கல்வி தனியார்மயமானால் என்ன ஆகும் ,எவ்வளவு தரம் தாழும் என்பதற்கு உதாரணமாய் சென்னையில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர் கொடூரமாய் கொலை செய்யப்பட்டுள்ளார் அவர் பெயர் நிர்பேஷ் குமார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் . முன்பெல்லாம் கூட மாணவர்களிடையே கொலைகள் நடக்கும் , ஆனால் அது பெண்ணிற்க்காக நடக்கும் இல்லை ஈகோ தகராறு போன்றவை இருக்கும் . ஆனால் இப்பொழுது நடந்த கொலையை விட அது நடந்ததற்கு உண்டான நோக்கத்தை பாருங்கள் , வெறும் பணம் பணம் பணம் .பணத்திற்காக ஒரு கொலையை செய்யக்கூடிய நோக்கம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய வேண்டும் , கொலைகளுக்கு அவர்கள் மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது , அவர்களை பணம் தான் பிரதானம் என்று சிந்திக்க வைத்த தனியார் கல்லூரிகளையே அது சாரும் .
எம் ஜி ஆர் பல்கலையில் படிக்கும் மாணவர் நிர்பேஷ் குமார். கல்லூரியில் தத்தம் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கமிசன் கிடைக்கும் . கொலைக்கு உண்டான ஆணி வேர் எங்கு இருக்கிறது என்று தெரிகிறதா ???? படிக்க வந்த மாணவனை வியாபாரி ஆக்கியது யார் . இந்த கமிசன் இந்த கல்லூரி மட்டும் தருவதில்லை பக்கத்தில் இருக்கும் சத்யபாமா கல்லூரி மற்றும் சில கல்லூரிகளும் இதே வேலையை செய்கின்றன . அதில் ஏற்ப்பட்ட போட்டியே பிரதான காரணம்.
அவர் மாநிலத்தில் சேர்ந்த ஒருவனை தன் பல்கலையில் சேர்க்க முடிவு செய்துள்ளார் நிர்பேஷ் குமார் .சத்யபாமா கல்லூரியை சேர்ந்த இன்னொரு வட மாநில பையன் முந்தி கொண்டார் .இது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது .இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இரு கல்லூரியிலும் கமிசன் கொடுக்கிறார்கள் என்று .அப்பொழுது யார் தண்டிக்கப்பட வேண்டும்.
நம் சட்டம் கூட என்ன சொல்கிறது "கொலை செய்தவனை விட கொலைக்கு தூண்டியவனே " முதல் குற்றவாளி என்று . இப்பொழுது யார் குற்றவாளி ????? இது கல்வி தனியார்மயம் ஆவதால் ஒரு கல்லூரிக்கும் இன்னொரு கல்லூரிக்கும் பண விடயத்தில் மோதல் வரும் , அங்கே இருந்து நாளைய தூண்களான மாணவர்கள் எதை கற்றுக்கொள்ள முடியும் கொலை செய்வதையா ???????
கல்வி , மருத்துவம் போன்றவற்றை தனியாருக்கு விட்டால் இது தான் கதி . சரி இந்தியா போன்ற விவசாய நாட்டில் விவசாய கல்லூரிகள் தானே அதிகம் இருக்க வேண்டும் . ஏன் பொறியியல் கல்லூரிகள் அதிகம் இருக்கிறது , மருத்துவக் கல்லூரிகள் கூட குறைவு தான் ஏன் தெரியுமா . இங்கு கல்வி என்பது முதலாளிகளுக்கு வேலைக்கு ஆள் தயார் படுத்தவே அமெரிக்காவில் மென் பொருள் என்றால் , இங்கே பல லட்சக்கணக்கான மென் பொருள் பொறியாளர்கள் உருவாக்க படுகிறார்கள் . இந்தியாவில் உற்பத்தி என்பதே அவர்களுக்கு என்ன தேவையோ அதை இங்கே , மானுட சொத்தை எழுதி வாங்குகிறார்கள் . அடுத்து தண்ணீர் தனியார் மாயம் ஆகிக்கொண்டே இருக்கிறது இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை .
இதற்க்கு நடுவில் காவல்துறை ஒரு நகைச்சுவை செய்துள்ளது .வட இந்திய மாணவர்களை கண்காணிக்க போகிறார்களாம் . கண்காணிக்க வேண்டியது அவர்களையா?????

3 comments:
விவாதங்களும் விமர்சனகளும் வரவேற்க படுகின்றன
கூடிய விரைவில் இதே போல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் அடித்துக் கொண்டு சாகப் போகிறார்கள்.
மருத்துவத்துறை தனியார்மயத்தை துரிதப்படுத்துவதற்காக கருணாநிதி கொண்டு வந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஆள் பிடிப்பதற்காக ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் அரசு மருத்துவமனை மருத்துவர்களை புரோக்கர்களாக பிடித்துக் கொண்டுள்ளது.
ஆம் வினோத்
Post a Comment