக்கியம் என்றால்
ஏதோ விட்டத்தை பார்த்து தோன்றுவதை எல்லாம் எழுதுவது என்று நினைத்துக்கொண்ட எனக்கு , இலக்கியம்
என்றால் மக்களை நெருங்கி எழுதுவது மக்களுக்கான பிரச்சனைகளை எழுதுவது போன்றவை புரிந்தது .

இப்பொழுது தான் எப்படி படிக்கவேண்டும் என்ற பக்குவம் வந்துள்ளது என்று நினைக்கிறேன் . இந்த
புத்தககண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

1 "உலகை குலுக்கிய பத்து நாட்கள்" - jhon read ரஷ்ய புரட்சியை திரைப்படம் போல பதிவு செய்த புத்தகம்
லெனின் இந்த புத்தகத்தை பரிந்துரைக்கிறார் .
2 "விடுதலை போரின் வீர மரபு " கீழை காற்று வெளியீடு , நாம் படித்த வரலாற்றிலே காந்தி தான் விடுதலை வாங்கி தந்தார்
என்று படித்து இருப்போம் , ஆனால் இந்த புத்தகம் உண்மையான விடுதலை வீரர்களை பதிவு செய்கிறது , எளிமையான நடை
ஆழமான பார்வை .
3 வினவு வெளியிட்ட சினிமா சம்பந்தமான புத்தகம், கண்டிப்பாய் படிக்க வேண்டியது நாம் எல்லாருமே சினிமா பார்க்கிறோம்
அதை எதனால் ரசிக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் , மக்களின் இயக்கத்தை , உலக அரசியலை பார்க்கும் பார்வைக்கு ஒரு
ஆரம்பமாய் இருக்கும் ,நானும் "சினிமா திரை விலகும் பொழுது " புத்தகம் படித்து தான் கொஞ்சம் பக்குவம் அடைந்தேன் பார்வையில் என்பதால்
இதை கண்டிப்பாய் நாம் வாங்க வேண்டும் இது நமக்கு தெரிந்த உலகம் .
4 "உலகாயுதம் " , இந்தியாவில் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே அதை போலவே யோசித்த "பொருள்முதவாதிகளை" பற்றிய நூல் .
5 ரெட் சன் , நக்சல் ஏரியா பற்றிய நூல் .
6 "மார்க்ஸ் முதல் மா சே துங் வரை " நூல் .
7 "அரசியல் எனக்கு பிடிக்கும் " சா தமிழ் செல்வன் எழுதிய நூல் சிறு நூல் தான் கண்டிப்பாய் அரசியல் அனுபவம் கிடைக்கும் நூல்
CPI அதனுடைய சமரசபோக்கு இருந்தாலும் நல்ல அறிமுகம்
8 இந்திய வரலாறில் இளைங்கர்களின் பங்கு
9 நான் ஏன் நாத்திகனானேன் பகத் சிங்க்
10 பின்பு மாஸ்கோ வெளியீடுகள் அனைத்தும் .

படிப்பது என்பது வேலைக்காய் இருக்கவேண்டும் , படிப்பு நம்மை பின்னோக்கி இழுக்காமல் , முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும் அதனால் இந்த நூற்களை பரிந்துரை செய்கிறேன் . பொதுவுடைமை நூல்கள் புரியாமல் இருக்கும் என்ற விமர்சனம் உண்டு , நானும் வாரமலர் படித்தவன் தான் . முன்பெல்லாம் எனக்கும் அது புரிந்ததில்லை . நான் மெட்ரிக் பள்ளியில் படித்தவன் , என் அக்காவின் தமிழ் மீடிய அறிவியல் சொற்கள் எனக்கு பரிச்சியம் அல்ல . பொருளாதாரம் படிப்பவனுக்கு JAVA புத்தகம் புரியாது ஆங்கிலம் தெரிந்து இருந்தாலும் , அதனால் நாம்
தான் முயன்று விவாதித்து கற்க வேண்டும் ,இதை ஏன் கற்க வேண்டும் என்று சொன்னால் பொதுவுடைமை மட்டுமே மார்க்சிய பார்வை மட்டுமே வாழ்க்கைக்கு நெருக்கமானதாய் உள்ளது .

பின் குறிப்பு :
கீழை காற்றி தோழர் மருதையனின் உரை cd கிடைக்கிறது ஏன் படிக்க வேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்று
அது கண்டிப்பாய் வாங்க வேண்டியது

4 comments:

Gopi Ramamoorthy said...

பகிர்விற்கு நன்றி

Madumitha said...

புதிய வருடத்தைப்
புத்தகங்களிலிருந்து
ஆரம்பித்திருக்கிறீர்கள்.
நன்று.
தொடருங்கள்.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பகிர்விற்கு நன்றி

செல்வராஜா மதுரகன் said...

எப்போதாவது மரபு இலக்கியங்கள் படித்த அனுபவம் உண்டா....