Monday, 24 January 2011
ஆடுகளமும் கதைக்களமும்
மண்ணை பற்றிய படங்கள் வரும் பொழுது சிலாகிக்கபடுகின்றன , மண்ணின் மொழிகள் படங்களில் பிரயோகிக்க படுகின்றன, அதை ரசிகன் வெகுவாக ரசிக்கிறான் . ஆனால் இத்தகைய படங்கள் மண்ணை இயல்பாய்தான் பிரதிபலிக்கின்றனவா ? ஆடுகளம் பார்த்தேன் , பார்ப்பதற்கு முன்பு படம் இயல்பாய் இருக்கிறது என்று ஒரு சாரார் விமர்சனம் , படம் நன்றாய் இல்லை என்று மற்றொரு விமர்சனம் . இருந்தாலும் பாலு மகேந்திரா சீடர் ஏமாற்றமாட்டார் , என் ஊர் மதுரை பற்றிய படம் , அதுவும் எங்கள் ஏரியா திருப்பரகுன்றம் பதிவு செய்யப்பட்ட படம் , படத்தில் வரும் இரு பாடல்கள் "யாத்தே யாத்தே " , "ஒத்த சொல்லால" இரண்டு பாடல்களுமே ஒரு பாமர ரசிகனாய் என்னை சுண்டி இழுக்கத்தான் செய்தது , அதனால் எதிர்ப்பார்ப்புகள் எகிறிக்கொண்டே போனது .
சரி என்னதான் உள்ளது படத்தில் என்று பார்த்தால் மூன்று விடயங்கள் , ஒன்று சேவல்சண்டை , இரண்டாவது காதல் , மூன்றாவது பொறாமை . முதலில் சேவல் சண்டையை எடுத்துக்கொள்வோம் , மதுரையில் ஜல்லிக்கட்டு போல சேவல் சண்டை ஒன்றும் அவ்வளவு பெரிய விடயம் அல்ல . இதை போல பெரிய tournament எல்லாம் நடப்பது இல்லை , அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆங்காங்கே நடக்கும் என்று கேள்விப்பட்டது உண்டு . மண்ணும் மண் சார்ந்த இடங்களை பதிவு செய்யும் பொழுது ஒரு நேர்மை வேண்டும் ,உதாரணமாய்
பூ படத்தில் தீப்பட்டி தொழிற்சாலை காட்டப்படும் , அங்கு இருக்கும் வேலை அது , இயல்பாய் பதிவு செய்யப்பட்டு இருக்கும் . அந்த குறைந்தபட்ச நேர்மை கூட படத்தில் இல்லை . வழக்கமாய் ஒரு ஹீரோ வில்லன் மோதும் பொழுது ஒரு பரபரப்பு இருக்கும் வணிக சினிமாவில் , இங்கே இரு சேவல்களை மோதவிடும் பொழுது , அந்த ஹீரோயிசம் சேவலின் வடிவில் வந்ததில் மக்கள் ரசிக்கின்றனர் . அது வெறும் கிரிக்கெட்டில்
வரும் கடைசி ஓவர் பார்க்கும் மனோபாவமே . வெறும் மதுரை தமிழ் பேசிவிட்டால் மண் சார்ந்த பதிவு ஆகிவிடுமா?
அந்த சேவல்சண்டை என்னும் வடிவத்தை "ஏழு தலைமுறைகள்" என்னும் புதினத்தில் இருந்து எடுத்து இருக்கிறாராம் . படம் முடிந்த பின் வரும் டைட்டில் கார்டில் போடுகிறார்கள் . அந்த புதினத்தை எழுதிய அலெக்ஸ் ஹைலி இந்த படத்தை பார்த்தால் அழுதிருப்பார்? அதன் சாராம்சம் என்ன என்று புரியாமலேயே படித்து இருக்கிறார் , வெற்றிமாறன் .அலெக்ஸ் ஹைலி அவரது பூர்வீகம் மற்றும் தன் மூதாதையர்களை பற்றி அறியும் புதினமே "ஏழு தலைமுறைகள் " .அவரது மூதாதையர் ஆப்ரிக்காவை சேர்ந்த காம்பியா என்னும் இடத்தில இருந்து அடிமைகளாக , அமெரிக்கா வளர வேலை செய்ய கொண்டுவரப்பட்ட கருப்பர்கள் , இப்படி பல தலைமுறைகளாக வர்கப்போரட்டத்தின் கதை "ஏழு தலைமுறைகள் "அதில் ஒரு தலைமுறையின் வரும் ஒரு கதாப்பாத்திரம் "கோழி " ஜார்ஜ் , அந்த களம் ஆண்டாங்களுக்கும் , அடிமைகளுக்குமான களம் ."கோழி" ஜார்ஜ் அடிமை , கோழி வளர்ப்பதிலும் , சண்டைக்கு கோழிகளை தயார் செய்வதிலும் வல்லவன் , அங்கு அவன் தன் எஜமானனுக்காக கோழி சந்தையில் ஜெயித்து தன் குடும்பத்தை விடுதலை அடைய பாடுபடுகிறான் . இது உண்மையிலேயே அலெக்ஸ் ஹைலி அவுடைய கதை , அந்த ஊரில் அக்காலக்கட்டத்தில் உண்மையிலேயே கோழி சண்டை விமர்சையாக ஒரு திருவிழா போல கொண்டாடப்படும் . அக்கதையின் சாரம்சமே தெரியாமல் , வர்கப்போரட்டதை மலிவான முறையில் காட்சிகளை மட்டும் எடுத்து இழிவுபடுத்தி உள்ளார் வெற்றிமாறன் . வர்கப்போரட்டத்தை வெறும் குருவின் பொறமையாக எளிமை படுத்தி கேவலப்படுத்தி உள்ளார் . கதையை எங்கு உருவி அதை நம் மண்ணிற்கு செட் செய்து அதையும் ஒழுங்காக செய்யவில்லை .
அலெக்ஸ் ஹைலி ஆடுகிற ஆடுகளம் "வர்க்கப்போராட்டம் " ரத்தமும் சதையுமான கதை , வெற்றிமாறனின் ஆடுகளம் அதை "பொறாமை " . அலெக்ஸ் ஹைலேயின் பார்வை ஒரு சமூகத்திற்கான விடுதலை , இதில் காட்டப்படும் பார்வை தனிமனித இலக்கியங்கள் சினிமாக்கள் காட்டும் தனிமனித பொறாமை, துரோகம் காதல் , தனிமனித பார்வை .
சரி காதலை தான் ஒழுங்காக சொன்னாரா , எப்படி ஒரு ஆங்கிலோ இந்திய பெண் , ஒரு வேலை வெட்டி இல்லதா
சேவல் சண்டை போடுபவனை காதலிப்பாள். இது யதார்த்த பதிவா . காதல் வர்க்க சார்போடு இருக்கும் காலகட்டத்தில் இது சாத்தியமா .வணிக ரீதியான அஜித் விஜய் படங்களில் ரசிகர்களுக்கே தெரியும் , அக்கதை உண்மையில் சாத்தியம் இல்லை என்று . ஆனால் இதைபோல காலத்தை பதிவு செய்யும் படங்கள் நேர்த்தியாய் பதிவு செய்யப்பட வேண்டாமா ? "வெள்ளாவி வெச்சுத்தா வெளுத்தைன்களா , இல்லை வெயிலே படமா வளத்தைன்களா " , அதாவது வெள்ளையான பெண்களை மட்டுமே காதலிக்க வேண்டும் , வெள்ளை மட்டுமே என்று வணிக சினிமாவில் ஊறிப்போன பொதுபுத்தி பிரதிபலிக்கிறது . மதுரையாக இருந்தாலும் கதாநாயகி வெள்ளையாக தான் இருக்க வேண்டும் , இப்படி சொன்னால் இடிக்குமே அதனால் நேர்த்தியாக கதாநாயகியை ஆங்கிலோ இந்தியனாய் ஆக்கிவிட்டார் இயக்குனர் , ஏன் ஒரு கருப்பாக தனுஷ் வீட்டு பக்கத்து வீட்டு பெண்ணாக போட்டிருக்கலாமே . தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகள் கருப்பாய் இருக்கவே முடியாது ,
வெள்ளை என்பது அழகு என்ற கருத்து பார்ப்பனீயத்தின் மீட்சி , ஏன் திராவிடம் பேசும் தமிழ் தொலைக்காட்சிகள் கூட வெள்ளை தொகுப்பாளினியை தான் சேர்க்கிறார்கள் . அப்படி இருக்க வெற்றிமாறன் மட்டும் விதிவிலக்கா .
மதுரை பற்றி பதிவு செய்யப்படவேண்டிய எத்தனையோ கதைகள் இருக்கிறது . இட்லிக்கடை ஆயா கதைகள் , கந்துவட்டிக்காரர்கள் , மூடப்படும் மில் தொழிற்சாலைகள் . நகரமயமாக்களால் வீடுகளாகும் விலைநிலங்கள் . நீர்த்தேக்கங்கள் எல்லாம் ஆக்க்ரமிப்புகள் . டிரைவர்கலாகும் விவசாயிகள் . சரியான வேலை இல்லாதாதால் சென்னைக்கு புலம்பெயர்பவர்கள் என்று பதிவு செய்யப்படவேண்டிய எவ்வளவோ இருக்கும்பொழுது , இது ஒரு ஆழமில்லாத பதிவாகவே இருக்கிறது .
படத்தை படமாய் பார்க்கவேண்டும் என்று சொல்பவர்கள் கலையை கலையாய் பார்க்கவேண்டும் என்று பூடகமாய்
சொல்கிறார்கள் . அந்த கலையின் வடிவால் நாம் மூளைச்சலவை செய்யப்படும் பொழுது கண்டிப்பாய் விமர்சனம் வேண்டும் . விஜய் அஜித் படங்கள் மூளை சலவை செய்வதில்லை , ஆனால் தரமான படங்கள் என்று சொல்லிக்கொள்பவை கண்டிப்பாய் விமர்சனம் செயப்படவேண்டும் . மனித சமுதாயமே தன்னை விமர்சனம் செய்து கொண்டு தான் வளர்ந்து இருக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
லூஸ்ல விடுங்க...இயல்பா எடுத்தா அதன் பெயர் திரைப்படமே இல்லை...டாகுமெண்டரி.
உங்கள் விமர்சனத்தில் படம் கம்யூனிசம் பேசவில்லையே என்கிற ஆதங்கம்தான் தெரிகிறது.வெள்ளாவி வச்சி வெளுத்தாகலா என்ற பாடலில் கூட உங்கள் மன குறுகுறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலிப்பவன் அப்படித்தான் பாடுவான்.இதை கூட உங்கள் மனதில் இருக்கும் சாதி கண்ணாடி போட்டு பார்த்தால் என்ன செய்வது.
//மதுரையாக இருந்தாலும் கதாநாயகி வெள்ளையாக தான் இருக்க வேண்டும்
நீங்கள் மதுரைதானே. அங்கே ஆங்கிலோ இந்திய பெண்களையோ, சவுராஷ்ட்ர பெண்களையோ பார்த்ததில்லையா?
மதுரையில் பதிவு செய்யப்பட வேண்டிய கதைகள் எவ்வளவோ இருக்கிறது. உண்மைதான். இதை அவர் பதிவு செய்யக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார். மதுரை நகரின் அத்தாரிட்டியா?
உங்களை பொறுத்தவரை தனிமனித பார்வை தவறு. அது உங்கள் கருத்து. எங்களை பொருத்தவரை எல்லா தவறுகளுமே தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்பதால் அது சமூகத்துக்கே ஆகாத விஷயம் என்று பேசுவது முட்டாள்தனமானது.
திரும்பவும் சொல்கிறேன் நாங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறோம், எங்களுக்கு திராவிடம், ஆரியம், பார்பனீயம் எல்லாவற்றையும் கற்றுத்தருவது நீங்கள்தான்.
நீங்கள்தான் இந்த சித்தாந்ததால் அரை குறையாக மூளைசலவை செய்யப்பட்டதைப்போல எழுதி இருக்கிறீர்கள்.
உங்களுக்கு சன்பிக்சர்ஸ் மீது கோபம் என்றால் நேரடியாக தீட்டி பதிவிடுங்கள். நான் மட்டுமே ஊரில் நியாயம் பேச வேண்டும். அல்லது நான் பேசுவதுதான் நியாயம் என்ற வினவுதனமான எண்ணத்தை விடுங்கள். இந்த கருத்துக்களை உங்களுக்குத்தான் எழுதுகிறேன். நீங்கள் வெளியீடாவிட்டாலும் கவலை இல்லை.
// "வெள்ளாவி வெச்சுத்தா வெளுத்தைன்களா , இல்லை வெயிலே படமா வளத்தைன்களா " , அதாவது வெள்ளையான பெண்களை மட்டுமே காதலிக்க வேண்டும் , வெள்ளை மட்டுமே என்று வணிக சினிமாவில் ஊறிப்போன பொதுபுத்தி பிரதிபலிக்கிறது //
ஏதோ திட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள் என்பது பல இடங்களில் தெரிகிறது...
follow up...
கார்த்திக், ரொம்ப நாள் கழிச்சி மறுபடியும் உங்களை buzz ல பிரபலப்படுத்தலாம்ன்னு படிக்க வந்தேன். முதல் பத்தி படிச்சவுடன, வேற ஏதோ பதிவு வந்துட்டோம்ன்னு ஒரு சந்தேகம் !
ஏன்யா ! இவன் இத இப்படி செஞ்சி இருக்கலாம். அப்படி செஞ்சி இருக்கலாம்ன்னு எழுதறவன் "வர்க்கம்" அப்படிங்கற வார்த்தைக்கு கூட சரியான ஸ்பெல்லிங் கொடுக்க முடியாதா ? :-) அதுவும் உங்க trademark வார்த்தை வேற.
Post a Comment