Thursday 27 January 2011

ஜெயமோகனின் மார்க்ஸிய பார்வை

தோழர் மருதையனை பற்றி ஜெயமோகனின் தளத்தில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது . ஒரு கருத்தை எப்படி எல்லாம் திரித்து பேசலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாய் கட்டுரை இருக்கிறது . ஜெயமோகன் தோழரின் மேல் வைத்த முதல் குற்றச்சாட்டு தோழர் பழைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில் இருக்கிறார் என்று அதை சரியா தவறா என்று இக்கட்டுரைகளை
வைத்து ஆராய்ந்து பார்ப்போம் . முதலில் ஜெயமோகன் என்ன சொல்கிறார்
"ஆனால் மருதையனுக்கு எல்லா மாற்றங்களும் அழிவுகள்தான். கம்ப்யூட்டர் அழிவுசக்தி என்றால் காகிதம் மட்டும் முற்போக்கு சக்தியா? இணையம் பார்க்கும் தலைமுறை சோளப்பொரி என்றால் செய்தித்தாள் பார்த்த தலைமுறை அதற்கு முந்தைய தலைமுறைக்கு என்ன? காலமாற்றமெல்லாம் தீங்கு என்றால் பின்னால்சென்று நிலப்பிரபுத்துவத்துக்கா செல்லப்போகிறார்?"
மருதையன் எல்லா மாற்றங்களுமே அழிவுப்பாதையில் இருக்கிறது என்று சொல்வது போல விடயத்தை திரித்து கூறுகிறார் , ஆனால் அந்த கட்டுரையிலேயே தோழரின் பதில் என்பதை படிக்காமல் விட்டாரா ? இல்லை அவர் சொல்ல வரும் கருத்துக்கு முரண்பாடாய் இருக்கிறது என்பதை விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை, மருதையனின் உரையிலேயே ஒரு வரி உண்டு .
"இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன."
நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிடப்பட்டு நம் மேல் பிரயோகம் செய்யப்படுகிறது , இந்த வரிகளை நாம் கவனிக்க வேண்டும் , உதாரணமாய் வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள் வன்முறையாளர்களாய் வளர்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் , வீடியோ கேம் வந்து விட்டதே அது வளர்ச்சி தானே என்று சொல்கிறார் ஜெயமோகன் , அவர் அதில் சிதைந்து போனது என்ன என்ற சிதைவை பார்ப்பது இல்லை . ஊடகங்கள் ராஜா விடயத்திலும் , ஈழ பிரச்சனையிலும் எப்படி நடந்துகொண்டன . வெறும் TV மட்டும்
பார்ப்பவன் ராசா ஊழல் செய்தான் என்று சொல்வானே தவிர ,டாட்டா ஊழல் செய்கிறார் , இது முதலாளிக்குண்டான அரசு என்பது அவனுக்கு புரியாது அந்த வரலாற்று பார்வை இல்லாதவராய் அவனை உருவாக்குகிறது என்பது தானே எதார்த்தம் . இங்கு TV என்ற தொழில்நுட்பத்தை விமர்சனம் செய்ய வில்லை , அது எப்படி பிரயோகம் செய்யப்படுகிறது என்பதே விமர்சனம் .

"முதலாளித்துவம் தொழிலாளியை சுயநலம் மிக்கவனாக ஆக்கியிருக்கிறது. தனிப்பட்ட பொருளியல் கனவுகள் கொண்டவனாக. உழைப்பில் இன்பம் காணாதவனாக, படைப்பதன் நிறைவை அறியாதவனாக ஆக்குகிறது. ஆகவே பொருளீட்டுவதும் கேளிக்கையில் ஈடுபடுவதும் மட்டுமே அவனது ஆர்வமாக உள்ளது. ஆகவே சுயநலம் கருதி பேரம்பேசுவதற்கல்லாமல் வேறெதற்கும் அவன் திரளமுடியாதவனாக ஆகிறான். இதுவே அவனுடைய சிக்கல்." இது ஜெயமோகனின் வரிகள் , இதிலேயே வளர்ச்சி எப்படி பிரயோகம் செய்யப்படுகிறது என்று அவரே ஒத்துக்கொள்கிறார் . பொருளீட்டுவதும் கேளிக்கையில் ஈடுபடுவதும் மட்டுமே அவனது ஆர்வமாக உள்ளது என்ற வரிகள் என்ன சொல்கின்றன , அவனை ஒன்று திரளவிடமால்
செய்கின்றன . எப்படி கேளிக்கையில் ஈடுபடுகிறான் இப்பொழுது விதார்பா விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் , ஊடகங்கள் அவற்றை காட்டினால் தொழிலாளி அதை பார்த்து இது சரி அது தவறு என்று ஆராய்ச்சி செய்வான் , ஆனால் ஊடகங்கள் IPL காட்டும் பொழுது அவனால் கேளிக்கையிலே மட்டுமே ஈடுபட முடியும் , இதை தான் தோழர் மனிதர்களை எந்திரங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் . தொழில்நுட்பம் தவறாய் பிரயோகம் செய்யப்படுகிறது என்கிறார் . இப்படி மக்களை மந்தநிலையிலேயே வைத்து
இருப்பது எதை குறிக்கும் அவனை அணி திரளாமல் , ஒரு கருத்துக்களை கூட உருவாக்க முடியாமல் ஜடப்பொருளாய் உருவாக்கும் .

"நான் அந்த சிறு குறிப்பிலேயே சுட்டிக்காட்டியபடி மார்க்ஸியநோக்கில் வரலாற்றின் மாற்றம் என்பது வளர்சிதை மாற்றம்தான். வளர்ச்சியும் கூடவே சிதைவும் இருக்கும். அந்த வளர்ச்சி என்பது முரண்படும் பொருளியல்சக்திகளின் விளைவாக உருவாகும் முன்னகர்வு மட்டும்தான், ஒருபோதும் பின்னகர்வு அல்ல." இதுவும் ஜெயமோகனின் பொன்மொழி தான் .அவர் மார்க்ஸியத்தை எப்படி பார்க்கிறார் ஒரு வரட்டுவாதமாய் பார்க்கிறார் . அவர் வரிகலேயே எடுத்துக்கொண்டு ரஷ்யாவை பார்த்தோமானால் , ரஷ்ய ஒரு சோசியலிச நாடாய் இருந்தது முன்னகர்வு என்று வைத்துக்கொண்டால் , அங்கு அடுத்தக்கட்டமான பொதுஉடைமை சமுதயாமாக ஆகி இருக்கவேண்டும் , ஏன் பின்நோக்கி நகர்ந்து சமூக ஏகதிப்பத்திய நாடாய் , முதலாளித்துவ நாடாய் மாறியது . ஏன் இன்று சீனாவும் கூட முதாலாளித்துவ நாடாய் தானே இருக்கிறது அது பின்நோக்கி நகர்வது தானே .

ஜெயமோகன் சொல்வதை பார்த்தால் சமூகமே முன்நோக்கி தான் நகர்ந்து கொண்டிருக்கிறது , எதற்கு புரட்சி
எல்லாம் என்று சொல்கிறார் . எந்த ஒரு விமர்சனமும் தேவை இல்லை சமூகமே முன்நோக்கி தானே நகர்கிறது என்கிறார் . அதவாது ஒரு machine போல அதுவாக முதலாளித்துவத்தில் இருந்து சோசியலிசம் சமூகத்திற்கு நடந்து விடும் என்று கற்பனை செய்கிறார் . அது எப்படி முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யாமல் , அதனுடம் போரடமால் மாறி விடும் . மாறும் என்பது உண்மை தான் ஆனால் மனித உழைப்பு இல்லாமல் , மக்கள் திரள் இல்லாமல் மாற்ற முடியுமா . அந்த மக்கள் திரள் வேண்டுமென்றால் , மக்களை அணிதிரட்ட வேண்டுமென்றால் , படிக்கவேண்டும் உழைக்கும் மக்களை ஒன்று திரட்ட வேலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார் தோழர் இதில் என்ன தவறு உண்டு .

முதலாளித்துவத்தை விமர்சனம் செய்வது , பின்நோக்கி போக அல்ல முன்நோக்கி போகவே , ஆனால் அது பின்நோக்கி போவதற்கு வழி செய்கிறது என்று ஜெமோ விமர்சனம் செய்கிறார் . சரி அதற்க்கு அவர் உதரணமாய் ஒரு சீனா திரைப்படத்தை எடுத்துக்கொள்கிறார் , நம் இந்தியாவை பற்றி படிப்பதற்கு பாம்பே அல்லது உன்னைப்போல் ஒருவன் படம் பார்த்தால் ஒரு முஸ்லிம் என்பவன் தீவிரவாதி என்று ஒரு வெளிநாட்டவன் புரிந்து கொண்டால் எப்படி இருக்குமோ , அந்த பொதுபுத்தி ஜெயமோகனிடம் உள்ளது .

ஜெயமோகன் சொல்லும் முன்னகர்வு தானாக நிகழாது . மக்கள் சக்தி இருதால் கூட அதை பிரயோகம் செய்யாமல் தானாக நகராது . மின்ர்சாரம் இருக்கிறது என்பதற்காய் சுவிட்ச் போடாமல் பேன் ஓடவேண்டும் என்றால் எப்படி இருக்குமோ அதை போல உள்ளது . விமர்சனம் செய்வது பின்னுக்கு இழுப்பது அல்ல , முன்னோக்கி போகவே . தோழர் மருதையன் சொல்வது போல முதாலாளித்துவ எழுத்தாளர்களை படிக்கவேண்டும் என்பது ஜெயமோகன் கட்டுரையில் இருந்து தெரிந்து கொள்ளலாம் . விடயத்தை எவ்வளவு அழகாய் திரித்துக்கூறும் ஆற்றல் அவரிடம் உள்ளது .
http://www.jeyamohan.in/?p=11852
http://www.vinavu.com/2010/12/29/on-reading/

No comments: