Friday, 21 May 2010

தொலைக்காட்சியும் 75000 மக்கள் தொலைந்த காட்சியும்

மன்னார் மாவட்டம் நாச்சிகூடா பகுதியில் தோண்ட தோண்ட பிணங்கள் வருகிறதாம் . இதை போல பல காட்சிகள் வந்து கொண்டே இருக்கின்றன . ஒரு போராளியை துன்புறுத்தி வெட்டிக்கொன்று இருக்கிறார்கள் .75000 பேர் காணமல் போய் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.கன்னி வெடி இருக்குமோ என்ற ஆராச்சி செய்த வெளிநாட்டவர் அதிர்ந்து இருக்கிறார்கள் .சரி இது இணையத்தில் படிப்பவருக்கு தெரிகின்றது , TV பார்க்கும் பாமரனுக்கு இந்த செய்திகள் வேண்டுமென்றே மறைக்கபடுகின்றன . ஊடகங்கள் இன்று நடந்த மங்களூர் விமான விபத்தை பெரிதுபடுத்தி காட்டுகின்றன , வயலின் எல்லாம் வாசிக்கிறார்கள் என்று நண்பன் சொன்னான்???? பக்கத்தில் ஒரு இனம் அழியும் பொழுது மௌனமாய் பார்த்து ரசித்த இணையம் , விமான விபத்தை பதிவு செய்கிறது வேடிக்கை .

ஊடகங்களின் பங்கு எந்த அளவு இருக்கின்றன ,தமிழ் சினிமா ஏன் தோல்வியில் இருக்கிறது என்று ஒரு ஊடகம் முக்கியமான விடயத்தை பேசுகிறது .குஷ்பூ தான் HOT டாக் , கொஞ்சா நாள் முன்னால் IPL , நித்யானந்த , இவர்களுக்கு பேச காசு பார்க்க எதையாவது அசை போட ஏதாவது ஒன்று வேண்டும்.இந்த ஊடகங்கள் மக்களை முட்டாளாக்க வைக்க பல சதிகள் செய்கின்றன . இவன் சொல்வது தான் செய்தி ,மக்களிடம் தொடர்ந்து மந்த புத்தி வளரஇந்த ஊடகங்களே காரணம் என்று சொல்லுவேன் . இந்த ஊடகங்கள் மூலம் நுகர்வு கலாச்சாரம் திணிக்கபடுகிறது.

சரி இந்த ஊடகங்கள் ஏன் வேண்டுமென்றே சில செய்திகள் சொல்கின்றன வேண்டுமென்றே சில செய்திகளை மறைக்கின்றன. ஊடகங்கள் ஆளும் மக்களின்ஊதுகுழல் . இலங்கையில் பிரச்சனை என்றால் தமிழகத்தில் எழுச்சி ஏற்ப்படும் , அதை மட்டுப்படுத்த வேண்டும் . இங்கே முத்துக்குமரன் இறந்தது தமிழக மக்களிடையே
வேண்டுமென்றே பரப்பபடவில்லை . எந்த ஒரு எழுச்சியையும் அரசு விரும்பாது , எங்கெல்லாம் எழுச்சி ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஊடகம் வைத்து எழுச்சியைகட்டுப்படுத்தும். அதனால் தான் ஆளுவது காங்கிரஸ் , மன்னார் செய்தியை கலைஞர் தொலைகாட்சி போடுமா என்ன????????

நித்யனந்தவின் காம லீலைக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கியது சூரிய குழுமம் , இந்த மன்னார் விடயத்தை ஏன் போடவில்லை என்பதில் ஆச்சர்யம் . கலைஞர் டெல்லி சென்று சோனியா அம்மையாரை மகன் அமைச்சர் ஆகா வேண்டும் என்று சக்கர நாற்காலியில் பார்க்கிறார் . இன்னொரு சமயம் அழகிரி ஒழுங்காய் பாராளுமன்றம் போக வில்லையாம் என்பதற்காய் ஒரு சிறு குழந்தையின் படிப்பிற்காக ஆசிரியரை பார்ப்போமே அது போல
மறுபடியும் சோனியா அம்மையாரை பார்க்கிறார் . ஒரு இனம் அழிந்து இருக்கிறதே அங்கே சென்று பார்க்க வேண்டியது தானே . கலைஞர் வந்தால் ஊடகங்கள் அவரை தொடரும் , மக்களிடம் ஒரு எழுச்சி ஏற்ப்படும் என்று தெரியாதா முதல்வருக்கு.

அரசியல் பேசாமல் இருப்பது கூட அரசியல் தானே??? இப்பொழுது சன் குழுமமோ ஜெயா தொலைகாட்சி கலைஞர் தொலைகாட்சி காட்டாமல் இருக்கிறது என்றால் இவர்கள் ராஜபக்ஷே ஆதரவாளர்கள் என்பதே உண்மை.உண்மைக்கு துணை நிற்க மாட்டேன் , நான் யார் பக்கமும் இல்லை என்பதே பொய்க்கு துணை நிர்ப்பது போன்றது .
பதிவர்கள் சிலர் நல்ல விடயம் என்று நினைத்து அழகான கவிதை எழுதுகிறார்கள் கதை எழுதிகிறார்கள் , இதை போல பேசினால் யாரும் வந்து படிப்பதில்லை . ஏன் யாரும் படிக்கவில்லை என்று யோசித்தால் அவர்களிடம் இருந்து வரும் பதில் "எனக்கு அரசியல் பிடிக்காது ஆனால் நல்லது செய்வேன்" என்பது . அப்படி அரசியல் இல்லாமல் நல்லது செய்ய முடியாது என்பதே உண்மை . நீங்கள் தப்பை தட்டிகேட்க்கவில்லை என்றாலே எதிரிக்கு துணை போகிறீர்கள் என்று அர்த்தம் . இங்கே கலைஞர் செய்வதை தான் நாமும் செய்துகொண்டிருக்கிறோம் , சில விடயங்களை நாம் உரக்க பேசுவதில்லை.

2 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

ஊடகம் ஏன் ஈழ பிரச்னையை காட்ட வில்லை . ஒரு செய்தியை கூட காட்டி இருக்கலாமே . பாக்யராஜ் படம் போல் நித்யானந்தா படுக்கை அறை காட்சி காட்டப்படுகிறதே,
ஆனால் ஈழத்தில் தொலைந்த தமிழர்களை ஏன் கலைஞர் தொலைக்கட்சியோ கலைஞர் மற்றும் அம்மையார் தொலைக்காட்சிகள் காட்டுவதில்லை , இந்த விடயத்தில் எல்லாருமே
ஒரே அணியில் திரளும் நோக்கம் என்ன?????

க.பாலாசி said...

ஊடகங்களின் கள்ளத்தன்மையை சொல்லி மாளாது நண்பரே... எரிகின்ற வீட்டில் பிடிங்கியது லாபம் என்ற நோக்குதான் எப்போதும் இந்த ஊடகங்களுக்கு... மேலும் ஆளும்கட்சியின் ஊதுகுழலும் அதுவே..

பாமரனின் புத்தினை மழுங்கடிப்பதில் சன் குழுமம் முதலிடம்...கூடிய விரைவில் மக்கள் இந்நிலைகண்டு திருந்துவார்கள் என்றே நம்புகிறேன்...