Wednesday 5 May 2010

கடற்கரையில் கடவுள்


















கடற்கரை ஓரம்
ஒரு கோவில் இருந்தது
"கடவுள் மண்ணை காப்பார்" என்று மக்கள் நம்பினார்
சுனாமி வந்தது கோவிலுக்குள்
கடவுள் இழுத்து செல்லப்பட்டார்
புதிய கடவுள் சிற்பியால் உருவாக்கப்பட்டார் .......................................
மணல் மேடுகள் உருவாக்கப்பட்டன ..............
மண்ணால் ஆனா கற்கள் கொண்டு உயர்ந்த மதில்கள் எழுப்ப பட்டன .............
"கடவுள் மண்ணை காத்தாரா ?????
மண் கடவுளை காத்ததா

17 comments:

Bala said...

இது பகுத்தறிவு கவிதையா?

பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு வாய்க்கு வந்ததை எழுதுவது தவறு...
சிலை என்பது கடவுள் அல்ல. கடவுளின் உருவகம். கடவுள் மூட நம்பிக்கை என்றால் மனசாட்சி, தன்மானம் இரண்டுமே கூட மூட நம்பிக்கைதான்.

வெண்ணிற இரவுகள்....! said...

ஏன் உங்கள் கடவுள் சுனாமியை தடுக்க வேண்டியது தானே . மழையோ புயலோ வெள்ளமோ
பாதிக்க படுவது அடித்தட்டு மக்களே ..........நான் தன்மானத்தை காட்டுகிறேன் நீங்கள் கடவுளை காட்ட முடியுமா என்ன ..............
சரி நீங்களே கடவுள் உருவகம் என்று ஒத்துகொள்கிரீர்களா.?????பாலா

Bala said...

நான் சிலை என்பது கடவுளின் உருவகம் என்று சொன்னேன். கடவுளே உருவகம் என்று சொல்லவில்லை. தன்மானத்தின் உருவகத்தைத்தான் காட்டமுடியும். தன்மானத்தை காட்டமுடியாது. அதே போலதான் கடவுள். கடவுள் ஒரு சக்தி. நான் படித்துணர்ந்ததை உங்களுக்கு புரிய வைக்கும் அளவிற்கு நான் பெரிய அறிவாளி எல்லாம் கிடையாது. நேரம் கிடைத்தால், விவேகானந்தரின் ஞானயோகம், கர்மயோகம் போன்ற புத்தகங்களை படித்துப்பாருங்கள். இவை இரண்டும் மத சார்பானவை அல்ல. மிகவும் பிராக்டிகலாக இருக்கும்.

Madumitha said...

இத்தகையச்
சுலபமானக்
கேள்விகளுக்குத்
தட்டுபடுபவரல்லர்
கடவுள்.

வெண்ணிற இரவுகள்....! said...

மனிதர்கள் சுலபமானவர்கள் ......அவர்களுக்கு தட்டுப்படாமல் உங்களை போன்ற அறிவாளிகளுக்கு மட்டும் தட்டுபடுபவர் கடவுள் அல்ல .......

புலவன் புலிகேசி said...

//Madumitha said...

இத்தகையச்
சுலபமானக்
கேள்விகளுக்குத்
தட்டுபடுபவரல்லர்
கடவுள். //

சுலபமாகத் தட்டுப் பட வில்லை என்றால் அந்த கடவுளே தேவை இல்லை. கடவுள்ங்கறது உருவகமோ, உருவமில்லாததோ இல்லை. ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் இருக்க வேண்டிய சிறந்த குணம்தான் கடவுள். அத உட்டு புட்டு சிலைக் கடவுள், கண்ணுக்கு புலப் படாதவன் கடவுள்னு கத உட்டுக் கிட்டு எவ்வளவு நாள் ஊர ஏமாத்துவீங்களோ. வெண்ணிற இரவுகள் நண்பரே உங்கள் கேள்வி சரியானதே. இவுங்களை எல்லாம் விட்டுத் தள்ளுங்க.

rajeshkannan said...

சிரிக்க தெரிந்தவனையும், சிந்தக்க தெரிந்தவனையும்
திசை மாற்றுவது தான் இந்த இறையாண்மை கடவுள் எல்லாம். கண்ணை மூடி தூங்கினால் தூக்கம் தானாக வந்து விடும்.தூக்கம் வர வேண்டும் என்று கடவுளை
நினைத்துகொண்டு கண்ணை திறந்திருந்தால் தூக்கம் வராது....

Bala said...

காற்றில் ஆக்சிஜன் இருக்கிறது என்று சொன்னால் அறிவாளிகளான நமக்கு புரியும், தட்டுப்படும் உணரமுடியும். இது பற்றி அறியாதவர்களுக்கு உணரமுடியாது. அப்படியானால் அறிவாளிகளுக்கு மட்டும் தட்டுப்படும் ஒன்றை இல்லை என்று சொல்வது புத்திசாலித்தனமா? முட்டாள்த்தனமா?

வெண்ணிற இரவுகள்....! said...

oxygen விஞ்ஞான பூர்வமாய் நிரூபிக்கப்பட்டது நீங்கள் கடவுளை விஞ்ஞான பூர்வமாய் நிரூபிக்க வேண்டாம் ஏன் கடவுள் ஒடுக்க பட்ட மனிதர்களை தண்டிக்கிறார் ....
ஏன் இலங்கையில் இனப்படுகொலை நடந்த பொழுது கடவுள் எங்கே போனார் ???????

வெண்ணிற இரவுகள்....! said...

oxygen பற்றி உணர்ந்தவர்கள் என்று சொல்வதை விட அது உண்மையில் நிரூபிக்க பட்டது
நீங்கள் கடவுள் பற்றி உணர்ந்து இருந்தால் நிருபியுங்கள் .....ஏன் என்னை போன்றவர்களுக்கு
இது தான் கடவுள் என்று எளிமையாய் புரிய வைக்கலாமே ..................
சரி கடவுள் ஏன் குழப்பாமனவராய் இருக்க வேண்டும் OXYGEN சயின்ஸ் குழப்பமாய் இருக்கலாம்
கடவுள் உலகை படைத்தவறையிட்ட்றே பாமரன் புரிந்துகொள்வது போல இருக்கலாமே

வெண்ணிற இரவுகள்....! said...

அறிவாளிகளுக்கு மட்டுமே OXYGEN புரியும் ஏன் என்றால் படித்தவர்கள் ...........ஆனால் கடவுள் படித்தவர் படிக்காதவர் என்று எல்லாருக்கும் பொது .....எப்படி அம்மா என்ற உணர்வு அனைத்து குழந்தைக்கும் இருக்குமோ அதே போல தான் கடவுள் என்றால் அந்த உணர்வு புரிந்திருக்குமே ..........................

உணர்வுகளை புரிந்து கொள்ள அறிவாளியாய் இருக்க அவசியம் இல்லை
OXYGEN எல்லாருக்கும் தெரியாது ஆனால் அம்மா தெரியுமே ..........அப்படி அது உண்மையிலேயே உணர்வென்றால் எல்லாருக்கும் புரிந்திருக்கும் சிலபேருக்கு மட்டும் புரிவதால் கடவுள் மாயை

Bala said...

@ rajeshkannan
@ புலவன் புலிகேசி

நண்பர் கார்த்தி அவர்களே உங்கள் பதிவில் இன்னொருவருக்கு பதில் சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

கண்ணை மூடினால் மட்டும் தூக்கம் வந்து விடாது. மனதில் கவலை இல்லாமல் இருந்தால்தான் தூக்கம் வரும். நம் கவலைகளை போக்கும் வடிகாலாக பலருக்கு கடவுள் இருக்கிறார்.

ஊரை ஏமாற்றி எனக்கு என்ன வந்துவிட போகிறது?
குணம் என்பது கூட கண்ணுக்கு தெரியாது. இன்றும் நாம் விண்வெளியில் இருக்கும் பல அதிசயங்களை வெறும் புகைப்படங்கள் மற்றும் ஊகங்கள் மூலமாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறோம். நாம் பார்த்ததில்லை. நம் அறிவுக்கு எட்டாத விஷங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்வது முட்டாள்தனமானது இல்லையா?

கடவுள் என்பது ஆண்பாலோ பெண்பாலோ, மனிதனோ, விலங்கோ அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அது ஒரு விதமான சக்திகளின் ஒருங்கிணைப்பு. இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பாதியிலேய ஐன்ஸ்டீன் இறந்துவிட்டார். இல்லை என்றால் அவர் கடவுளை கண்டுபிடித்திருப்பார். என்ன அதனை நாம் ஆல்பா, பீட்டா, ஒமேகா என்று சமன்பாடுகளாய் மாற்றியிருப்போம்.

Bala said...

முதலிலே சொல்லி விட்டேன். நிருபிப்பதற்கு நான் ஒன்றும் ஐன்ஸ்டீன் அல்ல. எனக்கு அந்த அளவிற்கு அறிவும் கிடையாது. எனக்கு தெரிந்த சில மொக்கையான உதாரணங்களையே சொல்லி இருக்கிறேன். ஆக்சிஜன் என்று சொன்னால் புரிந்து கொள்ள முடியாதவர்கள் பிராண வாயு என்றால் புரிந்து கொள்கிறார்கள். இங்கே பிரச்சனேயே அதுதான். கடவுள் என்று சொல்ல தெரிந்தவனுக்கு அதற்க்கு நிகரான அறிவியல் சமன்பாடு தெரியவில்லை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல சிந்தனை...இது பகுத்தறிவுன்னு எடுத்துக்க தோணலை, கடவுள் கிட்ட ஒரு கேள்வினு எடுத்துக்கறேன்

புலவன் புலிகேசி said...

@Bala

நீங்க நம்புற கடவுளோட வேலை என்ன? கொஞ்சம் விளக்க முடியுமா? இல்லாத ஒருத்தனை இருக்குன்னு சொன்னீங்களே அதுக்காக கேக்குறேன்

Bala said...

'ஒருத்தனை' என்ற பதமே தவறானது...
முதலிலியே சொல்லிவிட்டேன் அது ஒரு சக்திகளின் (May be cosmic energy) ஒருங்கிணைப்பு என்று.
கடவுள் என்பது ஒரு மெசின் அல்ல வேலை செய்வதற்கு.
அது ஒரு மெக்கானிசம் (இது கூட சரியான வார்த்தையா என்று தெரியவில்லை).
The mechanism that operates the galaxy.
அதே போல ஒரு இயக்கத்தின் போது சில ஆக்கங்கள் அழிவுகள் கண்டிப்பாக இருந்தே தீரும். அதுதான் கிரகங்களின் அழிவும், உருவாக்கமும்.

புலவன் புலிகேசி said...

//கடவுள் என்பது ஒரு மெசின் அல்ல வேலை செய்வதற்கு.
அது ஒரு மெக்கானிசம் (இது கூட சரியான வார்த்தையா என்று தெரியவில்லை).
The mechanism that operates the galaxy.
அதே போல ஒரு இயக்கத்தின் போது சில ஆக்கங்கள் அழிவுகள் கண்டிப்பாக இருந்தே தீரும். அதுதான் கிரகங்களின் அழிவும், உருவாக்கமும். //

அப்புடி வாங்க...நங்க திட்டுற, கேள்வி கேக்குற கடவுளே வேற..அதுங்க மக்களை முட்டாளாக்குற மக்களால் உருவாக்கப் பட்ட கடவுள்கள். நீங்க சொல்றது இயற்கை.உங்கப் பார்வையில இயற்கை ஒரு கடவுள். என் பார்வையில் அன்பு மட்டுமே கடவுள். அவ்வளவே...