Friday, 2 July 2010

உலக (மய ) நாயகன்















கமலஹாசன் ஐம்பது வருடங்களாய் திரைத்துறையில் இருக்கிறார் , அதை பாராட்டும் விதமாய் அவர் படங்களை திரையிட்டுள்ளனர் புது டெல்லியில் .இது அரசு விழாவாம், அரசு ஏன் ஒரு சினிமா வணிகனுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் . அவர் சினிமாவை வணிகமாய் நினைத்து தானே சம்பாதித்தார் , அதற்க்கு விழாவாம் , அதற்க்கு நாம் கொடுக்கும் வரிப்பணத்தை தானே செலவு செய்திருப்பார்கள் . சினிமா என்பத கலை வடிவம் என்று சொல்வதை விட அது ஒரு மிகப்பெரிய வணிகம் பிசினஸ் கமலஹாசனே இதை ஒற்றுக்கொல்வார் , ஒருவர் வணிகத்தில் இருந்தார் என்பதற்காய் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பாராட்டு விழாவா ????? சரி அங்கே சில படங்களை திரையிட்டுள்ளனர் . "ஹே ராம் " , " தசவதாரம்" , "தேவர் மகன் " "விருமாண்டி" "நாயகன் " "அன்பே சிவம் " . இந்த படங்களின் அணிவகுப்பை பார்க்கும் பொழுது தான் ஏன் அரசு இந்த விழாவை நடத்துகின்றது என்று தெரிகிறது .

ஹே ராம் ஹிந்து வெறியை தூண்டும் படம் என்பது படத்தை பார்த்தாலே புரியும் . "தேவர் மகன் " பழைய நில பிரபுத்துவத்தை ஆதரிக்கும் படம் . ஒரு ஊர் தலைவர் இருப்பார் , அவர் வரும் பொழுது எல்லாரும் எழுவார்கள் . எல்லாரும் கையை கட்டிக்கொண்டு நிற்ப்பார்கள் அவர் முன்பு , போன்ற நில பிரபுத்துவ கருத்துக்களை மனதில் ஆழ விதைத்து அதன் பிம்பத்தை உயர்த்தி பிடித்த படம் தேவர் மகன் . சரி "அவ்வை சண்முகி " பார்ப்பன கலாச்சாரத்தை காட்டிய படம் . "தசவதாரம் " மீண்டும் அதே கதை தான் , பத்து அவதாரங்களை , ஹிந்து மதத்தின் ஆணி வேரை அந்த ஆணியை இன்னும் ஆழமாய் அடிக்க கமல் எடுத்த படைப்பு "தசவதாரம் ". கமல் எப்பொழுதும்
நாத்திகம் பேசுவார் ஆனால் ஆழமாய் தன் கருத்துகளை மறைமுகமாய் வைத்துவிட்டு போவார் .

உதாரணமாய் "தசாவதாரத்தில்" கடைசி காட்சி " கடவுள் இருந்திருந்தால் நல்லா இருக்கும் " என்று அசினுடன் பேசிக்கொண்டிருப்பார் . அப்பொழுது கேமரா wide ஆங்கிலிலே விரியும் அப்பொழுது அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் , எதற்கு பக்கத்தில் இருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் அந்த சாமி சிலை பின்பு நின்று கொண்டு நாத்திகம் பேசிக்கொண்டிருப்பார் பின்னணியில் "கல்லை மட்டும் கண்டால் " பாடலின் பின்னணி இசை ஒலிக்கும் . என்ன சொல்ல வருகிறார் இங்கே , நாத்திகன் கடுவலை பார்க்காமல் பேசிக்கொண்டிருப்பதை SYMBOLIC SHOT போல காட்டுகிறாரா ???? யாரும் கமல் பார்பனர் அதனால் நான் திட்டுகிறேன் என்று சொல்லவேண்டாம் .....அவரை விமர்சனம் செய்யவில்லை அந்த படைப்பில் என்ன சொல்கிறார் .


அன்பே சிவம் படத்தில் மாதவன் முதலாளித்துவத்தின் குறியீடாய் வருவார் , கமல் communism குறியீடாய் வருவார், ஆனால் அவர்களையும் அன்பால் வென்றுவிடலாம் , வலிக்காமல் புரியவைக்கலாம் என்ற நீர்த்து போன கருத்தை சொல்வார் . சரி முதலாளித்துவம் எத்தனை கொடூரமாய் உள்ளது போபால் விஷவாயு விடயம் என்ன ஆயிற்று , பிளாச்சிமடா என்னும் ஊர் நிர்மூலமானதே , முதலாளித்துவ கோரத்தால் . சரி தண்டகாரண்யா இடத்தை வளைக்கவேண்டும் என்று பார்க்கிறதே வேதந்தா , பழங்குடி மக்களை விரட்ட பார்க்கிறார்களே , அவர்களை அன்பாய் சொல்லி கேட்க்க வைக்க முடியும் . அன்பால் புரிய வைக்க முடியும் என்கிறார் கமல் . அன்பால் சொன்னால் வேதாந்தா நிறுவனம் தண்டகாரன்யாவை விட்டு விடுமா . இந்த அன்பு புரட்சி ஏற்ப்படாமல் நீர்த்து போகசெய்யும் அன்பு ,பொங்கி எழுகிறவனை கோபப்படாதே அன்பாய் சொன்னாலே கேட்டுக்கொள்வான் என்று சொல்லி நீர்த்து போக செய்யும் வேலையை பார்ப்பது. கமல் அன்பே சிவத்தில் ஏற்றிக்கும் பாத்திரத்திற்கு பெயர் தான் போலி Communism .


உலகமயமாதல் என்ன சொல்லிருக்கிறது தெரியுமா சீனாவில் . சீனா மக்கள் உயிர் வாழும் நாட்கள் சராசரி ஆயுள் காலம் மற்றவர்களை விட இரண்டு வருடம் கூட . இந்த நிலையில் உலக வங்கி சீனாவிற்கு விசேட கடன் ஒன்றை வழங்கி உள்ளது , அந்த மக்களின் ஆயுளை குறைக்கும் வழிக்காட்டும் நிபந்தனையுடன் அந்த கடன் வழங்க பட்டுள்ளது . அதாவது ஆயுளை குறைக்க வேண்டும் என்றால் என்ன உணவு உட்க்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை திணித்து நிபந்தனையுடன் கடன் வழங்கி உள்ளது . ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ வேண்டும் என்பதை முதலாளித்துவமும் , உலகமயமாதலும் நிர்ணயம் செய்கிறது,ஏழை உயிர்களுடன் விளயடுக்கிறது அவர்களிடம் அன்பாய் இருக்க சொல்கிறார் கமல் .


1992 ஆம் ஆண்டில் lawrence summers என்பவர் உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார் .அவர் உலக வங்கியின் ஊழியர்க்களுக்கு வழிக்கட்டுவதர்க்காய் ஒரு கடிதம் எழுதினார் . அதில் மாசு உள்ள தொழிற்சாலைகளை ஏன் மூன்றாம் உலக நாட்டிற்கு மாற்றக்கூடாது என்பதே அதன் சாராம்சம் . அந்த கடிதத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் .

1 மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்ப்படும்

2 மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்ப்பட்டுள்ளது . இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறந்தது .
ஏன் என்றால் அங்கு வீசும் காற்று los angels கற்றை விட சிறந்தது (திமிரை பார்த்தீர்களா )

3 ஏழைகள் ஏழைகள் தான் ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு சாத்தியம் இல்லை . ஐந்து வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளின் மரணம் 200 சதவிகிதமாய் இருக்கும் போது மார்பு புற்றுநோய்க்கு ரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டார்கள் .

(நன்றி புத்தகம் "உலகமயமாதல்" ரயாகரன் )


போபாலில் என்ன நடந்தது , உயிர் கூட மயிர் என்று சொல்லும் உலகமயமாக்கலை அன்பால் திருத்திவிடலாம் என்று புரட்சி ஏற்ப்படாமல் இருக்க நீர்த்து போகும் கொள்கையை செயக்கிறார் கமல் . இந்தியா நில பிரபுத்துவமும் முதலாளித்துவமும் கலந்த நாடு , அதனால் அன்பே சிவம் , தேவர் மகன் போன்ற படங்களை அரசு அதன் பிரசார பீரங்கி போல படத்தை சிறந்த படைப்பு போல சித்தரித்து காட்டுகிறது . மேலும் தசாவதாரம் , ஹே ராம் , அவ்வை சண்முகி போன்ற படங்கள் பார்பனீயம் . இதுவும் அரசின் குரல் அதனால் திரையிட்டுள்ளனர். கமலஹாசன் என்பவர் ஆளும் வர்க்கத்தின் குரலாய் உள்ளார் அதனால் அவருக்கு பாராட்டு விழா . கலைஞர் பாராட்டு விழா கூட ஒரு தனிமனிதனின் அர்ப்பாமான எண்ணம் , ஆனால் கமல் பாராட்டு விழாவில் விஷமத்தனம் உள்ளது .

33 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

விமர்சனங்களும் விவாதங்களும் வரவேற்க படுகிறது

வெண்ணிற இரவுகள்....! said...

இங்கு அன்பே சிவம் பற்றி பலர் நல்ல மதிப்பு வைத்து உள்ளதால் அது தவறு என்று கொஞ்சம் அதிகமாய்
எழுதி உள்ளேன் . இது புண்படுத்த வேண்டும் என்பதற்காய் எழுத வில்லை பண்படுத்த வேண்டும் என்பதற்காய்
எழுதி உள்ளேன் . தனிமனித தாக்குதல் இல்லை இது, குற்றச்சாட்டு மட்டும் நான் சொல்லவில்லை ஆதரங்களையும்
சொல்லி உள்ளேன் . எந்த ஒரு விடயமும் நமக்கு உடனே புரியாது விவாதம் செய்தால் தான் நாம் முடிவுக்கு வரமுடியும்
விவாதம் செய்வோம்....... நான் தவறு செய்து இருந்தாலும் விமர்சித்தால் திருத்திக்கொள்கிறேன் , ஆனால் அந்த சுட்டி காட்டுதல்
ஆதரப்போர்வமாய் இருக்கும் பட்சத்தில் .

வெண்ணிற இரவுகள்....! said...

எது சரி எது தவறு என்பதே விவாதம் செய்யும் பொழுது தான் புரியும் என்று நினைக்கிறேன் . விவாதம் செய்வோம் வளர்ச்சி அடைவோம்
மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் சொல்லுங்கள் . என் பக்கம் தவறு என்று சொன்னால் திருத்திக்கொள்கிறேன்

வெண்ணிற இரவுகள்....! said...

விவாதங்கள் வந்தால் இன்னும் கருத்துக்கள் தெளிவடையும் என்று நினைக்கிறேன்

ராம்ஜி_யாஹூ said...

அதே கமல் ஹாசன் நடித்த உன்னால் முடியும் தம்பி படம் ஏன் உங்களுக்கு ஞாபகம் வர மாட்டேன் என்கிறது.

ஒரு உயர் சாதி பிள்ளை மார் பய்யன் தலித்து பெண்ணை மணப்பதாக இருக்கட்டும், உயர் சாதி பய்யன் குடிசைகளை குடியில் இருந்து காப்பாற்றுவதாய் இருக்கட்டும் அவை எல்லாம் நல்ல செயல்களின் காட்சி இல்லையா.

மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் மத சாதி ஒற்றுமை வளர்த்து இருக்கிறாரே.

மூன்றாம் பிறை யில் ஒரு மன நலம் பாதித்த பெண்ணையும் சக மனிதராய் பார்க்கும், அன்பு கொள்ளும் எண்ணம்.

சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, பதினாறு வயதினிலே இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

வெண்ணிற இரவுகள்....! said...

அந்த படங்கள் எல்லாம் திரையிடப்படவில்லையே .... அரசு எதை திரையிடுகிறது ,
அரசின் குரல் கொண்ட படங்களை அது தான் பதிவின் சாராம்சம்

ஜெ. ராம்கி said...

உலகம் கோயிஞ்சாமிகளால் ஆனது!

Unknown said...

இப்போது த்ரிஷாவுடன் மன்மதஅம்பு. ஸ்ருதி 3ஷாவ விட இன்னும் யூத்.அவருடன் மன்மதஅம்பு 'நடி'க்கலாமே மிஸ்டர்கமல்? எங்களுக்குதான் எதையும் தாங்கும் இதயம் இருக்கே

Bala said...

தசாவதாரத்தில் அந்த கடவுள் சிலை முன்பு கடற்கரையில் இருக்கும்போது இருவரும் பிரிவார்கள். தற்போது அதே மாதிரி இணைகிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாமே? கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்பது கண்டிப்பாக இந்து மதத்தில் சொல்லப்பட்டதுதான். ஆனால் அதை எந்த கடவுளுக்கும் பொருத்தி பார்க்கலாம். கடவுள் என்று நான் சொல்வது சாமி அல்ல. ஒவ்வொருவருக்கும் அவர் கடவுள் என்று நம்புவது. உதாரணமாக புலிகேசி அவர்கள் மனிதம் தான் கடவுள் என்றார்.

அன்பு காட்டினால் எதிரி கூட நண்பனாகி விடுவான் என்று சொல்ல வந்த படம்தான் அன்பே சிவம். உடனே நீங்கள் சில பல உதாரணங்கள் காட்டலாம். அந்த படத்தில் நிதானமாய் கோபப்படுவது எப்படி என்று கூட சொல்லி இருப்பார். மற்றபடி சினிமா நடிகருக்கு இப்படி பாராட்டு விழ நடப்பது தேவை இல்லாதது.

Bala said...

நண்பரே உங்களை வேண்டும் என்றே எதிர்க்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ஏற்று கொள்பவையாக இருக்கிறது. அவரின் படங்களை இப்படியும் புரிந்து கொள்ளலாமே?

ஒரு தனி மனிதனை தலைவனாக நினைத்து அவனுக்காக உயிரையே கொடுக்கும் ஒரு கூட்டத்துக்கு, அவன் செய்யும் கொலைகளை தான் ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டத்துக்கு, எத்துக்கிட்டதேல்லாம் போதும், காட்டு மிராண்டியாகவே இராதே என்று சொல்வதாகத்தானே எடுத்திருப்பார்?
தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இந்த படம் சரியாக ஓடவில்லை. காரணம் அந்த பகுதி மக்களில் அதிகம் தேவர் சமூகத்தினர். அவர்கள் இந்த படத்தை மேற்சொன்னவாறுதான் புரிந்து கொண்டார்கள். ஆகவே "டேய் இவன் நம்மள காட்டுமிராண்டின்னு சொல்றாண்டா" என்று அந்த படத்தை புறக்கணித்தனர்.

Bala said...

நண்பரே உங்களை வேண்டும் என்றே எதிர்க்கிறேன் என்று நினைக்காதீர்கள். உங்கள் பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் ஏற்று கொள்பவையாக இருக்கிறது. அவரின் படங்களை இப்படியும் புரிந்து கொள்ளலாமே?

ஒரு தனி மனிதனை தலைவனாக நினைத்து அவனுக்காக உயிரையே கொடுக்கும் ஒரு கூட்டத்துக்கு, அவன் செய்யும் கொலைகளை தான் ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டத்துக்கு, எத்துக்கிட்டதேல்லாம் போதும், காட்டு மிராண்டியாகவே இராதே என்று சொல்வதாகத்தானே எடுத்திருப்பார்?
தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் இந்த படம் சரியாக ஓடவில்லை. காரணம் அந்த பகுதி மக்களில் அதிகம் தேவர் சமூகத்தினர். அவர்கள் இந்த படத்தை மேற்சொன்னவாறுதான் புரிந்து கொண்டார்கள். ஆகவே "டேய் இவன் நம்மள காட்டுமிராண்டின்னு சொல்றாண்டா" என்று அந்த படத்தை புறக்கணித்தனர்.

தசாவதாரத்தில் அந்த கடவுள் சிலை முன்பு கடற்கரையில் இருக்கும்போது இருவரும் பிரிவார்கள். தற்போது அதே மாதிரி இணைகிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாமே? கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது என்பது கண்டிப்பாக இந்து மதத்தில் சொல்லப்பட்டதுதான். ஆனால் அதை எந்த கடவுளுக்கும் பொருத்தி பார்க்கலாம். கடவுள் என்று நான் சொல்வது சாமி அல்ல. ஒவ்வொருவருக்கும் அவர் கடவுள் என்று நம்புவது. உதாரணமாக புலிகேசி அவர்கள் மனிதம் தான் கடவுள் என்றார்.

அன்பு காட்டினால் எதிரி கூட நண்பனாகி விடுவான் என்று சொல்ல வந்த படம்தான் அன்பே சிவம். உடனே நீங்கள் சில பல உதாரணங்கள் காட்டலாம். அந்த படத்தில் நிதானமாய் கோபப்படுவது எப்படி என்று கூட சொல்லி இருப்பார். மற்றபடி சினிமா நடிகருக்கு இப்படி பாராட்டு விழ நடப்பது தேவை இல்லாதது.

Bala said...

அவ்வை சண்முகி பார்ப்பன கலாச்சாரப்படமா இல்லை பிராமண கலாச்சாரப்படமா? பிராமணர்களை வைத்து படம் எடுக்ககூடாதா?

வெண்ணிற இரவுகள்....! said...

@எடுக்க கூடாது என்று சொல்லவில்லை ...........ஆனால் கமிலிடம் அதை விட எத்தனையோ சிறந்த படங்கள் இருக்க ஏன் அவ்வை சண்முகி அந்த இடத்தில் திரையிடப்பட வேண்டும் என்பதே கருத்து

வெண்ணிற இரவுகள்....! said...

@bala
சரி அப்படி உலகமயாமதளுக்கு அன்பு காட்டினால் முதலாளிகள் திருந்தி விடுவார்காலா
சரி தண்டகாரண்யா என்னும் இடத்தை எடுத்து கொள்வோம் .....அங்கே மக்களை ராணுவமே துரத்துகிறது , அவர்களிடம் அன்பாய் எப்படி இருக்க முடியும் ...........................

வெண்ணிற இரவுகள்....! said...

@baala
நண்பரே நானும் எதிர்ப்பு என்று சொல்லவில்லை , நீங்கள் நண்பரே ஆரோக்யமான விவாதம்
என்றும் தேவை கேள்வி பதில் மூலமாக தான் என் அறிவு விருத்தி அடையும் அல்லது உங்கள் அறிவு விருத்தி அடையும் .......... கருத்துகளுடன் மோதுவதை நான் வரவேற்கிறேன்

வெண்ணிற இரவுகள்....! said...

@பாலா
இணைகிற பொழுது அவர் வேறு பின்னணி இசை கொடுக்கலாம் , ஆனால் கல்லை மட்டும் கண்டால் இசை கொடுத்திருப்பார் .........சரி அவர் சொல்லும் பத்து அவதாரங்களில் எதை
நிருவிகிறார் , பத்து அவதாரம் என்பதே ஹிந்து மதம் சம்பந்தத பட்டது , எனக்கு தெரிந்து
அவ்வை சண்முகி மற்றும் தசவதாரம் படைப்பால் கூட சிறந்த படைப்பு இல்லை , ஏன்
வறுமை நிறம் சிகைப்பு என்ற படம் இருக்கிறது இல்லை சிகப்பு ரோஜாக்கள் , மூன்றாம் பிறை குணா போன்ற படங்கள் இருக்க இந்த படங்களை திரையிட்டதன் நோக்கம் என்ன
அதுவும் அரசே நடத்திய பாராட்டு விழாவில்

வெண்ணிற இரவுகள்....! said...

@baala
சரி தேவர் மகன் படத்தில் கமல் கெளதமியை தன் தந்தையிடம் அறிமுக படுத்தும்
பொழுது ஆந்திரா அவர் ராஜு குலத்தை சேர்ந்தவர் , நம்ம ஊர்ல தேவர் மாதிரி ஐயா என்பார்
கமல் ........இதில் தெரிவது ஜாதி வெறி இல்லாமல் வேறு என்ன ???? நீங்கள் கேட்கலாம் உன்னால் முடியும் தம்பி படத்தில் தலித்தை காதலிப்பது போல் வைக்க வில்லையா என்று
நானும் கேட்க்கிறேன் அந்த படத்தை ஏன் பாராட்டு விழாவில் திரையிடாமல் தேவர் மகன்
படத்தை திரையிடுவதன் நோக்கம் என்ன .........????? உயர் ஜாதி படங்கள் மட்டுமே திரையிடப்படுமா ????? கமலுக்கு ஏற்ற அரசு அரசிற்கு ஏற்ற கமல் சரி தானே

வெண்ணிற இரவுகள்....! said...

//தயவுசெய்து உறவினர்களையும் முதலாளிகளையும் ஒன்றாக ஒப்பிடாதீர்கள்//
இது சமூகம் வேறு நான் வேறு என்ற பார்வை , உலகத்தில் எந்த வித எதிர்ப்பும் அந்த சமூகத்தில் இருந்து தான் வரும் .......... அதற்காய் ஏன் நீ அந்த samoogatthil இருந்து thaane
varukiraai enru pesa koodathu ..........sari paatalikal kooda muthalaalikku thaane velai seikkiraarkal atharkkaaga
ethirkkaamal irukka mudiyuma enna ????? vetti veeraappai ...........,marx engels kooda paattaali varkam illai
engels nilapprabuvaaka piranthavar .................. avarkal sinthanai enna enbathu thaane mukkiam ........................????

Villavarayens said...

avanaa neeyee?????

Villavarayens said...

avanaa neeyee???????

ராம்ஜி_யாஹூ said...

அன்பே சிவம் படத்தில் எத்தனயோ நல்ல கருத்துக்கள் கட்சிகள் உள்ளன, அதே போலவே தசாவதாரத்திலும், பார்க்கும் நாம் எதை எடுத்து கொள்கிறோம் என்பதே mukkiyam.

அன்பே சிவத்தில், அந்த கிறித்துவ ஆலய சகோதரி (church sister), சிவம் என்ன சாதி, என்ன மதம், என்ன கொள்கை உடையவர் (முதலாளித்துவம், கம்முநிசம்) என்று எல்லாம் பார்க்காமல் சிவம் என்ற நபருக்கு மருத்துவ உதவி செய்வதாக இருக்கட்டும்.

தொழிலாளர்களின் நலமும் சம்பள உயர்வுமே முக்கியம் , காதலி எல்லாம் அப்புறம் தான் என்பதாக இருக்கட்டும்.

தசாவாடாரத்தில் ஒரு இஸ்லாமிய தாய் க்கு ரத்தம் அளிக்கும் போதாக இருக்காட்டும், படிச்ச மேதை படிக்காத மேதை என்ற வசனங்கள் ஆகட்டும், அதே போல அமெரிக்கா காரனுக்கு பணமும் குறிக்கோளும் தான் மூக்கியம், அவனுக்கு காதலி, யானை கால் போன்றவை எல்லாம் முக்கியம் அல்ல, என் கமல் எல்லா பிற்போக்கு தனங்களையும் தான் எதிர்த்து குரல் கொடுத்து உள்ளார்.

விருமனாடி (சண்டியர்), தேவர் மகன் இரண்டிலும் கதையே தேவர் சமூகதிருக்குலே நடக்கும் மோதல் தான் கதையே தவிர, தேவருக்கும் பிற சாதியினருக்கும் நடக்கும் கதை அல்ல


I do not think any hidden agenda in the Central Govt's function. In Ambika Sony's speech she has mentioned most of Kamal's films namely Kalathur kannamma, manmatha leelai, 16 vayadhinile, sakalakala vallavan, 3aam pirai...

வெண்ணிற இரவுகள்....! said...

பால் என்றால் நல்ல விடயமாகவே இருக்கட்டுமே அத்துடன் விடம் சேர்ந்தால் ஒரு துளி தானே சேர்ந்தது என்று சொல்ல முடியுமா

வெண்ணிற இரவுகள்....! said...

//In Ambika Sony's speech she has mentioned most of Kamal's films namely Kalathur kannamma, manmatha leelai, 16 vayadhinile, sakalakala vallavan, 3aam பிறை//
அவங்க mention படத்தை திரையிட்டார்காலா

வெண்ணிற இரவுகள்....! said...

தேவர் மகன் படத்தில் கெளதமியை ராஜு குலத்தை சேர்ந்தவர் அது தேவர் இனத்தை போல என்று கமல் அறிமுகம் செய்வார் அது ஏன் ஜாதி வெறி தானே .....................தசவதாரதிலும் உள்ளது , பத்து அவதாரம் என்பதே ஹிந்து சமூகத்தில் தானே உள்ளது ............

புலவன் புலிகேசி said...

//ராம்ஜி_யாஹூ said...
அன்பே சிவம் படத்தில் எத்தனயோ நல்ல கருத்துக்கள் கட்சிகள் உள்ளன, அதே போலவே தசாவதாரத்திலும், பார்க்கும் நாம் எதை எடுத்து கொள்கிறோம் என்பதே mukkiyam.
//

நண்பரே ராஜு, இந்த பதிலைத்தான் யாராவது சொல்ல மாட்டாங்களான்னு எதிர் பார்த்தேன். அதாவது என்ன ஊழல் வேணா செஞ்சிக்க, எவ்வளவு வேணா கொள்ளையடிச்சிக்க எங்களுக்கு 1ரூ அரிசியும், ஓசி கலர் டி.வியும் கொடுத்தா போதும். நாங்க அதை எடுத்துக் கிட்டு நீ செஞ்சத் தப்பை எல்லாம் மறந்து உனக்கே ஓட்டுப் போட்டு முதலமைச்சராக்கிடுவோம். அப்படித்தானே? இது போன்ற பார்வை குறை பாடுகளால் தான் இந்த சமூகம் இன்னும் இன்னல்களை சந்தித்து வருகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

புலவன் புலிகேசி said...

//I do not think any hidden agenda in the Central Govt's function. In Ambika Sony's speech she has mentioned most of Kamal's films namely Kalathur kannamma, manmatha leelai, 16 vayadhinile, sakalakala vallavan, 3aam pirai...//

அப்புடியெல்லாம் நெனக்காதீங்க. ஆதாயம் இல்லாம விழா எடுக்குறதுக்கு அவுங்க ஒன்னும் அப்பாவி பொது மக்கள் இல்ல.

புலவன் புலிகேசி said...

//Villavarayens said...
avanaa neeyee?????

3 JULY 2010 09:17// இந்தக் கருத்து கந்தசாமி ஃபாலோ பண்ணிருக்குற அந்த ஒரே ஒரு ப்லாக் பக்கம் யாரும் போயிராதீங்க. அதுலயே தெரியுது இவனோட கருத்து எவ்வளவுக் கீழ்த் தனமானதுன்னு.

வந்தியத்தேவன் said...

படங்களைத் தெரிவு செய்தது காங்கிரஸ் அரசே ஒழிய கமலஹாசன் அல்ல. இதனைப் புரிந்துகொள்ளாமல் கமலைத் திட்டுவதில் எந்தப் பலனும் இல்லை.

ஜெயக்குமார் said...

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்று உங்களின் இந்த
பதிவை பார்த்தாலே தெரிகிறது. அப்பன்கிட்ட அதுவும் பழமையில் ஊறிப்போயிருக்கும்
ஒரு ஊர்த்தலைவரிடம் தான் திருமணம் செய்யப்போகும் பெண் தங்களுக்கு எந்த
விதத்திலும் குறையவில்லை என்று கூறி சம்மதம் வாங்குவது ஒரு குத்தமாடா?

http://rkguru.blogspot.com/ said...

///தேவர் மகன் படத்தில் கெளதமியை ராஜு குலத்தை சேர்ந்தவர் அது தேவர் இனத்தை போல என்று கமல் அறிமுகம் செய்வார் அது ஏன் ஜாதி வெறி தானே .....................தசவதாரதிலும் உள்ளது , பத்து அவதாரம் என்பதே ஹிந்து சமூகத்தில் தானே உள்ளது ............ ////

உங்கள் கருத்தை அமோதிக்கிறேன்....

வெண்ணிற இரவுகள்....! said...

அது என்ன அவர் எந்த விதத்திலும் குறையவில்லை ....
இங்கே பணம் குறையவில்லை என்று நீங்கள் தவறாய் எடுத்துக்கொள்ளக்கூடாது
அதானால் அவர் ராஜு ஜாதியை சொல்கிறார் , தேவர் போன்றவர்கள் என்று சொல்கிறார்
அதாவது அவர்கள் தலித் இல்லை
அப்படி தானே சொன்னார்

வெண்ணிற இரவுகள்....! said...

@vandhiyathevan
//படங்களைத் தெரிவு செய்தது காங்கிரஸ் அரசே ஒழிய கமலஹாசன் அல்ல. இதனைப் புரிந்துகொள்ளாமல் கமலைத் திட்டுவதில் எந்தப் பலனும் இல்லை.//
கமல் அந்த விழாவை தவிர்த்து இருக்கலாமே ...என்ன புகழ் ஆசையா சரி இந்த படம் திரையிட வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே ................... இது எப்படி தெரியுமா இருக்கிறது ஈழ பிரச்சனைக்கு சோனியா காரணம் , ஆனால் கலைஞர் என்ன செய்வார்
என்பது போல் உள்ளது

புலவன் புலிகேசி said...

//ஜெயக்குமார் said...
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் கூட்டத்தை சேர்ந்தவர் என்று உங்களின் இந்த
பதிவை பார்த்தாலே தெரிகிறது. அப்பன்கிட்ட அதுவும் பழமையில் ஊறிப்போயிருக்கும்
ஒரு ஊர்த்தலைவரிடம் தான் திருமணம் செய்யப்போகும் பெண் தங்களுக்கு எந்த
விதத்திலும் குறையவில்லை என்று கூறி சம்மதம் வாங்குவது ஒரு குத்தமாடா?

3 JULY 2010 15:32//

குத்தமில்லைன்னு சொல்லுவீங்களா? அப்புடி சொன்னா நிச்சயம் நீங்களும் ஒரு ஜாதி வெறிப் புடிச்சவருதான். அதனாலதான் சரியாப் பட்டிருக்கு. அந்தக் கமலஹாசன் வேற ஜாதிப் பொண்ணை கூட்டிட்டு போயிருந்தா?