"கடமையை செய் பலனை எதிர்பாராதே" என்றது
ஒரு மதம்........!
உட்கருத்து
"வேலை செய்தாலும் ஊதியத்தை எதிர்பார்க்காதே "
"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு "
மற்றொரு மதம்...........!
உட்கருத்து
" ஒரு பக்க பையில் இருந்து சுரண்டி விட்டால் மற்றொரு பையை காட்டு சுரண்ட "
"உன் தலையில் என்ன எழுதப்பட்டதோ அதை போலவே நீ மாறுவாய் "
இன்னொரு மதம்....!
உட்கருத்து
எல்லாம் தலை எழுத்து போல் நடக்கும் சுரண்டப்படாலும் போரடதே எல்லாம் விதிக்கப்பட்டது
3 comments:
நச்
உட்கருத்து நீங்கள் சொல்வதல்ல. ஒரு செயலை செய்யும்போதே அதனால் வரும் பலன்களை கணக்கு போட்டுக்கொண்டிருந்தால் அந்த செயலை முழு ஈடுபாட்டோடு செய்யமுடியாது ஆகவே கடமையை செய்யும் போது பலனை பற்றி நினைக்காதே என்பது பொருள்.
கர்ம யோகத்தில் சொல்வது படி, ஒரு நல்ல குடும்பத்தலைவன் என்பவன் தன் குடும்பத்தினருக்கு செய்யும் கடமைகளுக்கு பலன் எதிர் பார்த்து செய்யக்கூடாது. அப்படி செய்தால் மன கசப்பே மிஞ்சும்.
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற அர்த்தத்தில் தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது.
குதர்க்கமான எண்ணத்தில் பார்த்தால் எல்லாமே தவறாகத்தான் தெரியும்.
மதம் ஒரு கண்ணாடி.
எதிரில் இருப்பதை
பிரதிபலிக்கும்.
Post a Comment