Thursday 20 May 2010

ஒரு நாயகன் உதயமாகிறான்













"எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுது இறைவன் தோன்றுவார் " போன்ற பொன்மொழிகள் வாசகங்கள் நம் மதங்களிடம் உண்டு.மனிதனை காப்பாற்ற எப்பொழுதுமே ஒரு கடவுள் தேவைப்படுகிறார் , அது ராமர் உருவத்தில் வரலாம் பட கதாநாயகனாக கூட இருக்கலாம். சமூகத்தை கதாநாயகன் திருத்தும் படங்கள் மாபெரும் வெற்றி பெற்று உள்ளன . இந்தியன், ரமணா, gentle man ,நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மிகவும் வெற்றி பெற்றன .

அப்படி தனிநபரால் ஒரு சமூகத்தை மாற்ற முடியுமா என்ன?? இது மறைமுகமாய் கடவுள் இருக்கிறார் போராடாதே என்பதை போல் , மனிதர்களே நீங்கள் போராட வேண்டாம் உங்களுக்காய் M G R ரஜினிகாந்த் வந்து போராடுவார்கள் என்பதை போல் உள்ளது. இது வெறும் படம் சார்ந்த பிரச்சனை அல்ல , மக்களின் பொதுபுத்தி. இங்கே தனிநபர் வழிபாடுகள் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஏன் இங்கு M G R , கலைஞர் , அம்மா போன்றவர்கள் கூட தனிநபர்களே , யாரோ ஒரு தனிநபர் தான் ஆளவேண்டும் , நாமெல்லாம் அவர்களுக்கு அடிமை போன்ற எண்ணத்தில் மனிதர்கள் மனதளிவிலே பழக்கபடுத்தபட்டு இருக்கிறார்கள் .

தனக்கு ஒன்று என்றால் கதாநாயகன் சினிமாவில் வருவான் என்பதை போல தினசரி வாழ்விலும் மக்கள் அதை எதிர்ப்பார்கின்றனர் . கடவுள் என்ற தனிநபர் போல கதாநாயகன் அனைவரையும் வீழ்த்திவிட்டு சிம்மாசனத்தில் ஏறி ஆட்சி புரிவான் என்ற மாயையில் இருக்கின்றனர் மக்கள் . ரமணா படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் விஜகாந்த் ஊழலுக்கு எதிராய் பாடுபடுவார். ஒவ்வொரு துறையிலும் பதினைந்து பேரை பிடித்து அதிகம் லஞ்சம் வாங்கியவனை கொலை செய்வார். நமக்குள் இருக்கும் ரசிகன் எழுந்து நின்று கைதட்டுகிறான் , ஏன் கைதட்டுகிறான் என்பது முக்கியம் , அவனுக்கு விஜயகாந்த் போல யாரோ ஒருவர் அவனை விடுதலை செய்ய சமூகத்துக்கு வழிகாட்ட தேவைபடுகிறார்கள்.அப்படி தேவைபடுவதால் எழுந்து நின்று கைதட்டுகிறான்

அப்படிப்பட்ட சாமான்யனுக்கு அவனுக்கு உண்டான தீர்வு சாமூகத்திடம் இருக்கிறது என்று தெரிவதில்லை . மக்கள் எல்லாம் ஒன்று கூடி போராடினால் தான் தீர்வு என்பது தெரிவதில்லை தனிநபர்கள் தனிநபர்களே , எல்லா கையும் தட்டினால் மட்டுமே ஓசை . மக்கள் எங்கெல்லாம் ஒன்று கூடுகின்றனரோ அங்கு எல்லாம் எழுச்சி ஏற்படுகிறது . இத்தகைய தனிநபர் ஹீரோயிசம் அந்த மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கிறது. ஒரு ரமணா , அல்லது இந்தியன் போன்ற படங்கள் பார்ப்பதற்கு முற்போக்காய் இருந்தாலும் பிற்ப்போக்கான கருத்துக்களை வைக்கின்றனர் , உங்களுக்காய் கதாநாயகன் வருவான் என்பதும் , உங்களுக்காய் கடவுள் வருவார் என்பதும் ஏறக்குறைய ஒன்றே . கடவுளும் வரப்போவதில்லை கதாநாயகனும் உருவாகப்போவதில்லை என்பதே நிஜம் . கடவுள் வருவார் என்பது எப்படி எழுச்சியை மட்டுப்படுத்துகிறதோ அதை போலவே இந்த தனி கதாநாயகன்கள். ஒரு MGR இல்லை கடவுள் ராமர் இல்லை ராகுல்காந்தி போன்றவர்கள் மக்களை காப்பாற்ற போவதில்லை . மக்கள் சேர்ந்து எழுந்தால் மட்டுமே இதற்க்கு தீர்வு . மக்கள் எழ வேண்டும் என்றாலே இந்த தனிநபர் துதிபாடலை விடவேண்டும்.
தனியாய் யாரோ ஒருவன் பிறந்துவர மாட்டான் கடவுளும் பிறந்து வரமாட்டார் , அனைவருக்கும் உண்டான தீர்வு அனைவரும் ஒன்றுபட்டு அரசியல் உணர்ந்து போராடுவதிலே மட்டுமே சாத்தியம்

4 comments:

Bala said...

//யாரோ ஒரு தனிநபர் தான் ஆளவேண்டும் , நாமெல்லாம் அவர்களுக்கு அடிமை போன்ற எண்ணத்தில் மனிதர்கள் மனதளிவிலே பழக்கபடுத்தபட்டு இருக்கிறார்கள் .

உங்கள் கருத்துக்களை புகுத்த இந்த வாதத்தை நீங்கள் வைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல.யாரும் வேண்டுமென்றே பழக்கப்படுத்துவதில்லை. எல்லா உயிரினங்களிலும் இது உண்டு. இது நம் செல்களிலேயே ஊறி போன ஒரு விஷயம். சினிமா பார்த்து கற்று கொண்டதல்ல. எல்லா குரங்களிலும் ஒரு தலைவன் உண்டு. அது சொல்படிதான் மற்றவை கேட்கும். மீன்கள், பறவைகள் போன்றவற்றிலும் இதே நிலைமைதான். ஒரு வேளை இவைகளும் தமிழ் சினிமா பார்த்திருக்குமோ?

Bala said...

//தனக்கு ஒன்று என்றால் கதாநாயகன் சினிமாவில் வருவான் என்பதை போல தினசரி வாழ்விலும் மக்கள் அதை எதிர்ப்பார்கின்றனர்

இதெல்லாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். இப்போதெல்லாம் மக்கள் ரொம்ப உஷாராகி விட்டனர். அவர்களுக்கு தெரியும் நம்மை காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை என்று. அவர்கள் உலகம் நான்கு சுவருக்குள் சுருங்கி விட்டது. அதுதான் பிரச்சனை. சினிமாவில் ஹீரோவை ரசிப்பது ஒரு பேண்டசிக்காகத்தான்.இதே நிலை தான் கடவுளுக்கும். மக்கள் ஒன்று கூடினால்தான் தீர்வு என்று நன்றாக தெரியும். ஆனால் ஒன்று கூடுவதில்லை.

வெண்ணிற இரவுகள்....! said...

சினிமா என்று ஒரு உதாரணத்திற்கு thaan sonnen appadi neengal purinthu kollavendam.
naam ellam theervirkku ஒரு thani manithanai ethirpaarkirom enbathe porul. athanaal thaan Ramaar
muthal rahul ganthi varai sonnen

வெண்ணிற இரவுகள்....! said...

இங்கு சினிமா பிரச்சனை அல்ல பொதுபுத்தி ஒருவனை எதிர்ப்பர்கிறது , இந்த ஒரு விடயமே
கடவுள் வருவார் என்ற நிலைக்கும் காரணம் . இன்று பிரச்சனைக்கு பொறுப்பு ஏற்காததும்
இந்த மனநிலையே காரணம் . அதை தான் சினிமா என்ற உதாரணம் வைத்து சொன்னால் நன்றாய்
இருக்கும் என்று சொன்னேன் . இதில் கலைஞர் முதல் ராகுல் வரை சொன்னேனே பாலா நீங்கள்
கவனிக்கவில்லையே