Sunday 16 May 2010

கடவுளிடம் இருக்கும் உலக அரசியல்

















தனிநபர் தீர்விலே மக்கள் அதிகம் போகும் இடம் கடவுள் மற்றும் மதங்கள் . ஒவ்வொரு மதமும் கடவுள்களும் மனிதனிடம் நீர்த்து போகும் செயலை செய்துகொண்டே இருக்கின்றன. அதன் வாசகத்திலேயே அரசியல் பதுங்கி இருக்கும். வெறும் கடவுள் என்றால் மூடநம்பிக்கை என்று சொல்வதை விட ஏன் மூடநம்பிக்கை என்று பார்ப்போம் .உதாரணமாய் நாம் பலஇடங்களில் பகவத் கீதை சாரம் என்று கீதா சாரத்தை பார்த்து இருப்போம் அது என்ன சொல்கிறது கூர்ந்து கவனியுங்கள் "எது நடந்ததோ அது நன்றாகவேநடந்தது எது நடக்க இருக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும் ,எதை நீ கொண்டுவந்தாய் கொண்டு செல்ல , ....." இப்படி போகிறது வாசகம் .அதவாது இது மறைமுகமாய் விதி என்று இருக்கிறது என்று உணர்த்துகிறது , அதவாது இங்கு நடப்பது எல்லாமே ஏற்க்கனவே முடிவு செய்யப்பட்டது என்பது போல் கருத்தை சொல்கிறது. ஒரு அரசியல்வாதியோ ஒரு முதலாளியோ சுரண்டினால் கூட நடப்பது மட்டுமே நடக்கும் என்ற எண்ணத்தை விதைக்கிறது , மனிதனின் மாதை நீர்த்துப்போக செய்கிறது .

சரி இந்தகொள்கையால் சுரண்டுபவனுக்கு பாதிப்பு இல்லை , சுரண்டப்படுபவன் பாதிக்கபடுகிறான் . சரி இப்பொழுது ஒரு அரசியல்வாதி சுரண்டிக்கொண்டிருக்கிறான் என்றால் "எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கிறது" என்றால் அதை அதாரிப்பது போல் உள்ளதே . மதங்களை கடவுளை தீவிரமாய் நம்பும் பக்தகோடிகள் இதை கடைப்பிடிப்பதால் தான் சுரண்டப்பட்டாலும் நடப்பது தான் நடக்கும் கடவுள் பார்த்து கொண்டிரிருக்கிறார் என்ற மனநிலை வருகிறது . மக்களிடம் இயல்பாய் வெளிப்படும் கோபம் கூட வீபுதி அடித்து நீர்த்துப்போக செய்யப்படுகிறது .

நம் ஊரெங்கும் கோவில்கள் அதிகமாக அதிகமாக ஊழல்களும் அராஜகமும் அதிகமாகிக்கொண்டே போகிறது . உலகில் உள்ள அனைத்து மதங்களும் அதிகாரம் செய்பவனை அதே இடத்தில வைத்து அழகு பார்க்கிறது அடிமையை போரடவிடாமல் செய்யும் வேலையை நன்றாக பார்க்கிறது என்றே சொல்லவேண்டும் . " ஊசி முனையில் ஒட்டகம் கூட நுழையலாம் , பணக்காரன் சொர்கத்திற்கு செல்ல மாட்டான் " இது பைபிள் வாசகம் . பார்பதற்கு சாதரணமாய் தோன்றினாலும் அதன் உள்ளே ஒரு அரசியல் இருக்கிறது . சொர்க்கம் என்ற ஒன்று பணக்காரனுக்கு இல்லை என்று சொல்கிறது . ஒருவன் சுரண்டப்படும் பொழுது இவ்வாக்கியத்தை சொன்னால் அவன் போராடவே மாட்டான் . சுரண்டப்படும் பொழுது மனதிலே நினைத்துக்கொள்வான் உனக்கு நரகம் எனக்கு சொர்க்கம் என்று.

மறுமை என்று இருப்பதை போல் ஒரு மாயையை மதங்கள் செய்கின்றன. மறுமையில் சொர்க்கம் நிச்சயம் உண்டு என்ற எண்ணத்தில் என்று சாதாரண பாமர மக்கள் நினைத்துக்கொள்வான் , இது சுரண்டுபவனுக்கு வசதியாய் இருக்கும். கடவுள் என்று ஒன்றை நினைத்துக்கொண்டு அதனிடம் புலம்புவதால் மனஅழுத்தம் மட்டுமே குறையும் அதை கடவுள் தான் மனமைதியை கொடுக்கிறார் என்ற ரீதியில் புரிந்துகொள்கிறான் பாமரன் . அதனால் எவன் கடவுளை கும்பிடுகிரனோ அவன் சக மனிதனுக்கு தீங்கு நேர்ந்தால் குரல் கொடுப்பதில்லை , எல்லாமே விதி நாம் எதற்கு குரல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறான் . கடவுள் தான் பார்த்துக்கொண்டிருக்கிறாரே நாம் தீர்வு சொல்லமுடியாது என்று நினைக்கிறான் . இந்த கோவிலுக்கு போ அந்த கோவிலுக்கு போ என்று மற்றவனை திருத்தும் வேலையை செய்கிறான்.

எல்லா மதங்களும் இம்மை மறுமை என்ற விடயத்தை வைத்துக்கொண்டு மனிதனை நீர்த்து போக செய்கின்றன. எந்த கடவுளும் மனிதனின் தற்காலிக பிரச்சனைக்கு தீர்வு சொல்வதாய் இல்லை, மறுமையில் நீ நன்றாக இருப்பாய் என்று சொல்கிறது. இல்லாத மறுமையை நோக்கி பாமரன் செலுத்த படுகிறான்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வெறும் விவாத பொருள் அல்ல , அதையும் தாண்டி அதன் அரசியலிலே தான் உலகம் இயங்குகிறது.எனக்கு இன்று
கடவுள் நம்பிக்கை இல்லை ஆனால் ஒரு காலத்தில் பிள்ளையார் என்றால் பிடிக்கும் சிறு நாட்களுக்கு முன்னர் என்றால் சாய்பாபா பிடிக்கும் . பாபாஜி என்றே நண்பர்கள் அழைப்பார்கள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நானே விஞ்ஞான பூர்வமாய் உணர்ந்தேன் என்பதே உண்மை.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல ??? அது எந்த அளவு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது என்பதே பிரச்சனை. கடவுள் என்ற போர்வையில் உலக அரசியல் ஒளிந்துகொள்கிறது. கடவுள் என்ற நம்பிக்கையே சுரண்டுபவனுக்கு சாமரம் வீசுகிறது. ஆதிக்கம் செய்பவன் ஆதிக்கம் செய்துகொண்டே இருப்பான் அடிமை அடிமையாகவே இருப்பான் என்ற வேலையே கடவுள் செய்கிறது. அதனால் இதை வெட்டி விவாதமாய் எடுத்துக்கொள்ள வேண்டாம், கடவுளிடம் தான் உலக அரசியலுக்கு உண்டான சாவி இருக்கிறது. அந்த சாவியை திறந்துப்பார்த்தால் உலகத்திற்கு உண்டான வாசல் திறந்துகிடக்கும் . கடவுளிடம் இருந்து சாவியை பிடுங்குங்கள் மனிதன் மண்ணிலே வாழட்டும்.

7 comments:

ஜெய் said...

// கடவுளிடம் இருந்து சாவியை பிடுங்குங்கள் மனிதன் மண்ணிலே வாழட்டும். //

நல்ல வரிகள்.. கடவுள்தான் நம்மை படைத்தாரென வைத்துக்கொண்டாலும், எதற்கு வழிபாடெல்லாம் செய்துகொண்டு.. அடுத்தவங்களை தொந்தரவு பண்ணாம, நாம் வாழும் வழியைப்பார்ப்போமே..

// கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை நானே விஞ்ஞான பூர்வமாய் உணர்ந்தேன் என்பதே உண்மை. //

எப்படின்னு சொல்லாம போயிட்டீங்களே கார்த்திக்..

Bala said...

நீங்கள் சொல்லும் செய்திகள் என்னை சிந்திக்க வைக்கிறது. ஒருதடவை எந்த வித முடிவும் செய்து கொள்ளாமல், காலியான மனதுடன் விவேகானந்தர் எழுதிய கர்ம யோகம் என்ற புத்தகத்தை படித்து பாருங்கள். அது உங்களை மாற்றும் என்று சொல்லமாட்டேன். உங்களுக்கு பல தகவல்களை தரும் என்பது மட்டும் உறுதி.
பி.கு: முழுவதும் படியுங்கள்.

Madumitha said...

கடவுளிடமிருந்து
சாவியைப் பிடுங்கி
யாரிடம் கொடுப்பது?
சாத்தானிடமா?
சாத்தான் என்று சொன்னதை
லிட்டரலாக எடுத்துக்
கொள்ள வேண்டாம்.

வெண்ணிற இரவுகள்....! said...

@madumitha
கருத்துக்குள் வந்து நீங்கள் எப்பொழுதுமே விவாதம் செய்ததில்லை ..என்ன சொல்ல வருகிறீர்கள் ..சாத்தான் என்று யாரை சொல்கிறீர்கள் ............ஏன் ஏமாற்றுபவன் ஜெயித்துக்கொண்டே இருக்கிறான் ..எந்த கடவுள் ஈழத்தை காப்பாற்றினார் ......எதுவுமே உண்மை இல்லை என்றால் நிரந்தரம் இல்லை என்றால் கடவுள் மட்டுமே நிரந்தரம் என்றால்
ஏன் கடவுள் மனிதனை படைத்தார் ஜால்ரா அடிப்பதற்க்கா

வெண்ணிற இரவுகள்....! said...

@madhimitha
//கடவுளிடமிருந்து
சாவியைப் பிடுங்கி
யாரிடம் கொடுப்பது?
சாத்தானிடமா?
//
கடவுளிடம் தானே சாவி உள்ளது ....ஏன் கடவுள் உழைக்கும் மக்களை மட்டும் சுரண்டுகிறார் ஏன் அவர்களை அடிமையாக வைத்துக்கொண்டால் தான் தன் ஈகோ
சொரியப்படுமா என்ன ??????????

Unknown said...

கடவுள் இல்லை .. கடவுள் இல்லை ..
கடவுள் இல்லவே இல்லை ..
தந்தை பெரியார் ....

Madumitha said...

எல்லாக் கருத்துகளும்,
எல்லாச் செயல்களும்
மாற்றுக் கருத்துகளாலும்
மாற்று முயற்சிகளாலும்தான்
செழுமை அடைந்துள்ளது
என்பதை நீங்கள் மறுக்க
மாட்டீர்கள் என் நம்புகிறேன்.
பக்தர்களைப் போல
கடவுள் என்பதை சிலையாகவோ
படமாகவோ சுருக்கிப் பார்க்காதீர்கள்.
அது உணர்வாய் இருக்கலாம்.
உயிராய் இருக்கலாம்.
காற்றைப் போல் கடவுளுக்கும்
definition இல்லை.
ஈழத்தைப் பொறுத்த வரை
போராட்டம் தான் கடவுள்.
ஜெயித்தவர்கள் எல்லாம்
ஏமாற்றியவர்கள் என்ற
முடிவுக்கு வரவேண்டாம்.
ஜால்ரா,ஈகோ சொரியல்
என்பதெல்லாம்
மனித வார்த்தைகள்.
இவைகளைக் கேட்டால்
கடவுள் புன்னகைக்க கூடும்.