நர்சிமின் பூக்காரி கதையை படித்து அதிர்ந்து போனேன் . முதலில் சனிக்கிழமை மாதவராஜ் தளம் பார்த்த பொழுது , அவர் இதை பற்றி எழுதி இருந்தார் . அதை படித்தேன் அந்த சுட்டியை நரசிம் அழித்து இருந்தார் ................!!!!! சரி கதை படிக்காமல் விமர்சனம் எழுத பண்ணக்கூடாது என்று எழுதவில்லை
நேற்று வினவிலே அந்த கதையை படித்தேன் , இவ்வளவு வக்கிரமான எண்ணங்களா , என்று மனசு வெடித்தது . அதில் அக்னிபார்வை வினவு பதிவில் ஒரு பின்னூட்டம் கொடுத்து இருந்தார் . இங்கே பதிவுலகிலே வெட்டப்பட்ட காய்களாய் இருப்பவர்கள் நர்சிமை எதிர்க்கலாம் என்று சொல்லி இருந்தார் .அவர் தெரிந்த நண்பர் என்பதால் சொல்கிறேன் . சனிக்கிழமை வரை நரசிம் எனக்கு மிகவும் பிடித்த பதிவர் . பதிவுலகிலே அவருக்கு 600 follower இருக்கிறார்கள் , நான் பொறமை படும் அளவு வளரவில்லை என்றே நினைக்கிறேன் . என்னை அவர் பதிவுகளில் அறிமுகம் செய்தவர் நரசிம் , அதனால் இது தனிநபர் தாக்குதல் அல்ல .
எது எப்படியோ எனக்கு வினாவை போல எல்லா விடயத்தையும் ஆராய்ச்சி பண்ண தெரியாது , கதையை படித்தவரை அதில் ஆணாதிக்க திமிர் தெரிந்தது , அந்த வார்த்தை பிரயோகம் அவர் மீது உண்டான மதிப்பை குறைத்தது . இனி அவர் என்ன எழுதினாலும் என் மனம் ஏற்காது , அவர் கூறும் வார்த்தைகள் கண்டிக்கத்தக்கது ,
என்னால் இதற்க்கு மேல் திட்ட முடியாது , எனக்கு திட்டவும் வாறது என்பது தான் உண்மை . புனைவு என்ற பெயரிலே நரசிம் தன் மனதில் தோன்றியவைகளை எழுதியது ,அந்த கெட்டவார்த்தைகள் இன்னும் காதில் ஒலிக்கிறது நரசிம், இவ்வளவு ஆணாதிக்க வெறியா , பார்ப்பனீய வெறியா ,இவ்வளவு பிற்ப்படுத்தப்பட்ட சமூகமா???????????
2 comments:
ஒரு வலைப்பதிவில் அபசகுனமான (நெகட்டிவான ) வார்த்தைகளை பயன் படுத்துவதையே நான் ஏற்றுகொள்ள மாட்டேன். ஆனால் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிடுவது என்பது தவறானது. புனைவு அது இது என்று சொன்னாலும் பதிவானதை மாற்றவா முடியும்? சாலையில் நின்று கெட்ட வார்த்தையில் கத்தி பாருங்கள். ஒருவனாவது வந்து நீ படித்தவன்தானா? என்று கேட்பான். அதன் காரணம் படித்தவன் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வராது என்று பொருள். இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிறது. என்னதான் படித்து விட்டாலும், அடிமனதில் பதிந்த ஒரு சில விஷயங்கள் மாறாது.
கார்த்திக் நானும் அந்த பதிவு கண்டு மிகவும் வருந்தினேன், எனினும் இந்த பதிவு அரசியல் அசிங்கமாய் தெரிகிறது எனக்கு, எழுத கூடாததை எழுதியது நர்சிமின் தவறு அதை அப்படியே விரிவு படுத்தி இதை பேசி பேசி என்ன கண்டார்கள் இதை பற்றிய இந்த இடுகையோடு நீங்கள் நிறுத்தி கொள்ளலாமே, என்னை கேட்டால் இதில் நீங்களும் உங்களை ஈடு படுத்தி கொள்ளாமல் இருக்கலாம். வேர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் எண்ணங்கள் மனதில் தான் இருக்கிறது, நரசிம் செய்த தவறை வேறு ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த ஆண் பதிவர் செய்திருந்தால் வெறும் ஆண் அதிகம் என்ற எண்ணம் மட்டும் தான் வந்திருக்குமா, அப்போதும் அது தவறு தான். என்னை கேட்டால் பார்ப்பனீயம் தாழ்த்தப்பட்ட என்றெல்லாம் நீங்கள் இந்த காலத்தில் பேசுவதை நான் அபத்தமாய் உணர்கின்றேன், இந்த இளைய சமுதாயம் முன் காலத்தை போல் இல்லை வெகுவாய் மாறி விட்டார்கள் என்று நினைத்தேன் ஆனால் இல்லை நாங்களும் அப்படியே தான் இருக்கிறோம் என்று நீங்கள் இப்படி பேசி பேசியே நிருபிக்கிறீர்கள்(நீங்கள் என்பது பதிவர்களை உங்களை மட்டும் அல்ல). இந்த எண்ணம் தான் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை தருகிறது, நல்ல எண்ணங்கள் படைப்புக்களை எழுதி வைக்கும் ஒரு டைரியை போல் தான் ப்ளாக்குகளை பார்கிறேன், ஆனால் இங்கு பலர் பிறரின் விமர்சனதிர்காகவே எழுதுவது மட்டுமில்லாமல் எண்ணங்களையும் வீணடித்து கொண்டிருக்கிறார்கள். என்னை கேட்டால் இப்படி எழுதுவதற்கு எழுதாமலே இருந்து விடலாம், பதிவர் சந்திபெல்லாம் நல்ல எழுத்தாளர்கள் உருவாக ஒரு அடித்தளம் என்று நினைத்தேன் ஆனா நிஜமான எழுத்தாளர்கள் முன் இவர்கள் யாருமே ஒரு தூசி தான் என்று தோன்றுகிறது. இலக்கிய ரசனையெல்லாம் ஒரு மன்னாங்கட்டியும் இல்லை, இத பதிவர்களில் எத்தனை பேர் நல்ல வாசிப்பாளர்கள், எதையுமே வாசித்து பார்க்காமல் நானும் எழுதுவேன் என்று எழுதுவதை நிறுத்தி கொள்ளலாம் இவர்கள்.
Post a Comment