இது என்னுடைய ரெட்டை சதத்திற்கு முந்திய பதிவு . நான் ஏதோ எழுத வந்தேன் , கற்பனை பண்ணி எழுத வேண்டும் , வித்யாசமாய் தெரிய வேண்டும் படித்தவர்களை சுண்டி இழுக்க வேண்டும் என்ற அற்பமான எண்ணங்களே மேலோங்கி இருந்தது . ஆனால் எழுதும்
போதும் நிறைய படிக்கும் பொழுது அது வேறெங்கோ இழுத்து சென்றது . எழுதுவது ஒரு நோக்கத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றியது . ஏதோ எனக்கு தெரிந்ததை வைத்து மனதில் சரி என்று படுவதை எழுதுகிறேன் . இப்படி எழுதுவதால் பல எதிரிகள்
சம்பாதித்து இருப்பேன் என்று நினைக்கிறேன் .புலவன் புலிகேசி எழுதும் பொழுது அவர் பதிவில் ஒருவர் பின்னூட்டம் இடுவார் வெண்ணிற இரவுகளுடன் சேர்ந்து நீங்கள் கெட்டு போகிறீர்கள் என்று , கட்டம் கட்டி விடுவார்கள் என்று . நான் ஒன்று மட்டும் சொல்வேன்
இந்த பதிவுலகம் மட்டும் உலகம் அல்ல இங்கே என்ன கட்டம் கட்ட போகிறார்கள் . நாம் என்ன தண்டகாரண்யாவில் போரடிக்கொண்டிருக்கிரோமா என்ன இல்லையே ???? இதில் கட்டம் கட்டினால் என்ன கட்டவிட்டால் என்ன ????????நான் ஒன்னும் சொல்லிக்கொள்ளும் அளவில் எதுவும் எழுதவில்லை என்று நினைக்கிறேன் . இன்னும் பக்குவப்பட்ட எழுத்து வரவில்லை . விடயம் தெரிந்தாலும் கோரவையாய் எழுத வரவில்லை . கோர்வையாய் எழுதினாலும் சில நேரத்தில் விடயத்தை கோட்டை விடுவது உண்டு . இன்னும் எழுத்து பிழைகள் நிறைய இருப்பது உண்டு . ஆனால் என் எழுத்தை பார்த்து ஒரு விடயம் பெருமை படுவேன் , நேர்மையாய் மனதில் பட்டதை சொல்லிவிடுவேன் . இப்பொழுது ஓரளவு நோக்கத்துடன் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி என்ன உனக்கு நல்லதே படதா ????????? இப்பொழுது என் எழுத்தை பற்றி என்ன விமர்சனம் செய்தேன் , நாம் தரக்குறைவாய் இருக்கும் பொழுது விமர்சனம் செய்தால் தான் மாற்றிக்கொள்ள
முடியும் . இது சமூகத்திற்கும் பொருந்தும் . சரியாக செய்தால் அதை பாராட்ட தேவை இல்லை , சரியாய் செய்வது கடமை தவறாய் செய்தால் விமர்சனம் செய்ய வேண்டும் இல்லை என்றால் ஒரு சமூகம் வளர முடியாது . நீங்களும் எப்பொழுதும் என்னை விமர்சனம் செய்யலாம் , அது தனி நபர் தாக்குதல் போல் இல்லாமல் , உண்மையிலேயே தவறாய் இருந்தால் சொல்லுங்கள் விவாதம் செய்வோம் . விவாதிப்பதன் மூலம் சரி தவறு என்று கருத்திற்கு வர முடியும் , யார் தவறோ அவர்கள் திருத்திக்கொள்ளலாம் . ஆனால் விமர்சனம் என்பதே தவறு என்று சொல்லாதீர்கள் , ஒரு சினிமா விமர்சனம் கூட முக்கியமானது அரசியல் பார்வையில் . மக்களின் ரசிப்பு தன்மை கலை தன்மை தான் அரசியலையும் முடிவு செய்கிறது என்பதே உண்மை .அதனால் விமர்சனம் தேவை இல்லை என்று மட்டும் நினைக்காதீர்கள் . விமர்சனம் வெறும் குற்றம் சொல்வது அல்ல ,ஆதாரப்பூர்வமாய் இது தான்
பிரச்சனை என்று சொல்வது அது தவறா என்ன ??????????????
9 comments:
இரட்டைச் சதத்திற்கு
என் முதல்
வாழ்த்து.
What happened 2 u? Nallathana iruntheenka,
நிச்சயம் தவறில்லைக் கார்த்தி. தொடரும்..
200 க்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள் .....
wishes for double century,
why u r tensed like Azarudden at 199
200க்கு வாழ்த்துக்கள். வினவு தளம் மூலமாதான் உங்களை முதலில் தெரிஞ்சிகிட்டேன். உங்களின் பதிவுகளுக்கு நன்றி.
முதலில் நான் 200 என்று நினைத்துக்கொண்டு தான் பதிவை அடித்தேன் , ஏற்க்கனவே ஒரு பதிவை தூக்கி இருக்கிறேன் , ஒரு கதையை சில காரணத்திற்க்காக . கடைசியில் போஸ்ட் செய்யும் பொழுது தான் கவனித்தேன் அது 199 என்று ..........சரி என்று முதல் வரியை மட்டும்
மாற்றி போட்டுவிட்டேன் ................நன்றி நண்பர்களே
//சரியாக செய்தால் அதை பாராட்ட தேவை இல்லை , சரியாய் செய்வது கடமை
ஒருவன் தன கடமையைதான் செய்தான் என்றாலும் பாராட்டுவது என்பது அவனை மேலும் உற்சாகப்படுத்தும்தானே?
உங்கள் பணி மென்மேலும் உயரட்டும் வாழ்த்துக்கள் நண்பரே...
இரட்டைச் சதத்திற்கு
என் வாழ்த்துக்கள் . தொடரட்டும் உங்களின் இந்த சாதனை ................
Post a Comment