Wednesday 12 May 2010
அந்நியன் போன்ற படங்கள் சொல்லும் தனிமனித தீர்வு சாத்தியமா
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. நாம் அந்த பிரச்னையை தனியாய் தீர்க்க முற்படுவது உண்டு , சரி அப்படி சரியாய் தீர்க்க முடியுமா . நம் பிரச்சனைகள் எங்கு இருந்து தோன்றுகின்றன என்று பார்ப்போம்??? உதாரணமாய் நான் மதுரையில் இருந்து வந்து சென்னையில் வேலை செய்கிறேன் என்றால் என் வாழ்க்கை இயந்திரமாய் போகிறது என்று வைத்துக்கொள்வோம் . இதற்க்கு என்ன தீர்வு நான் திரும்பவும் மதுரையில் போய் வேலை செய்ய முடியுமா ????? சரி அப்படி மதுரைக்கு போய் வேலை செய்தால் பொருளாதார பிரச்சனை இருக்குமே???? நீங்கள் எதாவது ஒரு பிரச்னையை எடுத்துக்கொள்ளுங்கள் இது பொருந்தும்.
ஒரு மனைவி கணவன் குடிக்கிறார் என்று சொன்னால்??? அவர்கள் நடுத்தர வர்க்கமாய் இருந்தால் கணவருக்கு வேலையில் மன அழுத்தம் இருக்கும் அதுவும் IT துறை போன்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். சரி அடித்தட்டு வர்க்கமாய் இருந்தால் என்ன பிரச்சனை ????கணவன் லாரி ஒட்டுபவனாகவோ இல்லை சித்தாள் இல்லை என்றால் மலம் அல்லுபவனாகவோ இருந்தால் வேலை பளு கட்டாயம் அவன் குடித்தே ஆக வேண்டும் . அப்படி இருக்கையில் இங்கே சமூக மாற்றம், முதலாளிகளால் சுரண்டப்படாமல் இருப்பது மூலமே இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதாவது இங்கே தனி நபர் பிரச்சனை என்பது தனி நபர் பிரச்சனை அல்ல அது சமூக பிரச்சனை எப்பொழுது சமூக பிரச்சனை தீர்கிறதோ அப்பொழுதே தனி மனிதனுக்கும் தீர்வு கிடைக்கிறது.
தனிமனிதன் தீர்வை நோக்கி எங்கே போகிறான். கடவுள், மதம், மதம் சார்ந்த சாமியார்கள், மதம் சாராத சாமியார்கள் , முயற்சி, அராஜகம், பகுத்தறிவு . இது எல்லாம் தனிநபர் தீர்வு இது எல்லாம் உண்மையிலேயே தீர்வா. கடவுள் மதம் எல்லாம் என்ன சொல்கிறது கடவுள் இருக்கிறார் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறது , அதாவது நீ எதை கண்டும் கோப படக்கூடாது கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று எளிமையாய் சொல்கிறது . இந்திய போன்ற நாடுகளில் கடவுள் மதம் சாமியார்கள் அதிகம் அதனாலேயே மனிதன் நீர்த்துப்போய்சமூகம்
அவலமாய் உள்ளது. அதாவது மனிதனுக்கு கோபம் வந்தாலும் , அவன் என்ன எடுத்துக்கொள்கிறான் கடவுள் இருக்கிறார் நாம் எல்லாம் பேசக்கூடாது நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார் நமக்கு நீதி கிடைக்கும் என்று இருக்கிறான். சமூக அவலங்களை கண்டு கொதிப்பதில்லை . கடவுள் மதம் போதை போல கஷ்டங்களை மறக்கடித்து மயக்க நிலையில் வைத்துக்கொள்ளும் அதனால் கஷ்டங்களை மறக்கிறான் சாமானியன்.
மதம் சாரதா கடவுள் எல்லாம் என்ன சொல்கின்றன? என்ன சொல்கிறது ஜென் கதைகள் . நாளை பற்றி யோசிக்காதே பழசை மற, இந்த நொடி மட்டுமே உண்மைஎன்கிறது அதனால் மனிதன் போராடாமல் நீர்த்துப்போகிறான். ஆக மொத்தம் என்ன சொல்கிறது கடவுள் மதங்கள் நீர்த்து போகும் வேலையை பார்க்கின்றன ,அடி தட்டு மனிதனிடமும் , நடுத்தரவர்க்க மனிதனிடமும் கோபம் வராமல் இதுவரை கொள்ளை அடிக்கிற முதாலாளியை காப்பாற்றுகின்றன .
தனிமனித முயற்சியை எடுத்துக்கொள்வோம் , இப்பொழுது எல்லாம் நிறைய சுயமுன்னேற்ற புத்தகங்கள் வருகின்றன. ஏன் அப்துல் கலாம் கூட கனவு காண் என்கிறார் தனிமனித முயற்சியை ஈழத்திலே எடுத்துக்கொள்வோம் , அந்த சமூகம் குண்டடி படும் பொழுது எப்படி முயற்சி செய்து வாழ்கையில் வெற்றி பெறமுடியும் அந்த இடத்தில் மக்களக்கு விடுதலை கிடைப்பதை பொறுத்தே தனிநபரின் முயற்சி வெற்றி பெறுகிறது . ஒரு தத்துவம் என்றால் எல்லா இடத்திலும் பொருத்தி பார்த்தால் வெற்றி பெற வேண்டும் . சரி ஒரு தனிமனிதன் முயற்சி செய்து JAVA படிக்கிறான் என்று வைத்துக்கொண்டால் , IT துறை தோல்வி அடைகிறது என்றால் அவன் தனிமனித முயற்சி என்ன ஆகும், பொருளாதார வீழ்ச்சிக்கு அவன் என்ன செய்வான். அதனால் ஒரு தனிமனிதனுக்கு தீர்வு சமூகத்தில் இருந்து கிடைக்கிறதே அன்று அவனிடம் இருந்து தீர்வு கிடைப்பதில்லை.
சரி படங்கள் எப்படி எடுக்கிறார்கள் , உதாரணமாய் அந்நியன் என்ற படம் எடுத்துக்கொண்டால் தனி மனித ஒழுக்கம் பற்றி பேசுகிறது , ஒவ்வொருவரும் ஒழுக்கமாய் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அதன் நாடி ஒரு flash back காட்சியிலே விரிகிறது, ஒரு சின்ன தவறினால் கதாநாயகன் தங்கை இறந்து விடுகிறாள் , அதற்க்கு காரணம் தனிநபர் ஒழுக்கம் என்று சொல்கிறது படம்.சரி தனிநபர் ஒழுக்கம் தான் காரணமா அந்த கவனக்குறைவிற்கு . சரி அப்படி ஒரு ஒரு மனிதனையும் தனி தனியாக திருத்த சாத்தியமா ???எவ்வளவு காலம் திருத்திக்கொண்டிருப்பார்.
ஒவொவொரு பிரச்னையும் தொடர்பு உடையது, அதை தனித்தனியாய் பிரித்து தீர்க்க முடியாது.
உதாரணமாய் அலுவலில் வேலை அதிகம் பார்ப்பதால் குடும்பத்தை கவனிக்க முடியாததால் மன உளைச்சலால் தான் கள்ளக்காதல் வருகிறது என்பதே உண்மை . கள்ளக்காதலை ஒழிக்க வேண்டுமானால் தனிநபரை திருத்துவதை விடுத்து , வேலை நேரம் கம்மி செய்தாலே போதும் , மன உளைச்சல் கம்மியாகும் , வேலை நேரம் குறைய வேண்டுமென்றால் என்ன வேண்டும் முதலாளித்துவம் சுரண்டலை நிறுத்த வேண்டும். என்ன தலை சுற்றுகிறதா????? தனிமனித ஒழுக்கம் என்பது கூட சமூக கட்டமைப்பில் வருகிறது . இப்பொழுது PUB டிஸ்கோதே போகும் IT துறையினர் எல்லாருமே பிறக்கும் பொழுது பீர் பாட்டிலுடன் பிறந்தவரா என்ன , மதுரை ராமநாதபுரம் திருநெல்வேலி அப்படி இருந்துவந்தவர்கள் இங்கு IT வேலை மனஉளைச்சல் உடனே பார் pub ஆட்டம் கொண்டாட்டம் , இதன் வேர் எங்கு உள்ளது , அவர்களுக்கு நேரம் கம்மியாய் வேலை இருக்கவேண்டும் மனஉளைச்சல் தராத வேலையாய் இருக்க வேண்டும் என்பதை சார்ந்ததே தவிர , அது தனிமனித ஒழுக்க சமந்தப்பட்டது அல்ல .
அந்நியன் படத்திலே எச்சி துப்புபவரை கூட விக்ரம் கொள்வார், சிரிப்பாய் உள்ளது . தனி தனியாய் ஒருத்தன் ஒரு விடயத்தை தீர்க்க முடியாது . இந்த ராபின் ஹூட் வேலை எல்லாம் வேலைக்கு ஆகாது , சினிமாவில் கைதட்ட வேண்டுமென்றால் உதவும் . நாம் சமூகத்தில் ஒரு அங்கமே தவிர சமூகம் நமக்குள் அங்கம் அல்ல. சமூக பிரச்சனைகளை தீர்ப்பது மூலமே தனிமனித பிரச்சனை தீர்க்கப்படும் என்பதே உண்மை. ஏன் என்றால் நாம்
எல்லாமே சமூகத்தின் படைப்புகள் . சமூகம் நன்றாய் இருக்கும் பொழுதும் அதன் படைப்புகளும் நன்றாய் தான் இருக்கும்.
நம் தமிழ் படங்கள் gentle man , அந்நியன், மகாநதி, பம்பாய், நான் கடவுள் , ரோஜா போன்ற படங்கள் தனிநபரிடம் இருந்து தீர்வை சொல்கின்றன ,சமூக அவலங்களை காட்டாமல் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் , அவன் வரும் கருத்து என்று போகின்றன . கதைகள் தனிநபரின் பார்வை ஓட்டத்தில் போகின்றன, அதனால் தன்னை கடுவுளாய் நினைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்கின்றன. ஆனால் தனிநபர் என்பவர் அறிவாளி அல்ல , அவர் சமூகத்தின்
அங்கம் எப்பொழுது சமூக பிரச்சனை எல்லாம் கலையப்படுகிறதோ அப்பொழுது தான் தனிமனிதனுக்கு தீர்வு . ஒரு தனிமனிதன் ஒரு பிரச்சனைக்கு தீர்வு என்றாலும் அவன் சமூகம் மாற்றம் பெறவேண்டும்.
சமூகத்தில் அந்நியனாய் அறிவாளியாய் இருந்து தீர்ப்பு சொல்ல முடியாது . சமூகத்தில் ஒரு அங்கமாய் இருந்து தீர்வுக்காக போராடலாம்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மிகச்சரி...
பிரச்சனைகளின் காரணத்தை சரியான நோக்கில் பார்த்து தீர்வு எங்குள்ளது என்று கணித்துள்ளீர்கள்.
உழைப்புச் சுரண்டல்தான் இங்கு பல பிரச்சனைகளுக்குக் காரணம்.
பாராட்டுக்கள்.
சமூகத்தில் தனி ஒருவனாக இருந்து தீர்ப்பு சொல்ல முடியாது. அப்படி சொல்பவனை ஒன்று கடவுளாக்கி விடுவார்கள் இல்லை பைத்தியக்காரன் ஆக்கி விடுவார்கள். திரைப்படங்கள் எல்லாம் ஒரு இல்லஸ்ட்ரேசன்தான். நடை முறையில் கடை பிடிக்க முடியாது என்பது உண்மை.
//ஒரு ஒரு மனிதனையும் தனி தனியாக திருத்த சாத்தியமா ???எவ்வளவு காலம் திருத்திக்கொண்டிருப்பார்.
அரசியல் ரீதியாக தனிமனித முயற்சி எடுபடாது.
ஆனால் ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியவை தனிமனிதனில் இருந்தே ஆரம்பிக்கின்றது (இதுவே அந்நியனில் சொல்லப்பட்டது). ஒவ்வொரு கட்டுப்பாடு மிக்க தனிமனிதனும் சேர்ந்தால் ஒரு கட்டுப்ப்படுமிக்க சமுதாயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை. எல்லோரும் திருந்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் தனியாக வந்து திருத்துவேன் என்று சொல்லவில்லை. அது சும்மா சுவாரசியத்துக்காக.
பப், பார் போன்றவை எல்லாம் மன உளைச்சலை குறைப்பதற்கு என்பதெல்லாம் சுத்த பொய். கையில் பணம் இருக்கிறது. எல்லோரும் போல நாமும் ஜாலியாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான். இந்த எண்ணம் எழாமல் இருப்பது தான் தனிமனித ஒழுக்கம். போதை என்பது மன உளைச்சலை குறைக்காது. மறக்கடிக்கும். போதை தெளிந்த உடன் அதிகரிக்கும். இதற்கு நல்ல வழி தியானம் தான்.
சரி பார் புப் பற்றி சொன்னீர்கள் மலம் அள்ளுபவன் குடித்தால் தான் அல்ல முடியும் , லோரி ஓட்டுனர் குடித்தால் தான் ஓட்ட முடியும்
என்றால் என்ன செய்ய ஒழுக்கங்கள் ஒவொவொரு ஊருக்கும் மாறுபடும் தானே . மதுரையில் ஒழுக்கம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் பேசக்கூடாது சென்னையில் மாறுபடுகிறதே . ஒரு பத்து பேரை கூட்டி வந்து ஒழுக்கம் என்றால் என்ன என்று கேட்டால் பத்து விதமான
பதில் வரும் என்பதே உண்மை . அப்படி இருக்கும் பொழுது தனிமனித ஒழுக்கம் என்று சொல்வது எப்படி ????
சரி ஒரு பக்கம் பணம் குமிகிறது மறுபக்கம் பணம் கூடுகிறதே நீங்கள் சொல்வது போல் பார்த்தால் அதை கட்டுப்படுத்தலாமே
எளிமையாக சொன்னால் சமூகம் முழுவதும் பப் பார் திறந்து வைத்தால் குடிக்கத்தான் செய்வான் அங்கே கூட சமூக
மாற்றமே தீர்வு
//மூகத்தில் அந்நியனாய் அறிவாளியாய் இருந்து தீர்ப்பு சொல்ல முடியாது . சமூகத்தில் ஒரு அங்கமாய் இருந்து தீர்வுக்காக போராடலாம்//
100% சரியாச்சொன்னீங்க....
நன்றி சங்கவி சீனு
எங்க ஊர் பக்கம்
பசு,தென்னை மரம் என்று
ஒரு கதை உண்டு.
அது மாதிரியிருக்கு
நீங்க சொல்வது.
எல்லாவற்றையும்
முதலாளி,தொழிலாளி
பிரச்சினையாப் பார்க்க முடியாது.
அலுவலகம், 8 மணி நேரம் தாண்டிய
வேலை இத்யாதி..இத்யாதி
எல்லாம் இல்லாத முன்னொரு
காலத்திலேயே நீங்க சொல்ற
பப்,கள்ளக்காதல் எல்லாமுண்டு.
அப்ப அதுக்கு வேறப் பெயர்.
சினிமாவில் சொல்லுவதை
எல்லாம் சீரியஸாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.
இந்த இடுகைக்குச்
சம்பந்தமில்லாத கேள்விகள்.
போபால் விஷ வாயு வழக்கில்
அடுத்த மாதம் தீர்ப்புச்
சொல்லப் போகிறார்கள்.
தீர்ப்பு எப்படியிருக்கும்
உங்கள் யூகம் என்ன?
தீர்ப்பு எப்படி இருக்கவேண்டும்
உங்கள் விருப்பம் என்ன?
Samuga unarvukalai pesa thirai padangal than alavu kola? Athuvum anniyan padam, athu paarpanarkalukku mattum than samuga akkarai undu endru kata as usual shankar edutha kuppai padam.
Thavaru seypavarkal ellam pira samuthayam thatti ketpavan kudumi! Ayyangar aathu heroin thavaru seyumpothu anniyan avatharam namuthu poi vidum. Enna kodumada ithu!
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மது அருந்தாதவன் எல்லாம் நல்லவனும் அல்ல, அருந்துபவன் எல்லாம் அயோக்கியன் அல்ல. இதற்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை.இது மேலைநாட்டு கலாச்சார கலப்படத்தின் விளைவு. முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் கூட ஆண் பெண் பேசினால் தவறு. மும்பையில் சகஜம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சகஜம் ஆகிவிட்டது. இப்போது மதுரையில் மாறி வருகிறது. ஒருவன் எந்த சமூகத்தில் (சாதியை சொல்லவில்லை) இருக்கிறானோ அந்த சமூகத்தை சார்ந்தே அவனது ஒழுக்கம் இருக்கும். பணத்தை செலவழிக்கும் ஒரே நோக்கத்துக்காக இப்படிப்பட்ட சிற்றின்பத்தில் ஈடுபடுவதே ஒழுக்கக்கேடு.
//பப் பார் திறந்து வைத்தால் குடிக்கத்தான் செய்வான்
அப்படிப்பார்த்தால் எல்லா பார்களையும் மூடிவிட்டால் குடிப்பதை நிறுத்தி விடுவார்களா? கண்டிப்பாக இல்லை.
கள்ளசாராயம்தான் பெருக்கெடுத்து ஓடும். நான் மது அருந்த மாட்டேன். அதற்கு காரணம் எங்கள் ஊரில் பார், பப் இல்லாததோ, பணபிரச்சனையோ அல்ல. என்னுடைய தனிமனித ஒழுக்கம்தான்.
ஒழுக்கக்கேடு என்பது மது அருந்துவது அல்ல. தன் இயல்பான கடமைகளை செய்யாமல் அதிலேயே உழன்று கிடப்பது. மலம் அள்ளுபவன் மது அருந்துவது ஒழுக்க கேடு அல்ல. ஆனால் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு மல்லாந்து கிடப்பதுதான் ஒழுக்ககேடு. அந்நியனில் எச்சில் துப்புவதால் அவனை கொல்லமாட்டார். வேலைவெட்டிக்கு போகாமல் வயதான தன் தாயின் வருமானத்தில் வாழ்வதனாலேயே அவனை கொல்வார். இது ஒரு இல்லஸ்ட்ரேசன். அதே போல மற்றவர்களை சுரண்டுபவர்களுக்கு, பணத்தை உண்ண முடியாது என்று ஒரு இல்லஸ்ட்ரேசன்.
கண்டிப்பாக தனி ஒருவன் மாறினால் சமூகத்தில் அவனால் வாழ முடியாது. எல்லோராலும் சுரண்டப்படுவான். ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் மாறினால் அது சமூகத்தின் மாற்றம்தானே. இதைத்தான் அப்துல்கலாம் சொன்னார். எப்படியோ உங்கள் பதிவை படித்து என்னை நிறைய சிந்திக்க வைத்து விட்டீர்கள்.
வவ்வால் அதை தான் நான் சொல்கிறேன் இங்கே அந்நியன் விடயம் அல்ல அந்நியன்
படத்தை கொண்டாடுகிறவர்கள் விடயம் மேலும் தனிநபர் தீர்வு சொல்பவர்கள் தவறு
//athu paarpanarkalukku mattum than samuga akkarai undu endru kata
இந்த அளவுக்கு நுட்பமாக பார்க்க எனக்கு தெரியாது. பார்பனராக இருப்பதால் கருட சாஸ்திரம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். அதையே தன் கொலைகளுக்கு இன்ஸ்பிரேசன் ஆக எடுத்திருக்கலாம். அதற்காகவே அவரை பார்ப்பனராக காட்டி இருக்கலாம் என்பது என் பார்வை.
//அந்நியனில் எச்சில் துப்புவதால் அவனை கொல்லமாட்டார். வேலைவெட்டிக்கு போகாமல் வயதான தன் தாயின் வருமானத்தில் வாழ்வதனாலேயே அவனை கொல்வார். இது ஒரு இல்லஸ்ட்ரேசன். அதே போல மற்றவர்களை சுரண்டுபவர்களுக்கு, பணத்தை உண்ண முடியாது என்று ஒரு இல்லஸ்ட்ரேசன் //
அப்படி வேலை வெட்டிக்கு போகாமல் இருப்பது கூட சமூகம் சொல்லிக்கொடுத்தது . எப்படி பணக்காரர்களின் குழந்தைகள் காசு இருக்கிறது என்பதன்
ஒரே காரணத்திற்க்காக நன்றாய் படிக்கும் மாணவர்களுடன் கல்லூரியில் படிப்பார்கள் .படிப்பாதை எப்படி சமூக பின்னணி நிர்ணயம் செய்கிறதோ அதே போல் வேலைக்கு போகாமல் இருப்பதையும் சமூகம் நிர்ணயம் செய்கிறது , அவனைக்கொன்று தீர்வு சொல்லாமல் அவன் ஏன் அப்படி இருக்கிறான் என்று சமூக எழுச்சிக்கு வழிக்காட்டலாமே . அது எப்பொழுது நடக்கும் என்றால் தனி மனித தீர்வில் அல்ல ....... சமூக மாற்றத்தில்
தான் நடைபெறும்.
//ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் மாறினால் அது சமூகத்தின் மாற்றம்தானே. இதைத்தான் அப்துல்கலாம் சொன்னார். //
சரி எனக்கு தெரிந்து அப்துல் கலாம் சொல்வதில் அரசியல் உள்ளது , எப்படி என்று பார்த்தால் அனைவரும் கனவு காண்கிறான்
தன் சுய முன்னேற்றம் மட்டும் கருத்தில் கொண்டு , இப்பொழுது இந்தியாவில் அதிகம் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேறி
உள்ளனர். சிலர் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் அதனால் இந்தியா முன்னேறிய நாடா என்ன??? தனி நபர் தீர்வு அல்லது
அவருடைய பொருளாதார முன்னேற்றம் சமூகத்தை நிர்ணயம் செய்யாது . எனக்கு தெரிந்து நிறைய மனிதர்கள் அப்துல் கலாம் சொல்வதை
போல் கனவு மட்டும் கண்டுகொண்டு சுய முன்னேற்றம் என்ற பெயரில் வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டும் அடைகின்றனர் ,
அதை பின் பற்றும் மனிதர்கள் வெளிநாடுகளுக்கு போய் கல்லா மட்டும் கட்டுகின்றனர்
@Maduthumitha
//எல்லாம் இல்லாத முன்னொரு
காலத்திலேயே நீங்க சொல்ற
பப்,கள்ளக்காதல் எல்லாமுண்டு.
அப்ப அதுக்கு வேறப் பெயர்.
சினிமாவில் சொல்லுவதை
எல்லாம் சீரியஸாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.//
சினிமாவை உங்களுக்கு உதாரணம் காட்டியதால் உங்களுக்கு அப்படி இருக்கிறது
சரி நீங்கள் எங்கே வேலை பார்கிறீர்கள் ????????????
நீங்கள் சொல்வதை பார்த்தால் முதலாளி தொழிலாளி என்று இல்லவே இல்லை என்கிறீர்களா ?????
உலகம் முழுக்க ரெண்டே வர்க்கம் முதாலாளி தொழிலாளி .....அது படம் பார்த்து கற்று கொள்ளதேவை இல்லை
நான் சினிமாவை சொன்னால் எல்லாருக்கும் எளிமையாய் புரியும் என்று சொன்னேன் .......................
மைய்ய கருத்தில் இருந்து வாதிடவும் ........சினிமா உதாரணமே .........
சரி சினிமா இல்லை என்றாலும் ...முதாலாளி தொழிலாளி இருக்கிறதே, அதுவும் இப்பொழுது வேலைப் பளு
அதிகம் கட்டாயம் முதாலாளித்துவ உலகம் நம் சந்தோசத்தை துக்கத்தை நிர்ணயம் செய்கிறது என்பதே உண்மை
@madhumidha
//போபால் விஷ வாயு வழக்கில்
அடுத்த மாதம் தீர்ப்புச்
சொல்லப் போகிறார்கள்.
தீர்ப்பு எப்படியிருக்கும்
உங்கள் யூகம் என்ன?
தீர்ப்பு எப்படி இருக்கவேண்டும்
உங்கள் விருப்பம் என்ன//
ஏன் விருப்பம் அன்தேர்சனை தூக்கில் போட வேண்டும்
பாருங்கள் இங்கே கூட முதாலாளி துவ உலகம் நீங்கள் சொல்வது போல் ஒரு கேஸ் கூட
முதாலாளி என்றால் ஒரு மாதிரி தீர்ப்பு ........................காசாப் என்றால் கசாப்பு கடைக்கு போக வேண்டும்
என்று பதிவர்கள் கூட எழுதுவார்கள் என்பதே உண்மை ..................!!!! அப்படி நாம் எல்லாம் பழக்கபடுத்த பட்டு இருக்கோம்
நீங்கள் உட்பட ............நான் உட்பட
Post a Comment