1.மின் இயந்திரங்கள் சிறப்பாய் செயல்படுகிறது (பா சிதம்பரம் வெற்றியே சான்று) நவீன் குப்தா
தமிழகத்தில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படாது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா கூறியுள்ளார்.மேலும் தமிழ் நாட்டில் இயந்திர வாக்கு பதிவு தமிழகத்தில் திருப்தியாய் இருக்கிறது என்று கூறியுள்ளார். சரி உள்துறை அமைச்சர் பா சிதம்பரம் எப்படி ஜெயித்தார் என்று ஊருக்கே தெரியும் . இதன் பெயர் ஜனநாயகமா, மக்கள் என்ன தான் வாக்களித்தாலும் முடிவு செய்யப்போவது இயந்திரம் . ஜனநாயக தேசத்தில் பேசுவதற்கு உரிமைஇருக்கும் ஒரு தேனீர் கடையில் உட்க்கார்ந்து நாம் பா சிதம்பரத்தை திட்ட முடியும் , ப்ளாக் போன்ற இடங்களில் எழுத முடியும் . ஆனால் செயல் உண்மையான ஜனநாயகம் பணம் படைத்தவனுக்கே , எப்படி மக்களுக்கு வாக்களிக்க உரிமை உண்டு , ஆனால் அந்த இயந்திரம் மட்டுமே முடிவுகளை முடிவு செய்ய முடியும். மக்கள் பா சிதம்பரத்திற்கு எதிராய் வாக்களிக்கலாம் ஆனால்
இயந்திரம் பணம் படைத்தவனுக்கு தானே சாதகமாய் இருக்கும் , இது வெளியில் ஜனநாயகம் போலவும் உள்ளே மக்களை ஒடுக்கவும் முடிகிறது . மன்னராட்சியை விட ஜனானயகத்தில் தான் தவறுகளும் செய்து கொண்டு , ஜனநாயக முறையில் இருப்பதை போன்ற விடயங்களை செய்ய முடியும் .
2. ஏன் கலைஞர் தன் பேரன் படத்திற்கு வசனம் எழுதவதில்லை
கலைஞர் வீட்டில் இருந்து இன்னொரு பேரன் சினிமாவில் நடிக்க வருக்கிறார் , அருள்நிதி , படம் பெயர் வம்சம் . கலைஞர் பேரன் விழாவே தாத்தவே பாடல்களை வெளியிட்டார் , இந்த மானம் கெட்ட விஜய் சூர்யா ரிலீஸ் செய்தார்கள் . அதற்க்கு கலைஞர் "வம்சம் " என்பதற்கு விளக்கம் கொடுத்தார் "விஜய் சூர்யா எந்த வம்சத்தில் இருந்து வந்தார்கள் என்று தெரியும் " என்பது போல பேசி உள்ளார் . அதாவது கலைஞரின் பேரனாம் அதனால் நடிப்பு வருமாம்,ஏன் என்றால் வம்சமாம் . கலைஞர் பேரன் என்ற அடையலாம் இல்லை என்றால் அந்த அருள் நிதியால் ஒரு நகைச்சுவை நடிகறாய் கூட ஆகி இருக்க முடியாது என்பதே உண்மை . பேரன் கண் கலங்கியதை பத்திரிகைகள் ஏதோ ஒரு பெரிய விடயம் போல காட்டுகின்றன . ஏன் அப்பா ஈழத்தில் ஒரு இனம் அழிந்த பொழுது அழாத பத்திரிகை இப்பொழுது அழுகிறது .இந்த காட்சியும் ஜனநாயகத்தில் தான் முடியும் . ஏன் கலைஞர் தன் பேரனுக்கு வசனம் எழுதவில்லை , தன் பேரன் தயாரிக்கும் RED GIANT அல்லது CLOUD NINE இல்லை சன் pictures படங்களுக்கு வசனம் எழுதலாமே , ஏன் செய்யவில்லை , கமல் கலைஞர் தான் சிறந்த திரைக்கதை வசனம் எழுதுவார் என்பாரே , கமல் ஏன் நடிக்கவில்லை . தன் பேரன் என்று வரும்பொழுது சிறந்த இயக்குனர் தேவை படுக்கிறார் . இந்த கொடுமை எல்லாம் ஜனநாயகத்தில் மட்டுமே நடக்கக்கூடியது . முடியாட்சி போல , சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் வாரிசுகளே தான் ,தகுதி எல்லாம் தேவை இல்லை . இது எல்லாமே ஜனநாயகத்தில் தான் சாத்தியம் .
3 கடவுள் இருக்கிறார் ஜனநாயகத்தை காப்பாற்ற
கல்லூரி விடயத்தில் பங்காரு அடிகளார் மாட்டி உள்ளார் , நித்யா நிலைமை கொஞ்சம் மோசம் . ஜெயந்திரர் மத நாடு என்பதால் ,தப்பிக்கொண்டு இருக்கிறார் , பார்பனீயம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல .....ஆனால் இன்றும் ஆன்மீக வாதிகளிடம் சிக்கிக்கொள்ளும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது . அரசியல் வாதிகள் மதங்களை கடவுள் நம்பிக்கயை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள் , மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்ப ஒரு அபின் போன்ற போதை தேவை , கடவுளோ சாமியாரோ ஒரு அபின் போல மனிதனுக்கு இருக்கிறான் .மனிதனின் சோகம் மறக்க தேவைப்படுக்கிறார் கடவுள் . ஒரு ஜனநாயக நாட்டிலே ஜனநாயகம் என்னும் அமைப்பை காப்பாற்ற கடவுள் தேவை .
4 . சமீபத்தில் கடையில் தொங்க விடப்பட்ட பேப்பர் பார்த்தேன் . "விஜய் ஜாதகம் எப்படி உள்ளது " போன்ற ஆராய்ச்சி . நாட்டிற்க்கு ரொம்ப முக்கியம் .
டிஸ்கி :
அருள் நிதி போன்றவர்கள் நடிகர்கள் ஆவதும் . பணக்காரர்களின் ஆளும் வர்க்கத்தின் குடும்ப பாசம் அவர்களின் குலப்பெருமை பற்றி பெருமையாய் பேசுவதும் .நடிகர்கள் கலைஞரை பாராட்டுவதும் , அது சன் அல்லது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப படுவதும் ஒரு விடுமுறை நாளை அதற்காய்
துலைத்து அந்த நிகழ்ச்சியை பார்த்து நெகிழும் மனநிலையும் ஜனநாயகத்திலே மட்டுமே சாத்தியம் .
11 comments:
பதிவின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.
விமர்சனகள் விவாதங்கள் வரவேற்க படுகின்றன
நீங்கள் இன்னமும் பத்து ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கிறீர்கள்.
இன்று உள்ள ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் இளைஞர்களும் சரி, பத்திரிகை நிருபர்களும் சரி இந்த மாதிரி புது முகங்களிடம் ரசிகர் மன்றம் வைக்கிறோம், போஸ்டர் அடிக்கிறோம், உங்களை பற்றி எங்கள் பத்திரிக்கையில் புகழ்ந்து எழுதுகிறோம் என்று சொல்லி சொல்லி நிறைய பணம் கறந்து விடுகிறார்கள், அரசு ஒப்பந்தங்களும் பெற்று பணம் பார்த்து விடுகிறார்கள்.
கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்பவன் முட்டாள் அல்ல இன்று, அட்வான்சாக நாற்பதாயிரம் ரூபாய் வாங்கி கொண்டு தான் பால் அபிஷேகம், சூடன் கொளுத்துடல்
Athenna பங்காரு "அடிகளார்" nu mariyadhaiyaa kurippittu irukeenga..... Just Bangaru is enough...
ஜனநாயகமாம்....
வெட்கக்கேடு நண்பா....
நண்பரே உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என் தளத்தில்
நன்றி...
http://balapakkangal.blogspot.com/2010/07/blog-post_06.html
நாட்டு நடப்புகளை அலசியிருக்கிறீர்கள் போலும்... நன்று! உங்கள் பதிவை மேலோட்டமாக மேய்ந்ததில் என் குருட்டு விழிகளுக்குப் புலப்பட்டவை...
1 . //விட ஜனானயகத்தில் தான் தவறுகளும்//
ஜனானயகத்தில் - ஜனநாயகத்தில்
2 . //படத்திற்கு வசனம் எழுதவதில்லை//
எழுதவதில்லை - எழுதுவதில்லை
3 . //சினிமாவில் நடிக்க வருக்கிறார்//
வருக்கிறார் - வருகிறார்
4 . //கலைஞர் பேரன் விழாவே தாத்தவே//
விழாவே தாத்தவே - விழாவில் தாத்தாவே
5 . //அதற்க்கு கலைஞர் "வம்சம் " என்பதற்கு//
அதற்க்கு - அதற்கு
6 . //கலைஞர் பேரன் என்ற அடையலாம் இல்லை//
அடையலாம் - அடையாளம்
7 . // ஒரு நகைச்சுவை நடிகறாய் கூட//
நடிகறாய் - நடிகராய்
தமிழ் நம் தாய்மொழி... அதையாவது தவறில்லாமல் எழுதுங்கள்... நன்றி!
நாட்டு நடப்புகளை அலசியிருக்கிறீர்கள் போலும்... நன்று! உங்கள் பதிவை மேலோட்டமாக மேய்ந்ததில் என் குருட்டு விழிகளுக்குப் புலப்பட்டவை...
1 . //விட ஜனானயகத்தில் தான் தவறுகளும்//
ஜனானயகத்தில் - ஜனநாயகத்தில்
2 . //படத்திற்கு வசனம் எழுதவதில்லை//
எழுதவதில்லை - எழுதுவதில்லை
3 . //சினிமாவில் நடிக்க வருக்கிறார்//
வருக்கிறார் - வருகிறார்
4 . //கலைஞர் பேரன் விழாவே தாத்தவே//
விழாவே தாத்தவே - விழாவில் தாத்தாவே
5 . //அதற்க்கு கலைஞர் "வம்சம் " என்பதற்கு//
அதற்க்கு - அதற்கு
6 . //கலைஞர் பேரன் என்ற அடையலாம் இல்லை//
அடையலாம் - அடையாளம்
7 . // ஒரு நகைச்சுவை நடிகறாய் கூட//
நடிகறாய் - நடிகராய்
தமிழ் நம் தாய்மொழி... அதையாவது தவறில்லாமல் எழுதுங்கள்... நன்றி!
பின் குறிப்பு:
இந்த பின்னூட்டத்தை நீங்கள் பதிவேற்றம் செய்யப்போவதில்லை என்பது என் கணிப்பு...
// Jey said...
பதிவின் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.//
repeat
@nandu
//நாட்டு நடப்புகளை அலசியிருக்கிறீர்கள் போலும்... நன்று! உங்கள் பதிவை மேலோட்டமாக மேய்ந்ததில் என் குருட்டு விழிகளுக்குப் புலப்பட்டவை...///
நண்பரே எனக்கு அந்த வார்த்தைகள் தெரியாமல் இல்லை அலுவல் போகும் அவசரத்தில் பதிவை எழுதுகிறேன் .................. ஆனால் விடயம்
உங்களுக்கு புரிந்தது சரி தானே ................
விடயத்தில் நீங்கள் இதை போல பாயிண்ட் வைத்து உங்களிடம் விவாதத்தை எதிர்பார்க்கிறேன் .....................
நீங்கள் எதை பிழை என்று நினைக்கிறீர்கள் , சமூக பார்வை சரி தானே ........................
நன்றாய் தமிழ் எழுதத்தெரியவில்லை என்பதை நானே ஒத்துக்கொள்வேன் .....................
நீங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுங்கள் தவறில்லை ........................ஆனால் நான் சொல்ல வந்த கருத்திற்கு விவாதம் செய்யாமல் ...............
வெறும் எழுத்து பிழை மட்டுமே கண்ணில் பட்டால் தவறு ........................கலைஞர் போல தமிழ் எழுத தெரிந்தவர் தான் எழுத வேண்டுமா என்ன ..........
இலக்கியம் என்பது வெறும் பிழை இல்லாத எழுத்தை தாண்டி மக்களுக்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ..........!!!!!!!!
இதை நீங்கள் நான் பதிவேற்றம் செய்யாமல் இருப்பேன் என்று எப்படி நினைக்கலாம் .
நல்ல பதிவு மட்டுமல்ல. நல்ல சிந்தனையும்
Post a Comment