Wednesday 2 June 2010

பதிவுலக மனஉளைச்சல் மற்றும் புரிதல்











நான்கு நாட்களாய் ஒரே மன உளைச்சல் , பதிவுலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று . நிறைய பதிவர்கள் நரசிம் செய்தது ஆணாதிக்கம் ஆனால் இங்கே ஜாதி எங்கே வந்ததது என்று கேள்வி கேட்கிறார்கள் . சரி தனிமனிதன் சமூகத்தின் விலை பொருளே அன்றி அவன் சிந்தனையும் செயலும் தனிப்பட்டதல்ல . உதாரணமாய் நம்முடைய பொருளாதாரம் வைத்து , நம் ஜாதி வைத்து நாம் சாப்பிடும் ஹோட்டல் முதல் திரையரங்கு வரை மாறும் . சத்யம் திரையரங்களில் பார்க்கும் மக்கள் வேறு , சைதை ராஜ் திரையரங்கில் பார்க்கும் மக்கள் வேறு என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் சுழல் நம் மதம் நம் ஜாதி வைத்து சிந்தனைகள் மாறும் என்பதே உண்மை . சரி ஆணாதிக்கத்தின் வேர் எங்கு இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால்அது பார்ப்பனீயத்தில் இருந்தே தோன்றுகிறது . ராமன் இதற்க்கு சிறந்த உதாரணம், சீதை ஏன் தீ குளிக்க வேண்டும் , பெண்ணிற்கு மட்டும் தான் கற்பு என்ற விடயம் இருக்கிறதா.???????அப்படி பார்க்கும் பொழுது ஆணாதிக்க சிந்தனை பார்ப்பனீய முறையில் தான் அதன் வேர் . இன்று மற்ற ஜாத்களில் பார்பனீயம் இருந்தாலும் , ஆணி வேர் எங்கே உள்ளது . இன்றும்கூட மாதம் மூன்று நாள் என்றால் பெண்கள் வீட்டிற்கு வெளியே செருப்புடன் செருப்பை உட்கார்ந்து இருப்பார்கள் , இந்த நவீன காலத்திலும் சென்னையில் உள்ளது இதை மறுக்க முடியுமா .அந்த பெண் IT துறையிலே வேலை பார்த்து இருப்பாள் உழைத்து கலைத்து வந்தாலும் அவள் வெளியே உட்க்கார வைக்கப்பட்டு இருப்பாள் . பார்பனர்கள் என்ன சொல்கிறார்களோ , அதையே முறை என்று மற்ற மக்கள் நம்புவது உண்டு . இன்றும் கூட கிராமத்தில் ஒரு பர்பாணன் என்றால் சாமி என்று அழைப்பார்கள்.அதனால் நாம் வளர்ப்பு முறை சுழல் , சமூக சுழல் என்ற விடயம் தான் ஒரு மனிதனின் சிந்தனையை நிர்ணயிக்கிறது.

அதனால் ஆணாதிக்கம் என்று சொல்லும் பொழுதே பார்பனீயம் வருகிறது என்பதே என் விமர்சனம். மனிதன் தனிப்பொருள் அல்ல , அவன் சமூகத்தின் உற்பத்தி ,சமூகத்தின் உள்ள தவறுகள் திருத்தி அமைக்கப்படும்போழுது தனிமனிதன் சிந்தனையால் திருந்துவான் என்றே நினைக்கிறேன் . சரி வினாவிற்கு கட்டுரைஎழுதி
கொடுத்த சிவராமன் பார்பனர் இல்லையா என்பது கேள்வி ?? பிறப்பால் இருந்தாலும் என்றாவது அவர் பதிவுகளில் ஆணாதிக்க தொனி இருக்கிறதா ..... இல்லை பெண்களைவக்கிரமாய் திட்டி இருக்கிறாரா ???? பார்பதற்கு கேவலமாய் இருப்பா டா ???? என்றெல்லாம் எழுதியது உண்டா ????இல்லை ஆதிக்க மனநிலையுடன் பேசியது உண்டா .சரி நரசிம் சொல்வதை போல் பூக்காரி எல்லாம் விலைமாதுக்கள் என்ற பார்வை இருந்ததுண்டா. தினமும் ஒரு பூக்கார கிழவியை பார்ப்பேன் , மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் முன்பு , அலுவல் முடிந்து வரும்பொழுது அந்த கிழவி பூக்கள் விற்க முடியாமல் விற்று கொண்டிருப்பாள் , அந்த கிழவியின் உழைப்பு மீது மரியாதை வரும் , பூக்காரி என்றால் கேவலாமா என்ன ??????என்ன சொல்வது இதை போல ஆதிக்கமாய் யார் யோசிக்க முடியும் ஆதிக்க சாதியினரே , நரசிம் பூக்காரிகள் பற்றி கேவலாமாய் எழுதும் பொழுது ஏன் அவர் ஜாதி மட்டும்
விமர்சனம் செய்யக்கூடாது . எத்தனை பூக்காரிகளை அவருக்கு தெரியும் .

பூக்காரியை திட்டுவதன் மூலம் ஆதிக்க ஜாதி தெரிகிறது இல்லையா ???? அப்பொழுது விமர்சனம் அதை ஒட்டி தான் இருக்கும் . நாம் தெரிந்தோ தெரியாமலோ நம் ஜாதி நம் பொருளாதாரம் சார்ந்தே நம் யோசனை முறை இருக்கும். இதற்க்கு நரசிம் மட்டும் அல்ல எல்லாருக்குமே இது பொருந்தும் , ஒரு மனிதன் தவறு செய்வது என்பது அவன் தவறல்ல அந்த சமூகத்தில் இருந்த மனிதன் அப்படி தான் பேச முடியும் . காலையில் இதை பற்றி ஒரு இடுகை படித்தேன் , பெண்ணை திட்டுவதென்றால் தேவடியா ??? ஆணை திட்டுவதென்றால் தேவடியா மகன் .எப்படி பார்த்தாலும் பெண்களுக்கே வசவு . இந்த தவறை எல்லாரும் செய்கிறார்கள் , அப்பொழுது இது தனிமனித பிரச்சனையா, எதை விமர்சனம் செய்யவேண்டும் முதலில் அதன் வேர் சமூகத்தை விமர்சனம் செய்ய வேண்டும் , அதவாது இவிடயத்தில் ஜாதியை விமர்சனம் செய்து விட்டு தான் தனிமனிதனை விமர்சனம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்.

சிவராமன் பதிவில் இதெல்லாம் தெரிந்ததா என்றால் தெரியவில்லை , நரசிம் பதிவில் தெரிந்தது . அவர் பூணல் போட்டுக்கொண்டிருக்கிறாரா என்பது பிரச்சனை அல்ல ???? என்ன எழுதினார் , அவர் அப்படி பார்பனீயத்தை குடை பிடித்து இருந்தால் நர்சிமை அம்பலப்படுத்தி இருப்பாரா ????? சரி சிவராமன் எழுதினார் என்ற ஒரே காரணத்திற்காக நரசிம் செய்தது சரி என்று நிருவுகிரீர்களா . உயிர் நண்பனாய் இருப்பது தனிப்பட்ட பிரச்சனை ,ஆனால் உன் உயிர் நண்பனால் சமூகத்திற்கு தீங்கு என்றால் தலையை துண்டிக்க தானே வேண்டும் . அதை தானே செய்தார் சிவராமன் . சிவராமனின் பின் புலம் வேண்டாமா என்கிறீர்கள் , நண்பர்களே அவர் எழுதும் தொனியில் பார்ப்பனர் என்பதே தெரியவில்லை என்பதே உண்மை . ஒரு மனிதன் பொது வெளியில் எப்படி இருக்கிறான் என்பதே கணக்கு.

சரி விடுங்கள் இன்னும் நிறைய விடயங்கள் உள்ளது , ஏதொ மனதில் பட்டதை எழுதுகிறேன். எல்லா கேள்விக்கும் என்னால் பதில் அளிக்க முடியும் ஆனால் பிரச்சனை எங்கு எங்கோ செல்வதை நான் விரும்பவில்லை . இந்த பிரச்சனையில் எனக்கு இழப்புகள் அதிகம் , என் நண்பர்களை இழந்துள்ளேன் ,அதிக மன உளைச்சல் , என் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் எதிர் திசையில் , அவனுக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே நினைத்ததை பேசுவோம் ,அது என் மன உளைச்சலை அதிக படுத்துக்கிறது . மன்னித்துவிடு நண்பா இப்பொழுதும் நான் சரி என்று பட்டதையே செய்கிறேன் .

3 comments:

இரும்புத்திரை said...

எதிர்திசையில் தான் நிற்கிறோம்.அது வேறு நட்பு வேறு என்று தான் இன்னமும் நினைக்கிறேன்.சிவராமன் செய்தது துரோகம் கார்த்தி.அப்பாவை எல்லாம் இதில் கொண்டு வர வேண்டுமா.நான் தான் வினவிற்கு எழுதி தந்தேன் என்று சொன்னால் யார் என்ன சொல்லப் போகிறார்கள்.கூழும் வேண்டும்.மீசையிலும் ஒட்டக் கூடாது என்று நினைத்தால் என்ன செய்வது.நான் பிரச்சனை முடிய வேண்டும் நினைக்கிறேன்.

பார்ப்பனியத்தின் ஆணி வேரான ராமன் சீதைக்கு போய் விட்டாயே கார்த்தி.இந்த பிரச்சனைக்கு ஆணி வேர் அந்த பகடி பதிவு தான்.அதை ஏன் ஒப்புக் கொள்ளவில்லை.

மன்னிப்பு கேட்டப்பின் ஏன் திரும்பவும்.சிவராமன் பதிவில் காயப்பட்ட மற்ற நண்பர்கள்.சாருவின் ஆதரவாளன் என்பதால் நான் நர்சிமை ஆதரிக்கிறேன் என்று இருந்ததே.இன்று அடியாள்,அது இது வென ஒரு அசிங்கமான பின்னூட்டம் என் பதிவில்.படித்து பார்.நீ எனக்கு எதிர்திசையில் நிற்பதில் எனக்கு வருத்தமில்லை.நாளைக்கு நான் தவறு செய்தால் நீ என்னை அடிக்க கூட செய்யலாம்.உனக்கு உரிமை உண்டு.அதற்கு முன் நான் எந்த சூழ் நிலையில் செய்தேன் என்று பார்த்து விட்டு அடி.நர்சிம் செய்ததது கண நேர தடுமாற்றத்தில்.அது எல்லா மனிதனுக்கும் இயல்பாக நடக்க கூடிய விஷயம்.எனக்கும் உனக்கும் இந்த பிரச்சனையை என்ன செய்ய வேண்டும் நீ முடிவு செய்.

வெண்ணிற இரவுகள்....! said...

பகடி பதிவாய் இருந்தாலும் .................பதில் பகடி செய்யலாமே அது என்ன
தேவடியா ??? இது சரியா நண்பா ..கன நேர தடுமாற்றம் என்றாலும் கொலை
குற்றம் தானே நண்பனே ........ ஒரு சில நேரம் மனத்தடுமாற்றம் தான் ஒருவனை
கற்பழிக்க வைக்கிறது , கொலை செய்ய வைக்கிறது அது சரியாகுமா ......அவர் வெளியில்
சொல்லிருக்க வேண்டும் என்பதே என் கருத்தும் ..........நண்பா அதில் மாறுபாடு இல்லை

ஜெய் said...

// பிரச்சனை எங்கு எங்கோ செல்வதை நான் விரும்பவில்லை . இந்த பிரச்சனையில் எனக்கு இழப்புகள் அதிகம் , என் நண்பர்களை இழந்துள்ளேன் ,அதிக மன உளைச்சல் , என் நண்பன் இரும்புத்திரை அரவிந்த் எதிர் திசையில் //

பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லையென்றால், இப்படி ஒரு கருத்தை தெரிவிக்க வேண்டாமே நண்பரே.. // ஆணாதிக்கம் என்று சொல்லும் பொழுதே பார்பனீயம் வருகிறது என்பதே என் விமர்சனம்//

ஜாதி வேண்டாமென்றால் அதற்கான முதல் விஷயம் நம்மிடமிருந்து தொடங்கட்டும் நண்பா.. நம்முடைய ஜாதியை மறப்போம்.. நண்பர்களுக்கிடையே ஜாதி எங்கிருந்து வருகிறது.. இதுவரை என்னுடைய எந்த நண்பனின்/colleague-ன் ஜாதியும் எனக்கு சத்தியமாக தெரியாது.. இப்படி இருந்தால் பிரச்சினையே இல்லையே..