
சமீபத்தில் ஒரு பதிவுலக நண்பர் நான் ஏன் சினிமா பற்றி எழுத வேண்டும் , வெறும் கணக்கிற்கு ஏன் பதிவுகள் எழுதுகிறீர்கள் என்று மடல் அனுப்பி இருந்தார் .அவருக்கு சூர்யாவை , மணிரத்தினத்தை விமர்சனம் செய்வது சுத்தமாய் பிடிக்கவில்லை . தான் பொதுவுடைமை சிந்தனையாளன் அரசியல்வாதிகளை தவிர யாரையும் விமர்சனம் செய்ய மாட்டேன் என்று சொன்னார் . ஆனால் மார்க்ஸ் அனைவரைவரையும் சந்தேக படு என்கிறார் ,விமர்சனம் என்பது பொதுவுடமையின் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன் . விமர்சனம் செய்யாமல் வளர முடியாது ,நம் ஒவ்வொரு செயலுக்கும் விமசனம் அவசியம் என்றே நினைக்கிறேன் . அவருக்கு அனுப்பிய மடல் .
" சினிமா என்பது அர்த்தமில்லாதது என்று யார் சொன்னது .ஒரு மக்களின் ரசனையை பொறுத்தே அந்த நாட்டின் அரசியல் தீர்மானம் செய்யப்படுகிறது . இங்கே மணிரத்தினமும் கமலையும் ரசிக்கும் மனப்பான்மையே நம்மை அரசியல் ரீத்யாகவும் ஏமாற்ற முடியும் என்பதற்கு உதாரணம் . நீங்கள் களப்பணி செய்து இருக்கலாம் ஆனால் பொதுவுடைமை விமர்சனம் செய்ய சொல்கிறது . "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்க்காமல் யாரும் இல்லை ?????" என்ற தோழர் கல்யாண சுந்தரனார் பாட்டு சொல்வதை போல் தான் . சினிமா மயக்கத்தில் மக்கள் இருக்கிறார்கள் ,மணிரத்தனம் என்றால் முற்போக்கு என்று பல தரப்பட்ட நடுத்தர வர்க்கம் சொல்கிறது . அப்படி ஆனால் இவர்களை எளிதாய் ஏமாற்றி விடலாம் . தப்பான விடயத்தை முற்ப்போக்கு என்று அரசியலிலும் நம்புவார்கள் கலைஞர் அண்ணாத்துரை எல்லாருமே இப்படி முற்ப்போக்கு வேடம் போட்டவர்கள் . சினிமா கலைஞர் நம்மை ஏமாற்றி
ஆள்கிறார் என்றால் , நம் ரசனை முறை எவ்வளவு பிற்போக்கனாது என்று நினைத்து பாருங்கள் . அப்படி தவறாய் மக்களை இழுத்தும் செல்லும் கலையை மக்களுக்காய் ஏன் விமர்சனம் செய்ய கூடாது . அந்த சினிமா கூட சமூகத்தின் அங்கம் அல்லவாநண்பா . நான் அஜித் விஜய் ரசிகர்களை கூட ஏற்றுக்கொள்வேன் . ஆனால் கமல் மணிரத்தினம் போன்றவர்களது படங்களை விட மாட்டேன் ........

சினிமா பதிவு தவறு என்று சொல்வதை விடுங்கள் , ஏன் விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் . இது என்ன அர்த்தமில்லாத பதிவா இல்லை நண்பா " EK THUJE கேலியே" படம் வந்த பொழுது 100 காதல் ஜோடிகள் மும்பையில் இறந்தார்கள் அந்த படம் ஏற்படுத்திய தாக்கம் . நாம் எதை ரசிக்கிறோமோ ரசிப்பை வைத்தே நம் மனது இப்படி தான் என்று சொல்லிவிட முடியும் . சினிமா திரையரங்கில் நுழைந்தால் மக்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கை தட்டும் காட்சியை கொண்டு சொல்லி விடலாம் . உதாரணமாய்
"பொம்பள பொம்பளையா இருக்கணும் " என்று ரஜினி பேசியதுடன் கை தட்டும் கூட்டம் ஆண் ஆதிக்க சமூகமாய் இருக்கும் சரி தானே .அந்த ஆணாதிக்க சமூகத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அந்த பல பேர் ஏற்ற கலையை விமர்சனம் செய்ய வேண்டும் .............

அர்த்தமில்லாமல் எழுதுகிறேன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் நண்பா ........சினிமா விமர்சனத்தை பாருங்கள் கட்டாயம் அர்த்தம் இருக்கும் என்றே நினைக்கிறேன் , என் விமர்சனம் படித்து இருக்கிறீர்களா ???? திரைக்கதை அருமை , கோணம் அருமை போன்ற விடயம் இருக்காது ..............அடி ஆழத்தில் போய் என்ன கரு என்பதே இருக்கும் என்று நினைக்கிறேன் . எப்படி மக்களிடம் சினிமா மோகத்தை குறைப்பது
அந்த படத்தை நாம் பார்த்து இது குப்பை என்று மண்டையில் தட்டும் பொழுது தான் அது உரைக்கும் சரி தானே . நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன் . நானும் மதுரை தான் , மதுரை மாணவர்கள் எழுச்சியாய் இல்லாமல் ரஜினி அஜித் விஜய் என்று போஸ்டர் ஓட்டும் கலாச்சாரத்தில் மண்ணில் இருந்து வந்த நான் அதை சொல்ல வேண்டுமென்றால் விமர்சனம் அவசியம் என்றே நினைக்கிறேன் .
"தல இல்லாத தீபாவளி துக்க தீபாவளி " என்று போஸ்டரை ஒரு முறை என் மனமும் ரசித்து உள்ளது , ஆனால் இன்று வேறு மாதிரி உள்ளேன் ஆச்சர்யமாய் இருக்கிறது நண்பரே , இது பல மக்களை தாக்க கூடியது . ஒரு நாட்டின் கலை எப்படி இருக்கிறதோ அதை வைத்து அந்த சமூகம் இப்படி இருக்கிறது என்று சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன் . சினிமா கோடிக்கணக்கான ரசிகர்களை சந்து பொந்துக்குள் எல்லாம் செல்கிறது .
புத்துகம் படிக்காதவன் கூட சினிமா செல்கிறான் . இலக்கியத்தின் முக்கிய வெளிப்பாடாய் இருக்கிறது . அதனால் சமூக மாற்றம் ஏற்பட கூட சினிமா முக்கிய காரணம் அதனால் விமர்சனம் அவசியமானது .மக்கள் ரசனை அப்படியே போகட்டும் , மக்கள் மந்தைகளாக இருக்கட்டும் என்று பொறுப்பை தட்டி கழிக்க முடியுமா என்ன ??????????? வெறும் கணக்கிற்காக பதிவுகள் போடுவதில்லை நண்பா .............சினிமா விமர்சனம் என்றால்
வெறும் கேவலமாய் நினைக்க வேண்டாம் . அது மனித மனம் பொருத்தது ???? அது வெறும் வியாபாரம் என்றால் நான் இவ்வளவு மெனக்கிட மாட்டேன் சூர்யா பெப்சி குடித்தால் , பெப்சி விற்பனையாகும் ,நம் ஊர் மாப்ளை விநாயகர் சோடா விற்காது , விவசாய நிலங்கள் கையக படுத்தப்படும் .அவர் செய்யும் விடயத்தை சினிமா தானே அப்படியே விடச் சொல்ல்கிரீரா .அவரை எதிர்த்து பதிவு போட்டதால் அது தரமான பதிவு இல்லாமல் போகுமா
நண்பா ...........!!!!!!!வேட்டைக்காரன் வந்த பொழுது அவர் எப்படி ராகுல் காந்தியை சந்திக்கலாம் வேட்டைக்காரனை விரட்டுவோம் என்று பதிவு போட்டேன் ஒரு விஜய் ரசிகர் எனக்கு உருகி நான் படம் பார்க்க மாட்டேன் இனிமேல் விஜய் படங்கள் பார்க்க மாட்டேன் என்றார் , இது சாதனை இல்லையா ???????
அந்த விடயம் மக்களை தாக்குவதால் நானும் எழுதுகிறேன் .......அதை சும்மா கணக்கு காண்பிக்க பதிவு போடுகிறேன் என்று இழிவு படுத்த வேண்டாம் ...... வேண்டுமென்றால் அந்த பதிவுகளில் விவாதம் செய்வோம் .பொதுவுடமையை ஏற்றுக்கொண்டவன் விமர்சனம் வேண்டும் என்பான் எந்த துறையாக இருந்தாலும் .தவறு என்றால் விமர்சனம் செய்யுங்கள் ஆனால் ஏன் சினிமா பதிவு எழுத கூடாது என்பதற்கு தெளிவாய் விளக்கம் வேண்டும் ,
நீங்கள் என்னை பற்றி சொல்வதில் தவறில்லை , எது என்றாலும் விவாதம் செய்து முடிவுக்கு வரவேண்டும் .நான் வியாபார ரீதியாய் விமர்சனம் செய்கிறேனா என்ன .........என் விமர்சனத்தில் அரசியல் இருக்கும் மக்களின் என்ன ஓட்டத்தில் என்ன தவறு என்பது கட்டாயம் இருக்கும் விளக்கம் போதுமா நண்பரே .......கேள்வி கேட்டதற்கு நன்றி கேள்வி தான் அறிவை வளர்க்கும் நண்பா நன்றிகள் "
நண்பர்களே சினிமா விமர்சனம் எழுதுவது கேவலாமான செயலா என்ன . அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுது ஏன் விமர்சனம் செய்யக்கூடாது அது மக்களை சிறிது அளவாவது பாதிக்கிறதே . சம கால இலக்கியத்தில் விமர்சனம் தேவை , புத்தகங்கள் கூட படித்தவருக்கு மட்டுமே சென்றடைகிறது .சினிமா பட்டி தொட்டி எங்கும் செல்கிறது அதனால் இது வெட்டி வேலை அல்ல என்றே நினைக்கிறேன் .
30 comments:
விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன
பாரத் தியேட்டர் எங்க ஏரியா
நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் உங்கள் விமர்சனதிற்கு எதிர் பின்னூட்டம் வரும் போது அதை நீங்கள் அந்தப் படத்திற்கான விமர்சனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பிடிக்கல என்று விமர்சித்தல் நலம்.
ஆனா அது எல்லோருக்கும் பிடிக்கல என்று விமர்சித்தல் தவறு.
மற்றபடி விமர்சிக்கவே கூடாது என்பது தவறானது.
நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும் உங்கள் விமர்சனதிற்கு எதிர் பின்னூட்டம் வரும் போது அதை நீங்கள் அந்தப் படத்திற்கான விமர்சனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு பிடிக்கல என்று விமர்சித்தல் நலம்.
ஆனா அது எல்லோருக்கும் பிடிக்கல என்று விமர்சித்தல் தவறு.
மற்றபடி விமர்சிக்கவே கூடாது என்பது தவறானது.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிற எந்த ஒருவிசயமானாலும் அது விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் உட்பட்டது என்பதே என் தாழ்மையான கருத்து.
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது எதுவுமேயில்லை!
சினிமா என்று இல்லை எல்லா நிகழ்வுகளுக்கும் விமர்சனகள் தேவை, நடனம் சங்கீதம், பேச்சு, நாடகம், புத்தகம்
குறைகளை எடுத்து கூறினால் அந்த படைப்பாளிக்கு அந்த குறைகளை அடுத்த படைப்பில் தவிர்க்க உதவும்
பாராட்டி எழுதும் வார்த்தைகள் படைப்பாளியை இன்னும் ஊக்கப் படுத்தும், இன்னும் சிறப்பகா படைக்க உதவும்
விவாதங்கள் வரவேற்க படுகின்றன
நீங்க காமெடி பீஸா இல்ல கழண்ட பீஸான்னு டுவிட்டர்ல க்ளேபரம் நடக்குது நீங்க என்னடான்னா விமர்சந்த்த வரவேத்துட்டு இருக்கீங்களே தல!
Kevalamaana Cinemavirku
Vimarsanam eludhuvadhu Kevalamana seyal thaane
அன்புள்ள வெண்ணிற இரவு அவர்களுக்கு, நண்டு எழதுவது...
ஒரு சமூகத்தில் திரைப்படமும் அஃது ஏற்படுத்துகிற தாக்கமும் மிக அதிகம். நேற்று அரிதாரம் பூசிய நடிகன்/நடிகை இன்று ஓர் அரசியல்வாதி. இது வரலாறு. இந்த நிலையில் திரைப்படங்களையும் அது சார்ந்த துறைகளையும் விமரிசனம் செய்வது அவசியமானது. அவர் கூறியுள்ள நடிகரோ இயக்குனரோ ஒன்றும் கடவுள் அன்று. கடவுளையே விமரிசனம் செய்யும் இந்த உலகில் இது போன்ற கற்பனை வளமே இல்லாத ஆட்களை விமர்சிப்பது ஒன்றும் தவறன்று. திரைப்படம் ஒரு தனி நபரை சார்ந்ததன்று. அனைவரும் பார்க்க எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே பொதுவுடைமைதான்.
ஆதலின் திரைவிமரிசனம் நீதி வழங்குவதற்கு ஒப்பானது.
உங்களிடம் இருந்து அந்த நீதியை தொடர்ந்து எதிர்பாக்கிறேன்.
நன்றி!
தங்களுக்கு நேரமிருந்தால், மனமிருந்தால் என் ப்ளாக்கை ஒரு முறை படித்துப்பார்க்கவும்.
http://nudenandu.blogspot.com/
நன்றி!
நான் அனுப்பிய மின்னஞ்சல் விவாதங்களை பதிவாகவே இட்டதற்க்கு நன்றி தோழரே, இங்கேயும் விவாதத்திற்க்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல் திரைப்படங்கள் சமூகத்தின் அங்கம் என்றும் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே வைத்து கொள்வோம், முதல்வன், புரட்சிக்காரன், கடவுள், இந்தியன், ஜெண்டில்மேன், பம்பாய், சாமுராய், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற திரைப்படங்கள் ஏன் நீங்கள் கூறுவது போல் ஏன் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை. திரைப்படங்களின் குற்றமா...? இல்லை மக்கள் மீது குற்றமா....?
நான் அனுப்பிய மின்னஞ்சல் விவாதங்களை பதிவாகவே இட்டதற்க்கு நன்றி தோழரே, இங்கேயும் விவாதத்திற்க்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல் திரைப்படங்கள் சமூகத்தின் அங்கம் என்றும் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே வைத்து கொள்வோம், முதல்வன், புரட்சிக்காரன், கடவுள், இந்தியன், ஜெண்டில்மேன், பம்பாய், சாமுராய், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற திரைப்படங்கள் ஏன் நீங்கள் கூறுவது போல் ஏன் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை. திரைப்படங்களின் குற்றமா...? இல்லை மக்கள் மீது குற்றமா....?
நான் அனுப்பிய மின்னஞ்சல் விவாதங்களை பதிவாகவே இட்டதற்க்கு நன்றி தோழரே, இங்கேயும் விவாதத்திற்க்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல் திரைப்படங்கள் சமூகத்தின் அங்கம் என்றும் அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே வைத்து கொள்வோம், முதல்வன், புரட்சிக்காரன், கடவுள், இந்தியன், ஜெண்டில்மேன், பம்பாய், சாமுராய், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இது போன்ற திரைப்படங்கள் ஏன் நீங்கள் கூறுவது போல் ஏன் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை. திரைப்படங்களின் குற்றமா...? இல்லை மக்கள் மீது குற்றமா....?
விமர்சனங்களால் படங்களை வெற்றியடையச் செய்யும் போது விமர்சனங்களால் மக்கள் மனதை மாற்ற முடியும் என்பதும் சாத்தியமே. தொடர்ந்து எழுது நண்பா...
//முதல்வன், புரட்சிக்காரன், கடவுள், இந்தியன், ஜெண்டில்மேன், பம்பாய், சாமுராய்//
இது எல்லாமே முதலாளித்துவ கருத்து படங்கள் கடவுள் , புரட்சிக்காரன் நான் பார்க்க வில்லை .
தனியாக நின்று புரட்சி செய்ய முடியாது என்றே நினைக்கிறேன் . அது கடவுள் வருவார் என்ற
தாக்கத்தை ஏற்ப்படுத்தும் . அதிகார வர்க்கத்திற்கு மக்கள் திரள கூடாது தனியாக மக்கள் கடவுள் வருவார் ,
ராபின் ஹூட் வருவார் என்ற நம்பிக்கையை விஷத்த்தனாமாய் விதைக்கிறது , இவன் படத்தில் பார்த்திபன்
சொல்வரே அதை போல . " யாரோ ஒருவர் மக்களை காப்பாற்ற வருவார் என்று மக்களிடம் விதைக்கிறது .
அதனால் தான் மக்கள் விஜகாந்த் போல யாரவது வருவார்களா என்று எதிர்ப்பார்க்கிறார்கள் . மக்கள் ஒன்று
பட்டால் தான் புரட்சி வெடிக்கும் ஒரு முதல்வனோ , இந்தியனோ மக்களுக்காக பிறக்க மாட்டார் முடியவும் முடியாது
சரி பம்பாய் ஒரு மத வெறி கொண்ட படம் என்றே நினைக்கிறேன்.
//நீங்க காமெடி பீஸா இல்ல கழண்ட பீஸான்னு டுவிட்டர்ல க்ளேபரம் நடக்குது நீங்க என்னடான்னா விமர்சந்த்த வரவேத்துட்டு இருக்கீங்களே தல! //
ராஜன் அங்கே விமர்சனம் செய்பவர்கள் இங்கே வந்து விவாதித்தால் நல்லது என்றே நினைக்கிறேன் . மார்க்சை ஒரு காலத்தில் கழண்ட பீஸ் என்று
சொல்லி இருப்பார்கள் , galileo வை சொன்னார்கள் என்று கேள்விப்பட்டேன் . இதற்க்கு எல்லாம் கவலை பட முடியுமா ????? அவர்களுக்கு எல்லாம்
மணிரத்னத்தை சொல்கிறேன் இல்லை கமலஹாசனை சொல்கிறேன் என்று கோபம் இருக்கும் , ஏன் சொல்ல கூடாதா அவர்கள் தலையில் கொம்பா
முலைத்திருக்கு?? எனக்கு twitter உபயோக படுத்த தெரியாது ............................!!!! இங்கே பெரிய எழுத்தாளர் என்று இவர்கள் சொல்பவர்கள் பதிவுலகத்தில்
செம்மொழி மாநாட்டிற்கு செல்கின்றனர் , அவர்கள் காமெடி பீஸ் இல்லை என்றால் நான் காமெடி பீஸ் தான் .பார்பநீயதிர்க்கு கொடி பிடிப்பவர்கள் இருக்கிறார்கள் ,
விஜய் அஜித் படம் மொக்கை நாங்க எல்லாம் மணி கமல் படம் தான் பார்ப்போம் என்று உளவியல் ரீதியாய் அடிமை ஆபவர்கள் காமெடி பீஸ் இல்லை என்றால் நான் காமெடி
பீஸ் என்றே இருந்து விட்டு போகட்டுமே .....நான் மனதிற்கு பட்டதை நேர்மையாய் எழுதுகிறேன் போதும் அது .
//உங்களுக்கு பிடிக்கல என்று விமர்சித்தல் நலம்.
ஆனா அது எல்லோருக்கும் பிடிக்கல என்று விமர்சித்தல் தவறு. ///
எல்லாருக்கும் பிடிக்கல என்று நான் என்றுமே சொன்னதில்லையே தல
//"தல இல்லாத தீபாவளி துக்க தீபாவளி " என்று போஸ்டரை ஒரு முறை என் மனமும் ரசித்து உள்ளது ,
அதை ரசிப்பதில் என்ன தவறுன்னு சொல்ல முடியுமா?
//ராஜன் அங்கே விமர்சனம் செய்பவர்கள் இங்கே வந்து விவாதித்தால் நல்லது என்றே நினைக்கிறேன் //
வம்ப வெலைக்கி வாங்கும் வயசுடா!
ஒலக உருண்ட கோலி சைசுடா!
// எனக்கு twitter உபயோக படுத்த தெரியாது ............................!!!! //
/
நல்ல வேளை!
// மார்க்சை ஒரு காலத்தில் கழண்ட பீஸ் என்று
சொல்லி இருப்பார்கள் , galileo வை சொன்னார்கள் என்று கேள்விப்பட்டேன் . இதற்க்கு எல்லாம் கவலை பட முடியுமா ????? அவர்களுக்கு எல்லாம்
மணிரத்னத்தை சொல்கிறேன் இல்லை கமலஹாசனை சொல்கிறேன் என்று கோபம் இருக்கும் , ஏன் சொல்ல கூடாதா அவர்கள் தலையில் கொம்பா
முலைத்திருக்கு?? //
ஹா ஹா ஹா! தலைல மொளைச்சிருக்க வாய்ப்பில்ல!
//
விஜய் அஜித் படம் மொக்கை நாங்க எல்லாம் மணி கமல் படம் தான் பார்ப்போம் என்று உளவியல் ரீதியாய் அடிமை ஆபவர்கள் காமெடி பீஸ் இல்லை என்றால் நான் காமெடி
பீஸ் என்றே இருந்து விட்டு போகட்டுமே .....நான் மனதிற்கு பட்டதை நேர்மையாய் எழுதுகிறேன் போதும் அது .//
எதோ என்னால முடிஞ்சது! தும் ததா!
//இங்கே பெரிய எழுத்தாளர் என்று இவர்கள் சொல்பவர்கள் பதிவுலகத்தில்
செம்மொழி மாநாட்டிற்கு செல்கின்றனர் , அவர்கள் காமெடி பீஸ் இல்லை என்றால் நான் காமெடி பீஸ் தான் //
அப்ப ரைட்டு ! செம்மொழி மாநாட்டுக்கு போனவங்கள கழண்ட பீஸுன்னு சொன்னா உங்களையும் சொல்லலாம்ங்கிறீங்க! சம்மட்டி அடி(!)
//அதை ரசிப்பதில் என்ன தவறுன்னு சொல்ல முடியுமா?//
ஒரு தனிமனிதனை துதி பாடுவது என்றுமே தவறு . அந்த தேசத்தால் வளரவே முடியாது. மக்கள் ஒன்று கூடுவது மட்டுமே வெற்றி .
ஈழ விடயத்தில் மக்கள் முன்னிறுத்த படாமல் தனிமனிதன் பிரபாகரன் முன்னிறுத்த பட்டது தோல்விக்கு காரணம் . அதனால்
தனிநபர் வழிபாடு கடவுள் நம்பிக்கை போன்று முட்டாள் தனமானது. மனிதர்கள் ஒன்று கூடினால் ஜெயிக்க முடியாது என்று நம்புபவனே
தனி மனிதனை துதி பாடுகிறான் .
yes
Nee atheist-a?
unakku ellam kalyaanam agi ahh
crazy fellow-ya u r
tc
if u have time come for chat
madhumidha1@YAHOO.COM
bye-ya
நல்ல சினிமா பதிவு .........வாழ்த்துகள்
//yes
Nee atheist-a?
unakku ellam kalyaanam agi ahh//
ஆத்திகர்களெல்லாம் கல்யாணம் ஆகி அப்படியே நட்டமா நட்டுடாங்க, நாத்திகர்கள் கல்யாணம் பண்ணி நாசமா போறதுக்கு!
ஏந்தா புத்தி இப்படி போவுதே தெரியலையே!
உண்மை கடவுளுக்கும் கல்யானதிற்க்கும் என்ன சம்பந்தம் ...நன்றாய் சொன்னிர்கள் வால்
//Kevalamaana Cinemavirku
Vimarsanam eludhuvadhu Kevalamana seyal thaane //
ஒருவர் கேவலாமான செயலை செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்
ஒரு நாய் வீட்டில் புகுந்து சோற்றை தின்கிறது என்றால் நாயை அடிக்க தானே செய்வோம்
Post a Comment