
நிரூபமா பதக் இந்தியாவை உலுக்கும் கொலை செய்தி. நிரூபமா பதக் உயர் ஜாதி பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர் ப்ரியாபான்சு ரஞ்சன் என்ற கீழ் ஜாதி இளைஞனை காதலித்து இருக்கிறாள். மூன்று மாதம் கர்ப்பம் வேறு , இந்த காரணத்தினாலேயே தன் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் .
இத்தனைக்கும் அவர் பெண் நிருபர் அவள் காதலித்த பையனோ ஆண் நிருபர். டெல்லி INDIAN INSTITUTE OF MASS COMMUNICATION இருவரும் படித்த இடம். அப்பொழுது காதல் மலர்ந்து இருக்கிறது .நிரூபமா ஜார்க்ஹன்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தந்தையார் பஞ்சாப் தேசிய வங்கியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பெண்ணை MASS COMMUNICATION படிக்க வைக்கிறார்கள் வேறு ஊருக்கு சென்று படித்து இருக்கிறாள் , ஓரளவு படித்த குடும்பமாய் தான் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட குடும்பத்திலேயே கல்யாணம் செய்தால் ஒரு ஜாதியில் தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நிரூபமா கல்யாணம் பண்ண வேண்டும் அதற்க்கு முன்னால் கடைசியாய் ஒரு வாய்ப்பு கேட்டு பார்க்கலாம் என்று நினைத்து இருக்கிறார். வந்த இடத்தில் குலை செய்யப்பட்டு இருக்கிறாள். இரண்டு விடயங்கள் ஒன்று அவர் காதலித்தது கீழ் ஜாதி பையன் இன்னொரு விடயம் காதலித்து கர்ப்பம் ஆகி இருக்கிறாள். இந்தியா போன்ற பழமை ஊறி இருக்கும் தேசத்தில் குஷ்பூவும் உச்ச நீதி மன்றம் சொல்வது போல் கல்யாணத்திற்கு முன்பு உறவு ஆபத்து ஆனது. அது குஷ்பூ போன்ற மேட்டுக்குடி வர்க்கத்திற்கு வேண்டுமானால் பொருந்தும் என்று இந்த கொலை நிருபித்து உள்ளது.
சரி குஷ்பூ சொல்வது ஏன் தவறு என்று பார்ப்போம். இதுவே காதலித்தது மேல் ஜாதி பையன் காதலிக்க பட்டது கீழ் ஜாதி பெண் என்று வைத்து நிலைமை வைத்துக்கொண்டாலும் மேல் ஜாதிப்பையன் உறவை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டில் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எளிதாய் பெண்ணை ஏமாற்ற வாய்ப்பு இருக்கிறது . அப்பொழுதும் தற்கொலையோ இல்லை கொலை செய்யப்படுவது பெண் மட்டுமே.
சரி இன்னொருவனிடம் காதலிக்கும் பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கும். ஒரு பையன் சுற்றினால் வயது பையன் அப்படி தான் இருப்பான் என்று சொல்லும் சமூகம்,ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்ளுமா என்ன ????? இப்படிப்பட்ட பின்தங்கிய சமூகம் இருக்கும் பொழுது கல்யாணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது என்பது
குஷ்பூ போன்ற மேட்டுக்குடி பெண்களுக்கும் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் நீதிபதி போன்ற மேட்டுக்குடி வர்க்க பெண்களுக்கு மிகச்சரியான தீர்ப்பை இருக்கும்ஆனால் இந்த தீர்ப்பை பார்த்து படிக்காத பாமர பெண்கள் உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

ஜாதிகளும் பெண் அடிமைத்தனம் இருக்கும் தேசத்தில் இப்படி ஒரு பொறுப்பில்லாத தீர்ப்பை படித்து ஒரு கிராமத்து பெண் ஏமாந்து போக வாய்ப்பு உள்ளது.மேட்டுக்குடி வர்கத்தில் இருக்கும் பெண்களோ இல்லை பொறுப்பில் உள்ள நீதிபதிகளோ தங்கள் குடும்பத்தை மட்டும் வைத்து தீர்ப்பு அளிப்பது வேதனையாய் இருக்கிறது.
10 comments:
வழக்கம் போல நல்ல பதிவு நண்பரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
குஷ்பூ சொல்லலாமா இல்லையா எனப்டு குறித்து தான் தீர்ப்பு என்று நினைக்கிறேன். சொன்னது சரியா அதுவே இனி விதியா என்றில்லை.
I agree with Dr. Rudharan. The judgement is only on the statement of Kushboo. Not on the society. Although it will reflect on society, the judgement cant be blamed.
///////நிரூபமா பதக் இந்தியாவை உலுக்கும் கொலை செய்தி. நிரூபமா பதக் உயர் ஜாதி பார்ப்பன வகுப்பை சேர்ந்தவர் ப்ரியாபான்சு ரஞ்சன் என்ற கீழ் ஜாதி இளைஞனை காதலித்து இருக்கிறாள். மூன்று மாதம் கர்ப்பம் வேறு , இந்த காரணத்தினாலேயே தன் குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறாள் .////////////
இது போன்ற இன்னும் பல கேவலங்கள் நிகழத்தான் செய்கின்றன .
மிகவும் வேதனையான விஷயம்தான் .
மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை !
சரித்திரம் படைப்பபதற்கு சாதிகள் தேவை இல்லை !
என்றுதான் புரிந்துக்கொள்வார்களோ இதுபோன்ற செயல்களை செய்யும் ஐந்தறிவு கொண்ட மனித மிருகங்கள் .
பகிர்வுக்கு நன்றி !
இது போன்ற இன்னும் பல கேவலங்கள் நிகழத்தான் செய்கின்றன . மிகவும் வேதனையான விஷயம்தான் .
மனிதனாக வாழ்வதற்கு மதங்கள் தேவை இல்லை !
சரித்திரம் படைப்பபதற்கு சாதிகள் தேவை இல்லை !
என்றுதான் புரிந்துக்கொள்வார்களோ இதுபோன்ற செயல்களை செய்யும் ஐந்தறிவு கொண்ட மனித மிருகங்கள் .
பகிர்வுக்கு நன்றி !
//குலை
//என்று வைத்து நிலைமை வைத்துக்கொண்டாலும்
பிழைகள் உள்ளது திருத்திக்கொள்ளவும்.
ஒருத்தங்க சொல்றதை கேட்டு தான் பெண்கள் கெட்டு போகிறார்கள்
என்று இல்லை.அது அவரவர் மனநிலை, கால சந்தர்பங்களை
பொறுத்தே நடக்கிறது. கிராமத்து பெண் ஏமாந்து போவது என்பது எல்லாம்
அவர்கள் கையில் தான் உள்ளது. "ஊசி இடம் கொடுக்காமல் நூல்
நுழையாது ".
நல்ல அருமையான பதிவு.
குஷ்பூ சொன்னது தீர்வா இல்லை கருத்துக்களா ருத்ரன்
இல்லை ராஜேஷ் குஷ்பூ போன்ற பெண்கள் இருக்கும் சொல்லும் பொழுது அதற்க்கு தீர்ப்பு இப்படி இருக்கும் பொழுது தாக்கங்கள் இருக்கும் கட்டாயம்
நீதி மன்றம் சட்டப் படி குஷ்பூ சொன்னது தவறா இல்லையா என்பதே.
சொல்ல முடியும்; சட்டப்படி தவறு இல்லை என சொல்லி விட்டது.
ஆனால் குஷ்பூ சொன்னது சமூகத்தில் நம்மில் பெரும்பாலோர் தவறென நினைக்கும் நடத்தை.
மீடியா சில விஷயங்களை வடிகட்டி பதிவு செய்யாமல் இருக்கலாம்; அவர்களே பதிவு செய்து ஊதி ஊதி பெரிது ஆக்கி சமூகத்தை பாழ் படுத்துகிறார்கள்
குஷ்பு போன்றவர்களின் கருத்துக்கள், தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில் பார்க்கப்பட்டாலும், அதை அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் பரபரப்பும் அதன் மூலம் ஏற்பட்ட போராட்டங்களும் தேவையற்றது. சமுதாய அக்கறை ஊடகங்களுக்கு நிச்சயம் தேவை. பெரும்பாலும் செய்திகள் பரபரப்புக்காகவே பிரசுரிக்கப் படுவது மிகுந்த வேதனையை தருகிறது... தயவு செய்து ஊடக நண்பர்கள் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுங்கள்.
நன்றி...
விஜய. மாதவன்.
Post a Comment