Thursday, 15 July 2010

புரட்(சி)டு கவி பாரதி“மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கொடுக்கிறேன். நான் எல்லாவிதமான அரசியல் ஈடுபாடுகளைத் துறந்துவிட்டேன். நான் எப்போதும் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன்.”
இது எட்டப்பனோ இல்லை வேறு ஒரு தேச துரோகியோ எழுதிய கடிதம் அல்ல , நாட்டு மக்கள் நம்பும் தேசியக்கவி பாரதி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய மன்னிப்பு கடிதம் .தேசியக்கவியாம் சொல்லிற்கும் செயலுக்கும் எவ்வளவு வித்யாசம் . கவிதையில் புரட்சி , நேரிலே காலில் விழுவது என்ன ஒரு கேவலம் . கலை வேறு கலைஞன் வேறு , படைப்பாளி வேறு படைப்பு வேறு என்று சொல்லிற்கும் செயலுக்கும் முரண்பாடு காட்டும் அறிவாளிகள்(என்று நினைத்துகொள்கிறவர்கள்) செயல் இது .
சிலர் பாரதியின் காலகட்டத்தை புரிந்து கொள்ளாமல் விமர்சிக்க கூடாது எனலாம். சரி இக்காலகட்டத்தில் பாரதி வறுமையில் வாடினான், ஆனால் பாரதி இப்படி பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சரணடைந்த காலம் ஜாலியன் வாலாபாக் போன்ற எழுச்சி மிகும் சம்பவங்கள் நடந்த காலகட்டம் . அரசு வேலையை துறந்து சாதாரண மக்கள் நாட்டு விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் என்ற பெயரில் அரசாங்கத்துடன் மோதிய காலகட்டம் .சாதாரண
மக்களே இப்படி வரும் பொழுது , புரட்சிக்கவி என்று அழைக்கப்பட்ட தேசியக்கவி என்று அழைக்கப்பட்ட பாரதி , அரசாங்கத்திடம் நான் உங்கள் அடிமை என்று சொல்கிறான்.

மேலும் தேசியக்கவி ஒரு வியத்தகு விடயத்தை செய்கிறார் ‘தங்கள் குலவம்ச வரலாற்றை சிறப்பாக எழுதித்தருகிறேன்’ என்று எட்டப்ப பரம்பரையிடம் செல்கிறார் . பாரதி மட்டும் அந்த படைப்பை எழுதி இருந்தால் கட்டபொம்மன் வில்லனாக இருந்திர்ப்பான் , எட்டப்பன் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு இருப்பான் . இந்த பிழைப்பு வாதியை என்னவென்று சொல்வது ???? பாரதியை ரசிப்பவர்கள் ஒன்று அவரை பற்றி தெரியாமலேயே கேட்டதை வைத்து ரசிப்பவர்கள் , மற்றொரு வகையினர் பாரதியின் மனநிலையிலேயே இருப்பவர்கள் நிறைய படித்து இருப்பார்கள் , ஆனால் கலை வேறு கலைஞன் வேறு ,சொல் வேறு செயல் வேறு என்று கருதுபவர்கள்.பாரதியின் தேசியத்தின் லட்சணம் இது தான் .

பாரதியை பற்றி சொல்பவர்கள் அவர் சாதிகளை ஒழிக்க பாடுபட்டார் என்று சொல்வது உண்டு ,ஆனால் சொல் வேறு செயல் வேறு என்ற செயல் இருந்து கொண்டே இருக்கும் அவர் வாழ்வில் . "சாதிகள் இல்லையடி பாப்பா " என்று
குழந்தைகளுக்கு மட்டும் சொல்கிறார் , தலித் பையனுக்கு பூணுல் மாட்டி விடுகிறார் . இந்த செயலை பார்த்து அனைவரும் வியக்கின்றனர் , ஆனால் இதன் உள்ளே உள்ள அரசியல் என்ன தெரியுமா , தலித் பையனை உயர்த்துகிற எண்ணம் . அதாவது பார்பனர்கள் மேட்டுக்குடி , அதனால் அந்த தலித் பையனின் வாழ்கை மேம்பட , அவன் தரத்தை உயர்த்துகிறாறாம் இந்த மகாக்கவி . சாதிகள் இல்லையடி என்று பாடிய பாரதி நியாயமாய் பூணலை அறுத்து எறிந்து இருக்க வேண்டுமே , ஆனால் நான் எறிய மாட்டேன் நான் பார்ப்பான் வேண்டுமென்றால் தலித் மக்களை உயர்ந்தவராய் மாற்றுகிறேன் என்ற முற்ப்போக்கு வாதி தான் பாரதி. பாரதியை ஆதரிப்பவர்கள் பார்பனர்களே சிறந்தவர்கள் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ . கடைசி காலத்தில் பாரதி தமிழ்நாடு பிராமணர் சங்க கூட்டத்திலே கலந்து கொள்கிறார் . முற்போக்காளர்கள் எப்படி கலந்து கொள்ள முடியும் ஆனால் பாரதி அந்த விடயத்தை செய்தார் . தேவர் ஜெயந்திக்கு போகிறவர்களை யாரவது முற்போக்காளர்கள் என்று சொல்வார்களா ?????


பாரதியின் நீதிக்கட்சி பற்றிய விமர்சனத்தை பாருங்கள் ‘இன்றைக்கு நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் என்பார்கள். . .. இப்படியே போனால் நாளைக்கு காக்கை குருவிகள் கூட நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் எனக் கூறி உரிமை கோருவார்கள்’ என்று பாரதி நீதிக்கட்சியின் கொள்கையை நக்கல் செய்து எழுதினார்." அதாவது திராவிடர்கள் காக்கை குருவிகலாம்.

சரி இவருடைய பொதுஉடைமை கொள்கை எப்படி உள்ளது என்று பார்ப்போமானால் , தன் பாடல்களிலே ரஷ்யாவில் நடந்த முதலாளத்துவ புரட்சியை(FEBRUARY) ஆதரித்து எழுதுக்கிறார் , ஆனால் அதன் பின்பு நடந்த சோசியலிச புரட்சியை(OCTOBER) எதிர்த்து எழுதுகிறார் .

இப்படி பாரதி வாழ்க்கை முழுவதும் ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன . பாரதியை ஆதரிக்கும் நாம் நம் உளவியலை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன் . நமக்குள்ளும் அறிவாளிகளின் சொல்லிற்கும் செயலுக்கும் வேறுபாடு இருந்துக்கொண்டே இருக்கும் , அதை கலைந்து வெற்றி பெறுபவனே புரட்சியாளன் . நாம் நம் சமகால இலக்கியம் கட்டாயம் படிக்க வேண்டும் , ஏன் என்றால் நானும் இந்த விடயங்கள் தெரியாதவரை , பாரதி என்னும் பிம்பம் எனக்குள்ளும் இருந்தது . நம் புத்தகத்தில் கொடுக்கப்படும் வரலாறுகள் படித்து நானும் பாரதி தேசியக்கவி என்று நினைத்து கொண்டிருந்தேன் . இப்படி அறிவற்றவராக இருக்கும் பொழுது , நம்மை பிறர் எளிதாய் ஏமாற்ற முடியும் . சில விடயம் உண்மையிலேயே புரட்சி போலவே இருக்கும் ஆனால் அது புரட்டு .

பின் குறிப்பு :
பகத் சிங் போன்றவர்கள் சரியானவர்கள் . அவர்களை தியாகிகள் ஆக்குவதன் மூலம் தங்களை சரியானவர்களாக 'காட்டிக்கொள்ள' நினைப்பவர்களுக்கு பாரதி பற்றிய விமர்சனம் பிடிக்காது.

52 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன

Deepa said...

:((( Ennal Namba mudiyavillai. Bharathiyaa???

பைத்தியக்காரன் said...

அன்பின் வெண்ணிற இரவுகள்,

நண்பர் வே.மதிமாறன் எழுதிய ''பாரதி'ய ஜனதா பார்ட்டி' என்ற நூலை அவசியும் வாசியுங்கள்.

இந்த நூலை ஆதரித்து, விமர்சித்து தோழர் மருதையன் எழுதிய கட்டுரை தனி நூலாக வந்திருக்கிறது.

இந்த இரு நூல்களும் பாரதியின் முகமுடியை கிழிப்பவை. அவசியம் வாசியுங்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வெண்ணிற இரவுகள்....! said...

ஆம் என்னால் கூட நம்பமுடியாமல் தான் இருந்தது தீபா ......ஆனால் ஆதாரங்கள்
வாயை அடைக்கின்றன................. மேலும் அவர் பூணல் போட்டு விட்டது எல்லாம் அனைவரும்
அறிந்ததே ....................

வெண்ணிற இரவுகள்....! said...

கட்டாயம் படிக்கிறேன் சிவராமன்

rajeshkannan said...

சீ பாரதியா இப்படி கேவலம் வெட்க கேடு .......

KANTHANAAR said...

///நாம் நம் உளவியலை ஆராய்ச்சி செய்ய வேண்டும் ///
mudalil umma PURATCHIKARA russia china yen thorthu poonathunnu aaraaichi panninttu appuram bharathi aaraichikku vamma kuzhanthe....

paithiyakaaran matravargal mugamoodi kilikkarathu irukkattum.. mudalil avaru poonal potrukkara nethiyil mathakuriyeedu potrukkarannu aaraichi panna chollu sare..

Bala said...

//கட்டபொம்மன் வில்லனாக இருந்திர்ப்பான் , எட்டப்பன் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டு இருப்பான்

இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? வீரபாண்டிய கட்டபொம்மன் பார்த்ததில் இருந்தா? கட்டபொம்மனும் தவறாமல் வெள்ளையர்களுக்கு கப்பம் செலுத்தி வந்தார். ஒரே ஒரு தடவை மட்டும் முழுவதும் கட்டமுடியாததால் வெள்ளையனால் அவமானப்படுத்தப்பட்டார். அதனாலேயே அவர் போரிட்டார். மற்றபடி கப்பம் கட்ட முடியாது என்று சிவாஜி கணேசன் போல வசனம் எல்லாம் பேசவில்லை என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒருவேளை இதுவும் உண்மையாக இருக்குமோ?

ஓமகசியா said...

link

http://naayakan.blogspot.com/2008/07/blog-post_25.html

ஓமகசியா said...

இந்த பதிவுக்கு பூணூல் பார்ப்பான் சிவராமன் கமெண்ட் போடுவதுதான் கொடுமை. சிவராமனும் பாரதியார் மாதிரி பூணூலிஸ்ட், இரட்டை வேடப் பார்ப்பான். இங்கே மதிமாறன் புத்தகம் பற்றி எழுதியிருக்கும் சிவராமன், ஏகலைவன் என்ற ம.க.இ.க தோழர் அதே புத்தகம் பத்திக் கேட்டதற்கு மழுப்பியிருக்கான் பாருங்க, சாம்பிளுக்கு ஒண்ணு, மத்தது இந்த சுட்டியில போய்ப் படியுங்க.

பாரதி குறித்தும், மதிமாறன் அவர்களின் 'பாரதிய ஜனதா பார்ட்டி' குறித்தும் உங்களுடைய விமர்சனத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஏகலைவன்.

அப்படி தெரியப்படுத்தினால்தான் என்னை பார்ப்பன எதிர்ப்பாளராக நம்புவீர்களா தோழர்

பைத்தியக்காரன்

உங்களது பதில் நேர்மையற்றதாக இருக்கிறது.

நீங்கள் ஜெயமோகனுக்கான சுட்டியை இதற்கு முன்னால் வைத்திருந்தீர்களா இல்லையா? தசாவதாரத்தைவிட மிகவும் மோசமான பாரதியைக் குறித்து நீங்கள் எழுதாதற்குக் காரணம் என்ன?

பார்ப்பனீயத்தை எதிர்ப்பதுபோல் ஆதரிக்கும் காரியப் பைத்தியம் போலும்! - ஏகலைவன்.

அன்னைக்குச் சரியாக சிவராமனின் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்திய தோழர் ஏகலைவனுக்கு ஒரு ரெட்சல்யூட், இன்னைக்குக் கள்ளத்தனமா மவுனம் சாதிச்சு அதே பார்ப்பானை ஆதரிக்கும் வினவுக்குக் கண்ணிர் அஞ்சலிகள்!

பைத்தியக்காரன் said...

அன்பின் 'ஓமகசியா',

என்னை அம்பலப்படுத்துவதற்காகவே ஒரு ஐடியை உருவாக்கியிருக்கிறீர்கள். அதுமட்டுமா அரும்பாடுபட்டு தோழர் ஏகலைவனின் மறுமொழியையையும் தேடி எடுத்திருக்கிறீர்கள்.

எனது சாட் லிஸ்டில் பச்சை விளக்குடன் எப்போதும் கண் சிமிட்டிக் கொண்டுத்தானே இருக்கிறீர்கள்? கேட்டிருந்தால் இன்னொரு சுட்டியை நான் தந்திருப்பேனே ;-)

பரவாயில்லை. அதை இங்கு தருகிறேன். இந்த சுட்டியை தோழர் ஏகலைவனுக்கும் அளித்திருக்கிறேன் ;-)

http://naayakan.blogspot.com/2008/02/blog-post_15.html

நீங்கள் என்னை 'அம்பலப்படுத்த' கொடுத்திருக்கும் சுட்டிக்கு முன்பு எழுதியது ;-)

பிறகு எனது தளத்தை பலமுறை பார்வையிட்டு ஆதாரங்களை திரட்டும் நீங்கள், லேபிளில் 'கவிதை' என்று இருக்கும் பகுதியை க்ளிக் செய்து பார்த்திருக்கலாமே? ;-)

2007ல் உள்ள சுட்டி ;-)

http://naayakan.blogspot.com/2007/09/blog-post_16.html

அலுவலகத்தில் உங்கள் வலைத்தளத்தில் உங்களை எழுத வேண்டாம் என்று சொன்னதும் -

எனக்காகவே புது ஐடி தயாரித்து 'கலைச்சேவை' புரியும் உங்களைப் போன்ற நண்பர்கள் இருக்கும் வரை எனக்கென்ன கவலை?

நிதானமாக ரூம் போட்டு யோசித்து அடுத்த 'அம்பலத்துடன்' வாருங்கள். வேண்டுமென்றால் உங்களுக்கு பிடித்த 'அ... பாரில்' ரூம் போட்டுத் தருகிறேன் ;-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பி.கு: நீங்கள் பொறுப்பேற்று நடத்தும் வலைத்தளத்துக்காக என்னிடம் படைப்பு கேட்டு உங்கள் கையெழுத்துடன் அனுப்பியிருந்த மின்னஞ்சலை இப்போதும் பொக்கிஷமாக பாதுகாக்கிறேன்.

போலவே பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதியை தூக்கி எறிந்து நான் வாழ்வதாக வாழ்த்தி, போற்றி நீங்கள் அனுப்பிய மெயிலும்.

'சுய சிந்தனையாளரின்' பாராட்டல்லவா? அதனால்தான் அது பொக்கிஷம்.

பதறவேண்டாம். அதை பொதுவில் வைத்து உங்களை 'அம்பலப்படுத்த' மாட்டேன். அது என் வேலையல்ல.
ஆள்காட்டியான நீங்களே தொடர்ந்து அந்த வேலையை செய்யலாம்.

அடுத்து எந்த வலைத்தளத்தில் சந்திக்கலாம்?

இங்கேயேவா? அல்லது வேறு தளத்திலா?

காத்திருக்கிறேன்...

? said...

Bala pls read the below links

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=859:--------3-&catid=38:2006&Itemid=59

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=864:2008-04-25-21-49-29&catid=38:2006&Itemid=59

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=861:2008-04-25-21-31-01&catid=38:2006&Itemid=59

thimir said...

ஆக எழுத்தாளனின் நேர்மை எழுத்தின் நேர்மை பற்றி பேசுகிறீர்கள்

சரி பேசலாம்

பாரதி தவறு என்றால் காந்தி தவறு தேடிப் படியுங்கள் எத்தகைய பெண்பித்தர் ,பாகிஸ்தான் ஒப்பந்த சமயத்தில் நிகழ்ந்த பித்தலாட்டம், நேருவுடன் நிகழ்ந்த ரகசிய ஒப்பந்தம்,
மவுண்ட் பேட்டன் குடும்பத்தில் அவரின் அத்து மீறல் ,நேதாஜியை அழிக்க செய்த சதி ,இன்றைய சாமியார்கள் தோற்று விடுவார்கள் ஆசிரமத்திற்குள் நிகழ்ந்தவை அறிந்தால்

ஆகவே ரூபாய் நோட்டுகள் எரித்து எரித்து விளையாடலாம் சரியா ?

பாரதி கஞ்சா குடித்ததை விட்டு விட்டீர்களே சார்

ம்ம் சிவராமன் :)

சாரு நிவேதிதா தன் வளர்ப்பு மகளை வன்புணர்ந்த வரிகளை எழுதியதால் அவருக்கு பின்னர் நடந்த நர்சிம் பிரச்சினையில் கருத்து கூற தகுதியில்லை என்று சொல்வீர்களா ?

லீனா வை குழுவாய் இணைந்து வன்புணர்ந்த வினவுக்கு பெண் குறியை படம் எடுத்து கோணேஸ்வரி கவிதை போட்டு புரட்சி எழுதிய தமிழச்சி ஆதரவு தெரிவிக்க கூடாதா ?

ஆக மஞ்சூர் ராசா அபி அப்பா மற்றுமான ஆண்களை வன் புணந்ததால் அவர் அல்லது அவர்கள் gay யா அதே பதிவில் பேசப்பட்ட பெண்கள் இதே சொல்லை சொல்லலாமா ?

இப்படி எழுத்தில் மட்டும் அல்லாது நிஜ வாழ்விலும் பலபேர் வாழ்வை கெடுத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் உலவித்திரிகிறோம்

ஆக எழுத்தாளனின் நேர்மை எழுத்தின் நேர்மை பற்றி பேசுகிறீர்கள்

:)

இரும்புத்திரை said...

ஆமா ஆமா பின்ன இல்லையா ஏழர அதிஷா உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்..எட்டப்பன் பத்தி பேசுகிறேன் என்று சொல்லி விட்டு கட்டபொம்மனை நல்லவன் என்று சொல்லி விட்டாயே..அது பீம்சிங் செய்த வேலை..

மானம் கெட்டவனே மச்சான் கெட்டவனே என்ற பன்ச் எல்லாம் கட்டபொம்மன் பேசியதில்லை..பேசியவர் வினவு தளத்தில் அடித்து காயப் போட்டீர்களே அவர்.அவர் பெயர் சிவாஜி..

இரும்புத்திரை said...

கார்த்தி நீ இப்பத்தான் ஒவ்வொரு படைப்பின் மீது விமர்சனம் வைக்கிறாய்..

முதலில் உன்னை கவர்ந்த சினிமா..ஒரு புத்தகம் படித்ததும் பிடிக்காமல் போய் விட்டது.

அதற்கு முன் சாரு பிடித்திருந்தது..இன்று பிடிக்கவில்லை..

அதே வருசையில் இன்று பாரதி..

நாளை கம்யூனிசமும் உன் விமர்சனத்தில் வரும்..

விமர்சனம் வராமலிருந்தால் எனக்கு சந்தோஷம் தான்..ஆனால் வரும்..காரணம் நானும் நீயும் பரவலாக தெரியாத காலத்திலேயே நீ பெரிய ஆளாக வருவாய் என்று நான் சொல்லியிருக்கிறேன்.அது உண்மை என்றால் இதுவும் உண்மை தான்..

டம்பி மேவீ said...

நானும் நீங்க சொல்லிருக்க விஷயத்தை பற்றி யோசிச்சிருக்கேன்...எனக்கு பாரதி திரைப்படம் பிடித்த அளவுக்கு பாரதியை பிடிக்காது. அதனால் அவரை ஒரு விஷயமாக கருதியதில்லை.

ஆனால் மேட்டுகுடி மக்களின் மூக்கை உடைக்கவே அப்படி செய்தார்.

பிறகு அவர் தனது இயலாமையை நினைத்து புலம்பும் வரிகள் படிச்சு இருக்கீங்களா ??? (எனக்கு அது சரியாக ஞாபகமில்லை)

நீங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் அவர் கவிஞர் என்ற நிலைக்கும் குடும்ப தலைவர் என்ற நிலைக்கும் இடைய பெரிய மன போராட்டத்துடன் தான் வாழ்ந்திருக்கிறார்

டம்பி மேவீ said...

எந்தொரு பேசும் தீர்வை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர ..புதுசா பிரச்சனையை கிளப்பி விட கூடாது.

நீங்க சொன்னதை எல்லோரும் ஏற்று கொள்ளும் படி இன்னும் நிறைய விஷயங்களை சாட்சியாக கொண்டு எழுதிருந்தால் நல்ல இருக்கும் ; அது ஒரு தீர்வையும் தந்திருக்கும். பிறகு உங்களது கருதும் ஏற்று கொள்ள பட்டிருக்கும், யாராலும் எதிர்த்து பேச முடியாது

வெண்ணிற இரவுகள்....! said...

கட்டபொம்மன் வரி கட்டினார் என்பது ஒரு புறம் இருக்கட்டும் . ஆனால் அவர் ஆங்கிலேயருக்கு எதிரான அணியை திரட்டிக்கொண்டிருந்தார் .
மேலும் அவர் நினைத்து இருந்தால் , மக்களிடம் மிரட்டி வரி பிடுங்கி இருக்க முடியும் .""மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்''"

கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

இப்படி ஆதாரம் இல்லாமல் நான் சொல்லவில்லை .

வெண்ணிற இரவுகள்....! said...

//mudalil umma PURATCHIKARA russia china yen thorthu poonathunnu aaraaichi panninttu appuram bharathi aaraichikku vamma kuzhanthe....///
சரி ஒரு விடயம் தோற்றது என்பதற்காய் அது தவறான விடயம் ஆகுமா?????? பதிவிற்கு சம்பந்தம் உள்ளதை பின்னூட்டம்
போடலாமே

இப்படிக்கு நிஜாம் ..., said...

மறைக்கப்பட்ட வராலாறுகளில் இதுவும் அடங்குமா தோழரே! யாரைத்தான் நம்புவதோ..

Madumitha said...

எல்லோரும் கொண்டாடும்
விஷயத்தை போட்டு
உடைப்பது என்பது
கவன ஈர்ப்பு முயற்சியா
அல்லது திசைதிருப்பும்
வேலையா?
நம்மிடம் உள்ள உன்னதங்களை
நாமே கொச்சைப் படுத்தும்
அவலத்தை இங்கே மட்டும் தான்
காணலாம்.
சூர்யனுக்கு கீழே உள்ள
அனைத்தையும் விமர்சிக்கலாம்
என்பது சற்று கவலைக்குரியது.

புலவன் புலிகேசி said...

//நாளை கம்யூனிசமும் உன் விமர்சனத்தில் வரும்..

விமர்சனம் வராமலிருந்தால் எனக்கு சந்தோஷம் தான்..ஆனால் வரும்..காரணம் நானும் நீயும் பரவலாக தெரியாத காலத்திலேயே நீ பெரிய ஆளாக வருவாய் என்று நான் சொல்லியிருக்கிறேன்.அது உண்மை என்றால் இதுவும் உண்மை தான்.//

நீங்கள் ஏன் கம்யூனிசம் தோற்றுப் போகும் என்றே நினைக்கிறீர்கள் அரவிந்த்?

உடான்ஸ் கவிஞன் said...

நீங்கள் சொல்வது பொய்யாகவோ ,உண்மையாகவோ இருக்கலாம் ...வரலாறுகள் திரித்தே எழுதப்படுகின்றன .....பழங்கால சாதி என்று சொல்லிகொள்பவர்கள் முதல் இன்று புதிதாய் முளைத்த சாதி வரை 'தாங்கள் தான் பழைய முவேந்தர்கள் என்று சொல்லி , வரலாறு உண்மையும் காட்டுகிறார்கள் '..யாரை நம்புவது ? ...இந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும் ..அப்படி சொன்னால் தன என்ன ? பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு வாழ்கை தெரிந்துருக்கும் ..நீங்கள் போராடியது உண்டா..சும்மா இந்த ப்ளாக் எழுதுவது 'போராட்டம் கிடையாது ' பாஸ் .....சும்மா ' champagne communist ' இருக்ககூடாது .....

அப்புறம் பாஸ் , நீங்க தான அந்த உரையாடல் கவிதை போட்டியில ' ஊசு' நு ஒருத்தர் எழுதிய கவிதை மாதிரியே நீங்கள் எழுதி போட்டிங்களே ..அப்புறம் எதுக்கு பாஸ் 'பாரதிய' குறை சொல்லறீங்க

தர்ஷன் said...

தங்கள் எழுத்துக்களில் மெருகேறி வருகிறது. வாழ்த்துக்கள்.
"ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் இங்கு வாழ்பவரன்றோ" என பறையர்கள் என்றால் ஈனர்கள் என்றும் தாம் அவர்களிலும் உயர்ந்தவர் என்றும் கவிதையிலேயே காட்டிக் கொண்டவர்தானே பாரதி. அவரது சிறுகதை ஒன்று முஸ்லிம்களின் பலதார மணம் பற்றியது. அதில் இஸ்லாமியருக்கு எதிரான துவேஷம் வெளிப்படையாய் இருக்கும். இதெல்லாம் இப்போது தெரிந்தாலும் பாரதியை புரட்சியாளனாக வரித்துக் கொண்ட மனதுக்கு அதை மாற்றிக் கொள்ள தெரியவில்லை விருப்பமுமில்லை.

sethupathy said...

எவரது குறைகளை மட்டும் விமர்சிப்பது என்பது, கணினி முன் அமர்ந்து தட்டச்சு செய்வது போன்று மிக எளிது.

வவ்வால் said...

Bhimsingh padam alla kattabomman,

direction-br.bandhulu,
script-shakthi krishnasami based on ma.po.si drama.

Oomai durai kuraivaga pesuvar enpathal vantha peyar,oomai alla.

Katta bommanai pidithu koduthathu ,puthukottai vijaya ragunatha thondaiman.

Telugu naickar and tamil poligar munpagai.

Ettappanudan ellai sandai.

Ithellam than kattabomman tholvikku kaaranam.

Katta bomman thukilada kaaranam vari kattathathu mattum kaaranam alla. Kollai aditha kurramum undu.

prasanna said...

Please read kattabommans' history also...ur article depicts kattabomman as hero.. both Kattabomman and ettappan were paying tax to british Govt..

வெண்ணிற இரவுகள்....! said...

@sethupathy
//எவரது குறைகளை மட்டும் விமர்சிப்பது என்பது, கணினி முன் அமர்ந்து தட்டச்சு செய்வது போன்று மிக எளிது.//
நண்பரே இது தனிமனிதனை பற்றிய விமர்சனம் என்பது அல்ல . அந்த தனிமனிதனின் செயல் சமூகத்தை பாதிக்கும் பொழுது
அது விமர்சனத்திற்கு வரும் .ஏன் விமர்சனம் செய்வது தவறு என்றே சொல்கிறீர்களா ?????? தவறுகளை திருத்தி கொள்வதிலே
தான் சமூகம் வளரும் நண்பரே ....................சரி கணினியில் தட்டச்சு செய்வது எளிதாகவே இருக்கட்டுமே இந்த பதிவை பற்றி என்ன
நினைக்கிறீர்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

@UDANS POET
//பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு வாழ்கை தெரிந்துருக்கும் ..நீங்கள் போராடியது உண்டா..சும்மா இந்த ப்ளாக் எழுதுவது 'போராட்டம் கிடையாது ' பாஸ் .....சும்மா ' champagne communist ' இருக்ககூடாது .....
அப்புறம் பாஸ் , நீங்க தான அந்த உரையாடல் கவிதை போட்டியில ' ஊசு' நு ஒருத்தர் எழுதிய கவிதை மாதிரியே நீங்கள் எழுதி போட்டிங்களே//
என்ன போராடி தோற்றவன் என்று சொல்ல முடியுமா ?????? நண்பரே எனக்கு ஊசு என்று யாரையும் தெரியாது . நான் ஒன்றும் பெரிய கவிஞன்
இல்லை , தப்பும் தவறுமாய் தான் எழுதுவேன் , கவிதை எழுதும் பொழுது நான் எங்கயோ படித்த விடயம் பிரதிபலிக்கலாம் . அது பிரச்சனை
அல்ல நான் கவிங்கனாக என்னை சொல்லிக்கொள்ள வில்லை . ஆனால் பாரதி ஒரு ஆளுமை என்று சொல்லப்படும் பொழுது ................
அவர் புரட்சிக்கவி என்று சொல்லும் பொழுது தேசியக்கவி என்று சொல்லும் பொழுது , அவர் அப்படி என்ன போராடினார் என்று கொஞ்சம் விளக்குங்கள் .

சரி ப்ளாக் எழுதி போராட முடியுமா முடியாதா என்பது விடயம் அல்ல. விடயத்தை கொண்டு போய் சேர்ப்பது உங்களுடன் விவாதம் செய்வது ,உளவியல்
ரீதியான ஒரு போராட்டமே . சரி என்னை விடுங்கள் , ப்ளாக் எழுதும் நிறைய தோழர்கள் உண்டு நண்பரே , வினவு தளம் ஒரு சிறந்த உதாரணம் ,.............

ப்ளாக் எழுதுவதை சாதரணமாய் சொல்கிறீர்கள், ஏன் தண்டகாரண்யா பற்றி மாவோயிஸ்ட் ஆதரவாக ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம். ஆதாரப்பூர்வமாய்
நீங்கள் அதை ஆதரப்பிவர் என்று தளத்திலேயே இருக்கும் . அதனால் ப்ளாக் எழுதுவதை குறைத்து மதிப்பிட வேண்டாம் . அப்படி மதிப்பிடுபவர்கள்
ஏன் ப்லோகுகளை படிக்கிறீர்கள் பொழுது போகாமலா ???????????

வெண்ணிற இரவுகள்....! said...

//பாரதி போராடி தோற்றவன் .....அவனுக்கு வாழ்கை தெரிந்துருக்கும் ..நீங்கள் போராடியது உண்டா..சும்மா இந்த ப்ளாக் எழுதுவது 'போராட்டம் கிடையாது ' பாஸ் .....சும்மா ' champagne communist ' இருக்ககூடாது .....
அப்புறம் பாஸ் , நீங்க தான அந்த உரையாடல் கவிதை போட்டியில ' ஊசு' நு ஒருத்தர் எழுதிய கவிதை மாதிரியே நீங்கள் எழுதி போட்டிங்களே//
என்ன போராடி தோற்றவன் என்று சொல்ல முடியுமா ?????? நண்பரே எனக்கு ஊசு என்று யாரையும் தெரியாது . நான் ஒன்றும் பெரிய கவிஞன்
இல்லை , தப்பும் தவறுமாய் தான் எழுதுவேன் , கவிதை எழுதும் பொழுது நான் எங்கயோ படித்த விடயம் பிரதிபலிக்கலாம் . அது பிரச்சனை
அல்ல நான் கவிங்கனாக என்னை சொல்லிக்கொள்ள வில்லை . ஆனால் பாரதி ஒரு ஆளுமை என்று சொல்லப்படும் பொழுது ................
அவர் புரட்சிக்கவி என்று சொல்லும் பொழுது தேசியக்கவி என்று சொல்லும் பொழுது , அவர் அப்படி என்ன போராடினார் என்று கொஞ்சம் விளக்குங்கள் .

சரி ப்ளாக் எழுதி போராட முடியுமா முடியாதா என்பது விடயம் அல்ல. விடயத்தை கொண்டு போய் சேர்ப்பது உங்களுடன் விவாதம் செய்வது ,உளவியல்
ரீதியான ஒரு போராட்டமே . சரி என்னை விடுங்கள் , ப்ளாக் எழுதும் நிறைய தோழர்கள் உண்டு நண்பரே , வினவு தளம் ஒரு சிறந்த உதாரணம் ,.............

ப்ளாக் எழுதுவதை சாதரணமாய் சொல்கிறீர்கள், ஏன் தண்டகாரண்யா பற்றி மாவோயிஸ்ட் ஆதரவாக ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம். ஆதாரப்பூர்வமாய்
நீங்கள் அதை ஆதரப்பிவர் என்று தளத்திலேயே இருக்கும் . அதனால் ப்ளாக் எழுதுவதை குறைத்து மதிப்பிட வேண்டாம் . அப்படி மதிப்பிடுபவர்கள்
ஏன் ப்லோகுகளை படிக்கிறீர்கள் பொழுது போகாமலா ???????????

வெண்ணிற இரவுகள்....! said...

@Madumitha
//எல்லோரும் கொண்டாடும்
விஷயத்தை போட்டு
உடைப்பது என்பது
கவன ஈர்ப்பு முயற்சியா
அல்லது திசைதிருப்பும்
வேலையா?//
இது திசை திருப்பும் வேலை எல்லாம் இல்லை . பாரதியின் வாழ்க்கையிலேயே ஆதாரங்கள் இருக்கிறதே .
மக்கள் தான் வரலாறு சொல்லிக்கொடுக்கும் பொய்யால் திசைத்திருப்ப பட்டுள்ளனர்

உடான்ஸ் கவிஞன் said...

பைத்தியக்காரனுக்கு ,
நீங்கள் எவர் பற்றியும் எழுத யோக்கியதை உங்களுக்கு இல்லை ....'உரையாடல் கவிதை ' போட்டி முடிவுகள் ' பின்னூட்டத்தில் என் மூன்று பின்னூட்டம் மட்டும் போட்டு கடைசி பின்னூட்டம் பிரசுரம் செய்யாமல் விட்டு , ' வாழ்த்துக்கள்' போன்ற பின்னூட்டம் மட்டும் பிரசுரம் செய்த யோக்கியதை உள்ள மனிதர் , மற்றவர்கள் அல்லது போலித்தனங்களை சாடுவது வேடிக்கையாக உள்ளது!!!! .....
பாஸ் , உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ...புத்தகத்தை ஒழுங்காக படிக்கவும் .... சயின்ஸ் பற்றி எழுதினால் கொஞ்சமாவது ' nature ' போன்ற பத்திரிக்கைகள் , mandelbrot மாதிரி மனிதர்கள் அல்லது அதன் principles பற்றி நன்கு படித்து எழுதுவது நல்லது .... வணிகம் பற்றிய உங்கள் கட்டுரை மிக கேவலமாக உள்ளது ..கொஞ்சம் 'economic principles ' பற்றி படித்து அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கொஞ்சமாவது 'சுயமாக' சிந்தித்து இனிமேலாவது எழுதுங்கள் ...............
நான் ' நான்கு தத்துவ புத்தகங்கள்' படித்து விட்டால் நான் ஒன்றும் தத்துவ ஞானி இல்லை ...அது வாழ்க்கையின் சாரம் ... வாழ்க்கையில் வாழ்பவருக்கே , வாழவிரும்பவர்களுக்கே புரியும் ... உண்மையான தத்துவ புத்தகங்கள் அல்லது ஞானிகளை எளிதில் புரிவது என்பது கடினம் ... நீங்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் 'ஆறாம் வகுப்பு ' பையன் e= mc^2 சொல்லிகொடுத்தால் எப்படி எழுதுவானோ அப்படி உள்ளது ................

வெளிநாட்டில் , இங்கு சுஜாதா போன்றவர்கள் பல துறைகளை பற்றி எழுதும் பொது அதை புரிந்து , கஷ்டப்பட்டு அறிந்து எழுதுகிறார்கள் ....... நான்கு புத்தகங்கள் படித்ததனால் எழுதுவதில்லை ......நீங்கள் , ரொம்ப கஷ்டம் பாஸ் ...கொஞ்சமாவது திருந்துங்க ... நல்ல நெறைய புத்தங்கங்களை 'ஒழுங்கா' படிங்க பாஸ் ......'முதல படிங்க அப்புறம் நம்ம நெறைய எழுதலாம்' ....'இந்த கூற்று என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும் ;.... பாரதியை அவர் காலம் முதல் அழிக்க நினைத்தவர்கள் அதிகம் .....பொய்யும் புரட்டும் அதிகம் இருக்கலாம் ...நான் ப்ளாக் படிப்பதில்லை .. நண்பன் இந்த லிங்க் அனுப்பியதால் பின்னூட்டம் இட நேர்ந்தது ...... முதல நாம திருந்துவோம் அப்புறம் மற்றவர்களை பற்றி குறை சொல்லலாம் , எழுதலாம் ......

உடான்ஸ் கவிஞன் said...

வெளிநாட்டில் , இங்கு சுஜாதா போன்றவர்கள் பல துறைகளை பற்றி எழுதும் பொது அதை புரிந்து , கஷ்டப்பட்டு அறிந்து எழுதுகிறார்கள் ....... நான்கு புத்தகங்கள் படித்ததனால் எழுதுவதில்லை ......நீங்கள் , ரொம்ப கஷ்டம் பாஸ் ...கொஞ்சமாவது திருந்துங்க ... நல்ல நெறைய புத்தங்கங்களை 'ஒழுங்கா' படிங்க பாஸ் ......'முதல படிங்க அப்புறம் நம்ம நெறைய எழுதலாம்' ....'இந்த கூற்று என்னையும் சேர்த்து எல்லோருக்கும் பொருந்தும் ;.... பாரதியை அவர் காலம் முதல் அழிக்க நினைத்தவர்கள் அதிகம் .....பொய்யும் புரட்டும் அதிகம் இருக்கலாம் ...நான் ப்ளாக் படிப்பதில்லை .. நண்பன் இந்த லிங்க் அனுப்பியதால் பின்னூட்டம் இட நேர்ந்தது ...... முதல நாம திருந்துவோம் அப்புறம் மற்றவர்களை பற்றி குறை சொல்லலாம் , எழுதலாம் ......

உடான்ஸ் கவிஞன் said...

பைத்தியக்காரனுக்கு ,
நீங்கள் எவர் பற்றியும் எழுத யோக்கியதை உங்களுக்கு இல்லை ....'உரையாடல் கவிதை ' போட்டி முடிவுகள் ' பின்னூட்டத்தில் என் மூன்று பின்னூட்டம் மட்டும் போட்டு கடைசி பின்னூட்டம் பிரசுரம் செய்யாமல் விட்டு , ' வாழ்த்துக்கள்' போன்ற பின்னூட்டம் மட்டும் பிரசுரம் செய்த யோக்கியதை உள்ள மனிதர் , மற்றவர்கள் அல்லது போலித்தனங்களை சாடுவது வேடிக்கையாக உள்ளது!!!! ..... பாஸ் , உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் ...புத்தகத்தை ஒழுங்காக படிக்கவும் .... சயின்ஸ் பற்றி எழுதினால் கொஞ்சமாவது ' nature ' போன்ற பத்திரிக்கைகள் , mandelbrot மாதிரி மனிதர்கள் அல்லது அதன் principles பற்றி நன்கு படித்து எழுதுவது நல்லது .... வணிகம் பற்றிய உங்கள் கட்டுரை மிக கேவலமாக உள்ளது ..கொஞ்சம் 'economic principles ' பற்றி படித்து அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை கொஞ்சமாவது 'சுயமாக' சிந்தித்து இனிமேலாவது எழுதுங்கள் ...............
நான் ' நான்கு தத்துவ புத்தகங்கள்' படித்து விட்டால் நான் ஒன்றும் தத்துவ ஞானி இல்லை ...அது வாழ்க்கையின் சாரம் ... வாழ்க்கையில் வாழ்பவருக்கே , வாழவிரும்பவர்களுக்கே புரியும் ... உண்மையான தத்துவ புத்தகங்கள் அல்லது ஞானிகளை எளிதில் புரிவது என்பது கடினம் ... நீங்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் 'ஆறாம் வகுப்பு ' பையன் e= mc^2 சொல்லிகொடுத்தால் எப்படி எழுதுவானோ அப்படி உள்ளது ................

உடான்ஸ் கவிஞன் said...

விக்கிப்பீடியா அருமையான தகவல் களஞ்சியம் ..ஐயமில்லை ... ஆனால் அவை ' proof ' எடுத்துக்கொள்ளபடாது .. பிரித்தானியா அப்படி அல்ல ..உண்மையை அறிந்தே எழுதுகிறார்கள் ..நான்கு புத்தங்கங்களை படித்து எழுதுவதில்லை ...அதனாலே இன்றும் அது போற்றபடுகிறது ..... ஒரு ' sensitive ' விஷயம் எழுதும் பொழுது பிரித்தானியா போல் செயல்படுங்கள் ...விக்கிபீடியா போல் அல்ல .. வினவு நான் போன்ற மனிதர்கள் மதிப்பது இல்லை ....விக்கிபீடியா நல்ல விஷயம் ..வினவு விஷம்...போலியும், புரட்டும் உள்ள , நடுநிலை இல்லா விஷம்

வெண்ணிற இரவுகள்....! said...

நடுநிலை என்று நீங்கள் சொல்வது எதை .....................???????
மக்களுக்காக போராடுவது நடுநிலை இல்லையோ ???????
உலக புத்தகங்களை படிப்பதை விட மனிதர்களை படியுங்கள் உடான்ஸ் ...
மக்களுக்கான இலக்கியமே இலக்கியம் ..........நான் சுஜாதாவை , பாரதியை எல்லாம்
ஒத்துக்கொள்வதில்லை .....................நீங்கள் சொல்வதை போல் ஆதராமல் இல்லாமல் எழுதவில்லை
பாரதி தலித் பையனுக்கு பூணல் போட்டார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது ...............
அந்த கடிந்தகளும் ஆதாரத்துடன் வந்ததே

KANTHANAAR said...

//பாரதி தலித் பையனுக்கு பூணல் போட்டார்//
Amaam... pottaar enbathu unmaithaan.. athanaal enna... avarukku appothu therintha murpokku endru ninaiththai seithaar.. athanaal enna... avar ondrum computer professional-aga irunthukondu lachakanakkil sampaathithu computeril etho ezhithavara....? Avar soathukku su................ Avar kalathil saathi matham enna veeriyaththil irunthathu endru yentha KOMBANAALUM yosikka mudiyaathu.. Periyaar kalathukku munthiya tamilnadu athu...Avarai viduthalai porali endru naan othukkolla maatteen.. Maaraga tamilukku pudu velicham paaichiyavar endru solven.

வெண்ணிற இரவுகள்....! said...

THANKS http://poar-parai.blogspot.com
om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.

To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.

I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.

************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்
**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====

நன்றி, கற்பக விநாயகம்!
*****
திண்ணையில் வந்த மலர்மன்னனுடைய பாரதியார் பற்றிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக கற்பக விநாயகம் எழுதி திண்ணையில் இந்த வாரம் வந்த கட்டுரையை முழுமையாக இங்கு மறு பிரசுரம் பண்ணச் சொல்லி என்னை கற்பக விநாயகம் கேட்டுக் கொண்டார். இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், இந்து மத வெறி பாசிச சூழலில் பாரதி பற்றிய ஆக்கப் பூரவமான ஒரு மறு மதிப்பீடிற்க்கு இந்த கட்டுரை பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கையில் அதை பிரசுரிக்கிறேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

thanks
http://poar-parai.blogspot.com

'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி? வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த பதிவில் அனைத்து ஆதாரங்களும்

http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_16.html

பாலா said...

//ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்

நண்பரே இந்த வரியில் "நீங்கள் ஈனப்பரயர்கள் என்று சொல்பவர்களும் நம்மோடு வாழ்பவர்கள்தான்" என்றுதானே அர்த்தம் கொள்ள வேண்டும்.நீங்கள் கூட உங்கள் பதிவுகளில் பிற்படுத்தப்பட்ட என்று வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள். அதன் நோக்கம் என்ன? பிறரால் பிற்படுத்தப்பட்ட என்று அர்த்தமா? இல்லை தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமா?

Pareethi said...

Sir I want vennira iravugal book in tamil. Where can i get it.

Unga Karuthugal etru kolla mudiyathavaiyaga erunthalum...
Unnmaiyaga eruka vaippu eruku.
En aka solluval...
Sila unmaigal kasakum endru.
Nalla velai...
Naan barathi yai antha alavuku rasika villai.
Erunthalum enakae oru sila valigal Erpadum pothu... barathi yin rasigargal enna sivargal...

sethupathy said...

௧) பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அவன் சராணகதி அடைய காரணங்கள் நிறைய இருக்கலாம்.. பெரியார் போல் அவனுக்கு சொத்தோ, மிகப்பெர்ய ஆதரவே இல்லை. மேலும் அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு.

௨)"சாதிகள் இல்லையடி பாப்பா, என்று குழந்தைகளுக்கு மட்டுமே சொல்கிறார்" logic சகிக்கவில்லை.

௩)பூணூல் அணிந்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று சொன்னபடியால், அவன் தலித் மக்களுக்குப் பூணூல் அணிவித்தான். அவன் குழந்தை அவனுக்குத் தெரிந்த அரசியல் அவ்வளவுதான்.


மற்றபடி சாதிகள் இல்லையென்றும் பெண்ணுரிமைக்கென்றும் தமிழகத்தில் முதலில் உரக்க ஒலித்த குரல் அவன் குரல்தான். (முதன்முதலாக சமூகத்தை எதிர்த்து அதுவும் அவன் சார்ந்த சமூகத்தை அவனே எதிர்ப்பதென்பதே பெரிய செயல்)

(தங்களின் வேறெந்தக் கருத்துக்கும் என்னிடம் சரியான மறுப்பு இல்லை, எந்த நிலைமையில் அப்படிப்பட்ட செயல்கள்/கருத்துக்களைச் சொன்னான்/செய்தான் எனத் தெரியவில்லை)

மற்றபடி பெரியார் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.

பிறரைக் குறைகூறுவதற்கு முன் நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா எனப்பார்க்க வேண்டும்.

(இறுதி வாக்கியம் எனக்கும் பொருந்தும். தாங்கள் எப்படிப்பட்டவர், தங்களின் சமூகப் பங்களிப்பு என்ன.. எனத் தெரியாமலே.. உங்களை விமர்ச்க்கிறேன். மன்னிக்கவும்)

வெண்ணிற இரவுகள்....! said...

@sethupathi
//பூணூல் அணிந்தவர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று சொன்னபடியால், அவன் தலித் மக்களுக்குப் பூணூல் அணிவித்தான். அவன் குழந்தை அவனுக்குத் தெரிந்த அரசியல் அவ்வளவுதான்.//
அவன் குழந்தை ....என்றால் பார்பனீயத்தை தூக்கி பிடிக்கிறவர்களும் குழந்தை தான் என்று விட்டு விட முடியுமா .

வெண்ணிற இரவுகள்....! said...

// பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் அவன் சராணகதி அடைய காரணங்கள் நிறைய இருக்கலாம்.. பெரியார் போல் அவனுக்கு சொத்தோ, மிகப்பெர்ய ஆதரவே இல்லை. மேலும் அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு./அவன் சரணடைந்த காலம் ஜாலியன் வாலபக்ஹ போன்ற கொந்தளிப்பான கால கட்டம் . அந்த காலத்தில் அரசு வேலை என்பது மிகவும் உசந்தது . அந்த வேலையை எல்லாம் விட்டு விட்டு மக்கள் போராட்டத்தில் களத்தில் நிற்க்கும் கால கட்டத்தில் . சூழ்நிலைகளை எப்படி குறை சொல்ல முடியும் . மேலும் பாரதிக்கு மட்டும் தான் பெண் குழந்தையா ????

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே கடைசி வரி யாரெல்லாம் அப்படி நினைக்கிறார்களோ அவர்களுக்கே பொருந்தும் . நான் இன்னும் எதுவும் பெரிதாய்
செய்யவில்லை ,நான் சராசரிக்கு கம்மி என்று தான் நினைப்பேன் . அது தன்னை சராசரி என்று சொல்லி விட்டு , அவர்களை
தியாகி என்று சொல்பவர்களுக்கு மட்டும்

வெண்ணிற இரவுகள்....! said...

//பிறரைக் குறைகூறுவதற்கு முன் நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா எனப்பார்க்க வேண்டும்.//
நீங்கள் சொல்வதை பார்த்தல் கலைஞர் ஜெயலலிதாவை , கூட யாரும் விமர்சனம் செய்ய முடியாது .
கடவுள் மறுப்பு விமர்சனம் என்றால் கூட சங்கரராய் தொண்டு செய்து விட்டு தான் கடவுளை
மறுக்க வேண்டும் என்று சொல்வீர்கள் போல .
ஏதாவது செய்வது முக்கியம் அல்ல . பாரதி கூட ஏதாவது தான் செய்தான் , அதனால் தான் விமர்சனம் .
அவன் விடயம் சமூகத்தை தாக்குகிறதே .......................................
எந்த விடயம் சமூகத்தை தாக்குகிறதோ அதை பற்றிய விமர்சனம் தேவை என்றே நினைக்கிறேன் .
நான் என்னைப்பற்றி தன்னிலை விளக்கம் கொடுக்க போவதில்லை , என்னால் கொடுக்க முடியும்
செயல்கள் முக்கியம் என்பதை நான் அறிவேன் .............

வெண்ணிற இரவுகள்....! said...

ஈன என்ற சொல் பிரயோகம் தவறு பாலா

sethupathy said...

கேள்வி நியாயமானது தான்.
அனைவரையும் மன்னிக்கத் தேவையில்லை.. பாரதி காலத்தில் இவ்வளவு விழிப்புணர்வு இல்லை என எண்ணுகிறேன்.

KANTHANAAR said...

//குழந்தை தான் என்று விட்டு விட முடியுமா .//
சரி விடாதே... புடிச்சிகிடும்... நீர அதைவிட பெரிய குழந்தை என்று நிருபித்துக் கொள்ளும்... யார் வேண்டாம் என்று சொன்னது...

உடான்ஸ் கவிஞன் said...

பாஸ் , இன்னும் கிராமத்தில 'கவுண்டன் ' பேரு வச்சு தான் கூப்பிடுறாங்க ...அதற்காக அவங்க 'சாதி' வெறியனு சொல்ல முடியுமா ..பாரதி காலத்துல பார்த்துக்கோங்க ..வர்த்தைகள வச்சு 'இந்த காலத்து 'காதல்' மாதிரி ஏமாந்துராதீங்க .... பாரதி கிட்ட அன்பு தான் இருக்கு ..பாரதிய உங்களால புரிஞ்சுக்க முடியலனா 'காந்தி' யா உங்களால புரிஞ்சுக்க முடியாது ..
இந்த 'கடிதத்த ' வச்சு ஒருத்தரு புத்தகம் வேற போட்டுரிக்காறு .. சத்தியமா உங்களால 'காந்தி' யின் 'அன்ப' புரிஞ்சுக்க முடியாது ...ஹையோ!! ஹையோ!!

பெரியாருக்கு ஆஸ்கார் , நோபெல் கொடுத்துருவோம் ..உங்க சேவையை பாராட்டி 'கலைமாமணி ' கொடுத்துருவோம்..வேற வேலைய பாருங்க பாஸ்

உடான்ஸ் கவிஞன் said...

பாரதியை காட்டிலும் உங்கள் அறிவு , என் அறிவு அதிகம் .இதில் ஐயமில்லை ....ஆனால் 'அந்த தெளிவு ,அறிவு ' வள்ளுவர்,கம்பன்,சாக்ரடீஸ் ,பாரதி ,பெரியார், என்று உலக அறிஞர் களின் குவியலே என்பதை மறந்து விடக்கூடாது ..நீங்கள் உங்கள் காலத்தில் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து தான் உங்களை எடை போட முடியும் ...சிந்தனைவாதிகள் ,விஞ்ஞானிகள் அப்படித்தானே எடை போடபடுகிறார்கள் ... கலிலீயோ , நியூட்டன் மகத்துவம் ஐன்ஸ்டீன் ,பாய்ந்கேர் போன்ற விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பால் குறையவில்லை ..சான்றோர் அப்படித்தான் பாராட்டப்படுகிறார்கள், பாராட்டுகிறார்கள் ....நீங்கள் எவ்வகை ?

பைத்தியக்காரன் , ஜ்யோவ்ராம் சுந்தர் , நரசிம் ,வினவு , திவாகர் போன்ற 'குறை குடங்கள் ' தாங்கள் தான் மேதாவிகள், மெத்தப்படித்தவர்கள் என்று கண்டதை உளறுகிறார்கள்..அவர்களுக்கு தூக்கிகள் வேறு !! ரொம்ப கஷ்டம் .... கொஞ்சம் படித்த இவர்களை நம்புவது பல பேர் என்பது வருத்தத்துக்குரிய விஷயம் ...இவர்களிடத்தில் 'விசாலமான வாசிப்பு ,பரந்த அறிவு , தெளிவு , மேசுரிட்டி இல்லை '.....ஆங்கிலமும் ,தமிழும் சுத்தம் ..இருந்தும் இரண்டையும் கெடுத்து , மக்களையும் கெடுக்கிறார்கள் ...இவை எல்லாம் அவர்கள் எழுதும் 'கட்டுரைகளில் ' தெளிவாக தெரிகிறது ....இதில் 'இவர்களின்' போலியான தன்னடக்கம் ' வேறு....இவர்களால் 'ப்ளாக்' போன்ற நல்ல கண்டுபிடிப்புகள் வீணடிக்கிறார்கள் ...நீங்களாவது 'விசாலமாக' வாசித்து,மக்களை 'ஆழமாக' அறிந்து, தெளிவு பெற்று செயல்படுங்கள்