Saturday, 24 July 2010

திரையை விலக்கி தெளிவது தானே அறிவு - இரும்புத்திரை அரவிந்த்

போபாலில் நடந்தது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை . இதை வேறு யாரும் சொல்லவில்லை அங்கே இருக்கும் பத்திரிகையாளர்கள் சொன்ன உண்மை அது . அங்கு 1984 மட்டும் விபத்து நடக்கவில்லை அதற்க்கு முன்பு பல முறை நடந்துள்ளது நண்பா அதற்க்கான ஆதாரங்கள் பல உள்ளன .முதலில் பழைய தொழில் நுட்பம் உபயோகபடுத்தினதே விடம் கசியக்காரணம் , அப்படி இருக்க எப்படி விபத்து என்று சுருக்கிவிட முடியும் .

ஆனால் என்ன செய்ய... நமக்குத்தான் வருமுன் போராட வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கிறதே.. நாளை கொண்டுவர உள்ள அரசின் சட்டத்தின் படி இந்தியாவில் இதுபோன்ற விபத்துகள் நடந்தால் இனி நட்ட ஈடு 300 கோடிக்கு மேல் தரக் கூடாது என சீலிங் போட்டிருக்கிறார்கள். அதனை விட நாயை பத்தி விட்டதும், கோழி ரோமம் போட்டதும் அவருக்கு முக்கிய பிரச்சினையாகி விட்டது. பல லட்ச மக்கள் பாதிக்கப்பட்டது பெரியதா ????? இல்லை மாடு நாய் பிரச்சனை பெரியதா என்று நீ தான் சொல்ல வேண்டும் நண்பா .

மூன்றாவது பாயிண்டுக்கு மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும். ஒரு தாய், மகள் விசயத்திற்காக வருத்தப்படுவது சரிதான். ஆனால் மூன்று பாயிண்டிலும் மலையாள வெறுப்பு புரையோடி போயிருக்கிறது என நான் சொல்ல மாட்டேன். வாச்சாத்தியில் வால்டர் தேவாரத்துடன் சென்று நூற்றுக்கணக்கான மலையக பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவர்களில் கர்நாடக தமிழக வனத்துறையினரும் போலீசாரும் கலந்துதானே இருந்தனர். அதனைப் பற்றி நீ எழுதி இருக்கலாம். ஒருவேளை அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் அல்லது போபாலை போல முடிந்து போன கதை என்று நீ தவிர்த்தும் இருக்கலாம். கயர்லாஞ்சி கிராமத்தின் போக்மாங்டே குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி ஒரு தலித்திற்கு இழைக்கப்பட்டது அல்ல, தமிழர்களை விரட்டியடித்த மராட்டியர்களுக்கு இழைக்கப்பட்ட பாடமாக உங்களுக்கு தெரிந்திருக்கலாம். குஜராத் படுகொலை கூட உனக்கு விபத்து எனப் படலாம்.மாநிலம் வேறுபட்டாலும்
அதிகார வர்க்க புத்தி மாறுமா என்ன ????

இந்த பிரச்சனைகளை பேசக்கூடாது என்றில்லை பேசலாம் ஆனால் போபால் விடயத்துடன் ஒப்பிடுவது தவறு . எந்த பிரச்சனைக்கு பிரதான மதிப்பு கொடுக்க வேண்டுமென்றால் , பல மக்களை பாதிக்கும் விடயத்திற்கு , போபால் பல மக்களை பாதித்ததா இல்லையா ???? போபால் பல மக்களை பாதித்ததா இல்லை ..........நீ சொல்லும் அந்த மூன்று புள்ளிகள் அதிக மக்களை பாதித்ததா நீ தான் முடிவு செய்ய வேண்டும் .

கம்யூனிச நாடு இதுவரை உலகத்தில் எங்குமே வரவில்லை. அப்புறம் எப்படி சீனா கம்யூனிஸ்டு நாடானது என தெரியவில்லை. இதனை புரிந்து கொள்ள கம்யூனிச நாடு எப்போது சாத்தியம் என்பதை புரிந்து கொள்ள கம்யூனிசத்தை முதலில் தெரிந்து கொள்வதுதானே சரியானது. தெரியாத ஒன்றைப் பற்றி தீர்க்கமாக எழுதுவதுதான் சரியானது என்றால் அதில் இருந்து மாறி தெரிந்து கொண்டு விமர்சிக்கும் எனது நிலை ஒன்றும் முன்னதை விட பரிதாபத்திற்குரியது இல்லையே.. அருணாசல பிரதேசத்தை சீனாவும் இந்தியாவும் கூறு போட அந்த ஏழு சகோதரிகள் என்ன இந்திய ஆளும் வர்க்கத்தின் கூத்தியாள்களா.. கேவலம் நாயப் பத்தி விடுறான், குப்ப கொட்டுறான், வீடியோ பிடிக்கிறான்கிறதுக்காக நீ கக்கும் மலையாள வெறுப்போடு ஒப்பிட்டால் உங்களோடு எந்த வகையிலும் இணைய முடியாத படேலின் கற்பனையிலும், சிறப்பு காவற்படையின் துப்பாக்கியின் கீழும் மாத்திரமே இந்தியாவுடன் இணைய முடிந்த அந்த சகோதரிகளின் கண்ணீர் உன் இதயத்திற்கு அருகில் ஒலிக்கவில்லையா... அதனை விடவும் சவுக்கு இணைய தோழர் கைதுக்கு காரணமான நக்கீரன் காமராஜ் போன்றோர் முன்வைக்க விரும்பும் தமிழ் தேசியம் உன் கண்களுக்கு ஜனநாயகத்திற்கான போராட்டமாக படுவதுதான் முரண்பாடாக உள்ளது.

உலக அளவில் மூன்றாம் உலக நாடுகளையும், ஆசிய ஆப்ரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்களையும் தங்களது சேரிகளைப் போல (அனுபவிப்பதற்கும், குப்பை கொட்டுவதற்கும்) பாவிக்கும் உலக முதலாளிகளை குறிப்பாக அமெரிக்காவை பற்றி என்ன கருதுகிறாய் நீ. கம்யூனிஸ்டுகள் மாத்திரம் இவர்களை விமர்சனம் செய்யவில்லை என்பதும் உனக்கு தெரியுமா.. முதலில் நமது வீட்டை பாருங்கள். சுற்றத்தை சரி செய்யுங்கள் என்று நீ கூறக்கூடும். என்ன செய்ய கம்யூனிஸ்டுகள் வந்துதான் ஒன்றாம் வகுப்பில் படித்த நான்கு மாடு ஒரு சிங்கம் கதையை சொல்லி ஒற்றுமையை புரிய வைக்க வேண்டி இருக்கிறது.

ஆனாலும் இந்த லாஜிக்தான் எனக்கு புரியவில்லை. கம்யூனிஸ்டுகள் மலம் கழிக்க போன பிறகு கழுவ வேண்டும் என சொல்லி விட்டார்கள் என்பதற்காக தனிநபர்களின் பிரச்சினையே சமூகத்தின் பிரச்சினை எனக் காட்ட முனைபவர்கள் அனைவரும் குளத்திடம் கோபித்துக் கொண்டுதான் போகிறார்கள். என்ன செய்ய ச்ச்சின் கூட்டம் கூட வழி என்றும், விதர்பா வுக்கு காரணமான துரோகிகள் தனிநபர்களாக இருந்த போது கண்ணில் தெரியாததும் தனித்தனி பிரச்சினை இல்லையே.


முதலில் படி,வினவு தோழர்கள் போலி கம்யூனிசத்தை, மேற்கு வங்கத்தை சிங்கூர் மற்றும் ந்ந்திகிராம் போன்ற சமூகத்தின் பொதுப்போக்கை பாதிக்கும் விசயங்களை, கேரளத்தை முல்லைப் பெரியாருக்காக எத்தனை முறை எழுதி உள்ளார்கள் என அதன் மூலம் தெரியவரலாம். கம்யூனிசத்தை கற்பதற்கும் கொஞ்சம் முயற்சித்து அதன் பிறகு விவாதிக்க வா. ஒருவேளை கற்று கொண்டால் தனது பழைய நிலை மாறி விடுமோ என பயந்தால் அறிவு பற்றி உன் புரிதல்தான் சந்தேகத்திற்குரியது.

பின் குறிப்பு
ஐந்து லட்சம் மக்களை 26 ஆண்டுகள் பாதித்த விடயத்திற்காக உயிர் நண்பனை பேச அழைத்தேன் . ஒவ்வொருவருக்கும் சில விடயங்கள் முக்கியமாய் இருக்கிறது என் நண்பனுக்கு வேறு விடயங்கள் முக்கியமாய் இருக்கிறது . நான் சமூகத்திற்கு முக்கியமான விடயத்தை தான் தேர்வு செய்கிறேன் என்று நம்புகிறேன் . என் நண்பனும் மாறுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது . மாற்றம் ஒன்று தானே மாறாதது . மாறுவது
முக்கியம் அல்ல எதற்காய் மாறுகிறோம் என்பதே பிரதானம் .

3 comments:

இரும்புத்திரை said...

http://irumbuthirai.blogspot.com/2010/07/2.html

ஏழர said...

அட்டகாசமான எதிர்வினை.. இரும்புத்திரை, இப்படி ஒரு நண்பனை அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் நீங்கள்

புலவன் புலிகேசி said...

தெளிவான விளக்கம். அரவிந்தின் பதிவிற்கு. அரவிந்த் புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.