Thursday, 27 May 2010

எஜமான் சின்ன கௌண்டர் தேவர்மகன்நம் இந்தியா நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும் கலந்த நாடு என்றே சொல்லலாம் . நிலப்பிரபுத்துவம் என்றால் என்ன ?????? எளிமையாய் சொல்லவேண்டுமென்றால் நிலவுடமை .நிலத்தை சொந்தமாக சிலர் வைத்திருப்பார்கள் , பலர் அவர்களிடம் கூலி வேலை செய்வார்கள் . இந்தியா விவசாய நாடு என்பதால் இந்த முறை தான் இருந்தது . இங்கே உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் அல்ல அவன் அடிமையே.இன்னும் கூட கிராமங்களில் பெரிய குடும்பம் என்று ஒன்று இருக்கும் அது ஜாதி ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பமாய் இருக்கும் ,அவர்களிடம் நிறைய நிலம் இருக்கும் , ஊரே அவர்களுக்கு மரியாதை செய்வார்கள். 1970 பின் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வருகிறது , கிராமங்களில் இருந்து இளைய சமுதாயம் நகர் புறம் சென்று வேலை தேடுகிறார்கள். நிறைய நகரங்கள் தொழில் நகரங்கள் ஆகின்றன , இந்தியா நிலப்பிரபுத்துவத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்து முதலாளித்துவ நாடாய் இன்று வரை மாறிக்கொண்டே இருக்கிறது . முதலாளித்துவ நாட்டிலே பெண்களுக்கு சுதந்திரம் உண்டு , அதற்க்கான அரசியல் காரணமும் உண்டு , இங்கே முதலாளிகளுக்கு உழைக்கும் சக்திகள் அதிகம் தேவை படுகிறது அதனால் பெண்கள் சுதந்திரம் பெறுகிறார்கள் , கலப்பு திருமணங்கள் நடக்கிறது , சமூகம் விரிவடைகிறது , நிலப்பிரபுக்களை நம்பி இருந்த மக்கள் இங்கே வந்து தொழிற்சாலைகளில் தொழில் செய்கிறார்கள் . ஆனால் நிலப்பிரபுத்துவம் மக்களை சுரண்டுவதை விட முதலாளித்துவம் அவர்கள் வாழ்கையையே சுரண்டுகிறது . நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ நாடாய் மாறிக்கொண்டிருக்கும் சுழலில் உள்ளோம் . இதை நமது தமிழ் படங்கள் இந்த கலவையை பிரதிபலிக்கின்றன.எண்பதுகளில் கிராமப்புறத்து மக்கள் படிக்கிறார்கள் , அப்பொழுது வேலை இல்லா திண்டாட்டம் வருகிறது . அதற்க்கு முந்தைய காலகட்டத்தில் கிராமத்தில் சிறு விவசாயியாக மட்டும் இருக்கும் மக்கள் படிக்க தொடங்குகிறார்கள் . இந்த வேலை இல்லா திண்டாட்டம் பற்றி அப்பொழுது படங்கள் நிறைய வந்தது "வறுமை நிறம் சிகப்பு" முக்கியமான படம் . அதன் சாயலிலேயே "பாலைவன சோலை " போன்ற படங்கள் வந்தன . நான்கு ஐந்து நண்பர்கள் வேலை இல்லாமல் வறுமையை சமாளிப்பார்கள் , அப்புறம் அந்த படங்கள் சுயமுன்னேற்றத்தை பற்றி பேசும் படங்களை இருக்கும். ஆனால் வெறும் சுயமுன்னேற்றத்தால் சமூகம் முன்னேறுவதில்லை என்பதே உண்மை.

முதாலளித்துவ சமூகமாய் மாறிக்கொண்டிருந்த வேலையில், வேலை வாய்ப்பு இன்மை மற்றும் காதல் போன்றவை இயல்பாய் தமிழகத்தில் தோன்றின . 1980 பின்பு நிறைய காதல் படங்கள் வந்தன ,இளையராஜாவின் காதல் பாடல்கள் சந்து போந்து எங்கும் ஒலித்தன. அதற்க்கு முன் காதல் இல்லையா , இருந்தது ஆனால்
பெண்களுக்கு சமமான நிலை இல்லை , ஆனால் முதலாளித்துவ தேசமாய் மாறும் பொழுது பெண்களுக்கு சமாமான நிலை வருகிறது ஓரளவிற்கு அங்கே காதல் வருகிறது .அதனால் எண்பதுகளில் இருந்து தொண்ணுறு வரை காதல் படங்கள் கொடிக்கட்டி பறந்தன.

இந்தியா இப்பொழுது நிலபிரபுத்துவதிற்கும் முதலாளித்துவத்திற்கும் நடுவில் உள்ளது ,அதனால் இரண்டு கருத்துக்களுமே படங்களில் பிரதிபலிக்கும் .தனிமனித வழிபாடு என்பது நிலப்பிரபுத்துவத்தில் தான் உள்ளது . ஊரில் யாரவது பெரிய மனிதர் இருப்பார் அவரிடம் நிலம் இருக்கும் , அந்த குடும்பத்தை ஊரே மதிக்கும் . இந்த மாதிரியான காட்சிகள் சினிமாவில் படிமங்களாய் உள்ளன . "தேவர் மகன்" "சின்ன கௌண்டர்" "எஜமான் " போன்ற படங்கள் இதை பிரதிபலித்தன. ஊருக்கு நல்லது செய்பவராவே இருக்கட்டுமே மக்கள் எழுந்து நிற்க வேண்டுமா என்ன , மண்ணை தொட்டு கும்பிட வேண்டுமா என்ன.???? ஆனால் கலை இதை பிரதிபலித்தது
ரசிகன் அந்த பின்னணியில் வந்ததால் அதை ரசித்தான் . இதே நிலப்பிரபுத்துவ சமூகத்தில் பெண்கள் அடிமையாய் இருந்தனர் இந்த நேரத்தில் இப்பொழுது வரை வந்த படங்களில் பெண்களை வசை பாடும் வசனங்கள் கை தட்டு வாங்கின .


அப்புறம் முதாலாளித்துவம் வருகிறது உலகமயமாக்கல் வருகிறது முதலாளிகளை காப்பாற்றும் தேசியம் பேசும் "ரோஜா" போன்ற படங்கள் வெற்றி பெற்றன. அதே நேரத்தில் தனிநபரால் சமூகத்தை காக்க முடியும் என்ற வாதம் கொண்ட "GENTLE MAN " "இந்தியன்" போன்ற படங்கள் ஓடத்துவங்கின. ஆனால் அப்படி தனிநபரால் மக்களை காக்க முடியும் என்னும் பிரசாரம் முதலாளித்துவத்தின் ஊது கோள். அடிப்படை ஒரு பிரச்சனை தீரவேண்டுமென்றால் மக்கள் கூடவேண்டும் என்பதை மறுத்து , உங்களுக்கு உதவ கடவுள் வருவான் என்பதை மறைமுகமாய் சொல்கிறது இந்த படங்கள் . இதற்க்கு எல்லாம் BASE "கடவுள் காப்பற்ற வருவார் , நீ முயற்சி செய்யாதே " என்ற கருத்து தூவப்பட்டுக்கொண்டே இருக்கிறது . இதுவும் முதலாளித்துவம் வந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது ."குரு" போன்ற படங்கள் முதலாளித்துவத்தை நேரடியாக ஆதரித்தன . திருட்டுத்தனத்தை நியாய படுத்தியது .அவர்களை ஹீரோ போல சித்திரம் செய்யப்பட்டது .இது போல கலை காலத்தை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது ஏதோ ஒரு வகையில் , ஒரு நாட்டை பற்றிய வரலாற்று பார்வை வேண்டுமென்றால் அந்த வரலாறை படிக்காதீர்கள் , ஏன் என்றால் அந்த வரலாறு முக்கியமானவர்கலையே பிரதிபலிக்கும் , சாமானிய மக்களை பற்றி படித்து அவர்கள் எப்படி மாறி இருக்கிறார்கள் என்ற படிப்பு வேண்டுமென்றால் அதன் கலை புதினம் படங்களை பாருங்கள் , ஒவொவொரு காலத்திலும் படங்கள் மாறுபடும் நாம் அந்த மக்களின் வரலாற்றை படிக்கலாம்.

19 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

இந்த நாயகன் வழிபாடைஒழிக்க வேண்டும்

ஜெய் said...

// முதலாளிகளை காப்பாற்றும் தேசியம் பேசும் "ரோஜா" போன்ற படங்கள் //

எப்படி?

ஜெய் said...

// "குரு" போன்ற படங்கள் முதலாளித்துவத்தை நேரடியாக ஆதரித்தன //

அதில் என்ன தவறு?

வெண்ணிற இரவுகள்....! said...

காஷ்மீரில் உள்ள நிலைமை தெரியுமா . என் அப்பா அங்கே air force அதில் இருந்திருக்கிறார்
அங்கு மக்கள் இரண்டு வகையினர் ஒன்று எங்களை பாகிஸ்தானில் சேற்று விடுங்கள் என்று சொல்லும் மக்கள் ..................மற்றோன்று தனி நாடக விட்டுவிடுங்கள் என்று சொல்லும் மக்கள் .....ஆனால் இந்தியா ஏன் விடமால் பிடித்துகொண்டிருக்கிறது என்பது தெரியுமா .......
அங்கே டாட்டா மிட்டல் அம்பானி போன்ற muthaalalikal sotthukkal ullathu enbathe unmai ........
தேசியம் என்று கிரிக்கெட் எதற்கு விளையாடுகிறார்கள் , தேசியம் தூண்டி சில பொருட்களை விற்பனை செய்ய என்பதே உண்மை .....................கார்கில் போர் கூட கண்ணாம்மூச்சி ஆட்டமே தேசியம் தூண்டி வோட் வாங்க ....தேசியம் என்பது இதற்க்கு மட்டுமே பயன்படுகிறது நிஜத்தில்

வெண்ணிற இரவுகள்....! said...

காஷ்மீரில் உள்ள நிலைமை தெரியுமா . என் அப்பா அங்கே air force அதில் இருந்திருக்கிறார்
அங்கு மக்கள் இரண்டு வகையினர் ஒன்று எங்களை பாகிஸ்தானில் சேற்று விடுங்கள் என்று சொல்லும் மக்கள் ..................மற்றோன்று தனி நாடக விட்டுவிடுங்கள் என்று சொல்லும் மக்கள் .....ஆனால் இந்தியா ஏன் விடமால் பிடித்துகொண்டிருக்கிறது என்பது தெரியுமா .......
அங்கே டாட்டா மிட்டல் அம்பானி போன்ற muthaalalikal sotthukkal ullathu enbathe unmai ........
தேசியம் என்று கிரிக்கெட் எதற்கு விளையாடுகிறார்கள் , தேசியம் தூண்டி சில பொருட்களை விற்பனை செய்ய என்பதே உண்மை .....................கார்கில் போர் கூட கண்ணாம்மூச்சி ஆட்டமே தேசியம் தூண்டி வோட் வாங்க ....தேசியம் என்பது இதற்க்கு மட்டுமே பயன்படுகிறது நிஜத்தில்

வெண்ணிற இரவுகள்....! said...

முதலாளித்துவத்தால் தீமைகள் அதிகம் இதை உங்களுக்கு விளக்க தேவை இல்லை என்று நினைக்கிறேன் . ஒரு பிக் பக்கெட் திருடன் பசிக்கு திருடினால் அவனை அடிக்கிறோம் . பெரிய திருடன் திருடினால் திறமை என்கிறோம் .,......ஏமாற்ருபவனே திறமை சாலி என்று முதலாளித்துவம் சொல்கிறதே நண்பா

ஜெய் said...

// முதலாளித்துவத்தால் தீமைகள் அதிகம் இதை உங்களுக்கு விளக்க தேவை இல்லை //
எனக்கு நிஜமாக புரியவில்லை. விளக்கவும். பதிவாக எழுதினாலும் சரி.

// ஒரு பிக் பக்கெட் திருடன் பசிக்கு திருடினால் அவனை அடிக்கிறோம் . பெரிய திருடன் திருடினால் திறமை என்கிறோம் ., //
இரண்டு பேரும் தவறு செய்தவர்கள்.. இரண்டு பேரையும் வெவ்வேரு விதமாக ட்ரீட் செய்தால், அது அரசங்கம் மற்ரும் நீதிமன்றத்தின் தவறு.. அதை திருத்த முயர்சிப்போம்.. எதற்காக முதலாளிகளை பொதுவாக தப்பு சொல்ல வேண்டும்?

// ஏமாற்ருபவனே திறமை சாலி என்று முதலாளித்துவம் சொல்கிறதே நண்பா //
இதுவரை நான் இப்படி எங்கும் படித்ததில்லை.. reference தரவும்..

வெண்ணிற இரவுகள்....! said...

அம்பானியே சிறந்த உதாரணம் ...................உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது சிறு நாட்களுக்கு முன்னர் BSNL networkai relaince மோசடி செய்தது அதில் BSNL நட்டம் 1500 கோடி
என்று நினைக்கிறேன் அதற்க்கு வெறும் 90 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டது அது மோசடி இல்லையா நண்பரே ???????அமெரிக்காவில் பேங்க் எப்படி திவால் ஆனது .....enraan இந்தியாவில் செய்த மோசடி தெரியுமா............இதுவே ஒரு பிக் பாக்கெட் காரன் ஐம்பது ரூபாய் திருடினால் .........உட்காரும் இடத்திலேயே அடிப்பார்களே ஏன் ஐந்து ரூபாய் காசு வாங்கி விட்டு விட வேண்டியது தானே

வெண்ணிற இரவுகள்....! said...

இப்பொழுது ஒரு திருடன் உங்களிடம் திருடினால் என்றால் அரசாங்கத்தை குறை சொல்வீர்களா என்ன ????அவனை அடிக்க தானே ஓடுவீர்களே .....அப்பொழுது திருடம் குற்றவாளி தானே ........அப்பொழுது அவரை மட்டும் குற்றம் சொல்கிறீர்கள் ....ஆனால்
முதலாளி செய்தால் ....அரசை குற்றம் சொல்ல வேண்டுமா ????

Prasaad.C said...

enna jai hope u understand now

Prasaad.C said...

jai hope u understand now.ambani brothers and ratan tata are the big cheaters of india but we gave treate them as world big crorepathis etc etc

ஜெய் said...

// .ஆனால்
முதலாளி செய்தால் ....அரசை குற்றம் சொல்ல வேண்டுமா ???? //
when did I blame govt for Big boss's mistakes? I said "இரண்டு பேரும் தவறு செய்தவர்கள்.. இரண்டு பேரையும் வெவ்வேரு விதமாக ட்ரீட் செய்தால், அது அரசங்கம் மற்ரும் நீதிமன்றத்தின் தவறு.. " Both pickpocket and big bosses are culprits as an individuals.. Why do you blame முதலாளித்துவம்? If politicians are wrong as individual persons, we should not blame democracy, right? democracy and முதலாளித்துவம் are just systems.. You cant blame it for individual's mistakes.. We should try to correct/punish individuals..

// முதலாளித்துவத்தால் தீமைகள் அதிகம் இதை உங்களுக்கு விளக்க தேவை இல்லை //
Still you haven't justified this. Try to explain the problem without examples of individual mistakes. How does communism solve it?

Sorry for not using Tamil. This computer doesn't have Tamil font. You can reply in Tamil.

Thanks,
Jay

வெண்ணிற இரவுகள்....! said...

ஆனால் நிஜத்தில் என்ன நடக்கிறது நான் சொன்னேனே ENRON என்ற கம்பனி செய்த
தப்பிற்கு நம் வரிப்பணம் உலகவங்கிக்கு கடன் அடைக்க பயன்படுகிறது . இது ஊழல் இல்லையா ??????
நீங்கள் அங்காடித்தெரு பார்த்தீர்காளா முதலாளித்துவத்தின் சிறந்த உதாரணம் . ஏன் இப்பொழுது மென்பொருள் துறையில் ஒருவனை வேலையை விட்டு தூக்கினால் கேள்வி கேட்க முடியுமா..........

வெண்ணிற இரவுகள்....! said...

இப்பொழுது கிராமத்தில் இருந்து புலம்பெயர்ந்து நகர் நோக்கி வருகிறார்கள் . கோக் பெப்சி தண்ணீர் ஆக்கிரமிப்பால் , இந்த நாட்டில் விவசாயத்திற்கு
மதிப்பு கொடுக்காததால் ஒரு விவசாயி தன் மகனை பொறியியல் கல்லூரியில் படிக்கச் வைக்கிறார் . அதனால் இங்கு நாடே நகர் மயமாகிகொண்டிருக்கிறது
சரி இதனால் என்ன பிரச்சனை????அந்த மாணவனுக்கு விவசாயம் தெரியாது , ஆனால் நன்றாய் உழைத்து படிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் ,
அமெரிக்காவில் தொழில் பாதிக்கப்பட்டால் வேலையே விட்டு தூக்கி விடுவார்கள் . நீங்கள் திறமையாக இருந்தாலும் PROJECT இல்லை என்றால் தூக்கி விடுவார்கள் ............
இது உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது . நம் அடுத்த சமுதாயம் கூலிகளாகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள் . அங்காடி தெரு போல் அமெரிக்க என்று வைத்துக்கொண்டால்
நாம் எல்லாம் அங்கே வேலை செய்துகொண்டிருக்கிறோம் , நம் சம்பளம் அதிகம் இருப்பதே டாலர் மற்றும் ருபாய் இடைவெளியால் மட்டுமே .

இது எப்படி இருக்கிறது என்றால் இந்த முதலாளித்துவ உலகம் பின்னால் நெருப்பை வைத்துவிடும் , எனக்கு மதுரையில் வேலை செய்ய ஆசை , ஆனால் அங்கே வேலைசெய்தால்
பெண் முதற்கொண்டு கல்யாணம் செய்ய எதுவும் கிடைக்காது , பொருளாதரத்திற்கு நான் பிடிக்காத சென்னையில் இருக்க வேண்டும் . ஏன் பெண் எதிர்ப்பார்கிறாள் வேறு ஒன்றும் இல்லை
போட்டி உலகம் , அதனால் ஒரு காதல் வேண்டும் என்றால் கூட நீங்கள் சம்பாதிக்க வேண்டும் . அதுவும் பனிரெண்டு முதல் பதினைந்து மணி நேரம் வரை .

SUTHERLAND என்னும் கால் சென்டர் பாத்ரூம் முழுவதும் CONDEM எடுத்து இருக்கிறார்கள் , ஏன் என்றால் பணி மன அழுத்தம் , கட்டாயம் அதை போக்க மது அல்லது மாது .
இப்பொழுது எல்லாம் சரக்கு அடிக்காத பையனை காட்டவே முடியாது . இது எல்லாம் முதலாளித்துவத்தின் சாதனை இல்லை சோதனையா . மன அழுத்தத்திற்கு என் வாழ்வே
சிறந்த உதாரணம் . ரூமில் ஏழு நண்பர்கள் இருக்கிறோம் , அனைவரும் நன்கு சம்பாதிக்கிறார்கள் , ஆனால் நேரம் இல்லாமை குடும்பத்துடன் இல்லாமை , உண்மையான அன்பு இல்லாமை
இதெல்லாம் சேர்த்து அவனை மன நோய் ஆக்குகிறதே ??????

உபரி மதிப்பு என்று ஒன்று உள்ளது .....அதாவது நாட்டிற்க்கு 100 சட்டை தேவை படும் பொழுது அணைத்து கம்பனிகளும் 1000 சட்டை அடித்தால் எப்படி விற்கும் .
எல்லாரும் தனக்கு சாதகமாய் சந்தையை கைப்பற்ற பார்கிறார்கள் அதனால் நிறைய பணி ஆட்களை போட்டு வேலை செய்கிறார்கள் . ஆனால் விற்பனை செய்ய முடியவில்லை
தேங்கி கிடக்கிறது அது தான் RECISSION இது எல்லா துறையிலும் இருக்கிறது . ஒருவர் தன் தேவைக்கு மூன்று மணிநேரம் உழைத்தால் போதுமானது . ஆனால் இங்கே உழைப்பு
சுரண்டப்படுகிறது , இந்த தேவை இல்லாத உழைப்பை நாம் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கிறோம் . இதற்காக வாழ்கையையே எந்திரத்தனமாய் மாற்ற வேண்டிஉள்ளது .
ஏன் என்றால் நீங்கள் நிற்க வேண்டும் என்றால் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் .

வெண்ணிற இரவுகள்....! said...

Mistakes are based on system .........that is the matter. We can not correct each and every individual only the system should be changed.
every solution based on system only and not based on individul . for example even if u r a talented programmer if RECISSION comes u can not blamed
and system should be blamed ......this suits to all the problems.

அகல்விளக்கு said...

இதுவரை, கருத்துக்கள் உண்மையாக இருந்தாலும் ஒரு கோர்வை இல்லாமல் இருந்தது...

இந்தப் பதிவில் அது முழுமையாக இருக்கிறது...

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி அகல்விளக்கு எனக்கு உள்ள பிரச்சனை எனக்கு அரசியல் சொல்லிக்கொடுக்கும் நண்பர் சொல்வார் உங்களுக்கு எழுத தெரியவில்லை கோர்வை இல்லை என்பார் . நான் பேசும்பொழுது எப்படி பேசிவேனோ அப்படியே எழுதுவேன் ....இது பிரச்சனை .....பேசும் பொழுது விளக்கி விடலாம் ஆனால் எழுதும்பொழுது அவசரம் கூடாது .....எனக்கு அப்படி பார்க்கும் பொழுது எல்லா பதிவர்களும் நூறு என்றால் நான் ஜீரோ சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பா

Bala said...

//கார்கில் போர் கூட கண்ணாம்மூச்சி ஆட்டமே


கார்கில் போரை துவக்கியது இந்தியாதான் என்கிறீர்களா?
அது பாகிஸ்தான் நடத்திய மாபெரும் ஊடுருவலை தடுக்க இந்தியா களமிறங்க வேண்டிய நிலைமையில் ஆரம்பித்தது. உண்மையில் அது முசாரப் நவாஸ் சேரிப் இருவரும் ஆடிய கண்ணா மூச்சிதான்.

வெண்ணிற இரவுகள்....! said...

இல்லை athu இந்தியா ஆடியா கண்ணாமூச்சி . அந்த மக்களுக்கே இந்தியன் என்று சொல்ல விருப்பம் இல்லை என் அப்பா எல்லையில் இருந்த வீரர் நண்பரே .......அது தேசியம் என்னும் வெறியை தூண்டி வோட் வாங்க முயற்சி செய்வது .........
சரி சர்பஜித் சிங்க் என்ற ராணுவ வீரர் ....................இந்தியா ராணுவ வீரர் உளவாளி போல அங்கு குண்டு வைக்க போனாரே ....அதை என்ன சொல்வீர்கள் அவர் RAW agent கேட்டால் இந்தியா தான் குண்டு வைக்க அனுப்பினார்கள் என்று சொன்னார்களே அதற்க்கு என்ன சொல்கிறீர்கள் ............
இந்திய அரசியல்வாதிகளும் முதலாளிகளும் நல்லவர்கள் என்று சொல்கிறீர்களா என்ன ???

INDIAAVUM KANAAMOOCHI AADUM...
INGE KUNDU VEDIPPADHAI VIDA ANGE KUNDU VEDIPATHU THAAN ADHIGAM