Thursday, 8 July 2010
உலகை காலால் அளந்த ராகுல் சங்கிர்த்தியாயன்
நான் இப்பொழுது ஒரு புத்தகம் படித்து கொண்டிருக்கிறேன் புத்தகத்தின் பெயர் "மனித சமூகம் " ராகுல் சங்கிர்த்தியாயன் எழுதியது , ராகுல்ஜி என்று கூட அழைப்பார்கள் .ராகுல்ஜி ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் . உலக வரலாறாய் கரைத்து குடித்தவர் .இமய மலையை மூன்று தடவை நடந்தே கடந்தவர் என்று சொல்கிறார்கள் . ராகுல்ஜி உலகை தான் காலாலும் , அறிவாலும் அறிந்தவர் என்று அவரை படிக்கும் பொழுது புரிகிறது . ராகுல்ஜியின் "வோல்கா முதல் கங்கை வரை " புத்தகம் மிக பிரபலம் என்று கேள்விபட்டிருக்கிறேன் . மனித சமூகம் என்ற புத்தகம் என்ன சொல்கிறது. மனித சமூக வரலாறை சொல்கிறது முதலில் புரதான பொதுவுடைமை சமூகம் , பின்பு இனக்குழுக்கள் , தாய் வழி சமூகம் தந்தை வழி சமூகம் , நிலா பிரபுத்துவம் , முதலாளித்துவம் எல்லாம் ஒன்றில் இருந்து மற்றொன்று எப்படி வந்தது அதன் அவசியம் என்ன , சொத்துடமை எப்படி வந்தது என்று வரலாற்று சான்றுகளுடன் விளக்குகிறார் ராகுல்ஜி .நல்ல படிப்பு , மற்றும் திறனாய்வு திறன் , மக்கள் மேல் கொண்ட அன்பு இவை கலந்தால் மட்டுமே இது சாத்தியம் . வாழ்கையில் 75 சதவிகிதம் நடந்தே கழித்து இருக்கிறார் .
உதாரணமாய் புத்தகத்தில் ஒரு பகுதி , எப்படி தாய் வழி சமூகம் முதல் தந்தை வழி சமூகம் வந்தது . தந்தை வழி சமூகம் எப்படி சொத்துடமைக்கு வழி வகுத்தது ,எப்படி புரதான பொதுவுடைமை சமூகம் அழிந்தது என்பதை போன்ற பகுதியை அறிவியல் ரீதியாக விளக்குகிறார் ராகுல் .முதலில் புராதன பொதுவுடைமை சமூகத்தில் தாய் முக்கியமானவள் , அவளே அரசி போல இருந்தால் , ஒரு குழந்தைக்கு தாய் தெரியும் தந்தை யார் என்று தெரியாது , யாருக்கும் தனி சொத்து என்று எதுவும் இல்லை , வேண்டியதை அனைவரும் உற்பத்தி செய்து பகிர்ந்து கொண்டனர். மனிதன் குழுக்களாய் இருந்தான் , அந்த குழுவிற்குள் பொதுவுடைமை இருந்தது . அப்படி இருக்க மற்ற குழுவுடன் இயல்பாய் சண்டை வரத்தொடங்கியது ,ஆயுதங்களை ஆண்களே செய்தார்கள் , ஆயுதங்கள் ஆண்கள் சொத்துடமை ஆகியது . சண்டைக்கு ஆண்கள் முக்கியமானவர்களாய் பட்டதால் , பெண்ணிற்கு உண்டான முக்கியத்துவம் அழிகிறது . மேலும் மனிதன் விவசாயம் செய்கிறான் அப்பொழுது பசுக்களை அவனே பாரமரிக்கிறான் , வீட்டிற்கு தேவையான பரிவர்த்தனை அவனே செய்கிறான் ,அவன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
அப்பொழுது ஆண்களுக்கு முக்கியத்துவம் வரும் பொழுது , ஒரு குழந்தைக்கு தாய் யார் என்று மட்டும் தெரிந்த சமூகத்தில் . தந்தை முக்கியத்துவம் பெறுகிறார் . பெண் ஆணின் பிடியில் வருகிறாள் , பெண் என்பவள் எப்படி பொருட்கள் மாடுகள் தனக்கு சொந்தமோ அதை போல அவளும் சொந்தம் என்று அடிமைப்படுதுகிறான் . தன் மனைவி தன் மகன் தன் மகள் என்று தெரிந்த பின்பு அவர்களுக்காய் சொத்து சேர்க்கிறான் . சேர்க்கும் பொழுது சொத்துடமை வருகிறது . பெண்ணடிமைதனமும் சொத்துடமையும் சேர்ந்தே வருகிறது என்று புத்தகம் சொல்கிறது .ராகுல் ஜி மதங்களை பற்றியும் எழுதி உள்ளார் .நான் 60 பக்கம் தான் படித்து உள்ளேன் , புத்தகம் ஐநூறு பக்கங்கள் இருக்கும் , பிரமிப்பாய் தான் இருக்கிறது . ராகுல்ஜியின் இந்த புத்தகத்தை நான் "NEW CENTURY BOOK HOUSE " திருமங்கலத்தில் வாங்கினேன் . கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//உதாரணமாய் புத்தகத்தில் ஒரு பகுதி , எப்படி தாய் வழி சமூகம் முதல் தந்தை வழி சமூகம் வந்தது .// இதற்கான ஆதாரம் கொடுத்திருந்தால் அதையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Please change the post's tile as Ragul sankirthyan, otherwise it is misleading as Ragul Gandhi.
I was above to cast a negative vote for misleading title,
ராகுல்ஜி பற்றி தெரியவைத்தற்க்கு உங்களுக்கு நன்றி...கட்டாயம் படிக்கிறேன்....
பதிவுக்கு என் வாழ்த்துகள்
நன்றி நண்பர்களே கட்டாயம் படியுங்கள்
தலைப்பு மாற்றப்பட்டது
புத்தகத்தை பாதி கூட இன்னும் படிக்கவில்லை அவர் ஆதாரப்பூர்வமாய் கொடுத்து இருப்பார்
படித்து விட்டு சொல்கிறேன்
ராகுல்ஜியின் "ஊர் சுற்றி புராணம்" படித்து பாருங்கள். பிறகு உங்களுக்கு ஊர் சற்றும் அவா தானாகவே எழும்..நன்றி.
ராகுல்ஜி பற்றி அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !
நல்ல அற்முகம் கார்த்தி..படித்துப் பார்க்கலாம்.
Pahirvukku nandri karthi, pathipagatharin peyaraiyum kuripidungal.
Post a Comment