நேற்று ஒரு பதிவர் கேட்டிருந்தார் "மென்பொருள் நிறுவனத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்க முடியுமா..." ஏன் எதிர்க்க கூடாது என்பதே என் கேள்வி . சரி பிரெஞ்சு புரட்சி நடந்த பொழுது என்ன நடந்து கொண்டிருந்தது , பிரான்ஸ் நில பிரபுத்துவத்தில் இருந்தது , தொழிற் புரட்சி வெடித்து முதலாளித்துவ நாடாய் மாறுகிறது. ஆனால் புரட்சி வெடிக்கும் முன்பாய் , புரட்சியை தோற்றுவித்தவர்கள் தோன்றியது நில பிரபுத்துவசமூகத்தில் இருந்து . ஒரு சமூகத்தில் இருக்கிறோம் என்பதற்காய் அதில் உள்ள தவறுகளை எதிர்ப்பது , அல்லது தேவை பட்டால் அந்த அமைப்பையே தூக்கி எறிவது ஆகியவை தவறா என்ன ????? சரி இதை மட்டும் லெனின் நினைத்து இருந்தால் ரஷ்ய புரட்சி ஏற்ப்பட்டிருக்காது .இது மறைமுகமாய் எதை சொல்லவருகிறது என்றால் "ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருக்கிறாய் , உனக்கு முதலாளி தானே சோறு போடுகிறான் , அவனை எதிர்க்க கூடாது " என்று முதலாளித்துவதிர்க்கு ஆதரவு தெரிவிக்கிறது . ஆனால் உண்மை என்ன ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து தான் முதல் எதிர்ப்பு குரல் வரும் இது உலக வரலாறு . ஒரு அமைப்பு இருக்கிறது , சமூக சூழலில் அந்த அமைப்பில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் , அதில் இருந்து கொண்டு தான் எதிர்ப்பை தெரிவிக்க முடியும் ,அதற்க்கு ஆதரவு தருவது தான் தவறு , எதிர்ப்பு தெரிவிப்பது எப்படி தவறாகும் , ஆனால் மணிரத்னம் கருத்து ரீதியாய் ஆதரவு தெரிவிக்கிறார் , முதலாளித்துவத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார் , அதனால் இவர் எதிர்க்க பட வேண்டியவர் .
மாற்றங்கள் என்பதே ஒரு விடயத்தை எதிர்த்து , அதில் இருந்து மாறுவதே . மாற்றங்களே கூடாது இது நாள் வரை கேவலமான சூழலில் தானே வாழ்ந்தாய் உனக்கு தகுதி இல்லை என்று எப்படி சொல்ல முடியும் . எனக்கு தெரிந்து நிறைய மென்பொருள் பொறியாளர்கள் , வார விடுமுறை நாட்களில் மக்களுக்கான பணிகள் செய்யும் இயக்கங்களில் இருக்கிறார்கள் , நீங்கள் சொல்வது போல் அவர்கள் PUB போய் இருந்தால் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டவர்கள்விமர்சனம் செய்ய வேண்டும் . ஆனால் அவர்கள் பேசுவது communism , அதில் நண்பர் பாலாவிற்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை . முதலாளித்துவ அமைப்பில் இருக்கிறார்கள் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள் , மென்பொருள் துறையில் வேலை பதினான்கு மணி நேரம் , சில நாட்கள் இருபது மணி நேரத்தையும் தொடுகிறது , அவர்கள் சுரண்டப்படும் பொழுது இயல்பாய் எதிர்க்கிறார்கள் . கேட்டால் பாலா சொலிகிறார் முதாலாளியின் காசை தின்று விட்டு முதலாளியை எதிர்ப்பதா . ஒரு மென் பொருள் துறையில் நூறு டாலர் நம்மை வைத்து சம்பாதித்தால் ஒரு டாலர் மட்டுமே சம்பளம் வருகிறது என்பதே உண்மை .சுரண்டப்படும் அமைப்பில் இருந்து எதிர்ப்பு வரக்கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
73 comments:
விவாதங்களை எதிர்ப்பார்க்கிறேன்
முதலாளிகளையெல்லாம் ஒழித்துவிட்டால் தொழில் நடத்துவது யார், தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது யார்?
இதே கேள்வியை நான் மாற்றிக்கேட்க்கிறேன் ??? தொழிலாளி எல்லாம் புரட்சி செய்தால் முதாலாளி என்ன செய்வார் ??????
உழைப்பு எங்கிருந்து வருகிறது ............ எண்பது சதவிகிதம் உழைப்பது தொழிலாளி 99 சதவிகிதம் அனுபவிப்பவன் முதலாளி
வேலை பிழைப்புக்கானது.. கொள்கைகள் வாழ்க்கைக்கும், சமுதாயத்துக்கும் ஆனது.. அடிப்படையில் நம் குடும்பத்தை முதலில் கவனிக்க வேண்டும் அதனை சரியாக செய்து விட்டாலே புரட்சிதான்..
நான் உங்களை ஆதரிக்கிறேன் ...
என்னுடைய கேள்வி மிகவும் எளிமையானது. நேரடி பதில் தேவை.
//Robin said...
முதலாளிகளையெல்லாம் ஒழித்துவிட்டால் தொழில் நடத்துவது யார், தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது யார்?
1 JULY 2010 21:24// நண்பரே முதலாளிகளை ஒழிப்பது நோக்கமல்ல. முதலாளித்துவம் ஒழிக்கப் பட வேண்டியது என்பதே வாதம். முதலாளித்துவ சிந்தனை ஒழிக்கப் பட்டு தொழிலாளியின் நிலையறிந்து அவனுக்கான நியாயமான ஊதியமும் நியாயமான பணி நேரமும் கிடைக்கப் பெறல் வேண்டும் என்பதே இங்கு வாதம்.
முதலாளித்துவம் வரும் முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான் . ...........
ஆரம்பத்தில் முதாலாளி தொழிலாளி என்றில்லை பகிர்ந்து உண்டு வாழ்ந்திருக்கிறான்
ராபின் இது உலக வரலாறு
//நண்பரே முதலாளிகளை ஒழிப்பது நோக்கமல்ல. முதலாளித்துவம் ஒழிக்கப் பட வேண்டியது என்பதே வாதம். முதலாளித்துவ சிந்தனை ஒழிக்கப் பட்டு தொழிலாளியின் நிலையறிந்து அவனுக்கான நியாயமான ஊதியமும் நியாயமான பணி நேரமும் கிடைக்கப் பெறல் வேண்டும் என்பதே இங்கு வாதம்// நீங்கள் சொல்வது சரியான பதிலா என்பதை வெண்ணிற இரவுகள் உறுதிப்படுத்தட்டும்.
//முதலாளித்துவம் வரும் முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான் . ஆரம்பத்தில் முதாலாளி தொழிலாளி என்றில்லை பகிர்ந்து உண்டு வாழ்ந்திருக்கிறான் ராபின் இது உலக வரலாறு// உண்மைதான். ஆனால் இனிமேல் அந்த காலத்திற்கு திரும்பிச் செல்வது சாத்தியமில்லை.
முதாலாளிகள் ஒழிக்க படவேண்டும் அதன் மூலமே முதலாளித்துவம் ஒழிக்கப்படும்
தனி சொத்துடைமைகள் இருக்க கூடாது புலிகேசி . இது என் கருத்தல்ல மார்க்ஸ் சொன்னது
அது தான் சரியான பதிலும் கூட
//முதலாளிகளையெல்லாம் ஒழித்துவிட்டால் தொழில் நடத்துவது யார், தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது யார்?// என் கேள்விக்கு இன்னும் பதில் கொடுக்கப்படவில்லை.
முதாலாளி இல்லாத சமூகம் இருக்க முடியாதா என்ன ?????அனைத்து விடயமும் பொதுவாய்
இருக்கும் பொழுது எதற்கு முதாலாளி ............ முதலாளித்துவம் நில பிரபுத்துவத்தை
அடித்து வளர்ந்தது . அதை போல் சோசியலிசம் முதலாளித்துவத்தை அடித்து வளரும் .
முதலாளி இருந்தால் தான் உலகம் இயங்குமா என்ன ??????????? முதலாளித்துவதிர்க்கு
முந்தய அமைப்பில் யார் யாருக்கு வேலை கொடுத்தார்கள் .முதலாளித்துவம் என்பதே
பிரெஞ்சு புரட்சிக்கு பின்பு தான் அதன் முன் உலகம் இயங்க வில்லையா
//உண்மைதான். ஆனால் இனிமேல் அந்த காலத்திற்கு திரும்பிச் செல்வது சாத்தியமில்லை.///
ராபின், கம்யூனிசம் என்பது ஒரு சிந்தனை முறை. அதைக் கொண்டுவர அனைத்து மக்களின் மனதை அது கவ்விப் பிடிக்க வேண்டும்.. அது மக்களை அவர்தம் மனங்களை கவ்விப் பிடித்த பிறகே அதை கொண்டு வர முடியும்... அப்படி பிடித்த பிறகு, உலக முதலாளிகள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து வந்தாலும் ஒரு ............. முடியாது. ஆனால் அதை மக்களிடம் சேர்ப்பது என்பதுதான் பெரிய குதிரைக் கொம்பாக இருக்கிறது.. ஆயிரம் தடைகள்.. அனைத்தும் தாண்டி என்றாவது ஒருநாள்....... நீங்கள் சொல்வது போல உலக சக்கரம் திரும்பிச் செல்லாது...மேலும் மேலும் சுழன்று கொண்டு இருந்து ஓருநாள்..... ”ஒரு நாள் உலகம் நீதி பெறும்.திருநாள் நிகழம் சேதி வரும்....” என்று அதுவரை பாடிக் கொண்டி இருக்க வேண்டியதுதான்...
பழங்கதை பேசி பயனில்லை நண்பரே. நிகழ்காலத்திற்கு வாருங்கள்.
//சோசியலிசம் முதலாளித்துவத்தை அடித்து வளரும் . // சோசியலிசம் ஏற்கனவே தோல்வி அடைந்த்துவிட்டது.
//முதலாளித்துவதிர்க்கு முந்தய அமைப்பில் யார் யாருக்கு வேலை கொடுத்தார்கள் // அவரவர் வேலையை அவரவர் செய்துகொண்டார்கள். இன்று அப்படி செய்யமுடியுமா?
//முதலாளித்துவம் என்பதே பிரெஞ்சு புரட்சிக்கு பின்பு தான் அதன் முன் உலகம் இயங்க வில்லையா// முதலாளித்துவம் என்பது பிரெஞ்சு புரட்சிக்கு முன்பே இருந்தது.
//ராபின், கம்யூனிசம் என்பது ஒரு சிந்தனை முறை. அதைக் கொண்டுவர அனைத்து மக்களின் மனதை அது கவ்விப் பிடிக்க வேண்டும்// அந்தனை சிந்தனை கவ்விப்பிட்த்த மக்கள் இருக்கும் இடங்களிலெல்லாம் தொழிற்சாலைகள் இல்லாமல் போகிறதே, அதற்குக் காரணம் என்ன? உதாரணம்: கேரளா.
"முதலாளி இல்லாத சமூகம் இருக்க முடியாதா என்ன ?????"
முடியும்.. ஆனால், அப்படி செய்து காட்ட தலைமை பண்பும், தெளிவும் தேவை..
இது வரை இப்படி யாரும் செய்து காட்டவில்லை என்பது ஒரு வரலாற்று சோகம்...
தனி உடமை ஒழிக்கப்பட்ட நாடுகளில், அரசாங்கமே ஒரு முதலாளியாக மாறி , மக்களை சுரண்டியதை பார்த்து வந்து இருக்கிறோம்..
ஆகவே, எல்லோரும் சமம் என்ற நிலை உண்டாக முடியும்.. ஆனால் , அதை உருவாக்க மிக மிக நல்லவர்கள் தேவை.. நல்லவராக மட்டும் இருந்தால் போதாது.. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்...
வெண்ணிற இரவுகள்,
முதலில் இன்றைய காலக்கட்டத்தில் முதலாளித்துவம் இல்லாமல் சமுதாயம் எப்படி இயங்கமுடியும், தொழிற்சாலைகளுக்கு மூலதனம் எப்படி கிடைக்கும், தொழிலாளிகளை நிர்வகிப்பது யார், அப்படி செய்யும்போது ஏற்படும் நடை முறை சிக்கல்கள் அதற்கான தீர்வுகள், கம்யுனிசம் என்பது வலுக்கட்டாயமாக திணிக்கப்படவேண்டுமா என்பதை பற்றி விரிவாக ஒரு பதிவிடுங்கள் பிறகு விவாதிப்போம்.
வெறுமனே முதலாளித்துவததை குறை சொல்லிக்கொண்டிருப்பதால் பயனில்லை. உங்கள் கொள்கை என்ன, அது இந்தக் காலத்திற்கு எப்படி பொருந்தும் என்பதை தெளிவாக விளக்குங்கள். அந்தக் காலம் வேறு இந்தக் காலம் வேறு. எனவே அந்தக் காலத்தில் நடக்கவில்லையா என்பது சரியான சிந்தனையாகத் தெரியவில்லை.
///இருக்கும் இடங்களிலெல்லாம் தொழிற்சாலைகள் இல்லாமல் போகிறதே, அதற்குக் காரணம் என்ன? உதாரணம்: கேரளா. ///
கேரளாவில் கம்யூனிச நாடு என்று யார் சொன்னது.. பெருவாரியான மக்கள் CPM ஐ ஆதரிப்பதால் அப்படிச் சொல்ல முடியாது.. நான் சொல்ல வருகிற கம்யூனிசம் அது வல்ல. இதுகாரும் சோசியலிச நாடக மலர்ந்த ரசியா சீனாவில் தக்க வைக்க முடியாமல் போனதற்குக் காரணம் அதை பின் பற்றியவர்கள்தான்.. சுருங்கச் சொன்னால், கம்யூனிசம் என்பது வர வேண்டும் என்றால் கிட்டத்தட்ட உலகின் 75 சத நாடுகள் பின்பற்றினால்தான் வரமுடியுமோ என்று தோன்றுகிறது.. உலகில் 5 சத நாடுகள் பின்பற்றி சில வருடங்களில் இடிந்து போய் விடுகிறது என்பதை காலம் நமக்கு உணர்த்துகிறதைக் கண்டோம்.. ஆக உடனடி பாஸ்ட் புட் டைப் போல தீர்வெல்லாம் கிடையாது.. காத்திருக்கப்பதைத் தவிர... அது எத்தனை காலம் என்பது தெரியாது.. மக்கள் கையில்தான் உள்ளது..
communism என்பது சுயநலமில்லாத ,நல்ல சிந்தனையுள்ள உள்ள மனிதனுக்கான சித்தாந்தம் ,இந்த சித்தாந்தம் தவறாக பல நாடுகளில் செயல்படுதபடுள்ளது உதாரணம் சீனா :(மனிதனை கொல்வதற்கும் அடக்குவதற்கும் செயல்பட்ட சித்தாந்தம் இல்லை இது ...,அது அவர்களையே தீர்மானிக்கபடுகிறது இப்பொழுது நடக்கும் தண்டகாரண்யம் நடப்பது அதுவே தான் green hunt ஆரம்பிக்க பட்டது தான் ஆரம்பம் ....,உதாரணம் நிறைய தரலாம்
1. outsourcing என்ற பெயரில் உழைப்பை கொள்ளை அடிக்கும் corporate மற்றும் consultancy company
2.அம்பானி சகோதரர்களுக்கு வாயு பிரிபதற்கு எடுத்து கொண்ட அக்கறை போபால் விஷ வாயு தீர்ப்புக்கு 26 வருஷம் எடுத்து கொண்டது அரசு.. சாதரமான மக்களுக்கு காலம் கடந்தும் நீதி கிடைக்க வில்லை
3.vidharbha வில் கொத்து கொத்து தாக மடிந்த விவசாயிகளை காப்பாற்ற முடியாத ஜனாயகம்
//சுருங்கச் சொன்னால், கம்யூனிசம் என்பது வர வேண்டும் என்றால் கிட்டத்தட்ட உலகின் 75 சத நாடுகள் பின்பற்றினால்தான் வரமுடியுமோ என்று தோன்றுகிறது.. உலகில் 5 சத நாடுகள் பின்பற்றி சில வருடங்களில் இடிந்து போய் விடுகிறது // அனைத்து நாடுகளும் பின்பற்றினாலும் பயனில்லை. கம்யுனிசம் என்பது சீனா, ரஷ்யாவில் பலவந்தமாக திணிக்கப்பட்டது. கம்யுனிசம் வெற்றிபெற வேண்டுமானால் தொழிலாளர்கள் அனைவரும் நல்லவர்களாக இருக்கவேண்டும், பேராசை இல்லாதவர்களாக இருக்கவேண்டும், திறமைக்கேற்ற ஊதியம் கொடுக்கபடாவிட்டாலும் பொறுத்துக்கொள்ளவேண்டும். இதெல்லாம் ஒருபோதும் சாத்தியப்படபோவதில்லை, எனவே கம்யுனிசமும் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை.
//communism என்பது சுயநலமில்லாத ,நல்ல சிந்தனையுள்ள உள்ள மனிதனுக்கான சித்தாந்தம் ,இந்த சித்தாந்தம் தவறாக பல நாடுகளில் செயல்படுதபடுள்ளது உதாரணம் சீனா// சுயநலமில்லாத சிந்தனை எத்தனை பேருக்கு உண்டு? இந்த சித்தாந்தம் தவறாக பயன்படுத்துவதற்குக் காரணம் இது நடைமுறைக்கு ஒவ்வாதாது என்பதால்தான்.
ஜெயிப்பது தோற்பது என்ற விடயத்தை வைத்து நல்லது கெட்டது தீர்மானம் செய்வீர்களா
ஜான் . ஜெயலலிதா ஜெயிக்கிறார் கருணாநிதி ஜெயிக்கிறார் ..........சரி நீங்கள் ஒரு வேலைக்கு
INTERVIEW செல்கிறீர் என்றால் தோற்றால் விட்டு விடுவீர்களா ????????சித்தாந்தம் சரி
தான் .....................நடைமுறைக்கும் சாத்தியமே ???????அதை நடைமுறை படுத்தும் அறிவை
கற்க வேண்டும் .........முதலாளித்துவத்தின் அதிக உற்பத்தி பல பேர் வேலை இழப்பிற்கு காரணமாய் உள்ளதே
//மென் பொருள் பொறியாளர் ஏன் communism பேசக்கூடாதா //
பேசக்கூடாதுதான்.... !!!!
ஏனெனில் உங்களின் ஓரு மணிநேர உழைப்புக்கான கூலிக்கும் சராசரி இந்தியனின் ஓரு மணிநேர உழைப்புக்கும் உள்ள வித்தியாசம். அந்த ஏற்ற தாழ்வை சரிசெய்ய எனக்கு இவ்வளவு சம்பளம் போதும் இதை மற்றவர்களுக்கு பிரிந்து கொடுத்து விடுங்கள் என முதலாளியிடம் போராடாத நீங்களோ நானோ கம்யூனிசம் பேசுவதால்தான் அது உருப்படாமல் போகிறது.
முதலாளிகள் அனைவரும் மோசமானவர்கள் என்றால் தோழர்கள் ஏன் ஓரு தொழிற்சாலையை தொடங்கவில்லை..... நாங்கள் முயற்ச்சியே எடுக்க மாட்டோம் குறைகூறுவதைதான் முழுமூச்சோடு கடைபிடிப்போம் என தொடங்கினால் ஏது தீர்வு...
சரி ஓரே ஒரு கேள்வி: நீங்கள் உங்களின் சம்பளத்தை எனக்கு இவ்வளவு போதும் மீதத்தை உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியருக்கு (எகா ஓட்டுனர், துப்புரவு தொழிலாளர்..) ஊதிய உயர்வு வழங்குங்கள் என உங்கள் முதலாளியிடம் போராடி இருக்கிறீர்களா?
இந்த கேள்விக்கு ஆம்/இல்லை ஆம் எனில் உதாரணம் கூறி விட்டு உங்கள் விவாதத்தை தொடரவும்
RECISSION எதனால் வருகிறது அதிக உற்பத்தி , உற்பத்தி செய்ய ஆள் தேவை ஆனால் அதை விற்க முடியாது சரியா ..........
GREECE ஏன் திவால் ஆனது உடனே முதலாளித்துவம் அவ்வளவு தான ????பின்னடைவு தோல்வி அல்ல ???/
///இது நடைமுறைக்கு ஒவ்வாதாது என்பதால்தான். ///
இதைப் போன்ற கருத்துக்கள் பல முறைகள் கேட்டாகிவிட்டது... விமானத்தை கண்டுபிடித்தவுடன் அது பறக்கவிட்டுவிட்டுடார்களா.. இல்லையே.. பல முறைகள் சோதனை செய்து இறுதியில் வெற்றி பெறுகிறதைப் போலத்தான் எல்லாமும்.. கம்யூனிசமும் அப்படித்தான் இதில் மேலதிகமாக மக்களைச் சார்ந்து இருப்பதால் அத்தனை சுலபமாக வந்துவிடாது.. அனைவரும் சமம் என்பதை எவனும் மறுக்க முடியாது.. நம் காலத்தில் அது இல்லை என்பதால் எப்போதும் இல்லை என்பது ஒருவித அரங்கவாதமே ஆகும்..
"சரி நீங்கள் ஒரு வேலைக்கு
INTERVIEW செல்கிறீர் என்றால் தோற்றால் விட்டு விடுவீர்களா "
விட கூடாதுதான்.. ஆனால், அந்த வேலைக்கு இன்டர்வியு செல்லும் அனைவருமே தோல்வி அடைந்தால் என்ன செய்வது? அந்த நிறுவனத்துக்கு யார் , எப்போது இன்டர்வியு சென்றாலும், தோல்விதான் கிடைக்கும் என்றால் , அந்த நிறுவனத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்றுதானே பொருள்..
அதைதான் அவர்கள் கேட்கிறார்கள்.. தெளிவான பதில் தேவை...
//அதை நடைமுறை படுத்தும் அறிவை கற்க வேண்டும் // அதைத்தான் கற்றுக் கொண்டுங்கள் என்கிறேன்.
//நடைமுறைக்கும் சாத்தியமே ?// சாத்தியமில்லை என்பதுதான் கம்யுனிச நாடுகளிலிருந்து நாம் தெரிந்துகொண்டது.
//.முதலாளித்துவத்தின் அதிக உற்பத்தி பல பேர் வேலை இழப்பிற்கு காரணமாய் உள்ளதே// அப்படி வேலை இழந்தவர்கள் திரும்பவும் பெற்றுக் கொள்கிறார்களே. முதலாளித்துவத்தால் எத்தனை கோடிபேர் வேலை பெற்றுள்ளார்கள், அதைப் பற்றியும் சிந்தியுங்கள்.
@kanna
//சரி ஓரே ஒரு கேள்வி: நீங்கள் உங்களின் சம்பளத்தை எனக்கு இவ்வளவு போதும் மீதத்தை உங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியருக்கு (எகா ஓட்டுனர், துப்புரவு தொழிலாளர்..) ஊதிய உயர்வு வழங்குங்கள் என உங்கள் முதலாளியிடம் போராடி இருக்கிறீர்களா?
//
communism என்பதே வர்கங்கள் அற்று அனைவரும் ஒன்று சேரும் பொழுது மட்டுமே சாத்தியம் ????? இப்படி ஒரு சாரார் மக்களை ஒதுக்குவது தவறு ....இங்கே பொதுவான எதிரி முதலாளி மட்டுமே .......................நம் சம்பளத்தை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் ......அவன் உழைப்பிற்கும் சம்பளம் வேண்டும் என் உழைப்பிற்கும் சம்பளம் வேண்டும் என்பதே விவாதம்................. இதில் விட்டுக்கொடுப்பது எல்லாம் இல்லை , நாம் என்ன விட்டுக்கொடுத்து பிச்சை போடுகிறோமா என்ன ???????
ஆனால் நான் உண்மையிலேயே .............. இப்படி கேட்டுள்ளேன் .........எனக்கு கூட போடா வேண்டாம் சக ஊழியன் நன்றாய் வேலை செய்வான் போடுங்கள் என்று ஆனால் அது சரியான முடிவல்ல .
//அனைவரும் சமம் என்பதை எவனும் மறுக்க முடியாது..// ஏன் முடியாது? அனைவரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? நிறம், தோற்றம், பால், குணம், திறமை, அறிவுத்திறன் என்று எத்தனை வேற்றுமைகள்?
//விட கூடாதுதான்.. ஆனால், அந்த வேலைக்கு இன்டர்வியு செல்லும் அனைவருமே தோல்வி அடைந்தால் என்ன செய்வது? //இப்படி ஒவோவ்று விடயமும் நடக்காது என்றிருந்தால் எதுவுமே நடக்காது என்பதே உண்மை ...........சில விடயத்திற்கு காத்திருக்க வேண்டும் .....
எடுத்தவுடன் இது தான் நடக்கும் என்று சொல்ல முடியாது , பாதி போகிற வழியில் தெரியும்
எப்படி மதுரைக்கு போக வேண்டுமென்றால் சென்னையில் இருந்து மதுரை தெரியுமா போக போக தான் தெரியும் ......................
///அனைவரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? நிறம், தோற்றம், பால், குணம், திறமை, அறிவுத்திறன் என்று எத்தனை வேற்றுமைகள்?////
இந்த வாதத்திற்கு முடிவேயில்லை.... மனித DNA-யை பகுத்துப் பார்த்தால் 99.92 சதம் ஒன்றாக இருக்கிறதாம்
ஒரு 0.085 சதம் மட்டுமே மாறுதாம்... ஆனால் நீர் அந்த 0.085தான் பெரிது என்று சண்டை போடுகிறீர்..
99.92 சதத்தை விட்டுவிடுகிறீர்.. அதனால்தான் கம்யூனிசம் வரமாட்டேன் என்கிறது... சரி
என்ன சொல்ல வருகிறீர்.. உம்ம காலத்தில் கம்யூனிசம் வராது... என்கிறீர்களா.. உண்மைதான் சாமி.. வராதுதான்
(நீர் இருப்பதால் என்று தப்பர்த்தம் கொள்ளாதீர்)
//எடுத்தவுடன் இது தான் நடக்கும் என்று சொல்ல முடியாது , பாதி போகிற வழியில் தெரியும் // கம்யுனிசம் என்பது ஏற்கனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்டுவிட்டது. பலன் பூஜ்யம்தான். ஏராளமானோர் கொல்லப்பட்டதுதான் மிச்சம். இன்னும் இந்த விஷப் பரீட்சை தேவையா?
//அதனால்தான் கம்யூனிசம் வரமாட்டேன் என்கிறது... சரி
என்ன சொல்ல வருகிறீர்.. உம்ம காலத்தில் கம்யூனிசம் வராது... என்கிறீர்களா.. உண்மைதான் சாமி.. வராதுதான்
(நீர் இருப்பதால் என்று தப்பர்த்தம் கொள்ளாதீர்)// எதற்கு இவ்வளவு ஆத்திரம்?
நண்பரே உங்கள் அவசரத்தனம் இந்த பதிவிலும் தெரிகிறது. உங்களுக்கு என்று தனி நியாயமா என்று கேட்பதற்கே நான் சொன்னேன். உடனே கோபப்பட்டு விடாதீர்கள். முழுவதும் படித்து விடுங்கள். ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒருவன் காலையில் இருந்து மாலை வரை கடவுளை எதிர்த்து பிரச்சாரம் செய்கிறான். மாலை ஆனவுடன் கோவிலுக்கு செல்கிறான். மணிக்கணக்கில் சாமி கும்பிடுகிறான். அவனைப்பார்த்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
// எனக்கு தெரிந்து நிறைய மென்பொருள் பொறியாளர்கள் , வார விடுமுறை நாட்களில் மக்களுக்கான பணிகள் செய்யும் இயக்கங்களில் இருக்கிறார்கள்
இதை நீங்கள் சொல்வதால் நியாயம் என்கிறீர்கள். நான் சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள் தெரியுமா? கொஞ்சம் உங்கள் முந்தைய பதிவுகளை படித்துப்பாருங்கள். இதனால் யாருக்கு என்ன லாபம். எல்லாம் NGO வேலை. இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்பீர்கள். உங்கள் கருத்தில் நீங்களே முரண் படுகிறீர்களே?
நாங்கள் ஒன்றும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்று சொல்லிவிட்டு, என் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறீர்களே இது என்ன நியாயம்?
ஒவ்வொருவருக்கும் தன் நிலையை நியாயப்படுத்த ஆயிரம் காரணம் இருக்கும். மாதம் ஆயிரம் ஊதியம் வாங்குபவன் மென் பொறியாளரை அயோக்கியன் என்று கை காட்டுகிறான். மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் மென் பொறியாளன் கோடி வாங்குபவனை கை காட்டுகிறான். அவ்வளவுதான் வித்தியாசம்.
// மனித DNA-யை பகுத்துப் பார்த்தால் 99.92 சதம் ஒன்றாக இருக்கிறதாம்
ஒரு 0.085 சதம் மட்டுமே மாறுதாம்... ஆனால் நீர் அந்த 0.085தான் பெரிது என்று சண்டை போடுகிறீர்..//
அந்த ௦௦0.085 சதம்தான் மனிதனில் காணப்படும் வேறுபாடுகளுக்கு காரணமெனில் அதை பெரிதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். விவாதத்திற்கும் சண்டைக்கும் வித்தியாசம் உண்டு.
அருமையான இடுகை. நன்றி.
//எனக்கு தெரிந்து நிறைய மென்பொருள் பொறியாளர்கள் , வார விடுமுறை நாட்களில் மக்களுக்கான பணிகள் செய்யும் இயக்கங்களில் இருக்கிறார்கள்//
மிகவும் வரவேற்கவேண்டிய விஷயம். எனக்கும் ஆர்வம் தான். எப்போது எப்படி செயல்படுத்த முடியும் என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது. :(
நீங்கள் சொல்லுவதில் 100% நியாயம் உள்ளது. இது குறித்து ஒரு தனி பதிவிட உள்ளேன்.
////முதலாளிகளையெல்லாம் ஒழித்துவிட்டால் தொழில் நடத்துவது யார், தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது யார்?// //
ராபினுக்கு சில கேள்விகள்
1) தொழில் நடத்துவது முதலாளியா அல்லது சம்பளத்துக்கு வேலை செய்யும் மேனேஜர்களா( சி.இ.ஒக்களையும் சேர்த்து)
2)ஏன் தொழில் கழகங்கள் ஒரு கட்டத்தில் கார்போரேட்டுகளாக மாறுகின்றன? தனியார் தொழில் கழகங்களாகவே இருந்துவிடலாமே(பிரைவேட் லிமிடட்)
@BALA
ஒரு விபச்சாரி இருக்கிறாள் என்றால் , அவள் மகள் அந்த சமூகத்தில் இருந்து வந்தவள் அதை எதிர்க்கிறாள் என்றால் நீங்கள் சொல்வதை பார்த்தல்
விபச்சாரியின் மகள் அவள் அம்மா விபச்சாரம் செய்ததை தானே சாபிட்டால் சாபிட்டுக்கொண்டிருக்கிறாள் , அதனால் எதிர்க்க கூடாது என்கிறீர்கள்
பாலா ???? கேவலமான சமூகத்தில் இருந்தே எழுச்சிகரமான சமூகம் வரும் . இது அனைத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் . நீங்கள் சொல்வதை
பார்த்தால் மாற்றங்கள் என்பதே நிகழாது . ஒரு தந்தை தண்ணி அடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் , சோறு போடுகிறார் என்பதற்காய் தாயை அடிக்கும்
பொழுது பேசாமல் இருப்பீரா ????
@bala
//இதை நீங்கள் சொல்வதால் நியாயம் என்கிறீர்கள். நான் சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பீர்கள் தெரியுமா? கொஞ்சம் உங்கள் முந்தைய பதிவுகளை படித்துப்பாருங்கள். இதனால் யாருக்கு என்ன லாபம். எல்லாம் NGO வேலை./////
நீங்கள் சொல்வதை போல் இது NGO வேலை இல்லை . புரட்சிக்கு உண்டான வழிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் .ஏன் செம்மொழி மாநாடு பொழுது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் .......மக்களை திரட்டும் வேலை ...மக்களை அரசியல் படுத்தும் வேலை .....உங்களை போல் அனாதை ஆசிரமம் சென்று 100 ரூபாய் தரும் NGO வேலை அல்ல இது .........
@balaa
//ஒவ்வொருவருக்கும் தன் நிலையை நியாயப்படுத்த ஆயிரம் காரணம் இருக்கும். மாதம் ஆயிரம் ஊதியம் வாங்குபவன் மென் பொறியாளரை அயோக்கியன் என்று கை காட்டுகிறான். மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் மென் பொறியாளன் கோடி வாங்குபவனை கை காட்டுகிறான். அவ்வளவுதான் வித்தியாசம்.//
அவ்வளவு தான் வித்யாசம் என்று எளிமை படுத்தி முதலாளிகளை காப்பாற்ற வேண்டாம்
ஐம்பது ஆயிரம் வாங்குபவன் கூட யாரையும் சுரண்ட வில்லை ஏமாந்து கொண்டிருக்கிறான் ......ஆனால் முதாலாளி சுரண்டிக்கொண்டிரிக்கிறான் இருவரையும் எப்படி ஒரே தராசில் வைக்கிறீர்கள் பாலா நீங்கள் சொல்வது போல் ஐம்பது ஆயிரம் வாங்குபவன் திருடினான் தப்பு என்று வைத்துக்கொண்டாலும் ........ ஒரு பிக் பக்கெட் திருடுபவனும் , அம்பானி போன்ற கொழுப்பிர்க்காய் திருடி பல பெற சாக காரணமாகும்
திரிட்டும் ஒன்றா என்ன ???????????? எல்லாரையும் ஒன்று என்று முதலாளிகளை காபாற்றுகிரீர்கள்
நண்பரே உறவுகளையும் கொள்கைகளையும் போட்டு குழப்பாதீர்கள். விபச்சாரம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவளுக்கு இவள்தான் தாய். குடித்தாலும் குடிக்காவிட்டாலும் அவர்தான் இவனுக்கு தந்தை.
//புரட்சிக்கு உண்டான வழிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்
ஆதாரங்களுடன் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்.
//முதலாளிகளை காப்பாற்ற வேண்டாம்
நான் முதலாளிகளை காப்பாற்றவில்லை. அம்பானி கொழுப்பிற்காக திருடுகிறார் நாங்கள் வயிற்று பிழைப்புக்காக வேலை பார்க்கிறோம் என்று சொன்னீர்கள் அல்லவா? அம்பானியும் முதலில் இப்படித்தான் தொடங்கி இருப்பார் இல்லையா?
//இருவரையும் எப்படி ஒரே தராசில் வைக்கிறீர்கள்
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. கோடி சம்பாதிக்கும் முதலாளி மட்டும் அயோக்கியனா இல்லை லட்சம் சம்பாதிக்கும் சிறு முதலாளி அயோக்கியன் இல்லையா? எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் முதலாளியாக மட்டும் இருக்கக்கூடாது என்கிறீர்களா?
//ஐம்பது ஆயிரம் வாங்குபவன் கூட யாரையும் சுரண்ட வில்லை ஏமாந்து கொண்டிருக்கிறான்
இதை எப்படி ஏற்கமுடியும். இப்படி ஊதியம் வாங்குபவர்கள் எல்லோரும் படித்தவர்கள். ஒன்றும் அறியாதவர்கள் அல்ல. தங்கள் சுரண்டப்படுவதை எப்படி ஒத்துக்கொள்கிறார்கள். மூன்று வேலை சோற்றுக்கு என்று சொன்னால் நான் மட்டுமல்ல எல்லோருமே சிரிப்பார்கள். அதாவது தான் வாங்கும் சம்பளம் தன் வயிற்றுக்கே பத்தாதது போல சொல்லி இருக்கிறீர்கள். சம்பளத்தில் பெரும் பகுதிகளை ஷேர்களாகவும், பாண்டுகளாகவும் வாங்கி குவிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் தன்னை அறியாமலா முதலாளிகளுக்கு துணை போகிறார்கள்?
//Robin said...
முதலாளிகளையெல்லாம் ஒழித்துவிட்டால் தொழில் நடத்துவது யார், தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பது யார்? //
மனிதம் உருவான போதே கூடவே முதலாளிகளும் உருவாகிட்டாங்களோ!?
மதம் மாதிரி இடையில் வந்த மண்ணாங்கட்டிக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!?
சரி பாலா யாரால் பிரச்சனை அதிகம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் .எனக்கு நண்பர்கள் நிறைய உண்டு ,
அவர்கள் எல்லாம் இப்பொழுது மென்பொருள் துறை சேர்ந்தவர்கள் , அவர்கள் தந்தைமார்கள் விவசாயத் துறை
மழை இல்லை , தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று பல காரணங்களில் மதுரையில் இருந்து
சென்னைக்கு புலம் பெயர்ந்து வருகிறார்கள் , இல்லை என்கிறீர்களா ???????? சரி அப்படி கையாலாகாத காரணம் சூழல்
மட்டுமே அவர்களை மென்பொருள் துறையிலே தள்ளுகிறது . சரி நீங்கள் சொல்வது போல் மாதம் ஐந்து ஆயிரம் சம்பளத்திற்கு
வேலை செய்யலாம் , ஆனால் தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்ன செய்வார் அப்பா படிக்க வைப்பார் ...........
இந்த முதலாளித்துவ கட்டமைப்பில் இப்படி தான் இருக்க முடியும் . சரி ஒரு அமைப்பை எதிர்க்கிறோம் என்றால் அதன்
ஆணி வேரை பிடுங்குவீர்களா இல்லை அடி மட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை எதிர்பீர்காளா???????? இங்கு முதலாளித்துவத்தை
எதிர்ப்பதே பிரதானம் ???? சரி உங்களால் ஜீவனத்திற்கு வழி சொல்ல முடியுமா ???? எதார்த்தம் என்ன ?? சரி அவர்கள் விவசாயம்
செய்ய தயார் என்கிறேன் .....ஆனால் முடியுமா ..........அப்படி இருக்கும் பொழுது அந்த அமைப்பில் இருந்து கொண்டே தான் எதிர்க்க
முடியும் ............................
உங்கள் பாணியிலேயே வருவோமே ஒருவன் பார்பனானாக பிறந்து விட்டான் .......... என்பதற்காய்
அந்த கொள்கை தப்பு என்று சொல்லக்கூடாதா என்ன ?????? இங்கு பிறந்தது பிரதானம் அல்ல .....
அந்த கொள்கையை எதிர்க்கிறானா என்பது மட்டுமே முக்கியம் ....அதை விடுத்து நீங்கள் பார்பனாராக
பிறந்து கொண்டு எப்படி எதிர்க்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கிறீர்கள்???? சரி மைய்ய பிரச்சனை என்ன
முதாலளிதுவம் எதிர்க்க பட வேண்டும் ........ முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் , வெறும் பாட்டாளி
வர்க்கம் மட்டும் முதலாளியை எதிர்க்க முடியாது ............
முதாலாளிக்கு எதிராக வர்க்க பேதம் அன்றி
அனைவரும் இணைவதால் மட்டுமே புரட்சி சாத்தியம் ............
சரி சின்ன கேள்வி கேட்டேனே ???? மறந்து விட்டீர்களா ???
அப்பா தான் நம்மை பெற்று எடுக்கிறார் உயிர் கொடுக்கிறார் சாப்பாடு போடுகிறார் என்பதற்காய் அம்மாவை குடித்து விட்டு
அடித்தால் என்ன செய்வீர்கள் அந்த அமைப்பு தப்பு என்று வீட்டை விட்டு வெளியில் வந்து போராடுவீர்கள ....இல்லை வீட்டுக்குள்
இருந்து கொண்டு போராட்டம் செய்வீர்களா ??? சொல்லுங்கள் .... வீட்டிற்க்குள் உள்ளே இருந்து தான் போராட முடியும் நண்பா ......
அதற்காய் அப்பா காசில் தானே சாப்பிடுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா ?????????? இது சமூகத்திற்கும் பொருந்தும் ........
சரி பாட்டாளி வர்க்கத்தை எடுத்துக்கொள்வோமே .........??? அவர்களும் முதலாளிக்கு தானே உழைக்கிறார்கள் .
அவர்கள் சம்பள உயர்வு கேட்கிறார்கள் ........... அதற்காய் நீ வேலையே பார்க்காமல் தான் போராட வேண்டும் என்று
சொல்ல முடியுமா ????? ஒரு அமைப்பை தூக்கி எறிவதன் மூலமே வெற்றி பெற முடியும் ........ அதை விடுத்து
எதிர்ப்பதே தவறு என்றால் ......... பாட்டாளியும் முதலாளிக்கு தானே உழைக்கிறான் .......... இக்கருத்தை மறுக்க முடியுமா
பாலா....... உங்கள் கருத்து என்ன சொல்கிறது காசு கொடுக்கிறான் வாயை மூடிக்கொள் என்றா ??????????? அடிமையாய்
இருப்பவன் தான் விடுதலைக்கு போராட முடியும் ........ அவர்களிடம் போய் நீ முதலில் அடிமையாய் இருக்காதே அப்புறம்
போராடு என்று சொல்ல முடியுமா ..........எந்த எதிர்ப்பும் அந்த அமைப்பில் உள்ளே இருந்து தான் வரும் நீ அந்த அமைப்பில்
இருக்கிறாய் அதனால் எதிர்க்க கூடாது என்பது முட்டாள்தனம் ..........
விவாதம் நல்ல திசையில் போய்ட்டு இருக்கு. வாழ்த்துக்கள்
-சேலம்ஆனந்த்
ஆரோக்கியமான விவாதம். எனது நன்றியும் வாழ்த்துக்களும்
@பாலா
//சம்பளத்தில் பெரும் பகுதிகளை ஷேர்களாகவும், பாண்டுகளாகவும் வாங்கி குவிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.//
இங்கு நான் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் ...............நான் சொல்வது COMMUNISM பேசும் மென்பொருள் பொறியாளர்களை .....
எனக்கு தெரிந்து ஒருவர் சொத்துடமை என்பதற்காய் வீடு கூட வாங்க வில்லை அவரால் வாங்க கூடிய தகுதி இருக்கிறது ,
அவர்களை பற்றி தான் இங்கு பேச்சு ............நீங்கள் சிரிப்பீர்கள் என்று சொல்லுங்கள் ,எல்லாரையும் ஏன் துணைக்கு இழுக்கிறீர்கள்
நான் எல்லா மென் பொறியாளர் சார்பாக பேசவில்லை , COMMUNISM பேசும் உண்மையான தோழர்கள் அப்பகுதியில் இருகிரீறார்களே
அவர்களை மட்டும் பற்றி பேசுகிறேன்
@BALA
//அதாவது தான் வாங்கும் சம்பளம் தன் வயிற்றுக்கே பத்தாதது போல சொல்லி இருக்கிறீர்கள். அதாவது தான் வாங்கும் சம்பளம் தன் வயிற்றுக்கே பத்தாதது போல சொல்லி இருக்கிறீர்கள். //
நான் எங்கு அப்படி சொல்லி உள்ளேன் ............................!!!! தெளிவு படுத்தவும் , அவர்கள் ஜீவாதாரம் என்று சொல்லி உள்ளேன் வயற்றுக்கே பத்தாது என்று
யார் சொன்னது ?????? சரி நீங்கள் சொல்வது போலவே வருவோம் , சிறு SOFTWARE கம்பனிகள் இருக்கிறது , வெறும் மூவாயிரம் மட்டும் தரும் கம்பனிகள்
இருக்கிறது ..........அவர்களும் முதலாளிக்கு தான் வேலை செய்கிறார்கள் , பெரிய நிறுவனங்களை விட சிறு நிறுவனங்களில் வேலை அதிகம் , கட்டாயம் வயற்றிக்கே பத்தாது தான் ................. மதுரையில் KUMARAN HI என்னும் நிறுவனம் உள்ளது , அங்கே என் நண்பர்கள் PHP ப்ரோக்ராம்மேராக சம்பளமே இல்லாமல் வேலை பார்த்த அனுபவம் உண்டு ...........அது சௌராஷ்டிர பள்ளி பக்கத்தில் தான் உள்ளது நீங்கள் வேண்டும் என்றால் அங்கே போய் பார்க்கவும்
சென்னையில் இப்படி கம்பனிக்கள் நிறைய உண்டு ...... ஊரில் இருந்து வருபவன் கிராமத்தில் இருந்த கல்லூரியில் வருபவன் CAMPUS PLACE ஆகாமல் வருபவன் , அரைகுறை ஆங்கிலம் தான் இருக்கும் பெரிய நிறுவனம் ஏற்றுக்கொள்வதில்லை . ஐயாயிரம் சம்பளம் குறைந்து நான் நூறு பேரை காட்ட முடியும் சென்னையிலேயே , நீங்கள் சொல்வது மேட்டுக்குடி கம்பனிகள் ..........சாப்படிற்க்கே கஷ்டப்படும் , வேலை இருக்கும் சுரண்டப்படுவதும் அவர்களுக்கு
தெரியும் என்றே நினைக்கிறேன் .ஆனால் ஒரு EXP certificate அதற்காக ஒன்றரை வருடம் இதே சென்னையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்தவர்களை
தெரியும் , அதற்காய் அவர்களை சாக சொல்கிறீர்களா ????? வெறும் சென்னையில் நன்றாய் படித்துவிட்டு 19B A C வண்டியில் ரெஹ்மான் பாட்டு கேட்டுக்கொண்டு பெரிய நிறுவனத்தில் சம்பளம் வாங்குபவர்கள் இல்லை , ஆனால் மாதம் 300 முதல் 500 வரை கூட வீட்டு வாடகை கொடுக்க முடியாதவர்கள் இருக்கிறார்கள் , நான் அவர்களுக்கு தருவது உண்டு . வேலை இல்லாமல் அவர்கள் அப்பா சம்பாதித்து இருப்பார் படிக்க வைத்திருப்பார்
வீட்டில் தங்கை இருப்பாள் , வீட்டில் வாங்கினால் வெட்கம் என்று சாப்பிடாமல் இருந்தவர்களை தெரியும் , வெறும் மேட்டுக்குடி பாவனையோடு பேச வேண்டாம்
விவாதம் ஆரோக்யமாகப் போய்க் கொண்டிருக்கிறது. பதில் சொல்லும் பாலா
@வெண்ணிறஇரவுகள்
அதாவது ஓரளவு லைஃப்ல செட்டில் ஆயிட்டுதான் கம்யூனிசம்,புரட்சிய பத்தி யோசிக்கணுமா? மார்க்ஸ் வேலைக்கு போனாரா? லெனின் வேலைக்கு போனாரா? (தெரியாது.அதான் கேக்கறேன்)
life செட்டில் ஆகிவிட்டு புரட்சி பண்ண வேண்டும் என்று சொல்லவில்லை .நன்றாய் புரிந்து கொள்ள வேண்டும் , ஒரு விவசாயி மகன் BE
படித்து வேலைக்கு போனால் தான் அவன் குடும்பத்தில் அடுப்பு எரியும் என்ற பொழுது , உன் குடும்பத்தை எல்லாம் கொன்று விட்டு புரட்சிக்கு
வா என்று அழைக்க முடியுமா????? மார்க்ஸ் லெனின் காலத்தை விட முதலாளித்துவம் வளர்ந்து உள்ளது , அப்பொழுது சிறு வேலை பார்த்தால் கூட
குடும்பத்தை ஓட்ட முடியும் ஆனால் தற்பொழுது உள்ள சூழலில் அவன் வாழ்கை செட்டில் ஆக வேலை செய்ய வில்லை , தன இருப்பிற்கு SURVIVAL அதற்க்கு
மட்டுமே வேலை செயக்கிறான் . கொஞ்சம் பான்ட் சட்டை அழகாய் போட்டு 20 30 வாங்குவதால் அவன் வாழ்கை ஒன்றும் செட்டில் இல்லை ஏன் தெரியுமா
RECESSION கட்டாயம் வரும் , இப்பொழுது வேலை வாய்ப்பு நன்றாய் இருப்பது போல் இருக்கும் திடிரென்று வேலை இருக்காது ................ ஏன் சங்கம் கூடஅமைக்க
முடியாது நண்பா IT துறையில் வேலை இல்லை கிளம்புங்கள் என்றால் கிளம்ப வேண்டியது தான் ..............இதன் பேர் செட்டில் என்கிறீர்களா இல்லை Survival என சொல்லமுடியுமா
survival மட்டும் போதுமா. அப்ப மேரேஜ் பண்ணிக்கமாட்டீங்க.சரியா?
survival மட்டும் போதுமா. கம்யூனிச ஆட்சி மலரும்வரை மேரேஜ் பண்ணிக்க கூடாதா?
survival மட்டும் போதுமா? அப்ப கம்யூனிச ஆட்சி மலரும்வரை மேரேஜ் பண்ணிக்ககூடாதா?
என்னோட பெயரை சேலம்ஆனந்த் னு மாத்தமுடிஞ்சா மாத்திருங்க.நான் gmail settingla போய் மாத்தினேன்.ஆனா மாறமாட்டேங்குது.
என்னோட பெயரை சேலம்ஆனந்த் னு மாத்தமுடிஞ்சா மாத்திருங்க.நான் gmail settingla போய் மாத்தினேன்.ஆனா மாறமாட்டேங்குது.
மன்னிக்கவும் கொஞ்சம் வேலை அதான் லேட் ஆகி விட்டது
நீங்கள் சொல்வது போல சிறு சிறு சாப்ட்வேர் கம்பெனிகளை நானும் அறிவேன். அதில் அனுபவத்துக்காக வேண்டி ஊதியம் இல்லாமல் வேலை பார்ப்பவர்களை பற்றியும் நான் அறிவேன். சரி இந்த மாதிரி சிறு கம்பெனிகளில் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? ஊதியம் இல்லாமல் வெறும் அனுபவத்துக்காக வேலை பார்ப்பவர்களின் நோக்கம் என்ன என்று நினைக்கிறீர்கள்? அந்த அனுபவத்தை வைத்து ஒரு பெரிய கம்பெனியில் இடம் பிடித்து விடலாம் என்பதற்காகத்தானே?
தயவுசெய்து உறவினர்களையும் முதலாளிகளையும் ஒன்றாக ஒப்பிடாதீர்கள்
@BAALA
samoogam veru naan veru enru eppadi solkireerkal . ungal veetirkkum ungalukkum undaana uravu pola
thaan ungalukkum samoogathirkkum undaana uravu ...........samoogatthil irunthu thaane saapidum porutkal varukirathu ..............sari neengal poonal pottathaal mattume parpanan enru ethirkka koodathu avargalil nallavarkal irukkiraarkal enru solkireerkale athai pola thaan menporul thuraiyil iruppavar communism pesuvathu nanbare ithai ethirkireerkal .......................... sari muthalaalitthuvam enraal thavaru enru otthukkolkireerkal allava
niyayam enral yaar pesinaal enna sollungal ..................... oru thalith piranthil irunthu adimaiyaai irunthu vittan
avan pongi ezha koodathu nee adimai enru solvathai pol ullathu ungal karutthu
tamilil type seiya mudiavillai sorry nanbare
என்னங்க எனக்கு பதிலையே காணோம்? எதாவது தப்பா கேட்டுட்டனா?
//
survival மட்டும் போதுமா. கம்யூனிச ஆட்சி மலரும்வரை மேரேஜ் பண்ணிக்க கூடாதா//
இதை யார் சொன்னது maariage பன்னக்கூடதேன்று
ok.அப்போ பெரு முதலாளிகள்கிட்ட வேலை பாத்துக்கிட்டே முதலாளித்துவத்த எதிர்க்கலாம்னு சொல்றீங்க.survival காகவும்,and marriage ம் பண்ணிக்கலாம்.
எந்த communism சொன்னது கல்யாணம் செய்யக்கூடாது என்று அதை தெளிவு படுத்துங்கள் ஆனந்த் .........முதலாளியை எதிர்ப்பது தான் பிரதானம் .நாம் என்ன சாமியார் மடமா , மக்கள்
அவ்வளவே
//ok.அப்போ பெரு முதலாளிகள்கிட்ட வேலை பாத்துக்கிட்டே முதலாளித்துவத்த எதிர்க்கலாம்னு சொல்றீங்க/// தம்பி நக்கல் கிண்டல் வேண்டாம் ............. ஏன் பாட்டாளி வர்க்கம் கூட முதலாளித்துவத்தில் தானே இயங்குகிறது , அதற்காய் எதிர்ப்பு வரக்கூடாதா என்ன ????????
ஒரு தலித் இருக்கிறான் என்பதற்காய் நீ தலித் அதனால் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது நீ முதலில் தலித்தாய் இல்லாமல் இரு என்று சொல்வது போல் அல்லவே இருக்கிறது .........................
ஒரு பெண் ஆணிடம் இருக்கிறாள் , சோறு போடுகிறான் என்பதற்காய் அவன் அடிப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன ????? ஒரு அமைப்பில் இருந்து கொண்டு தான் எதிர்ப்பு என்பதே
வரும் , ஒரு பெண்ணிற்கு ஆண் சோறு போடுகிறான் என்பதற்காக எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்பது உங்கள் கருத்து ..................கல்யாணம் பண்ண கூடாது என்று புத்தர் கருத்து மார்க்ஸ் கருத்தல்ல இப்படி எல்லாம் சில்லி கேள்வி கேட்டு மார்சியம் அதை கொச்சை படுத்த வேண்டாம்
நக்கல் எல்லாம் இல்லீங்க.எனக்கென்னனா முதலாளிகிட்ட வேல பாத்துக்கிட்டே,அப்புறம் குடும்பம் குழந்தைகள்னு ஆயிட்டா முழு கம்யூனிஸ்டா ஆகறத பத்தி யோசிக்ககூட நிறைய தடை இருக்கமோங்கற தயக்கம்தான்.
நக்கல் எல்லாம் இல்லீங்க.எனக்கென்னனா முதலாலிகிட்ட வேல பாத்துக்கிட்டே,அப்புறம் குடும்பம் குழந்தைகள்னு ஆயிட்டா முழு கம்யூனிஸ்டா ஆகறத பத்தி யோசிக்ககூட நிறைய தடை இருக்கமோங்கற தயக்கம்தான்.
இன்றைய சூழலில் உறவுகளுக்கு மத்தியிலே ஒரு ஒற்றுமை இல்லாமை மற்றும் சமாதானம் இல்லாமை உள்ளது. அப்படி இருக்கும் பொது ஒரு முதலாளியும் தொழிலாளியும் சமமாக நடந்து கொள்வது என்பது நடக்காத காரியம். முதலில் மனிதன் அனைவரும் சமம் என்ற உணர்வு வேண்டும் பின்பு தான் இந்த மாதிரியான சூழ்நிலை மறைந்து போகும்.
மேலும் நான் என்னுடைய எதிர் காலம் பற்றிய ஜாதக குறிப்பை www.yourastrology.co.in என்ற இணையத்தளத்தில் கண்டுகொண்டேன் எனக்கு மிகவும் பயனாக இருந்தது. நீங்களும் உங்களுடைய ஜாதக கணிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Post a Comment